For Read Your Language click Translate

06 May 2014

மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 11.


மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 11.

பல மில்லியன்கள் வருடங்களிலிருந்து பத்தாயிரம் வருடங்களுக்கு முன்வரை, ஐரோப்பாவெங்கும் ஐஸ் (Ice) பரவியிருந்தது. கண்ணுயர்த்திப் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளைப் போர்வையாக ஐஸ். மனித நாகரீகக் காலப் பிரிவுகளில், இந்தக் காலங்களை 'ஐஸ் காலம்' (Ice Age) என்று அழைப்பார்கள். மிகச் சமீபத்தில், அதாவது இன்றிலிருந்து பத்தாயிரம் ஆண்டு அளவுகளில்தான், இந்த ஐஸ் கட்டிகள் படிப்படியாகக்... கரைந்து, துருவம் வரை சென்று, அங்கே சங்கமமாகியது. இந்த ஐஸ் காலத்தில், 'மம்மோத்' (Mammoth) என்னும் யானை போன்ற மிகப் பெரிய விலங்குகள், உலகில் பல இடங்களிலும் வாழ்ந்து வந்தன.

இப்போது யானைகள் ஆப்பிரிக்காவிலும்,ஆசியாவிலும் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் இப்போதுள்ள யானைகளின் முப்பாட்டனான 'மம்மோத்' உலகமெங்கும் பரவி வாழ்ந்து வந்தன. இந்த மம்மோத்,தற்கால யானைகளை விட மிகப் பெரியவை. உடலெங்கும் நீண்ட முடிகளுடனும், நீண்ட தந்தங்களுடனும் அவை காணப்பட்டன. மம்மோத், ஐஸ் உள்ள குளிர்ப் பிரதேசங்களிலேயே வாழக் கூடியவை. இங்கிலாந்தில் கூட இவை வாழ்ந்திருக்கின்றன. மம்மோத் யானையினம் மனிதர்களின் வேட்டையினாலும், ஐஸ் கட்டிகள் கரைந்து இல்லாமல் போனதாலும், மொத்தமாகப் பூமியிலிருந்து அழிந்து போயின.

இங்கிலாந்தில் 10,000 வருசங்களுக்கு முன்வரை இவை வாழ்ந்திருக்கின்றன. இவை அழிந்த காலத்திலிருந்து, மெல்ல மெல்லப் பனிப்பிரதேசங்கள் மரம் செடிகள் முளைக்கும் பிரதேசங்களாக மாறின. ஆனாலும் வேட்டையாடியே மனித இனம் வாழ்ந்து வந்தது. இன்றிலிருந்து பத்தாயிரம் ஆண்டுகள் முதல் ஆறாயிரம் ஆண்டுகள் வரையிலான, கால கட்டத்தைக் கடைசிக் கற்காலமாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

http://2.bp.blogspot.com/-MY-sTr4_Znw/Uj4oGjvFW2I/AAAAAAAAA3Q/oFF8TXutVdY/s1600/Crop+Circle.JPG

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், கடைசிக் கற்காலத்தில் இங்கிலாந்து, வைல்ட் ஷையர் (Wiltshire) என்னுமிடத்தில் கற்களால் கட்டப்பட்ட ஒரு வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது (இதே வைல்ட் ஷையரிலிருந்துதான் இந்தத் தொடரின் முதல் பகுதி ஆரம்பமாகியது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்). சிறிய, பெரிய அளவுகளில் இரண்டு வகைக் கற்களினால் அந்த வட்ட வடிவ அமைப்பு கட்டப்பட்டிருந்தது. மிகப்பெரிய அளவுள்ள பாறாங்கற்களும் (Sarsen Stones) , நீலக்கற்களும் (Blue Stones) கொண்டு அந்த வடிவம் அமைக்கப்பட்டிருந்தது. அதையே 'ஸ்டோன் ஹெஞ்ச்' (Stonehenge) என்று அழைக்கிறார்கள்.

மனித வரலாற்றிலேயே மிகவும் பழைய கட்டட வடிவமாக இதைச் சொல்கிறார்கள். இப்போது பிரச்சினை இந்தக் கட்டடம் அல்ல. அது எப்படிக் கட்டப்பட்டது, ஏன் கட்டப்பட்டது என்பதுதான். ஒவ்வொன்றும் 25டன்களுக்கும் அதிகமான எடையும், ஏழு மீட்டர் உயரமுமுள்ள கற்கள். அனைத்தும், 250 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மலைப் பிரதேசங்களிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளன.

http://2.bp.blogspot.com/-otqy2bZiyjk/Uj4oKv8PiYI/AAAAAAAAA3Y/zXC_0LTK5Gk/s1600/Crop+Circle.JPG

எந்த ஒரு வசதிகளும் இல்லாத காலத்தில், நூறு மீட்டர் கூட நகர்த்த முடியாத மாபெரும் கற்களை, முன்னூறு கிலோ மீட்டர் நகர்த்திக் கொண்டு வந்து, ஸ்டோன் ஹெஞ்ச் கட்டப்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு கற்களை அல்ல. மொத்தமாக 160 கற்களை 250 கிலோ மீட்டர் நகர்த்தியிருக்கிறார்கள். இது ஆசியா போன்ற நாடுகளில் நடந்திருந்தாலும், யானைகளைக் கொண்டு, ஒவ்வொன்றாக இழுத்து வந்திருப்பார்கள். என்று நினத்திருக்கலாம். இல்லை ஐஸ் காலம் என்றாலாவது மம்மோத் யானைகளின் உதவியுடன் இழுத்திருக்கலாம் என்று சொல்லலாம். ஆனால் இரண்டும் இல்லை. நான் ஏன் மேலே மம்மோத் என்னும் யானையைப் பற்றிச் சொன்னேன் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இன்றுள்ள பொறியியல் வல்லுனர்கள் கூட, வசதியற்ற சூழ்நிலையில், மலைப் பிரதேசங்களைத் தாண்டி இவ்வளவு பெரும் கற்களை இழுத்து வந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே! அப்படிக் கொண்டு வந்திருந்தாலும், கிடையாக இருந்த கற்களை எப்படி நிலைக்குத்தாக நிமிர்த்தியிருக்க முடியும்? நிமிர்த்திய இரண்டு கற்களின் மேல் இன்னுமொரு கல்லை எப்படிக் கிடையாக தூக்கி வைத்திருக்க முடியும்?

அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போமா..?

No comments:

Post a Comment