For Read Your Language click Translate

24 May 2014

உலகின் பெரிய முட்டை இட்ட சூப்பர் கோழி!

Photo: உலகின் பெரிய முட்டை இட்ட சூப்பர் கோழி!

அசாதாரண கோழி ஒன்று உலகில் மிகப்பெரிய முட்டையை இட்டிருக்கிறது. அதுவும் இது சீனக் கோழி.

வெகு விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவிருக்கும் இந்த முட்டை குறித்து கோழியின் முதலாளி ஷாங் இண்டே கூறுகையில், ”என் கோழி இட்ட முட்டை 201 கிராம் இருக்கிறது. சாதனை முட்டையை விட இது 25 கிராம் எடை அதிகமிருக்கிறது. 6.3 சென்டிமீட்டர் அகலத்தில், 9.2 சென்டிமீட்டர் நீளமுள்ள இம்முட்டைக்கு ஒப்பீடுகையில், சாதாரண முட்டை இதில் மூன்றில் ஒரு பங்கே இருக்கிறது” என்கிறார்.

முட்டையின் பெருமையைப் பற்றி குறிப்பிட்ட இவர், இப்போது முட்டையிட்ட கோழியின் பெருமைகளைச் சிலாகிக்கிறார்.

”இது ஒரு சூப்பர் கோழிங்க. இதுபோன்ற பெரிய முட்டை (மூன்று) களை இது ஏற்கனவே இட்டிருக்கிறது. ஒருமுறை ஒரே நாளில் நான்கு முட்டைகளை(!) இது தொடர்ந்து இட்டு ஆச்சரியப்படுத்தியது” என்றவர்,

”அவளுக்கு (கோழிக்குத்தான்) என்னுடைய நாய் வீட்டை சுற்றி வருவது என்றால் மிகவும் விருப்பமானது. ஒருவேளை நாய்க்கான உணவை தின்றிருப்பாள் எனச் சந்தேகப்படுகிறேன்” என்கிறார்.

கின்னஸ் சாதனை நிறுவனம் வந்து, சோதனையிட்டு, மிகப்பெரிய முட்டை என அறிவிக்கப்படும் வரை ஷாங் இண்டேவின் குளிர்பதன பெட்டிக்குள் சிலுசிலுவென அமர்ந்திருக்கப் போகிறது இம்மாம் பெரிய  முட்டை.உலகின் பெரிய முட்டை இட்ட சூப்பர் கோழி!

அசாதாரண கோழி ஒன்று உலகில் மிகப்பெரிய முட்டையை இட்டிருக்கிறது. அதுவும் இது சீனக் கோழி.

வெகு விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவிருக்கும் இந்த முட்டை குறித்து கோழியின் முதலாளி ஷாங் இண்டே கூறுகைய...ில், ”என் கோழி இட்ட முட்டை 201 கிராம் இருக்கிறது. சாதனை முட்டையை விட இது 25 கிராம் எடை அதிகமிருக்கிறது. 6.3 சென்டிமீட்டர் அகலத்தில், 9.2 சென்டிமீட்டர் நீளமுள்ள இம்முட்டைக்கு ஒப்பீடுகையில், சாதாரண முட்டை இதில் மூன்றில் ஒரு பங்கே இருக்கிறது” என்கிறார்.

முட்டையின் பெருமையைப் பற்றி குறிப்பிட்ட இவர், இப்போது முட்டையிட்ட கோழியின் பெருமைகளைச் சிலாகிக்கிறார்.

”இது ஒரு சூப்பர் கோழிங்க. இதுபோன்ற பெரிய முட்டை (மூன்று) களை இது ஏற்கனவே இட்டிருக்கிறது. ஒருமுறை ஒரே நாளில் நான்கு முட்டைகளை(!) இது தொடர்ந்து இட்டு ஆச்சரியப்படுத்தியது” என்றவர்,

”அவளுக்கு (கோழிக்குத்தான்) என்னுடைய நாய் வீட்டை சுற்றி வருவது என்றால் மிகவும் விருப்பமானது. ஒருவேளை நாய்க்கான உணவை தின்றிருப்பாள் எனச் சந்தேகப்படுகிறேன்” என்கிறார்.

கின்னஸ் சாதனை நிறுவனம் வந்து, சோதனையிட்டு, மிகப்பெரிய முட்டை என அறிவிக்கப்படும் வரை ஷாங் இண்டேவின் குளிர்பதன பெட்டிக்குள் சிலுசிலுவென அமர்ந்திருக்கப் போகிறது இம்மாம் பெரிய முட்டை.

·

No comments:

Post a Comment