For Read Your Language click Translate

07 June 2014

சமஸ்கிருத மொழியில் உள்ள மந்திரங்கள் மட்டுமே சக்தி வாய்ந்தவைகள். மற்ற மொழி மந்திரங்கள் என்பது மந்திரங்களே அல்ல



சமஸ்கிருத மொழியில் உள்ள மந்திரங்கள் மட்டுமே சக்தி வாய்ந்தவைகள். மற்ற மொழி மந்திரங்கள் என்பது மந்திரங்களே அல்ல என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களின் கருத்து எந்த அளவிற்கு சரியானது ..............
சமஸ்கிருத மொழியில் உள்ள மந்திரங்களை எடுத்து பொருளை இன்னதென்று பார்த்தோமேயானால் மிக சாதாரணமான கருத்துக்களாகவே அவைகள் தோன்றும் இந்த கருத்துக்களுக்கா இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? இவைகள் அத்தனை புனிதம் மிக்கவைகளா என்று பலநேரம் ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு தோன்றும் ஆனால் உண்மை இந்த கருத்தில் அல்ல. 
மந்திரங்கள் என்பது கருத்து சார்ந்த விஷயங்கள் இல்லை. அவைகளில் உள்ள பொருளை முக்கியப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. மந்திரங்களை சொல்லும் போது ஏற்படும் ஒலி அதிர்வுகள் தான் மிகவும் முக்கியமானது. ஒலிகளின் ஏற்றத் தாழ்வினாலேயே மந்திரங்கள் சக்தி மிகுந்ததாக ஆகுகிறது. அதனால் தான் நமது பெரியவர்கள் பொருள் தெரிந்து மந்திரத்தை சொல்ல வேண்டுமென்று கூறுவதில் அதிக அக்கறை காட்டியதில்லை. உச்சரிப்புக்கே முக்கிய இடம் கொடுத்தார்கள் ...
அந்த வகையில் பார்க்கப்போனால் மந்திரங்களுக்கான சப்த லயங்களை மிக அதிகமாக சமஸ்கிருத மொழி கொண்டுள்ளது. மற்ற மொழிகளுக்கு இந்த தன்மை இல்லை என்று நான் கூறவில்லை, மிக குறைவாக இருப்பதாகவே கருதுகிறேன் இதே போல மற்ற மொழியிலும் சில மந்திர வகைகள் இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கும் உலகிலேயே மிக இளம் வயது கொண்ட ஆங்கில மொழியில் கூட மந்திரங்கள் இருக்கிறது ஸ்ரீ அரவிந்தர் எழுதிய சாவித்திரி என்ற காவியம் முழுக்க முழுக்க மந்திரங்களின் ஒலி அலையை கொண்டதாகும். 
ஆங்கில மொழியிலேயே மந்திர அதிர்வுகள் இருக்கிறது என்றால் பண்பாடுடைய மற்ற மொழிகளில் இருக்காதா என்ன? கண்டிப்பாக உண்டு. ஆனால் அதன் எண்ணிக்கை குறைவு. சமஸ்கிருத மொழியில் அந்த குறைவு இல்லை, இயற்கையாகவே அந்த மொழியில் மந்திர அதிர்வுகள் அமைந்திருக்கிறது. அதனால் தான் அது தேவ பாஷையாக இருக்கிறது

No comments:

Post a Comment