For Read Your Language click Translate

06 May 2014

காது,மூக்கு, தொண்டையில் கவனம் தேவை

The issue of protecting children from going to school, parents, teachers - both sides have to pay additional interest.




பள்ளி செல்லும் குழந்தைகளை இந்தப் பிரச்னையிலிருந்து பாதுகாப்பதில் பெற்றோர், ஆசிரியர் - இருதரப்பினரும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். காதிலோ, மூக்கிலோ நுழைக்கும்படியான, வாயில் போட்டு விழுங்கும்படியான பொருட்களை குழந்தைகள் கைகளில் வைத்திருக்க அனுமதிக்கலாகாது.

சில குழந்தைகள் கையில் கிடைக்கும் மணி, பென்சில், சாக்பீஸ், கடலை, காசு, கற்கள் ஆகியவற்றை காது, மூக்கு அல்லாது வாயில் போட்டுக் கொள்வார்கள். சிலர் அருகில் உள்ள குழந்தையின் காது, மூக்கு, வாயில் போட்டு விடுவார்கள். இதனால் ‘ஃபாரின் பாபி’ என்ற தொல்லைக்கு ஆளாவார்கள்.

காது, மூக்கில் பொருட்களை போடும் போது அடைப்பு, ரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். வாயில் போட்டு விழுங்கும் போது காசு, கொட்டை வகைகள் போன்றவை உணவுக் குழாய் மற்றும் மூச்சுக் குழாயில் சென்று அடைபடும். மூச்சுக்குழாயில் சென்று அடைக்கும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து.

சிறு குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், காதுவலி, தொண்டை வலி போன்றவை வராமல் பாதுகாக்க வேண்டும். அவற்றைக் கண்டுகொள்ளாமல் விடுவதால் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படும். பனி, மழைக்காலங்களில் அதற்கான உடைகளை அணிவித்துப் பாதுகாக்க வேண்டும்.

தூசு மற்றும் அசுத்தமான சுற்றுப்புறத்தால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் கவனமாகப் பார்க்க வேண்டும். ஈ.என்.டி. பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் மூலம் மிகப்பெரிய அபாயங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.

No comments:

Post a Comment