For Read Your Language click Translate

07 May 2014

வீட்டுத் தோட்டத்தில் கலக்கும் மென் பொறியாளர்

------------------------------------------------------------------
Photo: வீட்டுத் தோட்டத்தில் கலக்கும் மென் பொறியாளர் 
------------------------------------------------------------------

ஒவ்வொரு நாளும் ஏறுமுகமாகவே இருக்கும் காய்கறிகளின் விலைவாசி மற்றும் அங்காடிகளில்  கிடைக்கும் வேதி பூச்சி கொல்லி மருந்துகளை வெளிபுறமும் உட்புறமுமாக சாப்பிட்டு வளர்ந்த

காய்கறிகள் ஆகியவை உங்களை கவலைக் கொள்ளச் செய்கிறதா ????

இனி கவலை வேண்டாம்... நமக்கான உணவு பொருட்களை நமது வீட்டுத் தோட்டத்திலேயே பயிரிடலாம் வாங்க என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மணிகண்டன் என்ற 33 வயது மென் பொறியாளர் !!!

இவர் தனது வேலையை துறந்துவிட்டு முழு நேர நகர்ப்புற விவசாயியாகவே   மாறிவிட்டார் ...வீட்டில் தோட்டம் அமைக்க இடம் வேண்டுமே என்ற அனாவசிய கவலையை விட்டுவிட்டு மணிகண்டன் தனது வீட்டின்  மொட்டை மாடியில் சிறு தொட்டிகளிலும் ,டிரம்களிலும் காய்கறிகளை  வளர்க்கிறார்.

பெரும்பாலான நகரவாசிகளான வீட்டு தோட்ட ஆர்வலர்கள் இவரது தோட்ட வளர்ப்பு  முறையைhttp://geekgardener.in/ பின்பற்றி வருகிறார்கள் 

ரசம் செய்ய தக்காளி /கொத்தமல்லி எல்லாம் இவர் வீட்டு தோட்டத்தில் இருந்து நேரா அவரது சமையலறைக்கு செல்கின்றன :))

மாபெரும் அளவில் வெள்ளரியை பயிரிட்டு சுமார் 48 கிலோ விளைச்சலை நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பகிர்ந்தளித்து மீதமானவற்றை அருகில் உள்ள அங்காடிக்கு விற்பனை செய்திருக்கிறார் இந்த மென்பொருள் /நகர்புற தோட்ட ஆர்வலர்!!

இடம் இல்லை நேரம் இல்லை வசதி இல்லை என்ற இல்லைகளை எல்லாம் தூர விலக்கித் தள்ளி பெரும்பாலானோர் இப்போது சமையலறைக்குக்கு தேவையான காய்கறிகளை கிடைத்த இடத்தில் பயிரிட துவங்கியிருக்கிறார்கள் .

GMO ...போன்ற வேண்டாத உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை தவிர்க்க உலகெங்கும் இந்த நகர்புற விவசாய அமைப்பில் மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர் .இவர்களின் நோக்கம் தேவையான ஏதாவது ஒன்றிரண்டு காய்கறிகளையாவது தங்கள் வீட்டிலேயே உற்பத்தி செய்வது .

வீட்டில் தோட்டம் அமைப்பது என்பது நமது இந்தியாவில் ஒன்றும் புத்தம்புதிய அறியாத விஷயமுமல்ல என்கின்றார் Bangalore’s Garden City Farmers (GCF) யை சார்ந்த  திரு கே விஸ்வநாத்.  முன்பிருந்தே நம் எல்லோரின் வீட்டிலும் ஒரு சிறு தோட்டம் அமைத்து சமையலுக்கு தேவையான காய்கறிகளை பயிரிடும் பழக்கம் இருந்தது என்கிறார். இவர் இயற்கை கரிம வேதிப்பொருள் கலவாத மாடித் தோட்டம  அமைக்க வேண்டும் என்ற கொள்கையின் முன்னோடி . 

“Oota From Your Thota” (OFYT)...தோட்டத்திலிருந்து ஊட்டச்சத்து என்பது இவர்களது  BGCF  இன் குறிக்கோள்.

லால் பாக் /கப்பன் பாக் இவற்றால் மட்டும் பெங்களூர் தோட்ட நகரம் என்ற பெயரைப் பெற்றிடவில்லை. முன் காலத்தில் பெங்களூரில்  எல்லா வீட்டிலும் முன்னால் அழகிய அலங்கார மலர்வனம் இருக்கும் அப்படியே பின்புறம் சென்றால் பலவகையான காய்கறிகள் செழித்து வளர்ந்த தோட்டமும் இருக்கும்.

விலைவாசி உயர்வு மற்றும் நகரத்தை நோக்கிய மக்களின் படையெடுப்பு இவை கொஞ்சம் கொஞ்சமாக தரையில் இருந்த தோட்டத்தை வானை நோக்கி செல்ல வைத்து விட்டன ...பால்கனி /மொட்டை மாடி தோட்டங்கள் உருவாக்கி விட்டன ...இப்பொழுது  பலரும் 'சமூகத் தோட்ட  அமைப்பு' அதாவது சின்னஞ்சிறு இடங்களை வாங்கியோ குத்தகைக்கு எடுத்தோ அங்கே தோட்டம் பயிருடுகிறார்கள் என்கின்றார்...இம்முறை வெளிநாட்டிலும் இருக்கிறது ...இதனை Allotment என்பார்கள்.

அபர்ணா ஜார்ஜ்---

மூன்று  வருடங்களாக வீட்டில் உள்ள கழிவு பொருட்களை பயன்படுத்தி கலப்பின உரம் தயாரிக்கிறார் ....சூரியஒளி சோலார் எனர்ஜி /மழை நீர் சேகரிப்பு என தொலை நோக்குடன் சுற்று சூழல் இயற்கை சார்ந்த வழிகளை பயன்படுத்துகின்றார் ..பூச்சி கொல்லி மருந்துகள் பயன்படுத்திய காய்கறிகளின் பக்க விளைவுகளை கண்டு அவற்றை புறந்தள்ளி தனக்கு தேவையானவற்றை வீட்டிலேயே பயிரிடுக்கிறார்.

துவக்கத்தில் ஐந்து தொட்டிகளில் கத்திரியும் தக்காளியும் பயிரிட்டு ஆரம்பித்த இவர் தற்போது   மாடி முழுவதும் காய்கறி தோட்டம் அமைத்துவிட்டார். இது மட்டுமன்றி ஒரு நிலத்தை குத்தகை எடுத்து காரட் ,பீட்ரூட், zucchini ,வெண்டைக்காய், கறிவேப்பிலை, எலுமிச்சை  என  இவரது குத்தகை தோட்டத்தின் விளைச்சல் நீண்டுகொண்டே செல்கிறது ..!!!! இவர் வாரமொருமுறை தனது தோட்டத்தை சென்று பார்வையிடுகின்றார். இயற்கை முறையில் பூச்சிகளை விரட்டும் வழி முறைகளை தெரிவுசெய்து தோட்டத்தை பராமரிக்கின்றார் .

மேலும் இவர் மணிகண்டனின் வழிமுறைகளையும்  பின்பற்றுகின்றார் ..அவரது படிப்படியான வழிமுறைகள் சுலபமாகவும் எளிதாகவும் இருக்கின்றன என்கிறார் அபர்ணா. garden guru http://www.gardenguru.in/என்ற தளத்தில் அனைவரும் வீட்டில் தோட்டம் அமைக்க பல வழிமுறைகளை மணிகண்டன் எளிய முறையில் சொல்லி தருகின்றார் ..நீரின்றி தோட்டம் /ட்ரிப் இரிகேஷன் முறை /வெறும் நீரில் மட்டும் பயிரிடல் என பல வகைகள் பற்றி இவரது தளத்தில் சொல்லி தருகின்றார்.

ஆரம்பத்தில் பசலை, தக்காளி என  பயணத்தை துவங்குங்கள் என்கின்றார் இந்த மென் பொறியாளர்  மணிகண்டன்.

source: The Hindu.

translated by Angel Fish
for
 Pasumai Vidiyal

பசுமை விடியலில் எளிய முறையில் வீட்டு தோட்டம் மற்றும் வீட்டில் உரம் தயாரிப்பு என பலவற்றை உங்களுடன் பகிர்ந்து வருகின்றோம். பயன்பெறுங்கள், பிறருக்கும் பரப்புங்கள். 

வீட்டுத் தோட்டம் காலத்தின் கட்டாயம் !!!

ஒவ்வொரு நாளும் ஏறுமுகமாகவே இருக்கும் காய்கறிகளின் விலைவாசி மற்றும் அங்காடிகளில் கிடைக்கும் வேதி பூச்சி கொல்லி மருந்துகளை வெளிபுறமும் உட்புறமுமாக சாப்பிட்டு வளர்ந்த

காய்கறிகள் ஆகியவை உங்களை கவலைக் கொள்ளச் செய்கிறதா ????

இனி கவலை வேண்டாம்... நமக்கான உணவு பொருட்களை நமது வீட்டுத் தோட்டத்திலேயே பயிரிடலாம் வாங்க என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மணிகண்டன் என்ற 33 வயது ...மென் பொறியாளர் !!!

இவர் தனது வேலையை துறந்துவிட்டு முழு நேர நகர்ப்புற விவசாயியாகவே மாறிவிட்டார் ...வீட்டில் தோட்டம் அமைக்க இடம் வேண்டுமே என்ற அனாவசிய கவலையை விட்டுவிட்டு மணிகண்டன் தனது வீட்டின் மொட்டை மாடியில் சிறு தொட்டிகளிலும் ,டிரம்களிலும் காய்கறிகளை வளர்க்கிறார்.

பெரும்பாலான நகரவாசிகளான வீட்டு தோட்ட ஆர்வலர்கள் இவரது தோட்ட வளர்ப்பு முறையைhttp://geekgardener.in/ பின்பற்றி வருகிறார்கள்

ரசம் செய்ய தக்காளி /கொத்தமல்லி எல்லாம் இவர் வீட்டு தோட்டத்தில் இருந்து நேரா அவரது சமையலறைக்கு செல்கின்றன :))

மாபெரும் அளவில் வெள்ளரியை பயிரிட்டு சுமார் 48 கிலோ விளைச்சலை நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பகிர்ந்தளித்து மீதமானவற்றை அருகில் உள்ள அங்காடிக்கு விற்பனை செய்திருக்கிறார் இந்த மென்பொருள் /நகர்புற தோட்ட ஆர்வலர்!!

இடம் இல்லை நேரம் இல்லை வசதி இல்லை என்ற இல்லைகளை எல்லாம் தூர விலக்கித் தள்ளி பெரும்பாலானோர் இப்போது சமையலறைக்குக்கு தேவையான காய்கறிகளை கிடைத்த இடத்தில் பயிரிட துவங்கியிருக்கிறார்கள் .

GMO ...போன்ற வேண்டாத உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை தவிர்க்க உலகெங்கும் இந்த நகர்புற விவசாய அமைப்பில் மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர் .இவர்களின் நோக்கம் தேவையான ஏதாவது ஒன்றிரண்டு காய்கறிகளையாவது தங்கள் வீட்டிலேயே உற்பத்தி செய்வது .

வீட்டில் தோட்டம் அமைப்பது என்பது நமது இந்தியாவில் ஒன்றும் புத்தம்புதிய அறியாத விஷயமுமல்ல என்கின்றார் Bangalore’s Garden City Farmers (GCF) யை சார்ந்த திரு கே விஸ்வநாத். முன்பிருந்தே நம் எல்லோரின் வீட்டிலும் ஒரு சிறு தோட்டம் அமைத்து சமையலுக்கு தேவையான காய்கறிகளை பயிரிடும் பழக்கம் இருந்தது என்கிறார். இவர் இயற்கை கரிம வேதிப்பொருள் கலவாத மாடித் தோட்டம அமைக்க வேண்டும் என்ற கொள்கையின் முன்னோடி .

“Oota From Your Thota” (OFYT)...தோட்டத்திலிருந்து ஊட்டச்சத்து என்பது இவர்களது BGCF இன் குறிக்கோள்.

லால் பாக் /கப்பன் பாக் இவற்றால் மட்டும் பெங்களூர் தோட்ட நகரம் என்ற பெயரைப் பெற்றிடவில்லை. முன் காலத்தில் பெங்களூரில் எல்லா வீட்டிலும் முன்னால் அழகிய அலங்கார மலர்வனம் இருக்கும் அப்படியே பின்புறம் சென்றால் பலவகையான காய்கறிகள் செழித்து வளர்ந்த தோட்டமும் இருக்கும்.

விலைவாசி உயர்வு மற்றும் நகரத்தை நோக்கிய மக்களின் படையெடுப்பு இவை கொஞ்சம் கொஞ்சமாக தரையில் இருந்த தோட்டத்தை வானை நோக்கி செல்ல வைத்து விட்டன ...பால்கனி /மொட்டை மாடி தோட்டங்கள் உருவாக்கி விட்டன ...இப்பொழுது பலரும் 'சமூகத் தோட்ட அமைப்பு' அதாவது சின்னஞ்சிறு இடங்களை வாங்கியோ குத்தகைக்கு எடுத்தோ அங்கே தோட்டம் பயிருடுகிறார்கள் என்கின்றார்...இம்முறை வெளிநாட்டிலும் இருக்கிறது ...இதனை Allotment என்பார்கள்.

அபர்ணா ஜார்ஜ்---

மூன்று வருடங்களாக வீட்டில் உள்ள கழிவு பொருட்களை பயன்படுத்தி கலப்பின உரம் தயாரிக்கிறார் ....சூரியஒளி சோலார் எனர்ஜி /மழை நீர் சேகரிப்பு என தொலை நோக்குடன் சுற்று சூழல் இயற்கை சார்ந்த வழிகளை பயன்படுத்துகின்றார் ..பூச்சி கொல்லி மருந்துகள் பயன்படுத்திய காய்கறிகளின் பக்க விளைவுகளை கண்டு அவற்றை புறந்தள்ளி தனக்கு தேவையானவற்றை வீட்டிலேயே பயிரிடுக்கிறார்.

துவக்கத்தில் ஐந்து தொட்டிகளில் கத்திரியும் தக்காளியும் பயிரிட்டு ஆரம்பித்த இவர் தற்போது மாடி முழுவதும் காய்கறி தோட்டம் அமைத்துவிட்டார். இது மட்டுமன்றி ஒரு நிலத்தை குத்தகை எடுத்து காரட் ,பீட்ரூட், zucchini ,வெண்டைக்காய், கறிவேப்பிலை, எலுமிச்சை என இவரது குத்தகை தோட்டத்தின் விளைச்சல் நீண்டுகொண்டே செல்கிறது ..!!!! இவர் வாரமொருமுறை தனது தோட்டத்தை சென்று பார்வையிடுகின்றார். இயற்கை முறையில் பூச்சிகளை விரட்டும் வழி முறைகளை தெரிவுசெய்து தோட்டத்தை பராமரிக்கின்றார் .

மேலும் இவர் மணிகண்டனின் வழிமுறைகளையும் பின்பற்றுகின்றார் ..அவரது படிப்படியான வழிமுறைகள் சுலபமாகவும் எளிதாகவும் இருக்கின்றன என்கிறார் அபர்ணா. garden guru http://www.gardenguru.in/என்ற தளத்தில் அனைவரும் வீட்டில் தோட்டம் அமைக்க பல வழிமுறைகளை மணிகண்டன் எளிய முறையில் சொல்லி தருகின்றார் ..நீரின்றி தோட்டம் /ட்ரிப் இரிகேஷன் முறை /வெறும் நீரில் மட்டும் பயிரிடல் என பல வகைகள் பற்றி இவரது தளத்தில் சொல்லி தருகின்றார்.

ஆரம்பத்தில் பசலை, தக்காளி என பயணத்தை துவங்குங்கள் என்கின்றார் இந்த மென் பொறியாளர் மணிகண்டன்.

பசுமை விடியலில் எளிய முறையில் வீட்டு தோட்டம் மற்றும் வீட்டில் உரம் தயாரிப்பு என பலவற்றை உங்களுடன் பகிர்ந்து வருகின்றோம். பயன்பெறுங்கள், பிறருக்கும் பரப்புங்கள்.
source: The Hindu.

translated by Angel Fish
for
Pasumai Vidiyal

No comments:

Post a Comment