For Read Your Language click Translate

17 May 2014

இயற்கையான புதிய பூச்சிக்கொல்லிதான் 'பொன்னீம்'

பொன்னீம்...
புறப்பட்டது புதிய பூச்சிக்கொல்லி!

ஹலோ... லயோலா காலேஜா... நான் மாங்காட்டுல இருந்து மணிமாறன் பேசறேனுங்க. 'பொன்னீம்' பூச்சி மருந்து இருந்தா ரெண்டு டப்பா வேணுங்களே...?'


-சமீபகாலமாக சென்னையிலிருக்கும் லயோலா கல்லூரியின் பூச்சியியல் த...ுறைக்கு, பல இடங்களிலிருந்தும் இப்படித்தான் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
''என்ன... லயோலா கல்லூரியில் பூச்சி மருந்து விற்பனை செய்கிறார்களா..?'' என்று அதிரவேண்டாம். இந்தத் துறை ஆராய்ச்சியின் பலனாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகமாகியிருக்கும் இயற்கையான பூச்சிக்கொல்லிதான் 'பொன்னீம்'. இதைப் பயன்படுத்தும் விவசாயிகள், அதிக அளவில் பலன் கிடைக்கவே, 'பொன்னீம்... பொன்னீம்' என்று புகழ் பாட ஆரம்பித்துள்ளனர்.

ஆக்கப்பூர்வமான வகையில் பூச்சிக்கொல்லியை கண்டுபிடித்திருப்பதோடு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலிருக்கும் சுமார் 150 கிராம விவசாயிகளைத் தேடித் தேடி சென்று... அதைப் பயன்படுத்தி பலனடையவும் செய்துகொண்டிருக்கிறது லயோலா கல்லூரி பூச்சியியல் துறை. இத்துறையின் மாணவர்கள், கிராமத்தின் விவசாயிகளைத் தேடிப் பிடித்து இயற்கை விவசாயம் குறித்து விரிவாக எடுத்துரைப்பதோடு, பூச்சிகள் என்றால் என்ன... அதில் நன்மை செய்யும் பூச்சிகள் எவை, தீமை செய்பவை எவை என்றெல்லாம் விளக்கிவிட்டு, தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கங்களையும் கொடுத்து வருகிறார்கள்.

3Like · ·

No comments:

Post a Comment