For Read Your Language click Translate

05 May 2014

TEMPLES -தவறவிடக்கூடாதஅருமையானதகவல்கள்,

புதையும் வரலாறு!
Photo: புதையும் வரலாறு!

இந்தியாவின் வரலாறு எங்கே ஒளிந்திருக்கிறது?

கொஞ்சம் வரலாறு தெரிந்தால், குழந்தைகள்கூட சொல்லும் ‘கோயில்களில்’ என்று. அந்தக் கோயில்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புதைந்துகொண்டிருக்கின்றன.

நாட்டின் புராதன கோயில் நகரங்களில் ஒன்றான கும்பகோணத்தில் நானூறு ஆண்டு பழைமையான ராமசாமி கோயிலுக்குச் சென்றால், நீங்கள் படிக்கட்டு ஏறிச் செல்ல முடியாது; சாலையிலிருந்து கீழே இறங்கித்தான் செல்ல வேண்டும்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பங்களை உள்ளடக்கிய இக்கோயிலின் மும்மண்டபம் சிற்பக் கலைக்காகக் கொண்டாடப்படுவது (புகழ்பெற்ற உலகளந்த பெருமாள் சிற்பம் இங்குதான் இருக்கிறது). இன்று அந்தச் சிற்பங்களில் பலவும் - முக்கியமாகத் தூண் சிற்பங்கள் - மண்ணோடு மண்ணாகப் புதைந்துகொண்டிருக்கின்றன. கும்பகோணத்தின் அடையாளங்களில் ஒன்றாகச் சொல்லப்படும் சக்கரபாணி கோயிலின் வாசல் அடுத்த 20 ஆண்டுகளில் அடைபட்டுவிடலாம்.

இந்த இரு கோயில்களும் உதாரணங்கள்தான். பல கோயில்களின் நிலை இன்னும் மோசம் (மழைக்காலங்களில் பத்திரிகைகளில் வெளியாகும் தண்ணீர் சூழ்ந்த கோயில்களின் படங்கள் நினைவுக்கு வருகின்றனவா?)

அண்ணாந்து பார்த்து வணங்கிய நம் கோயில்கள் எல்லாம் இப்போது தலைகுனிந்து பார்க்க வேண்டிய நிலையை நோக்கிச் செல்ல என்ன காரணம்? எளிய பதில்: வளர்ச்சியின் பெயரால், அறியாமையால் நாம் ஆடும் ஆட்டம்!

நம்முடைய நவீன சாலைகள் ஒருபுறம் கோயில்களுக்கு வெளியே உயர்ந்துகொண்டே இருக்க, உயரும் சாலைகளுக்கு இணையாக இன்னொருபுறம் ‘திருப்பணியாளர்கள்’ கோயில்களின் உள் தளத்தை உயர்த்த... கொஞ்சம் கொஞ்சமாக நிலத்துக்குள் செல்கிறது வரலாறு.

‘‘இந்தியக் கோயில்கள் பல்வேறு ரூபங்களில் அழிவைச் சந்திக்கின்றன. அழிவின் சமீபத்திய ரூபம் இந்தப் புதைவு. 1400 ஆண்டுகள் பழைமையான புகழ்பெற்ற கோயில் திருச்சி, உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில். இன்றைக்கு அங்கு ஒரு கல்வெட்டு கிடையாது. 1000 ஆண்டுகள் பழைமையான கோயில் திருப்புலிவனம் கோயில். இன்றைக்கு அங்கே ஒரு சுவரோவியம்கூட கிடையாது. நாம் இழந்திருப்பது வெறும் கல்வெட்டுகளையும் சுவரோவியங்களையும் மட்டும் அல்ல. நம் முன்னோரின் வரலாற்றை.

கோயில்களை வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் பார்க்கிறார்கள் மக்கள். அவற்றை வருமானத்தோடு மட்டும் தொடர்புபடுத்திப் பார்க்கிறது அரசு. தொல்லியல் துறையின் கவனத்துக்குத் தெரியப்படுத்தப்படாமல் அறநிலையத் துறைகூட கோயில்களில் திருப்பணிகள் செய்யக்கூடாது என்கிறது சட்டம். ஆனால், அது சட்டப் புத்தகத்துக்கு உள்ளேயே இருக்கிறது. இந்த அறியாமையின் விளைவே வரலாற்றைக் கொல்கிறது” என்கிறார் வரலாற்று ஆய்வாளரான இரா.கலைக்கோவன்.

“கோயில்கள் வரலாற்றை மட்டும் தாங்கிக்கொண்டிருக்கவில்லை. என்னைப் பொறுத்த அளவில் அவை உணர்வுகளின் குவியல்கள். ஓர் இனத்தின் அழகியல் மரபுகள் கோயில்களில் வியாபித்திருக்கின்றன. ஒரு கோயில் கட்டமைப்பின் ஒவ்வோர் அங்குலத்திலும் பிரம்மாண்டமான உழைப்பும் சொல்லப்படாத எத்தனையோ ரகசியங்களும் புதைந்திருக்கின்றன.

நம் கோயில்களில் அபிநய முத்திரைகளில் ஏதாவது ஒன்றை அலட்சியமாகப் பிடித்து நிற்கும் நாட்டியப் பெண் சிற்பங்களை ஏராளமாகக் காணலாம். பொதுவாகப் பார்ப்பவர்கள் இந்த மாதிரிச் சிற்பங்களைப் பார்த்துவிட்டு சிற்பியின் கைவண்ணத்தைப் பிரமாதமாகப் பேசுவார்கள். ஆனால், ஒரு நாட்டியக்காரியின் அபிநய முத்திரையை அப்படியே கல்லில் கொண்டுவருவதில் சிற்பியின் கைவண்ணம் மட்டும் இருக்கிறதா? நாட்டிய மேதைகளைக் கேளுங்கள். …. வகையான ஆடல் முத்திரைகளையும் அறிந்த ஒருவனால் மட்டுமே இப்படியொரு சிற்பத்தைப் படைக்க முடியும் என்ற ரகசியத்தை அவர்கள் கூறுவார்கள். ஒரு சிற்பத்தில் வெளிப்படும் நாட்டிய முத்திரையின் பின்னணியிலேயே இத்தனை கதைகள் இருக்கும் என்றால், சிற்பிகள் ஆயக்கலைகள் அறுபத்தி நான்கிலும் தேர்ந்தவர்கள் எனின், எத்தனை எத்தனை கதைகள் நம் சிற்பங்களின் பின்னணியிலும் கோயில்களின் பின்னணியிலும் இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்பேர்ப்பட்ட அற்புதங்கள் நம் கண் முன்னே மண்ணுக்குள் போவது பெரும் வரலாற்றுத் துயரம்” என்கிறார் கலை விமர்சகர் தேனுகா.

மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி சொல்வார்: “இல்லாமைகூடப் பிரச்சினை இல்லை. அது இல்லை என்கிற பிரக்ஞைகூட இல்லை என்பதுதான் பெரிய பிரச்சினை” என்று. கோயில்களின் புதைவுக்கு இந்த வார்த்தைகள் கச்சிதமாகப் பொருந்தும். இந்தப் புதைவு ஒரே நாளிலோ, யாருக்கும் தெரியாமலோ நடக்கவில்லை; படிப்படியாக எல்லோர் கண் முன்னரும்தான் நடக்கிறது. எப்படி பிரக்ஞை இல்லாமல் சாலைகள் அமைக்கப்படுகின்றனவோ, எப்படி பிரக்ஞை இல்லாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ அப்படியே நம் யாருடைய பிரக்ஞையும் இல்லாமல் மண்ணுக்குள் செல்கிறது வரலாறு!

தகவல் - சமஸ் @ தமிழ் இந்து

இந்தியாவின் வரலாறு எங்கே ஒளிந்திருக்கிறது?

கொஞ்சம் வரலாறு தெரிந்தால், குழந்தைகள்கூட சொல்லும் ‘கோயில்களில்’ என்று. அந்தக் கோயில்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புதைந்துகொண்டிருக்கின்றன.

நாட்டின் புராதன கோயில் நகரங்களில் ஒன்றான கும்பகோணத்தில் நானூறு ஆண்டு பழைமையான ராமசாமி கோயிலுக்குச் சென்றால், நீங்கள் படிக்கட்டு ஏறிச் செல்ல முடியாது; சாலையிலிருந்து கீழே இறங்கித்தான் செல்ல வேண்டும்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பங்களை உள்ளடக்கிய இக்கோயிலின் மும்மண்டபம் சிற்பக் கலைக்க...ாகக் கொண்டாடப்படுவது (புகழ்பெற்ற உலகளந்த பெருமாள் சிற்பம் இங்குதான் இருக்கிறது). இன்று அந்தச் சிற்பங்களில் பலவும் - முக்கியமாகத் தூண் சிற்பங்கள் - மண்ணோடு மண்ணாகப் புதைந்துகொண்டிருக்கின்றன. கும்பகோணத்தின் அடையாளங்களில் ஒன்றாகச் சொல்லப்படும் சக்கரபாணி கோயிலின் வாசல் அடுத்த 20 ஆண்டுகளில் அடைபட்டுவிடலாம்.

இந்த இரு கோயில்களும் உதாரணங்கள்தான். பல கோயில்களின் நிலை இன்னும் மோசம் (மழைக்காலங்களில் பத்திரிகைகளில் வெளியாகும் தண்ணீர் சூழ்ந்த கோயில்களின் படங்கள் நினைவுக்கு வருகின்றனவா?)

அண்ணாந்து பார்த்து வணங்கிய நம் கோயில்கள் எல்லாம் இப்போது தலைகுனிந்து பார்க்க வேண்டிய நிலையை நோக்கிச் செல்ல என்ன காரணம்? எளிய பதில்: வளர்ச்சியின் பெயரால், அறியாமையால் நாம் ஆடும் ஆட்டம்!

நம்முடைய நவீன சாலைகள் ஒருபுறம் கோயில்களுக்கு வெளியே உயர்ந்துகொண்டே இருக்க, உயரும் சாலைகளுக்கு இணையாக இன்னொருபுறம் ‘திருப்பணியாளர்கள்’ கோயில்களின் உள் தளத்தை உயர்த்த... கொஞ்சம் கொஞ்சமாக நிலத்துக்குள் செல்கிறது வரலாறு.

‘‘இந்தியக் கோயில்கள் பல்வேறு ரூபங்களில் அழிவைச் சந்திக்கின்றன. அழிவின் சமீபத்திய ரூபம் இந்தப் புதைவு. 1400 ஆண்டுகள் பழைமையான புகழ்பெற்ற கோயில் திருச்சி, உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில். இன்றைக்கு அங்கு ஒரு கல்வெட்டு கிடையாது. 1000 ஆண்டுகள் பழைமையான கோயில் திருப்புலிவனம் கோயில். இன்றைக்கு அங்கே ஒரு சுவரோவியம்கூட கிடையாது. நாம் இழந்திருப்பது வெறும் கல்வெட்டுகளையும் சுவரோவியங்களையும் மட்டும் அல்ல. நம் முன்னோரின் வரலாற்றை.

கோயில்களை வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் பார்க்கிறார்கள் மக்கள். அவற்றை வருமானத்தோடு மட்டும் தொடர்புபடுத்திப் பார்க்கிறது அரசு. தொல்லியல் துறையின் கவனத்துக்குத் தெரியப்படுத்தப்படாமல் அறநிலையத் துறைகூட கோயில்களில் திருப்பணிகள் செய்யக்கூடாது என்கிறது சட்டம். ஆனால், அது சட்டப் புத்தகத்துக்கு உள்ளேயே இருக்கிறது. இந்த அறியாமையின் விளைவே வரலாற்றைக் கொல்கிறது” என்கிறார் வரலாற்று ஆய்வாளரான இரா.கலைக்கோவன்.

“கோயில்கள் வரலாற்றை மட்டும் தாங்கிக்கொண்டிருக்கவில்லை. என்னைப் பொறுத்த அளவில் அவை உணர்வுகளின் குவியல்கள். ஓர் இனத்தின் அழகியல் மரபுகள் கோயில்களில் வியாபித்திருக்கின்றன. ஒரு கோயில் கட்டமைப்பின் ஒவ்வோர் அங்குலத்திலும் பிரம்மாண்டமான உழைப்பும் சொல்லப்படாத எத்தனையோ ரகசியங்களும் புதைந்திருக்கின்றன.

நம் கோயில்களில் அபிநய முத்திரைகளில் ஏதாவது ஒன்றை அலட்சியமாகப் பிடித்து நிற்கும் நாட்டியப் பெண் சிற்பங்களை ஏராளமாகக் காணலாம். பொதுவாகப் பார்ப்பவர்கள் இந்த மாதிரிச் சிற்பங்களைப் பார்த்துவிட்டு சிற்பியின் கைவண்ணத்தைப் பிரமாதமாகப் பேசுவார்கள். ஆனால், ஒரு நாட்டியக்காரியின் அபிநய முத்திரையை அப்படியே கல்லில் கொண்டுவருவதில் சிற்பியின் கைவண்ணம் மட்டும் இருக்கிறதா? நாட்டிய மேதைகளைக் கேளுங்கள். …. வகையான ஆடல் முத்திரைகளையும் அறிந்த ஒருவனால் மட்டுமே இப்படியொரு சிற்பத்தைப் படைக்க முடியும் என்ற ரகசியத்தை அவர்கள் கூறுவார்கள். ஒரு சிற்பத்தில் வெளிப்படும் நாட்டிய முத்திரையின் பின்னணியிலேயே இத்தனை கதைகள் இருக்கும் என்றால், சிற்பிகள் ஆயக்கலைகள் அறுபத்தி நான்கிலும் தேர்ந்தவர்கள் எனின், எத்தனை எத்தனை கதைகள் நம் சிற்பங்களின் பின்னணியிலும் கோயில்களின் பின்னணியிலும் இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்பேர்ப்பட்ட அற்புதங்கள் நம் கண் முன்னே மண்ணுக்குள் போவது பெரும் வரலாற்றுத் துயரம்” என்கிறார் கலை விமர்சகர் தேனுகா.

மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி சொல்வார்: “இல்லாமைகூடப் பிரச்சினை இல்லை. அது இல்லை என்கிற பிரக்ஞைகூட இல்லை என்பதுதான் பெரிய பிரச்சினை” என்று. கோயில்களின் புதைவுக்கு இந்த வார்த்தைகள் கச்சிதமாகப் பொருந்தும். இந்தப் புதைவு ஒரே நாளிலோ, யாருக்கும் தெரியாமலோ நடக்கவில்லை; படிப்படியாக எல்லோர் கண் முன்னரும்தான் நடக்கிறது. எப்படி பிரக்ஞை இல்லாமல் சாலைகள் அமைக்கப்படுகின்றனவோ, எப்படி பிரக்ஞை இல்லாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ அப்படியே நம் யாருடைய பிரக்ஞையும் இல்லாமல் மண்ணுக்குள் செல்கிறது வரலாறு!

தகவல் - சமஸ் @ தமிழ் இந்து
தெய்வீகமுயற்சிகளும் – என்கிறஅருமையானபுத்தகம்.

  தவறவிடக்கூடாதஅருமையானதகவல்கள், அடங்கியபுத்தகம்.

http://www.ziddu.com/download/16138263/koyilgalumtheivigamuraigalum.pdf.html

தவயோகி . தங்கராசன் அடிகளார் எழுதிய ” ஆன்ம தரிசனம் ” புத்தகம்.
யோகம், இயமம், தியானம் பற்றி எழுதப்பட்டுள்ள , இல்லறத்தில் இருப்பவர்களும் கடை பிடிக்கத் தகுந்த முறையில் எழுதப்பட்டுள்ளது. தீவிர ஆன்ம தேடல் இருப்பவர்களுக்கு – இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.

http://www.ziddu.com/download/16138266/Atma-Tharisanam-Tamil.pdf.html

 சித்தகளைபூஜைசெய்யமுறைப்படிசெய்யவேண்டிய  துதிகள் :
http://www.ziddu.com/download/16138330/35700986-Sidhar-Puja-Tamil.pdf.html

 மகான்காகபுஜண்டமகரிஷிஆசிநூல் : (மிகஅபூர்வமானது )

 http://www.ziddu.com/download/16138332/50016836-Bujandar-Nool.pdf.html

http://www.ziddu.com/download/16138339/50016887-Bujandar-Nool1.pdf.html

http://www.ziddu.com/download/16138344/50017011-Bujandar-Nool2.pdf.html

இந்திராசௌந்தர்ராஜன்தனதுசித்தர்கள்ராஜ்ஜியத்தில்எழுதியுள்ள  , சித்தர்கள்பற்றியகட்டுரை.   – யாக்கோபுசித்தர்பற்றியகட்டுரை

http://www.ziddu.com/download/16138274/59591897-Yagobu.pdf.html

 பாம்பாட்டிச்சித்தர்பற்றியசிறப்புக்கட்டுரை :
http://www.ziddu.com/download/16138316/50023291-Pambatti.pdf.html

 போகர்பற்றியசிறப்புக்கட்டுரை :
  http://www.ziddu.com/download/16138327/50016640-Bhogar.pdf.html

கருவூர்சித்தர்பற்றியசிறப்புக்  கட்டுரை:
 http://www.ziddu.com/download/16138321/50019729-Karuvurar.pdf.html

நாதவடிவிலேஇறைவனைதுதித்து , அவர்தரிசனம்பெற்ற -  மகிமைமிக்கமகான்கள்வரிசையில்தியாகராஜர்பற்றியசிறப்புக்கட்டுரை :

http://www.ziddu.com/download/16138279/59591754-Thiyagrrajar.pdf.html

 மகிமைமிக்கமகான்கள்வரிசையில் – அன்னைஸ்ரீசாரதாதேவிபற்றியசிறப்புக்கட்டுரை

http://www.ziddu.com/download/16138283/59589502-Sarathadevi.pdf.html

 மகிமைமிக்கமகான் – ஸ்ரீராமானுஜர்பற்றியசிறப்புக்கட்டுரை

http://www.ziddu.com/download/16138290/59589325-Ram-a-Nu-Jar.pdf.html

 - சப்தஸ்தானங்களில் , சிலநூறுகிலோமீட்டர்தொலைவில்உள்ள  ஏழுகோவில்களில்ஒரேநேரத்தில்தோன்றிகும்பாபிசேகம்செய்த , மிகசக்திவாய்ந்த – மாமுனிவர்கோடகநல்லூர்  சுந்தரசுவாமிகள்பற்றியகட்டுரை

http://www.ziddu.com/download/16138294/51028705-Kodaga-Nallur-Swamigal.pdf.html

 மகிமைமிக்கமகான்கள்வரிசையில் -  பூஜ்யஸ்ரீராகவேந்திரர்பற்றியசிறப்புக்கட்டுரை :
http://www.ziddu.com/download/16138299/50024601-Ragavendrar.pdf.html

 ஆதிசங்கரர்பற்றியசிறப்புக்கட்டுரை :
http://www.ziddu.com/download/16138329/50013252-Aathi-Shankarar.pdf.html

 ஜைனமதத்தைதோற்றுவித்த – மகாவீரர்பற்றிய , அருமையானகட்டுரைதொகுப்பு :
http://www.ziddu.com/download/16138303/50022921-Ma-Ha-Veer.pdf.html
http://www.ziddu.com/download/16138268/ABC.PDF.pdf.html
அற்புதமான , சுவாரஸ்யமான – ஆன்மீகதமிழ்புத்தகங்கள் , கட்டுரைகள் (With Download Option)
|
வாசக அன்பர்களுக்கு வணக்கம். நமது வாசகர் திரு. பிரவீன் ராம் அவர்கள், சில அபூர்வமான  , சுவாரஸ்யமான – ஆன்மீக தமிழ் புத்தகங்களை அனுப்பியிருந்தார். நமது வாசகர்களிடம் அவற்றை பகிர்ந்து கொள்வதில் , பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நமது வாசகர்களுக்காக அனுப்பி வைத்த திரு. பிரவீன் ராம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உயர்திரு . வரத  பண்டிதர் அவர்களால் – சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் , எழுதப்பட்ட – பிள்ளையார் கதை என்னும் நூல்.

http://www.ziddu.com/download/16138245/XYZ.PDF.pdf.html

பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான , ஜோதிட , சாஸ்திரங்களில் வல்லுனராகிய சகாதேவர் திருவாய் மலர்ந்தருளிய – ” பாச்சிகை சாஸ்திரம் ” – மூலமும் , உரையும்  மற்றும் – தேவதா சக்கர தொடுகுறியும் – அடங்கிய , புராதனமான நூல்.
 
http://www.ziddu.com/download/16138253/pasikaisastram.pdf.html
 
 திருப்பதி மகிமைகள் – பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய புத்தகம்

http://www.ziddu.com/download/16138251/Thiruppathi-Makimai-in-Tamil.pdf.html

  நம்வாசகர்கள்அனைவருக்கும், மிகஉபயோகமாகஇருக்கும் – மிகுந்தசக்திவாய்ந்தவேதமந்திரங்கள்அடங்கிய , தமிழ்விளக்கத்துடன்அடங்கியநூல்

http://www.ziddu.com/download/16138259/mantrasveda.pdf.html

புத்தரைபற்றியசிறப்புக்கட்டுரை :
http://www.ziddu.com/download/16138324/50017043-Buthar.pdf.html  உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது , மொத்த புத்தகங்களையும், ஆழ்ந்து , பொறுமையுடன் படியுங்கள். உங்களுக்குத் தேவையான , பல தகவல்கள் இதில் அடங்கி இருக்கின்றன.   இதைப் போல – வேறு ஏதேனும் சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய கட்டுரைகள் , உங்களில் யாரேனும் வைத்து இருந்தால், நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமே !  

No comments:

Post a Comment