For Read Your Language click Translate

06 May 2014

மாதக்கணக்கில் உறங்கும் உயிர்கள்..!




குளிர்ப் பகுதிகளில் வசிக்கும் சிலவகை எலிகள், கரடி, நரி, 13 கோடு அணில், மீன்கள், தவளைகள் போன்றவை உறைய வைக்கும் குளிரிலிருந்து தப்பிக்க நீண்ட தூக்கத்தை எடுத்துக் கொள்கின்றன. இதுபோல் சுட்டெரிக்கும் கோடையிலிருந்து தப்பிக்க நத்தைகள், சில மீன்கள், பாலூட்டிகள் நீண்ட கோடைத் தூக்கத்தையும் எடுத்துக் கொள்கின்றன.

குளிர்காலம் தொடங்கி வெப்பம் குறைந்ததும் குளிர்ப்பகுதியில் வாழ்கும் சில விலங்குகள் வேகமாய் மண்ணுக்கு கீழே குடில் அமைத்து தூங்கப்போய் விடும். குடிலுக்குள் குளிர் நுழையாமல் இருக்க வாசலில் மண்போட்டு மூடிவிடும். சரியாக பிப்ரவரி 2 ம் நாள் நீண்ட தூக்கத்தை கலைத்து வெளியே வருமாம். வெளியே வந்து வெளியில் தன் நிழல் தெரிகிறதா என்று பார்க்கும். நிழல் தெரிந்து விட்டால் குளிர்காலம் மாறத்தொடங்குகிறது என்று அர்த்தம். தூக்கத்தை கலைத்து விட்டு வெளியே வந்துவிடலாம். நிழல் தெரியவில்லை என்றால் மறுபடியும் தூங்கப்போய்விடுமாம்.

1 comment: