For Read Your Language click Translate

Follow by Email

17 May 2014

விமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்களா? : மறைக்கப்பட்ட உண்மை!இது ஒரு புதிய தொடர் பதிவு : “அறிந்ததும் மறந்ததும்” என்ற தலைப்பில் நாம் அறிந்த அறிவியல் விஞ்ஞானத்தையும் அதை சார்ந்த நம்ப முடியாத ஆனால் உண்மையாக இருக்க கூடியதுமான விடையங்களைப்பற்றி பேச உள்ளேன்/ளோம். ஏற்கனவே ஏலியன்ஸ், லெமூரியா பதிவுகளில் இவ் விடையங்களை தொட்டிருந்தேன். ஆனால் இங்கு தெளிவாக பேசலாம். இப் பேச்சு “நம் அறிவில்” பற்றி பலர் சிந்திக்க உதவும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன். :)
விமானம்,
அனைவரும் அறிந்த ஒன்று… இன்றைய உலகம் சுருங்க முக்கிய காரணமாக அமைந்த ஒரு சாதனம்.
பறவை வாணில் பறப்பதை பார்த்து நாம் ஏன் அது போல் ஒரு சாதனத்தை உருவாக்க முடியாது என்ற கேள்வி எழுந்ததன் விளைவாக 17 டிசம்பர் 1903 ஆம் ஆண்டு ஓர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்ற இரட்டை சகோரதர்கள் விமானத்தை உருவாக்கி உலகையே வியக்க செய்தனர்.
இது இருக்கட்டும் அனைவரும் அறிந்த தகவல் தான், ஆனால் விமானத்தை இவர்களுக்கு முதலே இன்னொருவர் உருவாக்கிவிட்டார் என்று வரலாற்று சான்றுகளுடன் சிலர் கூறுகின்றனர். நியூசிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் பியர்ஸ் (Richard Pearce ) என்ற இயந்திரவியலாளர் 31 மார்ச் 1903 ஆம் ஆண்டு முதலாவது விமானத்தை பரிசோதித்துள்ளார். ஆனால் அவரிடம் புகைப்பட ஆதாரங்கள் இருக்கவில்லை. மீண்டும் விமானத்தில் மாற்றங்களை செய்து 11 மே 1903 ஆம் ஆண்டு பலர் முன்னிலையில் விமானத்தை இயக்கி காட்டினார், ஆனால் தரையிறக்கும் போது விமத்திற்குள்ளானதில் விமானம் முற்றாக சேதமடைந்தது. மீண்டும் அதை சரி செய்து இயக்குவதற்கு முன்னர், ரைட் சகோதரர்கள் முந்திக்கொண்டனர்/ இது பலரும் அறியாத ஒரு வரலாற்றுதகவல்.
ஆனால், நாம் இங்கு பார்க்க நினைப்பது அது அல்ல…
நம் இராமாயணத்தில் விமானங்கள் பற்றி பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இராவணன் பயண்படுத்திய புட்பக/புஷ்பக விமானத்தை கருதலாம். மனிதர்களை ஏற்றிக்கொண்டு பறக்கும் சாதனம் அப்போதே பயன்பாட்டில் இருந்துள்ளதிற்கு இது ஒரு உதாரணம். ஆனால், சான்றுகள் / படிவுகள் என்று பார்த்தால் இந்த உதாரணத்தின் பெறுமதி இன்றைய திகதி வரைக்கும் பூச்சியம் தான். அதனால், நாம் இராமாயணத்தை கொண்டு விமான தொழில் நுட்பத்தை பற்றி விவாதிப்பது பொருத்தமற்ற ஒன்று. ஆனால், விவாதிப்பதற்கு எகிப்து இருக்கிறது!
எகிப்து சுமார் 10000 – 5000 ஆண்டுகளுக்கு முட்பட்ட ஒரு ராச்சியத்தின் எச்சங்களை கொண்டு இன்றும் உலகின் தொழில் நுட்பத்திற்கு சவால் விட்டுக்கொண்டிருக்கும் ஒரு மர்ம பூமி என்று சொல்லலாம்.
எகிப்திய பிரமிட்டுக்கள் அதன் அமானுட தொழில் நுட்பத்திற்காக இன்றுவரை ஆராயப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
அப்படி எகிப்தை ஆராய்ந்த போது அச்சு அசலாக இன்றைய விமானத்தை ஒத்த பல உருவங்கள் / பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ( இங்கு இருக்கும் படங்களில் நீங்கள் காண்பது எகிப்திய அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட உருவங்களையே.)

இந்த உருவங்கள் நிச்சயமாக உங்களிடையே பல கேள்விகளை உருவாக்கும். விமானத்தை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் கண்டுபிடித்து கொண்டாடினோம். ஆனால், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நம் முன்னோர் விமானத்தை பயன்படுத்தியுள்ளனரே அது எப்படி? அந்த அளவிற்கு தொழில் நுட்ப அறிவு இருந்திருந்தால் பிற்காலத்தில் அது ஏன் அழிந்தது? என்ற பல கேள்விகள் எழும்.

சிலர் நினைக்கலாம், பெரிய அளவில் விமானங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை வெறும் உருவ பொம்மைகள் தானே, அது அவர்களின் கற்பனை உருவங்களாகவும் இருக்கலாம் என்று.
ஆனால், அந்த சின்ன உருவங்களை கவணமாக பார்த்தோமானால் மேலும் வியப்பு காத்திருக்கிறது. ஆம், அதன் செட்டைகள் மற்றும் பின்புற அமைப்பு என்பன இன்றைய விமான அமைப்பை 100% ஒத்துள்ளது. ( காற்றில் விமானம் தளம்பாது பயணிக்க உதவும் பின் புற அமைப்பைக்கூட அந்த பொம்மையில் வடித்துள்ளார்கள். ஏன்? எப்படி? )
இதுவும் திருப்தியான சான்றாக இல்லை என்பவர்கள்… கீழுள்ள புகைப்படங்களை பாருங்கள். இவை பூமியின் பல்வேறு இடங்களில் மலை முகடுகள் தரைகளை மட்டமாக்கி உருவாக்கப்பட்ட பண்டைய விமான ஓடுதளங்கள்!
நாம் நவீன விமானத்திற்கான ஓடு தளங்களை எப்படி உருவாக்கியுள்ளோமோ, அதே போல் உண்மையை சொன்னால் எம்மை விட ஒரு படி மேலே மிகப்பிரமாண்டமான முறையில் அவர்கள் இந்த ஓடு தளங்களை உருவாக்கியுள்ளார்கள்.
இன்றைய இந்த “அறிந்ததும் மறந்ததும்” தகவல் இதோடு நிக்கட்டும்.
இதற்கும் “எம் அறிவியல்” இற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் நிச்சயம் நீங்கள் “லெமூரியா” பதிவை வாசிக்க வேண்டும். அப்போது தான் எகிப்து உருவாகியது எப்படி? அதற்கு மூலகாரணம் யார் என்பதை அறிந்து வியப்பீர்கள். :)
மீண்டும் அடுத்த வாரம் இதன் தொடர்ச்சி உடனும்  வேறு ஒரு தெரியாத தகவலுடனும் சந்திப்போம்!
உங்கள் விவாத கருத்துக்கள் நிச்சயம் இந்த ஆக்கத்தை செம்மையாக்கும். :) நான் விட்ட பிழைகளை திருத்தி வாசிப்போருக்கு சிறந்த தகவலை வளங்கும். :)
“விமான சாஸ்திர” இதைப்பற்றி தகவல் தெரிந்தோர் பகிர்ந்துகொள்ளவும் நன்றி :)
ORIGINALLY POSTED IN TAMIL GENIUS :By : Chandran Pirabu
http://edu.tamilclone.com/?p=1636