For Read Your Language click Translate

06 May 2014

குழந்தையின் கண்களை பாதுகாப்போம்

 Healthy eyes and sharp eye sight is the sign of your kid’s good health. Remember eye care for kids is quite different from adults.
ஆரோக்கியமான கண்களும் கூர்மையான கண் பார்வையுமே ஒரு குழந்தைக்கு நல்ல சுகாதாரத்தின் அறிகுறி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவருக்கும் கண் பாதுகாப்பு மிக அவசியம். ஆரம்ப பள்ளியிலிருந்தே குழந்தைகளின் கண் பாதுகாப்பை பெற்றோர்கள் கருத்தில் கொள்ள  வேண்டும். சிறு வயதிலே பல குழந்தைகள் கண்ணாடி அணிந்திருப்பதை பார்த்திருக்கிறோம். அதற்கு பல காரணங்களை கூறலாம்.

குழந்தைகளுக்கு கண்களில் ஏற்படும் பிரச்சினைகளை தடுப்பதில் மிகுந்த கவனம் தேவை என்கிறார்கள் நிபுணர்கள். கண் நிபுணர்கள் குழந்தை பிறந்த  ஆறு மாதத்திலிருந்தே கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்கிறார். உங்கள் குழந்தைகள் அடிக்கடி கண்களை தேய்த்து கொண்டு  இருந்தால் கண்களில் தூசி அல்லது மணல் இருக்கக்கூடும். அவ்வாறு மணல் அல்லது தூசி இருக்கும் பட்சத்தில் கண்களை தேய்த்தால் கண்களுக்கு  தான் பாதிப்பு ஏற்படக்கூடும்.

அதனால் தாமதிக்காமல் கண்களை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். கண்களில் கண்ணீர் அதிகமாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக  கண் நிபுணர்களை பார்த்து பரிசோதிப்பது அவசியம். உங்கள் குழந்தைகள் தொலைகாட்சி, கணினி, வீடியோ கேம் முன்பு மிக அருகில்  அமர்ந்திருக்கிறார்கள் என்றால் குழந்தையின் கண் பராமரிப்பை கருத்தில் கொண்டு குழந்தைகளிடம் மிக அருகாமையில் அமர்வதால் கண்களின்  நரம்புக்கு ஏற்படும் பிரச்சனைகளை தெரியபடுத்துங்கள்.

கணினி  மற்றும் வீடியோ முன்பு நீண்ட நேரம் அமர்வதால் கிட்டபார்வை அறிகுறிகள் தோன்றும் என குழந்தைகள் கண் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.  ஜங்க் உணவுகள், குளிர்பானங்களை சாப்பிடும் பழக்கம் நாளுக்கு நாள் குழந்தைகளுக்கு அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமான உணவு பழக்கம்  இருந்தால் மட்டுமே குழந்தைகளை கண் பிரச்சனையிலிருந்து பாதுகாக்க முடியும். குழந்தைகளுக்கு சிவப்பு மற்றும் பச்சை நிற காய்கறிகளை  உள்ளடக்கிய சரிவிகித உணவுகளை வழங்கவேண்டும்.

பச்சை காய்கறிகளான கீரை, கேரட், பீட்ரூட், மஞ்சள் நிறம் கொண்ட பழங்கள், மாம்பழம், பப்பாளி போன்றவற்றில் கரோட்டின் கொண்டுள்ளது  (வைட்டமின் ஏ முன்னோடியாக உள்ளது) எனவே பச்சை காய்கறிகள் குழந்தைகளின் கண்களை பாதுகாத்துக்கொள்ளும். சரியான லைட் வெளிச்சத்தில்  குழந்தைகளை வாசிக்கவோ, படிக்கவோ செய்ய அனுமதிக்க வேண்டும்.

வாசிப்பு பொருள் மற்றும் குழந்தையின் கண்களுக்கிடையே பன்னிரண்டு பதினான்கு அங்குல இடைவெளி இருக்க வேண்டும் இது குழந்தையின் கண்  பாதுகாப்புக்கு மிக அவசியம். கால்பந்து, கிரிக்கெட், டோர் கேம்ஸ், போன்ற விளையாட்டுகளை விளையாட விரும்பும் குழந்தைகளுக்காக கண்களை  பாதுகாக்கும் விதமாக பாலிகார்பனேட் கொண்டு செய்யபட்ட கண்ணாடியை குழந்தைகளுக்கு அணிவிக்க செய்வதன் மூலம் கண்களை பாதுகாக்கலாம்..  குழந்தைகளுக்கு கண்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். 

No comments:

Post a Comment