For Read Your Language click Translate

05 May 2014

தாரித்ர்யதஹனசிவஸ்தோத்ரம் (கடன்நிவாரணஸ்தோத்ரம்)



இன்பமும் துன்பமும் இணைந்ததுதான் வாழ்க்கை. நிதானமாக திட மனத்துடன் முயற்சிகளைத் தொடர்ந்தால் நிச்சயம் நிம்மதியான வாழ்வு கிடைக்கும். இருந்தாலும் செய்த தவறுகளுக்கு உரிய தண்டனை எந்த ஒரு மனிதருக்கும் ஏழரை சனி, அஷ்டமச் சனி காலத்தில் நடந்து விடுகிறது. கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களுக்குக்  கூட, சனி பகவான் பெயரைக் கேட்டாலே , கொஞ்சம் உள்ளுக்குள் கிலி ஏற்படத்தான் செய்கிறது. ரொம்ப நல்லவன் என்று இருப்பவர்களுக்கு உத்தியோக ரீதியாக அலைச்சல், ஸ்திரமின்மை, கடுமையான கடன் பிரச்னையோடு நின்று விடுகிறது. ஆட்டம் அதிகமாக ஆடியவர்களுக்கு – அடி செமத்தியாக விழுகிறது. கூடி இருந்த எந்த உறவும் உடன் இல்லாமல், ஆதரவு கிடைக்காமல் நாம் அனாதையோ என்கிற எண்ணம் தோன்றும் அளவுக்கு – ஒரு பரிபூரண பக்குவம் கிடைக்க வைப்பதில் சனிபகவானுக்கு நிகர் அவரே தான். நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது, ஆண்டவன் என்று சொல்கிறோமே அவர் உண்மை என்பதை நிரூபித்துக் கொண்டு இருப்பவர்கள் – நவ கிரகங்கள். இதில் சனியின் பாதிப்பினால் – கண்டிப்பாக நடக்கும் ஒரு விஷயம் கடன் தொல்லை…. கிட்டத் தட்ட பத்து வருடங்களுக்குக் குறையாமல் கடனில் மூழ்க வைத்து, பணம் மேல் ஒரு வெறுப்பும், மரியாதையும் , பயமும் தோன்ற வைத்து விடுவார்….. ! ஐயா மிஸ்டிக் செல்வம் அவர்கள் தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, கூறிய உண்மை – சனி பாதிப்பு இருப்பவர்கள் வேறு எந்த தெய்வத்தையும் வணங்குவதையும் விட – பைரவரை வணங்கினால் மட்டுமே அவர்கள் பாதிப்பு நீங்கும் என்று கூறுகிறார். குறிப்பாக சொர்ண ஆகர்ஷன பைரவரை வணங்கினால் கடன் வருவதற்குப் பதிலாக குபேர சம்பத்து கிடைக்கும் என்று உறுதியாக கூறுகிறார்.  நமது பழைய பதிவுகளில் சனி பகவானுக்கு உரிய பரிகாரங்கள் பற்றி நிறையவே எழுதி இருக்கிறோம். குறிப்பாக வன்னி மரத்தடி விநாயகருக்கு பச்சரிசி மாவை அல்லது பச்சரிசியை அவரை சுற்றிலும் தூவி வருவது. எறும்புகள் அதை எவ்வளவு காலம் வரை பத்திரமாக எடுத்து வைத்து இருக்கிறதோ, அத்தனை காலம் தேவர்களின் ஆசி நமக்கு தொடர்ந்து கிடைக்கும். இதனால் நேரடியாக பலன் பெற்றவர்கள் ஏராளம். விரிவான தகவல்களுக்கு நமது பழைய கட்டுரையை பாருங்கள். அதே அளவுக்கு மகத்துவம் வாய்ந்த அற்புதமான பரிகாரங்களை இன்று பார்க்க விருக்கிறோம்..! பிரச்னைகள் தீரவே தீராதா என்று ஏங்கிக் கொண்டு இருப்பவர்களுக்கு அது ஒரு அருமையான வாய்ப்பாக அமையும் என்று கருதி, நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். படித்துப் பயன் பெறுங்கள். வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன்!
 

No comments:

Post a Comment