For Read Your Language click Translate

06 May 2014

மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 12.


மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 12.

எந்த ஒரு வசதிகளும் இல்லாத காலத்தில், நூறு மீட்டர் கூட நகர்த்த முடியாத மாபெரும் கற்களை, முன்னூறு கிலோ மீட்டர் நகர்த்திக் கொண்டு வந்து, ஸ்டோன் ஹெஞ்ச் கட்டப்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு கற்களை அல்ல. மொத்தமாக 160 கற்களை 250 கிலோ மீட்டர் நகர்த்தியிருக்கிறார்கள். இது ஆசியா போன்ற நாடுகளில் நடந்திருந்தாலும், யானைகளைக் கொண்டு, ஒவ்வொன்றாக இழுத்து வந்திருப்பார்கள். என்று நி...னத்திருக்கலாம். இல்லை ஐஸ் காலம் என்றாலாவது மம்மோத் யானைகளின் உதவியுடன் இழுத்திருக்கலாம் என்று சொல்லலாம். ஆனால் இரண்டும் இல்லை. நான் ஏன் மேலே மம்மோத் என்னும் யானையைப் பற்றிச் சொன்னேன் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இன்றுள்ள பொறியியல் வல்லுனர்கள் கூட, வசதியற்ற சூழ்நிலையில், மலைப் பிரதேசங்களைத் தாண்டி இவ்வளவு பெரும் கற்களை இழுத்து வந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே! அப்படிக் கொண்டு வந்திருந்தாலும், கிடையாக இருந்த கற்களை எப்படி நிலைக்குத்தாக நிமிர்த்தியிருக்க முடியும்? நிமிர்த்திய இரண்டு கற்களின் மேல் இன்னுமொரு கல்லை எப்படிக் கிடையாக தூக்கி வைத்திருக்க முடியும்?

http://2.bp.blogspot.com/-9DHF8N2F2SM/UlEws1XBJHI/AAAAAAAAA4g/4OpGwPL79bA/s1600/Crop+Circle.JPG

http://3.bp.blogspot.com/-yvW-8_lpZkY/UlEwvAIBcAI/AAAAAAAAA4o/YZH7Rd3EeF8/s1600/Crop+Circle.JPG

அக்கால மக்கள் எப்படி அந்தக் கற்களை இழுத்து வந்தார்கள், எப்படி அவற்றை நிமிர்த்தினார்கள், நிமிர்த்திய இரு கற்களுக்கு மேல், கிடையாக மற்ற கற்களை எப்படி அடுக்கினார்கள் என்று பல விதத்தில், இப்போது விளக்கம் சொல்லப்படுகிறது. மேலே படங்களில் அவை காட்டப்பட்டுள்ளது. ஒரு பேச்சுக்கு இவர்கள் சொல்வது போலவே கற்கள் கொண்டு வரப்பட்டுக் கட்டப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், இவ்வளவு நுணுக்கமான அறிவை யார் இவர்களுக்குக் கொடுத்தார்கள்? மனிதன் தோன்றிய பல இலட்சம் ஆண்டுகளிலிருந்து கடைசிக் கற்காலம் வரை, மனித இனம் எந்தவித நாகரீக வளர்ச்சியும் இல்லாமல், ஒரு காட்டுவாசி போலவே வாழ்ந்திருக்கிறது. அதிகபட்சம் ஒரு வில்லு, ஒரு அம்புடனோ, கல்லினால் செய்த கோடரியுடனோதான், எந்தவித மாற்றமுமில்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறது.மிருகங்களை வேட்டையாடுவதே உணவிற்கான முக்கிய தொழிலாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் திடீரென அந்த மனிதர்களில் மிகப்பெரிய மாற்றம் உருவாகியது. அதுவரை அறிவேயில்லாத, மிருகங்களுடன் மிருகமாக வாழ்ந்து வந்த மனிதர்களில், மின்னல் அடித்த கணத்தில் ஏற்பட்டது போல, ஒரு மாற்றம் ஏற்பட்டது. இலட்சம் ஆண்டுகள் ஏற்படாத மாற்றம் சடுதியாகத் திடீரெனத் தோன்றியது. அந்த மாற்றத்தினால், இப்போது இருக்கும் மனிதர்களால் கூடச் செய்ய முடியாத சில செயல்களை, அனாயாசமாக அவர்கள் செய்திருக்கிறார்கள். அதற்குரிய அறிவும், ஆற்றலும் திடீரென அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. அது எப்படித் தோன்றியது என்பதுதான் நமக்கு முன் உள்ள கேள்வி. அதற்கு ஏலியன்கள் காரணமாக இருக்க முடியுமா?

http://1.bp.blogspot.com/-5b8bkc25GBY/UlExKE0yPJI/AAAAAAAAA4w/BpuqyXyjRGs/s1600/Crop+Circle.JPG

http://3.bp.blogspot.com/-A5HBMl5S-HQ/UlExQB4kzKI/AAAAAAAAA5A/0xYwMd4jPTc/s1600/Crop+Circle.JPG

ஸ்டோன் ஹெஞ்ச் அமைக்கப்பட்ட விதத்தைக் கவனித்தீர்களேயானால், ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். நிலையாக நிறுத்தப்பட்ட கற்களில் முளை போன்ற கூரான ஒன்றை உருவாக்கி, அதற்கு மேலே வைக்கும் கல்லில் அந்த முளை பொருந்தும்படி ஓட்டையாகச் செதுக்கி, கற்கள் விலகாமல் இருக்க, பக்கவாட்டில் வளைந்த அமைப்புகளை உருவாக்கி, கனகச்சிதமாக வட்டவடிவமாகப் பொருந்தும்படி ஸ்டோன் ஹெஞ்சை அமைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் அவர்கள் பாவித்த கருவிகள் என்று பார்த்தால், அவை வெறும் கற்கள்தான். கற்களால் அடித்துத் தேய்த்து, இந்தவித உருவங்களுக்கு மாற்றியுள்ளார்கள். இது நம்பவே முடியாத ஒன்றாக இருக்கிறது.இதை மனிதர்கள்தான் செய்தார்கள் என்று ஒரு பிரிவினர்கள் சொல்ல, மனிதர்கள் செய்யவில்லை, ஏலியன்கள்தான் செய்தார்கள் என்று வேறொரு பிரிவினர்கள் சொல்ல,மனிதர்கள்தான் செய்தார்கள். ஆனால் ஏலியன்கள் அவர்களுக்கு உதவினார்கள் என்று மற்றுமொரு பிரிவினரும் சொல்ல, இதுவரை அவிழ்க்கப்படாத முடிச்சுடன் அமைதியாக இருக்கிறது ஸ்டோன் ஹெஞ்ச்.

http://2.bp.blogspot.com/-rTdr5ZDCvls/UlEx0WrgCOI/AAAAAAAAA5Q/O-1Pdxis3dY/s1600/Crop+Circle.JPG

ஸ்டோன் ஹெஞ்சை மனிதர்கள் தனியே செய்யவில்லை. ஏலியன்களின் உதவியுடன்தான் அவர்கள் செய்தார்கள் என்று பலர் உதவிக்கு அழைப்பது வேறு ஒன்றை. இந்த ஸ்டோன் ஹெஞ்ச் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே காலகட்டத்தில் எகிப்தில் முதல் பிரமிட்டாக 'கீஸா' பிரமிட் (Geza) கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. கீஸா பிரமிட்டை மனிதர்கள்தான் கட்டினார்கள் என்று சொல்லும் போது, அதைப் பலர் நம்புவதில்லை. அந்த அளவுக்கு, மர்மங்களையும் ஆச்சரியங்களையும் தனக்குள் உள்ளடக்கிய பிரமிட் அது. 146 மீட்டர் உயரமான அந்தப் பிரமிட், 4500 வருடங்கள் பழமையானது. மிகப் பிரமாண்டமான ஒரு கட்டடமாக கீஸா பிரமிட்டைப் பார்க்கும் நாம், அது கட்டப்பட்டபோது நடந்த முக்கிய விசயங்களைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். இந்தப் பிரமிட் இரண்டரை மில்லியன்கள் சதுரக் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. அந்த இரண்டரை மில்லியன் கற்களும், 25 டன்களிலிருந்து 80 டன்கள் வரை எடையுள்ளவை.அனைத்தையும் சேர்த்து மொத்தமாக எத்தனை டன்கள் கற்கள் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

இதில் உள்ள ஆச்சரியமான விசயம் என்ன தெரியுமா?ஸ்டோன் ஹெஞ்ச் போலவே, அனைத்துக் கற்களும் 800 கிலோமீட்டர் தூரத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. இத்தனை கற்களையும் சதுரமாக வெட்டுவதற்கே,ஆயிரம் பேர் சேர்ந்தாலும் 100 வருடங்களுக்கு மேல் தேவை. சதுரமாகச் செதுக்கப்பட்ட இரண்டரை மில்லியன் கற்களையும், 800 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கொண்டு வர, 5000 பேர் சேர்ந்து உழைத்தாலும் 500 வருடங்களுக்கு அதிகமான காலம் தேவை. 4500 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தப் பிரமிட் குறுகிய காலத்திலேயே கட்டப்பட்டிருக்கிறது. இங்கு நான் குறுகிய காலம் என்று குறிப்பிட்டது, மனிதனால் கட்டப்படக் கூடிய கால அளவை விடக் குறுகிய காலம் என்பதை. அப்படியென்றால், கீஸா பிரமிட்டை யார் கட்டினார்கள்? யாருடைய உதவியுடன் கட்டினார்கள். நம்பவே முடியாத ஒரு காலத்தில் இப்படி ஒரு அறிவு பூர்வமான கட்டடத்தை கட்டுவதற்கு எப்படிச் சாத்தியம் ஆகியது? இவற்றிற்கு இன்னும் விடைகள் கிடைக்கவில்லை. பல விதங்களில் பல பதில்கள் சொல்லப்பட்டாலும், அவற்றை முழுமையாக ஏற்கக் கஷ்டமாகவே இருக்கிறது.

பிரமிட்டுகளின் மர்மங்களையும், அவற்றுடன் ஏலியன்கள் சம்பந்தப்பட்டது என்று நம்பப்படுவதையும் இப்போது நான் சொல்ல ஆரம்பித்தால், அந்தச் சுழலில் இருந்து சீக்கிரம் நம்மால் விலக முடியாது. எனவே எகிப்தின் பிரமிட்டை இத்துடன் இங்கு விட்டுவிட்டு, இங்கிலாந்துக்குச் செல்லலாம்.

"ஸ்டோன் ஹெஞ்ச், தெற்கு இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டிருப்பதற்கும், எகிப்தில் பிரமிட் உருவாக்கப் பட்டிருப்பதற்கும் என்னய்யா சம்பந்தம்? இது வேறு. அது வேறு.இது கற்களால் அமைக்கப்பட்ட வட்டவடிவ அமைப்பு. அதுவோ பிரமிட் வடிவ அமைப்பு. ஏலியன்கள்தான் இவை இரண்டையும் அமைக்க உதவி செய்தன என்று நீங்கள் சொன்னால், குறைந்தபட்ச ஒற்றுமை ஒன்றையாவது உங்களால் காட்ட முடியுமா?" என்று என்னிடம் நீங்கள் இப்போது கேட்கலாம். அந்தக் கேள்வியும் நியாயமானதே!எழுத வேண்டும் என்பதற்காக எதையும் முடிச்சுப் போடுவதென்பதற்கும், அளவு நிச்சயம் வேண்டும்தான். ஆனால் நாம்தான் இப்போது ஒரு மர்மமான சுழலில் சிக்கியிருக்கிறோமே! எனவே, இதற்கெனப் பதிலும் நிச்சயம் இருக்கும் அல்லவா? அது என்ன மர்மம் என்று நீங்களே பாருங்கள்.

http://2.bp.blogspot.com/-nK8EfvBfMLM/UlEyLhNqvsI/AAAAAAAAA5Y/uWMNsaJrcog/s1600/Crop+Circle.JPG

http://2.bp.blogspot.com/-5PsLoJ_wHZY/UlEyOkvjKZI/AAAAAAAAA5g/Vkwdw9CE3bQ/s1600/Crop+Circle.JPG

ஸ்டோன் ஹெஞ்சிலிருந்து வெறும் 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது 'சில்பரி ஹில்' (Silbury Hill) என்னும் இடம். அங்கு நாம் யாருமே நினைக்க முடியாத அதிசயம் ஒன்று உள்ளது. 4500 ஆண்டுகளுக்கு முன், எகிப்தின் பிரமிட் உருவாக்கப்பட்ட காலம், ஸ்டோன் ஹெஞ்ச் உருவாக்கப்பட்ட காலங்களில் சில்பரி ஹில்லிலும் ஒரு பிரமிட் உருவாக்கப்பட்டிருக்கிறது. "பிரமிட்டா? அதுவும் இங்கிலாந்திலா?" என்று ஆச்சரியப்படுகிறீர்களா? "ஆம்! பிரமிட்டேதான்". எகிப்தின் பிரமிட், ஸ்டோன் ஹெஞ்சின் வட்ட வடிவம் என இரண்டையும் இணைத்த மர்மமாக, வரலாற்றிலேயே வட்டவடிவத்தில் அந்தப் பிரமிட் அமைக்கப்பட்டிருக்கிறது. கூம்பு வடிவ அமைப்பையே பிரமிட் என்பார்கள். கீழே சதுரமான அடியைக் கொண்டிருப்பது எகிப்திய பிரமிட். கீழே வட்டமான அடியைக் கொண்டு அமைக்கப்பட்டது சில்பரி பிரமிட். படத்தில் பார்க்கும்போது ஏதோ சிறிய மலை போலக் காணப்படும் இது, கற்களால் எவராலோ கட்டப்பட்டிருக்கிறது. மேலே புற்கள் முளைத்திருக்கும் அந்தப் பிரமிட்டின் உள்ளே இருப்பது எல்லாமே கற்களால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள்.

மேலதிகமாக சில்பரி பிரமிட் பற்றிய ஆச்சரியம் தரும் விபரங்களை, அடுத்துப் பார்ப்போமா....?

No comments:

Post a Comment