For Read Your Language click Translate

06 May 2014

மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 17.


இந்துக்களின் 'ஓம்' என்னும் வடிவம் பயிர்வட்டங்களில் இருந்தது நம்மை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது என்னவோ உண்மைதான். அதுவும் பயிர்வட்டங்களின் வரலாற்றிலேயே மிகவும் ஆணித்தரமாக, மனிதனால் உருவாக்கப்படவில்லை என்று சொல்லப்படும் ஒன்றாக, 'ஓம்' வடிவப் பயிர்வட்டம் இருக்கிறது என்கிறார்கள். உண்மையில் அந்த வடிவம் 'ஓம்' தானாஅல்லது வேறு ஒன்றைக் கு...றிப்பதா? என்பது இன்றுவரை புரியவில்லை. 'ஓம்' என்னும் வடிவத்துக்கு இருக்க வேண்டிய அனைத்துக் கோடுகளும் அந்தப் பயிர்வட்டத்தில் உருவாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அது 'ஓம்'தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் சிலர். ஒரு பேச்சுக்கு அதை 'ஓம்' என்று நாம் எடுத்துக் கொண்டால், ஏலியன்களுக்கும்  'ஓம்' வடிவத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற ஆராய்ச்சிக்குப் போக வேண்டும். அப்படிப் பார்க்கும்போது, புராதன ஏலியன்களின்  (Ancient Aliens) ஆராய்ச்சியில் இந்து மதப் புராணக் கதைகளும், கடவுளர்களும்தான் மேற்குலக ஆராய்ச்சியாளர்களால் முதன்மைப்படுத்திச் சொல்லப்படுவதாக இருக்கிறது. 'புராதன ஏலியன்களும், இந்து மதமும்' என்று இன்னுமொரு தொடரையே உங்களுக்கு நான் தரும் அளவுக்குத் தகவல்கள் அவை பற்றி நிறைந்திருக்கின்றன. முடிந்தால் வேறொரு தொடர் மூலம் அதைத் தருகிறேன்.

http://goo.gl/y4vIjI

மேலே சொல்லப்பட்ட 'ஓம்' வடிவப் பயிர்வட்டத்துக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு. அது 07.07.07 இல் என்று எல்லாமே ஏழில் வரும் திகதியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் இது இந்துக்களின் 'ஓம்'தான் என்று சிலர் அடித்துச் சொல்வதற்கு, சாட்சியாக வேறொரு வட்டச் சித்திரத்தைக் காட்டுகிறார்கள். இந்தப் பயிர்வட்டச் சித்திர அமைப்புகள் பயிர்களினால் மட்டுமல்ல, மணல், ஐஸ் போன்றவற்றினாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். அமெரிக்காவின் ஆரிகனில் (Oregon) 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு ஆற்றுப்படுகைக்கு அருகே இருக்கும் மணல்பரப்பில் ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. அந்தச் சித்திரம் ஒரே இரவில் உருவாக்கப்பட்டிருந்தது. "ஆற்று மணலில் சித்திரம் வரைவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. மனிதர்கள் சுலபமாக அதை வரைந்துவிடலாமே" என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்தச் சித்திரம் நீங்கள் நினைப்பது போலல்ல. மிகவும் சிக்கல் வாய்ந்த ஒரு சித்திரம் அது. அந்தச் சித்திரத்தில் வரையப்பட்டிருக்கும் கோடுகளின் மொத்த நீளம் 21 கிலோமீட்டர் என்றால் அதன் பிரமாண்டத்தைக் கற்பனை பண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு கோடும் 10 அங்குலம் அகலமுள்ள மிகவும் பிரமாண்டமான சித்திரம் அது. அந்தச் சித்திரம் என்ன வடிவத்தில் இருந்தது என்பதுதான் இங்கு ஆச்சரியமே! அந்த வடிவம் என்ன தெரியுமா? இந்துக்களின் 'யந்திரம்' (Sri Yantra) என்று சொல்வோமே அந்த வடிவத்தில் அது இருந்தது.

படங்களைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்..!

http://goo.gl/UUho4z

http://goo.gl/CGNoiO

http://goo.gl/w4C9BE

ஒரே இரவில் இவ்வளவு பெரியதொரு சித்திரத்தை மனிதர்களால் உருவாக்கவே முடியாது. அதுமட்டுமல்லாமல், அந்தச் சித்திரம் அமைக்கப்பட்ட இடம், ஈரமான சேற்று மண்ணில். அங்கு யாராவது சித்திரத்தை அமைத்திருந்தால், அவர்களது காலடித் தடம் எல்லா இடங்களிலும் இருந்திருக்க வேண்டும். அந்தச் சித்திரம் அமைந்த இடம் மட்டுமில்லாமல், அதைச் சுற்றிவர எங்குமே எந்தக் காலடித் தடங்களும் காணப்படவில்லை. மனிதர்கள் செய்திருந்தால், செய்தவர்களின் காலடித் தடத்தில் ஒன்றாவது அங்கு இருந்திருக்க வேண்டுமல்லவா?

சேற்று மணலில் தடங்களை அழித்துவிட்டு எப்படிச் செல்ல முடியும்? சித்திரத்தின் உள்ளேயும் எந்தக் காலடிகளும் இல்லை. எப்படி இது சாத்தியம்? அந்தச் சித்திரம் அமைக்கப்பட்டதும் மக்கள் கூட்டமாக வந்து அதைக் கவனிக்கத் தொடங்கியபோது, இருவர் தாங்கள்தான் அதை உருவாக்கியது என்று சேறு படிந்த காலணிகளுடன் வந்தார்கள். அவர்கள் அதை வரைந்த விதத்தை விளக்கியபோதே சந்தேகம் தோன்றியது. அவர்களிடம் இது போல ஒன்றைச் சாதாரண காகிதத்தில்,அல்லது நிலத்தில் மீண்டும் வரைந்து காட்டினால், தகுந்த பரிசு அளிக்கிறோம் என்று கூறியதும், போக்குக் காட்டிவிட்டு அவர்கள் நழுவியதும் நடந்தது.

உலகமெங்கும் மனிதர்கள் அறிய முடியாத இது போன்ற மர்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அப்படி நடக்கும் மர்மங்களில் பல, மனிதர்கள் சம்பந்தப்படாத போதும் நம்பக்கூடிய வகையிலேயே அமைந்துவிடுகின்றன.

இங்கு நடந்திருப்பதும் மனிதர்களல்லாத ஏதோ ஒரு சக்தியால் உருவாக்கப்பட்டதாகவே சொல்கிறார்கள். அதுவும் அங்கு வரையப்பட்டிருக்கும் சித்திரம் இந்துக்களின் 'இயந்திரம்' என்று சொல்லும் வடிவில் அமைந்திருந்தது. ஸ்ரீ யந்திரச் சித்திரத்துடன் முடிச்சுப் போட்டே, 'ஓம்' என்னும் பயிர் வட்டத்தையும் இந்துக்களுடைய வடிவம்தான் என்கிறார்கள் சிலர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் 'ஓம்' பயிர் வட்டத்தில் இரவு பகலாக தியானங்களும், இந்துப் பஜனைகளும் பல நாட்களாக நடந்து வந்தது தனிக் கதை.

பயிர்வட்டங்கள் மனிதனால் உருவாக்கப்படுகின்றன அல்லது வேறு ஒரு சக்தியினால் உருவாக்கப்படுகின்றன என்பதைவிட, ஏன் உருவாக்கப்படுகின்றன என்னும் கேள்விக்குத்தான் எந்தப் பதிலும் கிடைப்பதில்லை. ஆனால் உருவாக்கப்படும் ஒவ்வொரு பயிர்வட்டத்துக்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாகவே, அவற்றை ஆராய்பவர்கள் நினைக்கிறார்கள்.

அதனை அறிய அடுத்த பதிவு வரை காத்திருப்பீர்களா?

No comments:

Post a Comment