For Read Your Language click Translate

Follow by Email

05 May 2014

குரு/மந்திரஉபதேசம்
இந்தத் தலைப்பில் ஒரு பதிவு வெளியிட வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய ஆவல். இந்த மந்திரம், ஆன்மீகம் போன்றவற்றில் பல காலமாக எனக்கு ஈர்ப்பு இருந்தது. ஆரம்ப காலங்களில் சம்சாரியாக இருப்பதை விட சன்யாசியாகவே இருக்க விரும்பினேன். இதற்கு காரணம் என்ற ஒன்றைத் தேடுவதை அல்லது சொல்வதை  விட இதெல்லாம் கிரகாச்சாரம் என்று சொல்லி சுருக்கமாக முடித்துக் கொண்டு விடலாம்.

இறைவனின் விருப்பம் போலும். வயது ஏற ஏற இல்லறத்தின் பால் ஈர்ப்பு அதிகமாகி துறவறமாவது ஒன்னாவது, அது எப்படியோ நாசமாக போகிறது என்று தலை முழுகி விட்டேன். இப்போது மீண்டும் ஆன்மீக ஈடுபடு ஏற்பட்ட போதும், இல்லறத்தை விட விரும்பவில்லை. கடவுள் அவதாரங்கள் கூட இல்லறத்தில்தான் நல்லறம் கண்டிருக்கிறார்கள். ஆன்மீகத்தில் மேலான நிலையை அடைந்த சாதாரண முனிவர்கள் முதல் பிரம்ம ரிஷிகள் வரை இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்ந்து வீடு பேறு அடைந்திருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்த வரை ஆன்மீகத்தில் மேலான நிலையை அடைவதற்கு இல்லறம் ஒரு தடை அல்ல. நீட்டலும் மழித்தலும் வேண்டா உலகம் பழித்தது அழித்துவிடின் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கேற்ப எந்த பாவ காரியங்களும் செய்யாமல் இருந்தாலே நாம் ஓரளவேனும் ஆன்மீக வாதிகள்தான். இதற்கு நீட்டலான குடுமி வைப்பதோ, மழித்தலான மொட்டை அடிப்பதோ தேவையில்லை. அப்படி செய்து நாம் ஆன்மீக வாதிகள் என்று நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

சரி, இனி இன்றைய தலைப்பிற்கு வருவோம். குரு உபதேசம். எனது இரண்டாவது பாடத்தில் ஒரு குருவின் துணையில்லாது வித்தை கற்கும் யோகம் யாருக்கு அமையும் என்பதைப் பற்றி பதிவிட்டிருந்தேன். எனது பாடங்களில் அதுதான் இன்று வரை அதிகமாக படிக்கப் பட்ட பாடமாக இருக்கிறது.

எல்லோருக்கும் இந்த யோகம் அமையாதே. அப்படிப் பட்டவர்களுக்கு, ஒரு வழிகாட்டியாக குரு அமைவாரா, அதற்கு கிரக நிலைகள் ஒத்துழைக்குமா என்று அலசி ஆராய்வது. இது அடுத்தப் பதிவில் வரும். இதை பதிவிடுவதற்கு இன்னொரு காரணம். இந்த வகுப்பறை மாணவர்களில் ஒருவர், தனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருப்பதாகவும், லௌகீக வாழ்க்கையில் இருந்து சிறிது சிறிதாக விலகி ஆன்மீகம் பக்கம் போக விரும்புவதாகவும், எனக்கு குரு உபதேசம் கிடைக்குமா, இதைப் பற்றி ஒரு பதிவிடுமாறு கேட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கினங்கவும் இந்த பதிவு.

அடுத்து, நான் தினமும், இரண்டு வேளை மந்திர ஜபம் செய்கிறேன். இந்த ஜபம் செய்வது ஆரம்பித்த பிறகு எனது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள், வித்தியாசமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதைப் பற்றி பின்னொரு நாளில் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

இன்றைய தலைப்பிற்கு போகும் முன் இந்த மந்திரங்களைப் பற்றிப் பார்த்து விடுவோம். சிலர் நினைத்துக் கொண்டிருப்பது. இந்த மந்திரங்கள் துறவிகளுக்காக மட்டும்தான் இருக்கிறது, இல்லறம் கடைபிடிப்பவர்களுக்காக இல்லை என்று. உண்மையில், இல்லறத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு என்று சில மந்திரங்கள் இருக்கின்றன. துறவிகளுக்குரிய மந்திரங்களும் இருக்கின்றன. நல்ல குரு அமைந்தால் அவரவர் அவரவருக்குரிய மந்திரங்களை உபதேசமாகப் பெற்று ஜபித்து பயனடையலாம்.

குருவின் துணையுடன் மந்திரங்கள் உபதேசிக்கப் பெற்று ஜபிக்க ஆரம்பித்தால் விரைவில் பலன் கிடைக்கும். அதை எப்படி முறையாக ஜபிப்பது என்பன போன்ற விஷயங்களும் தெரிய வரும்.

மந்திரம் என்றதும் ஏதோ பில்லி சூனியம், ஏவல், இடுகாடு, பூதப் பிரேத பிசாசுகள் என்ற மாயை நம்மில் சிலருக்கு இருக்கிறது. இது மாந்திரீகத்தில் சிறு பகுதிதான். இதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கின்றன.

நான் ஏற்கனவே சொன்னதைப் போல் துறவிகளுக்கு இல்லற ஆசை ஏற்படாமல் இருக்கவும், காம உணர்வு தோன்றாமல் இருக்கவும், அப்படிதோன்றினாலும் அதை அடக்கி வைக்கவும் மந்திரங்கள் இருக்கின்றன.

கெடு பலன்களைக் கொடுக்ககூடிய கிரகங்கள் பிரீதியாக கிரக மந்திரங்கள் இருக்கின்றன. பெண்களுக்கு மனம் போல் மாங்கல்யம் அமையவும், திருமணமாகாத ஆண்களுக்கு ஒரு இனிய மங்கை நல்லாள் (கிள்ளை மொழியாள் என்றும் சொல்ல நினைத்தேன், அப்படியென்றால் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்பவரோ என்று யாராவது கேட்கக்கூடும், அதனால் சொல்லவில்லை) கிடைப்பதற்கான மந்திரங்களும் இருக்கின்றன.

தரித்திரம் தாண்டாமாடும் இடத்தில், அஷ்ட லெட்சுமியே வந்து குடியிருக்கக் கூடிய அளவுக்கான மந்திரங்கள் இருக்கின்றன. இன்னும் பலவும் இருக்கின்றன. என்னென்ன மந்திரங்கள், அவை எப்படி வேலை செய்கின்றன போன்றவை வேறொரு பதிவில் சொல்கிறேன். Not here and not now because it is beyond scope of this lesson. நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு சம்பந்தமில்லாதது.

இந்த மந்திரங்களெல்லாம் நமக்கு ஒரு நல்ல குரு கிடைத்து அவர் உபதேசம் பெற்று முறையாக ஜபித்தால் நல்ல பலன் காணலாம். ஒரு நல்ல குருவின் மூலம் மந்திர உபதேசம் பெறுவதற்கான கிரக நிலைகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். அதை இன்னும் ஓரிரு நாளில் பதிவிட எண்ணியுள்ளேன். அப்போது படித்து பயனடையலாம்.

இப்போது யாருடைய பொறுமையையும் சோதிக்கும் வகையில் நீட்டி முழக்காமல் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.


குரு உபதேசத்திற்கான கிரக நிலைகள் – விளக்கம்

தமிழ்இலக்கனமுறைப்படிகூறியதுகூறல்தவறு. பத்துக்குற்றங்களில்ஒன்றுஎனதொல்காப்பியம்கூறுகிறது (இதுதமிழ்இலக்கனத்தைப்பற்றியபாடம்இல்லைஎன்பதால்மற்றஒன்பதைப்பற்றிஇங்குகூறவில்லை. அதேபோல்சங்கஇலக்கியநூல்களில்ஒன்றானநன்னூளில்பத்துஅழகைப்பற்றியும்கூறப்பட்டிருக்கிறது). இந்தகுற்றத்தைதான்இன்றுசெய்யப்போகிறேன். அதாவதுமுந்தையபாடத்தில்சொன்னதையேதிரும்பசொல்லப்போகிறேன். சிலர்கடினமாகஇருக்கிறதுஎன்றுசொன்னதால்அதையேஎளிமைப்படுத்திக்கொடுக்கப்போகிறேன். சரி, இன்றையபாடத்திற்குச்செல்வோம். 9ம்இடம்ஒருவருக்குஅமையப்போகும்குருவைப்பற்றிசொல்லக்கூடியது. இங்கேகுருஎன்பவர்ஆன்மீககுருவாகவும்இருக்கலாம். இந்தமாதிரிஜோதிடத்தைக்கற்றுக்கொடுக்கும்குருவாகவும்இருக்கலாம். பள்ளிக்கூடத்தில்பாடம்கற்றுக்கொடுப்பவராகவும்இருக்கலாம். அல்லதுவேறுஎதையேனும்கற்றுக்கொடுப்பவராகவும்இருக்கலாம். சுருக்கமாகவாழ்க்கைக்குவழிகாட்டியாகஇருப்பவர்எனலாம். 9ம்இடம்எந்தராசிஎன்பதைப்பொறுத்துநமக்குவாய்க்கப்போகும்குருஎந்ததிசையில்இருப்பார்என்பதைஓரளவேனும்கணிக்கலாம். முதலில்ஒவ்வொருராசிக்கானதிசையைப்பார்ப்போம். மேஷம் – கிழக்குரிஷபம் – தெற்குSHREEமிதுனம் – மேற்குகடகம் – வடக்குசிம்மம் – கிழக்குகன்னி – தெற்குதுலாம் – மேற்குவிருச்சிகம் – வடக்குதனுசு – கிழக்குமகரம் – தெற்குHEMAகும்பம் – மேற்குGGமீனம் – வடக்குஉதாரணமாகஒருவருக்கு 9ம்இடம்கன்னியானால்அவருக்குவாய்க்கக்கூடியகுரு/ஆசிரியர்தெற்குதிசையில்இருப்பார்என்றுமுடிவுசெய்துக்கொள்ளலாம். அப்படியேமற்றராசிகளுக்கும்பார்த்துக்கொள்ளுங்கள். பள்ளியில்நமக்குப்பலஆசிரியர்கள்பாடம்கற்றுக்கொடுத்தாலும் 9ம்இடத்திற்குரியதிசையில்இருந்துவந்தவர்நம்க்குபிடித்தவராகவோ, நாம்அவருக்குபிடித்தவராகவோஇருக்கலாம். நம்வாழ்வில்என்றும்மறக்கமுடியாதவராகஇருப்பார்.முன்பேசொன்னதுபோல்இந்த 9ம்இடம்ஒருவருக்குவாய்க்கப்போகும்குருவைப்பற்றிமட்டும்தான்காட்டும். அந்தகுருவால்நமக்குக்கிடக்கக்கூடியஉபதேசத்தைப்/பாடம்படித்தல்பற்றி 3ம்இடத்தின்மூலம்தான்தெரிந்துக்கொள்ளமுடியும்.ஒருவருக்கு 3, 9ம்இடங்களில்சனி, ராகு, செவ்வாய்போன்றகிரகங்கள்இருந்தால்நல்லகுருகிடைக்கமாட்டார். கிடைத்தாலும்குருஉபதேசம்பெறுவதுகடினமாகிவிடும். இவைஇங்குபலமாகஇருந்தால்ஒருகுருவிடம்பணிந்துஉபதேசம்கேட்கவேண்டும்என்றஎண்ணம்ஏற்படாது. யார்குருஎவர்குருவேலையற்றவர்கள்என்றரீதியில்பேசிக்கொண்டுபோவார்கள். இதேபோல் 3,9ம்அதிபதிகள்யாராயினும்அவர் 6,8,12ல்மறையாமல்இருந்தால்குருஉபதேசம்பெறுவதற்குஎந்தத்தடையும்இருக்காது. இந்தஅமைப்புஇருப்பவருக்குஒருநல்லவழிகாட்டிஅமைவார். 3,9ம்இடங்களில்சனி, ராகு, செவ்வாய்இருந்து 3,9ம்அதிபதிகளும் 6,8,12ல்மறைந்திருந்தால், அப்படிப்பட்டவருக்குசர்வநிச்சயமாகநல்லகுருஅமையமாட்டார்.பள்ளிவாழ்க்கையிலும்நல்லஆசிரியர்அல்லதுநல்லவர்கள்ஆசிரியராகக்கிடைக்கமாட்டார்கள். நல்லாசிரியர்கிடைத்தாலும்இவர்ஆசிரியரிடம்அனுசரித்துபோய்பாடம்கற்றுக்கொள்ளவிரும்பமாட்டார். இந்தஅமைப்புள்ளவர்கள்தானேமுன்வந்துபாடம்கற்றுநல்லபிள்ளையாகஇருக்கமுற்பட்டாலும்நேரம்சரியில்லைஎன்பார்களேஅதுபோல்ஏதாவதுஒன்றுவந்துகெட்டபெயர்தான்மிஞ்சும். சகமாணவர்கள்யாராவதுஆசிரியரிடம்இவர்களைப்பற்றிதவறாகச்சொல்லிகெட்டபெயர்வாங்கவைப்பார்கள். அல்லதுஇவர்கள்கெட்டபெயர்வாங்கும்படியானசூழ்நிலைஏற்படும்.அடுத்துபத்ருகாரகர் (BK)நமக்கும்நமக்குஅமையும்குருவிற்கும்உள்ளதொடர்பைகுறிப்பவராவார். இவரும், சனி, ராகு, செவ்வாய்,ராகுசேர்க்கைஇல்லாமலும், 3,6,8,12ல்மறையாமலும்இருக்கவேண்டும். அப்போதுதான்நமக்கும்நம்குருவிற்கும்உள்ளதொடர்புகள்துண்டிக்கப்படாமல்இருக்கும். அல்லதுஅப்படிஇருந்தாலும்அவர்ஆத்மகாரகரோடு (AK)சம்பந்தப்பட்டிருக்கவேண்டும். அப்படிஇருந்தால்குருஉபதேசம்பெறஎந்ததடையும்இருக்காது.நமக்குஆன்மீக (spiritual) குருஅமையவேண்டுமானால்பத்ருகாரகரோடு (BK) சூரியன், குரு, செவ்வாய்போன்றவர்கள்இருக்கவேண்டும். பத்ருகாரகரோடுபுதன், சுக்கிரன், சனி, ராகுபோன்றவர்கள்நமக்குலௌகீகவாழ்க்கைக்கான (material life) குருஅமையும்படியாகச்செய்துவிடுவார்கள். இதுபோன்றஅமைப்புஒருவருக்குஆன்மீகவாழ்க்கையில்உள்ளநாட்டத்தைக்குறைத்துவிட்டுஅவரைலௌகீகவாழ்க்கைக்குஇழுத்துச்சென்றுவிடும். அப்படியேஆன்மீகத்தில்இருந்தாலும்அதைவைத்துபணம்வசூலிப்பது, மற்றகெட்டகாரியங்களில்ஈடுபடுவதுபோன்றவைஇருக்கும்.பத்ருகாரகருக்கு (BK) 3ல்சனிஅல்லதுராகுஇருந்தால்அவர்பிறருக்குநல்லஉபதேசம்செய்பவராகவும்நல்லகுருவாகவும்இருக்கமாட்டார். ஊருக்குமட்டும்உபதேசம்செய்பவராகவும்போலிசாமியாராகவும்இருப்பார்.சரிஇப்போதைக்குஇவ்வளவுவிளக்கம்போதும்என்றுநினைக்கிறேன். அடுத்தபகுதிமேலும்விளக்கங்களுடன்வரும். இன்னொருநண்பர்கேட்டுக்கொண்டதுபோல்காரகத்துவங்களைப் (chara karaka system – ஆத்மாகாரகர், அமத்தியகாரகர்என்றுமேலும்காரகர்கள்இருக்கிறார்கள்) பற்றியும்பதிவிடுவேன். இப்போதைக்குநன்றிகூறிவிடைபெற்றுக்கொள்கிறேன்.