For Read Your Language click Translate

06 May 2014

பதிவு - 12 : ஊர்வசியின் சாபம் !!!

வாசகர்கள் அனைவர்க்கும் இனிய காலை வணக்கம். இதே போல என்றும் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டி, இது வரை அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு இன்றைய பதிவை பதிக்கின்றேன் .

அசுரனிடமிருந்து ஊர்வசியைக் காப்பாற்றி, தேவலோகத்தில் புருரவன் ஒப்படைத்ததாகவும் , இருவரும் ஒருவருக்கொருவர் காதலில் சிக்கி தவித்து கொண்டிருந்தார்கள் என்று நேற்றைய பதிவினை முடித்திருந்தேன். இனி அங்கிருந்தே தொடர்வோம்.

பதிவு - 12 : ஊர்வசியின் சாபம் 

புருரவன் தேவலோகத்தை விடுத்து, பூலோகத்திற்கு வந்து சேர்ந்திருந்தாலும் அவன் மனம் என்னவோ அங்கேயே நிலைத்திருந்தது. இனி ஒரு முறை ஊர்வசியை எப்போது காண்போம் என்று அவன் மனம் ஏங்கி தவித்தது. அங்கு தேவலோகத்தில் ஊர்வசியின் நிலையும் இதுவே. அவன் நினைவு அவளை மிகவும் வாட்டியது.

அந்த நேரத்தில், தேவேந்திரன் ஊர்வசியின் ஆபத்து நீங்கி பத்திரமாக சொர்க்கத்தை அடைந்ததை கொண்டாடும் பொருட்டு ஒரு நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறு கட்டளையிட்டான். அது கேட்ட நாட்டிய குரு பரத முனிவர், அந்த நிகழ்ச்சியில் ஆட ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோரை தேர்ந்தெடுத்தார்.

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரம் ஆனது. அனைவரும் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் அவள் மனம் புருரவனிடமே லயித்திருந்தது.தேவ மங்கையரின் நடனத்திற்கு ஆணையிட்டான் இந்திரன். 

தேவமங்கையர் அவன் முன் தோன்றினர். அன்று நடனத்தில், ஸ்ரீஹரி விஷ்ணுவின் மீது லக்ஷ்மி தேவி கொண்ட காதலை விவரிப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. வாயில் என்னவோ பாடலை பாடும் போது விஷ்ணுவை பற்றி பாடினாலும், மனம் முழுக்க புருரவனே நிரம்பியிருந்தான்.
அப்போது பாடலின் ஒரு பகுதியில், தோழிகள் லக்ஷ்மி தேவியிடம் உன் மணாளன் யார், நீ காதலிப்பது எவரை என்று கேட்பது போலவும், அதற்கு லக்ஷ்மி தேவி, விடை அளிப்பது போலவும் வந்தது.

அதற்கு லக்ஷ்மி தேவி, உன்னை அன்றி எவரை நான் மணப்பேன், ஹே புருஷோத்தமா !! என்பது போல் வந்த வரியில், ஊர்வசி தன்னை மறந்து அவள் மனதில் இருந்தவன் பெயரை கூறிவிட்டாள். அதாவது, உன்னை அன்றி வேறு எவரை நான் மணப்பேன், ஹே புருரவா !! என்று பாடி விட்டாள்.
அது கேட்ட அவர்களது குரு பரத முனிவர் கடும் கோபம் கொண்டார். தேவலோகத்தில் இருந்து கொண்டு, பகவான் நாராயணனுக்கு இணையாக இப்படி ஒரு மானுடனை சேர்த்து வைத்து பாடி மிகப் பெரும் தவறிழைத்த நீ, எவனை நினைத்து ஆடி கொண்டிருந்தாயோ, அவனிடமே பூலோகத்தை சென்றடைவாயாக !! என்று சபித்தார். மேலும், நீ அவ்வாறு வாழ்ந்து வந்தாலும், நீ, உன் வாழ்வில் காதலனா ? அல்லது மகனா ? யாருடன் வாழ்வது என்று முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் போது, நீ மீண்டும் பூலோகத்தினை விடுத்து தேவலோகம் திரும்பி விடுவாய் !! என்று சபித்தார்.

சாபத்தை பெற்ற ஊர்வசி ஒரு பக்கம் வருத்தம் அடைந்தாலும், மற்றொரு புறம் அவள் காதலோனோடு சேர்ந்து இருக்க போவதை எண்ணி மனம் மகிழ்ச்சியே கொண்டாள். பூலோகத்தினை நோக்கி விரைந்தாள்.

அங்கே பூலோகத்தில், புருரவனின் மனைவி அவுஷினிரி, அவன் நடவடிக்கைகளின் மீது சந்தேகம் கொண்டு, அவன் ஊர்வசியின் வருகைக்காக காத்திருந்த வேளையினில், அங்கு வந்த அவள் அவனுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள். அதே நேரத்தில் வானவெளியில் புருரவனை நோக்கி வந்து கொண்டிருந்த ஊர்வசி அவர்களது வாக்குவாதத்தினை கண்ணுற்றாள்.

புருரவனை அடைந்தாளா ஊர்வசி ??

அதனைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம் ...

...

See More
— with Vijyn Kmr and 8 others.

No comments:

Post a Comment