For Read Your Language click Translate

06 May 2014

இயற்கை வைத்தியத்தின் பலன்கள்


For the past few years has been the increasing importance of natural medicine. However the figure looked more natural therapies   rather than medication


கடந்த சில ஆண்டுகளாக இயற்கை மருத்துவத்தின் அவசியம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நடத்தப்பட்ட புள்ளி விவரத்தை ஆராய்ந்தபோது  மருந்துகளை விட இயற்கை மருத்துவத்தை அதிகம் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. அனைவருக்கும் உதவும் இயற்கை மருத்துவம்  குழந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்கல்ல. பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செய்யப்படும் இயற்கை சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை. பொதுவாக  அனைத்து இயற்கை வைத்தியமும் நான்கு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க இயற்கை வைத்தியம் பெரிதும் பயன்படுகிறது. குழந்தைகள் உடலில் நோய்  எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் எளிதில் இருமல் தாக்கும். இருமல், சளி வந்ததும் அழையாத விருந்தாளியாக வந்து விடுவது மூச்சு பிரச்சனை.  இவை குழந்தைகளின் உடல்நலத்தை அடிக்கடி பாதிக்கும். இந்த வகையும் பொதுவான நோய்தொற்றுகளில் ஒன்று தான். குழந்தைகளை தாக்கும்  இருமல் பிரச்சனையிலிருந்து விடுபட ஓமவல்லி இலையை நன்கு கழுவி கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு ஒரு கப் வந்ததும் குழந்தைகளுக்கு  குடிக்க கொடுக்கவும் குடிப்பதற்கு முன்னர் ஒரு சில நிமிடங்கள் ஓய்வு எடுக்க செய்ய வேண்டும்.

இந்த மூலிகை தண்ணீர் குடித்து வந்தால் இருமல், சளி பிரச்னை வராமல் தடுக்கலாம். டயாபர் அதிகம் உபயோகிப்பதனால் குழந்தைகளுக்கு அரிப்பு,  அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. இந்த அலர்ஜியை தடுக்க குழந்தைகளை குளிக்க வைப்பதற்கு வைத்துள்ள தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று  சொட்டு வெள்ளை வினிகர் கலந்து குளிக்க வைக்கலாம்.

கட்டைவிரலை உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒரு வித பயம், தனிமையில் இருக்கிறோம் என்கின்ற செயல்பாடுகளின்  காரணமாகவே அவர்கள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இளம் குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவதால் குழந்தைகளுக்கு பசி  எண்ணமே இருக்காது.

இருமல் ஏன்?

டயாபர் ஒவ்வாமை குழந்தைகளை தாக்கும் இருமல் பிரச்சனையிலிருந்து விடுபட ஓமவல்லி இலையை நன்கு கழுவி கொதிக்கும் சுடு தண்ணீரில்  போட்டு ஒரு கப் வந்ததும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கவும் குடிப்பதற்கு முன்னர் ஒரு சில நிமிடங்கள் ஓய்வு எடுக்க செய்ய வேண்டும். இந்த  மூலிகை தண்ணீர் குடித்து வந்தால் இருமல், சளி பிரச்னை வராமல் தடுக்கலாம். மேலும் இருமல் பிரச்னைக்கு பெருந்துத்தி பூக்களைக்கொண்டு  குளிர்பானம் தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குளிர்பானத்தை வடிகட்டி ஒரு சிறிய துணியில் ஈரமாக்கி குழந்தையின் தொண்டை, மூச்சு  குழாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் தேய்க்க இருமல் குணமாகும்.

No comments:

Post a Comment