For Read Your Language click Translate

06 May 2014

மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 16.

மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 16.


மனிதர்கள் உருவாக்கவில்லை என்பதை மேலும் உறுதி செய்வதற்கு, இன்னுமொரு பயிர் வட்டமும் உருவாகியது. அது அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கியது.

http://goo.gl/Ao6cGr...

கடந்த பாகத்தில் சொல்லப்பட்ட ஜூலியா செட் பயிர்வட்டம் உருவாகி, சரியாக 11 வருடங்களின் பின்னர் அதே நாளில் நடந்தது இன்னுமொரு ஆச்சரியமான சம்பவம். 2007ம் வருடம் ஜூலை மாதம் 7ம் திகதி அந்தச் சம்பவம் நடந்தது. வின்ஸ்டன் கீச்சும் (Winston Keech), காரி கிங்கும் (Gary King) நண்பர்கள். வின்ஸ்டன் ஒரு எஞ்சினியராக இருந்தாலும், அவருக்கு ஏலியன்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நெடுநாட்களாக உண்டு. இரவில் படம் பிடிக்கும் காமெராக்கள் சகிதமாக வைல்ட்ஷையரில் உள்ள வயல்வெளிப் பிரதேசங்களில் திரிந்தபடி கண்காணிப்பதே அவர் வேலை. 07.07. 2007 அன்று, 'ஈஸ்ட்ஃபீல்ட்' (East Field) என்னும் இடத்திலுள்ள மலையில் நண்பர் காரியுடன் அமர்ந்தபடி வயல்வெளிகளை அவதானித்துக் கொண்டிருந்தார். தன்னிடம் இருந்த காமெராக்களை ஓடவிட்டுக் கொண்டு உடனிருந்த காரியுடன் பேசிக்கொண்டிருந்தார். நள்ளிரவு தாண்டி, நேரம் அதிகாலை 1.35 ஐ நெருங்கியது. கும்மிருட்டில் திடீரென 'ஃப்ளாஷ்' வெளிச்சங்கள் போல ஒளி வட்டங்கள் தோன்றின. இதற்கென்றே தயாராக இருந்த அவர்கள்ஆச்சரியத்துடனும், சந்தோசத்துடனும், ஒருவித பயத்துடனும் அங்கு நடப்பதை வீடியோக் காமெராவினால் பதிவு செய்தனர். அத்துடன் 'நைட்விஷன்' பொருத்தப்பட்ட வேறு கமெராவில் பார்த்தபோது, எங்கும் மனித நடமாட்டமோ, வாகனங்களோ காணப்படவில்லை. அவர்கள் அமர்ந்திருந்தது சிறிய மலைப்பிரதேசம் என்றபடியினால், அனைத்தையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதிகாலை 3 மணிவரை அந்த ஃப்ளாஷ் வெளிச்சங்கள் ஆங்காங்கே எரிந்து அணைவதைக் கண்டார்கள்.  3.13 மணிவரை அவர்களுக்கு முன்னால் காட்சி தந்த பெரிய வயல்வெளியில் எதுவுமே இருக்கவில்லை. ஆனால் ஏழே நிமிடங்களின் பின்னர் 3.20க்குப் பார்த்த போது அவர்களால், அவர்கள் கண்களை நம்பவே முடியவில்லை. வயல்வெளியில் நீளமான வடிவமொன்றைக் கண்டார்கள். அது என்ன எதுவென்று தெரியவில்லை. உடன் சென்றுபார்க்கவும் பயமாக இருந்தது. நான்கு மணியளவில் கொஞ்சம் வெளிச்சம் வரத்தொடங்கியதும் பார்த்த போதுதான் தெரிந்தது. அது ஒரு மிகப்பெரிய பயிர்வட்டம் என்பது.

http://goo.gl/16CcpI

நடந்தவை அனைத்துமே காட்சிகளாக, சாட்சிகளாக வின்ஸ்டனின் காமெராக்களில் பதிவாகியிருந்தன. உருவாக்கப்பட்டிருந்த பயிர்வட்டம் 300 மீட்டர் நீளமாகப் பிரமாண்டமானதாக இருந்தது. 150 தனித்தனி வட்டங்களால் அது உருவாக்கப்பட்டிருந்தது. அந்தச் சம்பவத்தைப் பொய்யென்று யாருமே மறுக்க முடியாதபடி, உண்மையான வீடியோ ஆதாரங்களுடன் அவர்கள் கொடுத்த பேட்டி ஐரோப்பாவையே உலுக்கியெடுத்தது. அனைத்துப் பத்திரிகைகளும் அது பற்றிய செய்திகளை வெளியிட்டன. இதில் என்ன ஆச்சரியமென்றால், 'மைக்ரோவேவ்' (Microvave) என்று சொல்லப்படும்  வெப்பக் கதிர்கள் இதில்பயன்படுத்தப்பட்டிருப்பது உடனடியான பரிசோதனைகள் மூலம் அவதானிக்கப்பட்டது. யாரும் இதை நாங்கள்தாம் செய்தோம் என்று சொந்தம் கொண்டாடி வரவுமில்லை. மனிதனால் செய்யப்படாத பயிர்வட்டத்துக்கு மிகவும் ஆணித்தரமான சாட்சியாக இந்தப் பயிர்வட்டம் காட்சியளித்தது.

இதுவரை பயிர்வட்டங்களைப் பற்றி பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் எவராலும், எதுவும் சொல்ல முடியவில்லை. ஏழே நிமிடங்களில் 300 மீட்டர் அதாவது இரண்டு ஃபுட்பால் மைதானங்கள் அளவு பெரிய பயிர்வட்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இது எப்படிச் சாத்தியமாக முடியும்? சரி, இதை மனிதன்தான் உருவாக்கினான் என்றால் அவனுக்குக் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் இதைச் செய்வதற்குத் தேவைப்பட்டிருக்கும். சரி, இவை மனிதனால் செய்யப்படவில்லை என்றால், யாரால் செய்யப்படுகின்றன? பகலில் காற்றுச் சுழல்கள் போலவும், இரவில் வெளிச்சப் பந்துகள் போலவும் காட்சி தருபவை என்ன? இப்படியான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், இந்தப் பயிர்வட்டத்தை ஆராய்ந்த சிலர் வேறு ஒரு விளக்கத்துடன் நிற்கிறார்கள். அந்த விளக்கத்தை நீங்கள் அறிந்தால் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பீர்களோ தெரியவில்லை. ஆராய்ச்சியாளர்களில் சிலர் கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா...?

http://goo.gl/DZZiEU

ஆம்! சாட்சாத் இந்துக்களின் 'ஓம்' என்னும் அடையாளம்தான் இது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்களில் சிலர். இப்படிப் பர்க்கும்போது நிலைமை மேலும் சிக்கலான ஒரு வடிவத்தையே எடுக்கிறது என்று நம்பக் கூடிய நிலைக்கு நாம் வந்துவிடுவோம்.  இந்த அளவுக்கு மேல் இன்று யோசித்தால் தலையே வெடித்துவிடும். எனவே இந்த வாரம் இவை பற்றிச் சிந்திப்பதை விட்டுவிட்டு, அடுத்த பாகத்தில் மீண்டும் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்.

அதைப் படத்திலேயே பாருங்கள் தெரியும்.......!


அதனை அறிய அடுத்த பதிவு வரை காத்திருப்பீர்களா?

எழுதியவர்.. பதிவர் ராஜ்சிவா அவர்கள்.

இந்த தொடரின் மற்றைய பாகங்கள்.. >>> http://goo.gl/tymh3f

No comments:

Post a Comment