For Read Your Language click Translate

Follow by Email

08 June 2014

தேவர்களுடைய காலக் கணக்கு

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 55
மூன்றாவது ஸ்கந்தம் - பதினோறாவது அத்தியாயம்

காலக் கணக்கு 

நாம் கடந்த அத்தியாயத்தில் ப்ரஹ்மா செய்த பத்து விதமான சிருஷ்டியைக் கண்டோம். உலகில் ஸ்தாவரங்களான மரம்,செடி, கொடிகள், ஜந்துக்களான விலங்கினங்கள், மனிதர்கள், மேலுலகத்தில் உள்ள தேவர்கள் ஆகிய அனைவரும் தோன்றினார்கள். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கர்மத்தின்படி வாழ்க்கையை நடத்துகிறான். யாருக்குமே மற்ற எல்லாவற்றையும் விட, காலம் பொன் போன்றது. மிகவும் முக்கியமானது. 

‘பல துன்பங்கள், இன்பங்கள் படைத்தாய், பற்றிலார் பற்ற நின்றானே! கால சக்கரத்தாய்!’ - என்று நம்மாழ்வார் திருவாய் மொழியில் பாடுகிறார். காலத்தையே, தன்னுடைய சக்கரமாகக் கொண்டு, பகவான் இவ்வுலகத்தையே தன் ஆளுகைக்கு உட்படுத்தி இருக்கிறான். காலம் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிறபடியால், அது காலச் சக்கரம் என்று சொல்லப்படுகிறது. 

அனைத்துப் பொருட்களையும் - ஏன் ஒவ்வொன்றையுமே காலம் தன் வசத்தில் கொண்டிருக்கும். இந்தத் தத்துவம், அதாவது காலம் தானும் மாறிக் கொண்டே இருக்கும். மணி, நிமிடம், வினாடி என்று மாறிக் கொண்டே, தான் எதை மூடியிருக்கிறதோ அந்தப் பொருளையும், ஒவ்வொரு வினாடியும் மாற்றிக் கொண்டே இருக்கும். நம் கையில் இருக்கும் புத்தகத்தையோ, ஏன் நம் உடலையோ, நாம் அணிந்திருக்கும் ஆடையையோ அனைத்தையும் காலம் எனும் தத்துவம் மூடியிருக்கும். ஒவ்வொரு வினாடியும், நிமிடமும், இந்தப் பொருள்கள் எல்லாம் பழையனவாகிக் கொண்டே, சிதைந்து கொண்டே போகும். இதுவே காலத்தின் இயல்பு. 

இந்தக் காலத்தின் பிரிவுகளை மைத்ரேயர், விதுரருக்கு விளக்கமாக உரைக்கிறார். இன்றைய விஞ்ஞானத்தில் ‘நானோ செகண்டு’ அளவுக்கு விஞ்ஞானிகள் அற்புதமாக விளக்கி வருகிறார்கள்.


பாகவத புராணத்திலும், காலத்தை வெகு அழகாகப் பிரித்துக் கூறுகிறார் சுகாசாரியார்.
நம்முடைய ஒரு நாள் 24 மணி நேரங்கள் கொண்டது.
அதில் 60 நிமிஷங்கள் ஒரு மணி நேரம்.
புராணத்தின்படி ஒரு 48 நிமிஷம், ஒரு முகூர்த்தமாகச் சொல்லப்படுகிறது.
அதே 24 நிமிஷங்கள் ஒரு நாழிகை. 

ஒரு நாளில் 60 நாழிகை இருக்கும்.
ஒரு மணி நேரம் என்பது இரண்டரை நாழிகைகள்.
முப்பது முகூர்த்தம் ஒரு நாள்.
இரண்டு நாழிகை ஒரு முகூர்த்தம்.
பதினைந்து லகு ஒரு நாழிகை.
பதினைந்து காஷ்டா ஒரு லகு.
ஐந்து க்ஷணங்கள் ஒரு காஷ்டா.
நான்கு நிமிஷங்கள் ஒரு க்ஷணம். 

மூன்று லவம் ஒரு நிமிஷம். (இந்த நிமிஷம் நாம் ஆங்கிலத்தில் கூறும் மினிட் அல்ல.)
மூன்று வேதங்கள் ஒரு லவம்.
நூறு த்ருடிகள் ஒரு வேதம்.
மூன்று த்ரிஷரேணுகள் ஒரு த்ருடி.
மூன்று அணுக்கள் ஒரு த்ரிஷரேணு.
இரண்டு பரமாணுக்கள் ஒரு அணு.
காலத்தின் மிகச்சிறிய அளவே பரமாணு என்று சொல்லப்படுகிறது. 

ஒரு கணக்கிற்காகக் கூறுகிறேன். ஒரு நாழிகை 24 நிமிடங்கள் என்று எழுதியிருந்தேன். மேற்சொன்ன அட்டவணையின்படி வகுத்துக் கொண்டே போனால், ஒரு பரமாணு = .00000033 நிமிடங்கள். (மினிட்ஸ்) அல்லது ஒரு பரமாணு = .00002 வினாடிகள்(செகண்ட்). இந்த அளவுக்குத் துல்லியமாக ரிஷிகள் கணித்துக் கூறியுள்ளார்கள். மேலும் பார்ப்போம். 


பதினைந்து நாட்கள் சேர்ந்தது ஒரு பக்ஷம். அது வளர்பிறை, தேய்பிறை என்று இரண்டாக உள்ளன. இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தால், ஒரு மாதம். இரண்டு மாதங்கள் ஒரு ருதுவாகச் சொல்லப்படுகிறது. அதாவது சித்திரை, வைகாசி வசந்து ருதுவென்றும், ஆனி, ஆடி க்ரீஷ்ம ருதுவென்றும், ஆவணி, புரட்டாசி சரத் ருதுவென்றும், ஐப்பசி, கார்த்திகை வருஷ ருதுவென்றும், மார்கழி, தை க்ஷேமந்த ருது என்றும், மாசி, பங்குனி சிசிர ருது என்றும் சொல்லப்படுகின்றன. 

ஆறு ருதுக்கள் சேர்ந்தால், ஓர் ஆண்டு, அல்லது ஒரு வருஷம் என்று சொல்லப்படுகிறது. இந்த வருடமே ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடாவத்ஸரம், அணுவத்ஸரம், வத்ஸரம் என்று ஐந்து வகைப்படுகின்றன. இவை சூரியன், ப்ருஹஸ்பதி, நாள், சந்திரன், 27 நக்ஷத்திரங்கள் ஆகியவற்றைக் குறித்து மாறுபடுகின்றன. 

ய: ஸ்ருஜ்யசக்தி முருதோச்ச்வஸயன் ஸ்வசக்த்யா
பும்ஸோ(அ)ப்ரமாய திவி தாவதி பூதபேத:| 
காலாக்யயா குணமயம் க்ரதுபிர் விதன்வன்
தஸ்மை பலிம் ஹரத வத்ஸரபஞ்சகாய
(ஸ்ரீமத் பாகவதம் 3-11-15) 

இந்த ச்லோகம் சூரியனை வணங்குவது. ‘யார் ஒருவர் இவ்வுலகத்தில் காலத்தையே தன்னுடைய கதியால் ஆட்டிப்படைக்கிறாரோ, அந்த சூரியனை வணங்குகிறேன்’ என்பது இதன் பொருள். நாம் ஒவ்வொருவருமே இறந்த காலத்தை மீட்க முடியாது. 

ராமன் அயோத்தியா பட்டாபிஷேகம் ஆன பிறகு, ஸீதையோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கூறுகிறார். “ஸீதே! இழந்த அனைத்தையும் மீட்டேன். ஆனால், உன்னைப் பிரிந்து பத்து மாதங்கள் இருந்தேன். அதில் ஒரு நிமிடத்தைக் கூட என்னால் மீட்க முடியாது” என்கிறார். இதிலிருந்து பகவானே, காலத்தை எவ்வளவு முக்கியமாகக் கருதுகிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 

மேலும், இந்தக் காலத்தை நீடித்துக் கொண்டே போனால், யுகம் வருகிறது. நம்முடைய 365 நாட்கள் தேவர்களுக்கு ஒரு நாள். தேவர்களுடைய காலக்கணக்கின்படி 12,000 ஆண்டுகள் சென்றால், அது ஒரு சதுர்யுகமாகச் சொல்லப்படுகிறது. நான் பல வாரங்களுக்கு முன்னால் நான்கு யுகங்களின் அட்டவணையைக் கொடுத்திருந்தேன். நினைவில் கொள்க. க்ருத யுகம் (சந்திகளோடு சேர்ந்து) 4,800 ஆண்டுகள். த்ரேதாயுகம் 3,600 ஆண்டுகள். த்வாபர யுகம் 2,400 ஆண்டுகள். கலியுகம் 1,200 ஆண்டுகள். 

இப்படி ஆயிரம் சதுர்யுகங்கள் கழிந்தால், ப்ரஹ்மாவுக்கு ஒரு பகல் முடியும். அதைத்தான் ஒரு கல்பம் என்று கூறுகிறார்கள். அந்தப் பகல் பொழுதில் பதினான்கு மனுக்கள் ஆட்சி புரிவார்கள். ஒவ்வொரு மனுவுக்கும் சுமார் 71 சதுர்யுகம், முழு ஆயுள் ஆகிறது. ப்ரஹ்மாவின் பகல் முடிந்த பிறகு, நைமித்திக பிரளயம் தோன்றும். அதில் முதல் மூன்று உலகங்களான பூ:, புவ:, ஸுவ: ஆகியவை தண்ணீரால் சூழப்படும். நான்காவது உலகமான மஹர்லோகத்தில் இருக்கும் ப்ருகு முதலான ரிஷிகள், அங்கு இருக்க முடியாமல், ஐந்தாவது லோகத்தை அடைந்து வாழ்வார்கள். 

இவ்வளவு நீண்ட காலமுடைய நான்முகனுக்கும், நூறு ஆண்டுகள்தான் ஆயுள். அவருடைய ஓர் ஐம்பதாண்டு பரார்த்தம் என்று சொல்லப்படுகிறது. இப்போது அவருக்கு இரண்டாவது பரார்த்தம். அதாவது இரண்டாவது ஐம்பது ஆண்டுகள் நடந்து வருகின்றன. இதில் முதல் கல்பம் ப்ரஹ்மம் என்றும், இரண்டாவது பாத்மம் என்றும் சொல்லப்பட்டது. இதில் முதல் கல்பம் ப்ரஹ்மம் என்றும், இரண்டாவது ஸ்வேதவராஹம் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது ஸ்வேதவராஹக் கல்பத்தில் 28-ஆவது சதுர்யுகத்தில் நாம் உள்ளோம். 

இப்படிப் பலவாறாகப் பிரிந்து, நம்மை ஆட்டிப் படைக்கும் காலம் வைகுந்தத்தில் செயல்படுவதே இல்லை. காலன் நமக்குத்தான் ஈசன். ஈசனுக்கே அது ஈசனாக இருக்க முடியுமா! ஒருக்காலும் இல்லை! 

(தொடரும்) 


நன்றி - துக்ளக்

கால சாஸ்திரம்
http://kaliyugasidhar.blogspot.in/

தாமரை இதழ்களை எட்டு அடுக்கி ஒரு நுட்பமான ஊசிக்கொண்டு துவாரம் பண்ணுவதற்கு ஆகும் நேரமே ஒரு க்ஷணமாகும்.

02 க்ஷணம்கள்                01 இல்லம்

02 இல்லம்கள்                01 காஷ்டை

02 காஷ்டைகள்               01 நிமேஷம்

02 நிமேஷங்கள்              01 துடி (15 விதற்பரைகள்)

02 துடிகள்                     01 துரிதம் (30 விதற்பரைகள்)

02 துரிதம்கள்                 01 தற்பரை    (60 விதற்பரைகள் )

60 தற்பரைகள்                01 வினாழிகை

60 வினாழிகைகள்            01 நாழிகை

60 நாழிகைகள்                01
நாள்

07 நாட்கள்                     01 வாரம்

(ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி இவையே ஏழு நாட்கள்)

பதினைந்து நாட்கள் ஒரு பக்ஷம்,

(ப்ரதமை,த்வீதியை,த்ரீதியை,சதுர்த்தி,பஞ்சமி,ஷஷ்டி,ஸப்தமி,அஷ்டமி,நவமி,

தசமி,ஏகாதசி,த்வாதசி,த்ரயோதசி,சதுர்தசி,பௌர்ணமி.இது சுக்லபக்ஷம்

ப்ரதமை,த்வீதியை,த்ரீதியை,சதுர்த்தி,பஞ்சமி,ஷஷ்டி,ஸப்தமி,அஷ்டமி,நவமி,

தசமி,ஏகாதசி,த்வாதசி,த்ரயோதசி,சதுர்தசி,அமாவாசை.இது க்ருஷ்ணபக்ஷம்.)

இரண்டு பக்ஷங்கள் ஒரு மாதம்

மாதங்கள் இரண்டுவகைப்படும்

01 சந்திரமானம்

02 ஸௌரமானம்

01 சைத்திரம்

02 வைசாகம்

03 ஜேஷ்டம்

04 ஆஷாடம்

05 ச்ராவணம்

06 பாத்ரபதம்

07 ஆஸ்வீயுஜம்

08 கார்திகம்

09 மார்கசிரம்

10 புஷ்யம்

11 மாகம்

12 பால்குனம்

என இப்பன்னிரெண்டும் சாந்திரமான மாதங்கள் இவை சூரிய சந்திர்கள் கூடி பிரிதல் மூலம் எற்படுவதாம்.

01 மேஷம் (சித்திரை)

02 ரிஷபம் (வைகாசி)

03 மிதுனம் (ஆனி)

04 கடகம் (ஆடி)

05 சிம்மம்(ஆவணி)

06 கன்னி (புரட்டாசி)

07 துலா (ஐப்பசி)

08 வ்ருச்சிகம் (கார்திகை)

09 தனுஸு (மார்கழி)

10 மகரம் (தை)

11 கும்பம் (மாசி)

12 மீனம் (பங்குனி)

என இப்பன்னிரெண்டு மாதங்கள் ஸௌரமான மாதங்களாகும்.இவை ஸூரியனுடைய ஓட்டத்தால் மட்டுமே ஏற்படுவதாகும்.

இரண்டு மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது,

01 வஸந்தம், (சித்தியரை,வைகாசி)

02 க்ரீஷ்மம்,(ஆனி,ஆடி)

03 வர்ஷம்,(ஆவணி புரட்டாசி)

04 சரத்,(ஐப்பசி,கார்த்திகை)

05 ஹேமந்தம்,(மார்கழி,தை)

06 சிசிரம்.(மாசி,பங்குனி)

என ருதுக்கள் ஆறு வகைப்படும். ருதுக்கள் மூன்று சேர்ந்த்து ஒரு அயணம்,

01 உத்ராயணம்,

02 தக்ஷிணாயம்

என அயணங்கள் இரண்டு வகைப்படும். இரண்டு அயணங்கள் சேர்ந்தது ஒரு வருஷம்.

இவ்வாறு பக்ஷங்கள்லும்,மாதங்களாலும்,ருதுக்களாலும்,அயணங்களாலும், உருவான வருடங்கள் மொத்தம் அறுபதாகும் (60) அவையாவன

01 ப்ரபவ,02 விபவ 03 சுக்ல 04 ப்ரமோதூத 05 ப்ரஜோத்பத்தி 06 ஆங்கீரஸ 07 ஸ்ரீமுக 08 பவ 09 யுவ 10 தாது 11 ஈஸ்வர 12 வெகுதான்ய

13 ப்ரமாதி 14 விக்ரம் 15 விஷூ 16 சித்திரபானு 17 ஸுபானு 18 தாரண 19 பார்திப 20 விய 21 ஸர்வஜித் 22 ஸர்வதாரி 23 விரோதி

24 விக்ருதி 25 கர 26 நந்தன 27 விஜய 28 ஜய 29 மன்மத 30 துன்முகி 31 ஹேவிளம்பி 32 விளம்பி 33 விகாரி 34 ஸார்வாரி 35 பிலவ

36 சுபக்ருது 37 சோபக்ருது 38 க்ரோதி 39 விசுவாவசு 40 பராபவ 41 பிலவங்க 42 கீலக 43 ஸௌம்ய 44 ஸாதாரண 45 விரோதிக்ருது

46 பரிதாபி 47 ப்ரமாதீச 48 ஆனந்த் 49 ராக்ஷஸ 50 நள 51 பிங்கள் 52 காளயுக்தி 53 ஸித்தார்தி 54 ரௌத்ரி 55 துன்மதி 56 துந்துபி

57 ருத்ரோத்காரி 58 ரக்தாக்ஷி 59 க்ரோதன 60 அக்ஷய. என்பனவையே  60 வருடங்களாகும்.


இவ் அறுபது வருடங்கள் ஒன்று முடிந்தால் ஒரு பரிவ்ருத்தியாகும்.

ஆறு பரிவ்ருத்திகள் சேர்ந்தால் ஒரு தேவவருடமாகும் அதாவது 360 மனித வருடங்களாகும்.

1200 தேவ வருடம் ஒரு கலியுகம் ( 432000 மனித வருடம்)

2400 தேவ வருடம் ஒரு த்வாபரயுகம் (864000 மனித வருடம்)

3600 தேவ வருடம் ஒரு த்ரேதாயுகம் (1296000 மனித வருடம்)

4800 தேவ வருடம் ஒரு க்ருதயுகம் (1728000 மனித வருடம்)

மேற்கூறப்பட்ட நான்கு யுகங்கள் ஒன்று சேர்ந்தது 12000 தேவயுகமாகும்.(4320000 மனித வருடமாகும்)இதை ஒரு சதுர்யுகம் அல்லது ஒரு மஹாயுகம் என்று கூறப்படுகிறது.

மாஹாயுகங்கள் எழுபத்துஒன்றும்(71)சற்று சந்தி வருடங்களும் சேர்ந்த்து ஒரு மன்வந்த்ரம் எனப்படும்.இது ஒரு மனுவினுடைய காலமாகும்.

மனுக்கள் மொத்தம் பதினான்கு(14)பேர்களாவார்.

01) ஸ்வயம்புவ மனு 02) ஸ்வாரோசிஷ மனு 03) உத்தம மனு 04) தாமஸ மனு 05) ரைவத மனு 06) ஸாக்ஷூஸ மனு 07) வைவஸ்வத மனு 08) ஸாவர்ணி மனு 09) தக்ஷஸாவர்ணி மனு 10) ப்ரம்மஸாவர்ணி 11) தர்மஸாவர்ணி 12) ருத்ரஸாவர்ணி 13) தேவஸாவர்ணி 14) இந்த்ரஸாவர்ணி

போன்றவைகளே பதினான்கு மனுக்களின் பெயர்களாகும்.

சந்தி வருடங்களுடன் கூடிய இம்மொத்த மனுக்களின் காலமும் ஒன்று சேர்ந்த்து ஒரு கல்பமாகும். ஒரு கல்பம் என்பது மொத்தம் (1000) ஆயிரம் மஹாயுகங்களாகும்.

ஒரு கல்பம் என்பது ப்ரம்மாவிற்கு அரை நாளாகும்.இரண்டு கல்பம் சேர்ந்த்து ப்ரம்மாவிற்கு ஒரு நாளாகும்.பகலில் ப்ரம்மாவிழித்திருந்து இரவில் உறங்குவார்.ப்ரம்மாவின் பகல் பொழுதிலேயே ஸ்ருட்டிகள் நடக்கும் இரவில் ப்ரபஞ்சத்தை ஒடுக்கிக்கொண்டு தூங்குவார்.

ப்ரம்மாவின் மாதத்தில் முப்பது(30) பகல் பொழுதும் முப்பது (30) இரவு பொழுதும் அடங்கும்,

01) வாமதேவ கல்பம் 02) ஸ்வேதவராஹ கல்பம் 03) நீல லோஹித கல்பம் 04) ரந்தர கல்பம் 05) ரௌரவ கல்பம் 06) தேவ கல்பம் 07) ப்ருகத் க்ருஷ்ண கல்பம் 08) கந்தர்ப கல்பம் 09) ஸத்ய கல்பம் 10) ஈசான கல்பம் 11) தம கல்பம் 12) ஸாரஸ்வத கல்பம் 13) உதான கல்பம் 14) காருட கல்பம் 15) கௌரம கல்பம் 16) நாரஸிம்ம கல்பம் 17) சமான கல்பம் 18) ஆக்னேய கல்பம் 19) ஸோம கல்பம் 20) மானவ கல்பம் 21) தத்புருஷ கல்பம் 22) வைகுண்ட கல்பம் 23) லக்ஷ்மி கல்பம் 24) ஸாவித்ரீ கல்பம் 25) கோர கல்பம் 26) வராஹ கல்பம் 27) வைராஜ கல்பம் 28) கௌரீ கல்பம் 29) மஹேஸ்வர கல்பம் 30) பித்ரு,என ஸ்ருஷ்டிகள் நடக்கும் ப்ரம்மாவின் பகல் பொழுதின் பெயர்களாகும்.இரவு காலத்தில் ப்ரம்மா உறங்குவதால் அந்தந்த கல்பத்தின் இரவாகவே கொள்ளப்படும்.

அறுபது கல்பம்(60) சேர்ந்த்து ப்ரம்மாவிற்கு ஒரு மாதமாகும்,எழு நூற்று இருபது (720) கல்பம் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு வருடமாகும், இந்த கணக்கின் படி ப்ரம்மா (100) ஆண்டு காலம் வாழ்வார்,பிரம்மாவின் பூர்ண ஆயுள் எழுபத்திரெண்டாயிரம் (72000) கல்பகாலமாகும்.

இனி பிரம்மாவின் ஸ்ருஷ்டி முதல் சென்ற நாட்களை எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பதை கூறப்போகிறேன் கவணமாக கேட்கவும்.

வாமதேவ கல்பம் முடிவடைந்து ஸ்வேதவராஹ கல்பத்தில் இதுவரை ஆறு மனுக்களின் காலமும் அவர்களின் சந்திவருடங்களும் முடிவடைந்து தற்சமயம் ஏழாவது மனுவான வைவஸ்வதமனுவின் காலத்தில் இருபத்துஏழு சதுர்யுகங்கள் முடிந்து இருபத்து எட்டாவது சதுர்யுகத்தில் நான்காவது யுகமான கலியுகம் நடந்துக்கொண்டிருக்கிறது.

2010 வருட கணக்கின் படி கலியுகம் 5111 வருடம் முடிந்து விட்டது.