இந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்கள்!!! 2/36 தீர்பரப்பு அருவி, திருவட்டாறு தீர்பரப்பு அருவி கன்னியாகுமரியிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும், திருவட்டாறுக்கு அருகில் 10 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. இந்த அருவி வருடத்தில் 4 மாதங்கள் தவிற பிற மாதங்களில் வழிந்து ஓடுகின்றது. எனவே வளமை குறையாத இந்த அருவியை புகழ்வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக, சுற்றுலாத் துறை ஒரு குழந்தைகள் நீச்சல்குளத்தையும், ஒப்பணை அறையையும் இங்கு உருவாக்கி இருக்கிறது. இவ்வருவிக்கு அருகில் மஹாதேவர் கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் ஒன்று உள்ளது.
திருவட்டாறு - புண்ணிய பூமி!
Image source: commons.wikimedia.org
மேலும் திருவட்டாறில் இருக்கும் சுற்றுலாத் தலங்கள் கண்கவரும் வண்ணமாக இருக்கின்றன. பாரலீ மற்றும் கோதை என்னும் இரண்டு ஆறுகள் மூவட்டமுகம் என்னும் இடத்தில் இந்த பட்டணத்தை சுற்றி வளைத்து உள்ளன.இதுவே இந்நகரின் பெயர்க்காரணமாக மாறிவிட்டது. ‘திரு’ என்றால் புனிதம், ‘வட்டம்’ என்றால் சுற்றியிருப்பது, ‘ஆறு’ என்றால் நதி, எனவே திருவட்டாறு என்றால் புனித நதிகளால் சூழப்பட்ட இடம் என்று பொருள்.
புனிதமான ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் திருவட்டாறுக்கு தெய்வீக தன்மையை கொடுக்கின்ற, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடம் ஆகும். மாத்தூர் தொங்கு பாலம், புனித ஜேம்ஸ் தேவாலயம் (100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது), உதயகிரி கோட்டை மற்றும் தீர்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகியவை மற்ற புகழ்பெற்ற இடங்கள் ஆகும்.
இந்த பட்டணம் இந்துக்களின் புனித ஸ்தலம் என்பதால், சாலை மார்க்கமாக நாட்டின் பிற பகுதிகளோடு நன்கு இணைக்கப்பட்டு இருப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
கன்னியாகுமரி தொடர்வண்டி நிலையமே இதற்கு அருகாமையில் இருக்கும் தொடர்வண்டி நிலையம் ஆகும். நெருக்கமான விமான தளம் திருவனந்தபுரம் விமான நிலையம்.
குளிர்க்காலத்தில் வானிலை இனிமையாக இருப்பதால், பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அக்காலத்திலேயே இந்த பட்டணத்திற்கு பயணம் செய்ய விரும்புகிறார்கள். கோடையின் சுட்டெரிக்கும் வெயிலும், மழைக்காலத்தில் இங்கு உருவாகும் சூறாவழி புயல் காற்றும் பயணம் செய்வதை கடினமாக்குகின்றன.
No comments:
Post a Comment