For Read Your Language click Translate

03 June 2014

பாஷாணங்கள் என்றால் என்ன?- நவபாஷாண சிலை

சித்த மருத்துவத்தின் அடிப்படை மூலங்களில் ஒன்றுதான் பாஷாணங்கள். ஆனால் பாஷாணம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பழநியில் அருள்பாலிக்கும் மூலவரான தண்டாயுதபாணியும், அவரை உருவாக்கிய சித்த புருஷரான போகரும்தான். ஒன்பது வகையான பாஷாணங்களை பிசைந்து பழனியில் உள்ள மூலவரை போகர் உருவாக்கியதாக கூறுவர். இந்த பதிவின் நோக்கம் நவபாஷாண சிலை பற்றியதன்று. இத்தனை சிறப்பானதாக கூறப் படும் பாஷாணங்களைப் பற்றியதே....

பாஷாணங்கள் அல்லது பாடாணங்கள் என அறியப் படும் இவற்றை சித்தர்கள், தங்களின் மருத்துவ முறையில், அடிப்படை மூலகங்களில் ஒன்றாக பயன் படுத்தினர். இரசவாதத்திலும் பாஷாணங்கள் பயனாகிறது. இவை உலோகத்தைப் போல கடினமான தன்மையையும், விஷத்தின் தீவிர குணங்களையும் கொண்ட திண்மப் பொருட்கள். பாஷாணம் என்பது பொதுப் பெயரே, இவற்றில் நிறைய வகைகள் இருக்கிறது.

இந்த பாஷாணங்கள் விஷத் தன்மையுடையவை ஆதலால், நேரடியாய் உட்கொண்டால் மரணம் விளையும், ஆனால் அன்றைக்கே சித்தர்கள் அவற்றை பக்குவப் படுத்தி விஷத்தையே மருந்தாக்கி பயன்படுத்தினர். இன்றைய நவீன அலோபதி மருத்துவ முறை, பெரும் செலவிலான ஆராய்ச்சிகளின் முடிவில் பாம்பின் விஷத்தை மருந்துகளாக மாற்றி பயன்படுத்துவது உங்கள் நினைவுக்கு வரலாம். சித்தர் பெருமக்கள் நமக்குத் தரும் ஏராளமான ஆச்சர்யங்களில் இதுவும் ஒன்று.

பாடாணங்கள் குறித்து மிகைப் படுத்தப் பட்ட செய்திகளே ஊடகத்தில் உலவுகின்றன. இந்த செய்திகள் எங்கிருந்து பெறப்படுகின்றது என்பதில் நிறைய கேள்விகளும், ஐயங்களும் இருக்கிறது. போகர் 12000” என்ற நூலில் போகர் பாடாணங்கள் குறித்து விளக்கமாய் கூறியிருக்கிறார். போகரின் கூற்றுப் படி பாஷாணங்கள் அடிப்படையில் இரு வகையாக பிரித்துக் கூறுகிறார். அவை பிறவிப் பாஷாணங்கள்”,”வைப்புப் பாஷாணங்கள் ஆகும்.

பிறவிப் பாஷாணங்கள் என்பவை இயற்கையாக கிடைக்கக் கூடியவை. வைப்புப் பாஷாணங்கள் என்பவை பல மூலகங்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கப் படுவது. இந்த இரு பிரிவுகளின் கீழ் பல வகையான பாஷாணங்கள் உள்ள்ளன.

நாளைய பதிவில் பிறவிப் பாஷானஙகளைப் பற்றியும், அவற்றின் வகைகளையும் பார்ப்போம்.
போகர் தனது போகர் 12000” என்கிற நூலில் பாஷாணங்களின் தன்மை, தரம், தகுதி, வகை மற்றும் பயன் பற்றி விரிவாக கூறியிருக்கிறார். பெரும்பாலும் இந்த விவரங்கள் மறைபொருளாகவே கூறப் பட்டிருப்பதால், ஆய்வாளர்கள் தங்களுக்குள் கருத்தியல் ரீதியாக பல இடங்களில் மாறு படுகின்றனர்.மறைபொருளாக கூறப்பட்டுள்ள விவரங்களை பகுத்தறிவது என்பது தனித்துவமான ஒரு கலை என்றே கூறலாம். இதைப் பற்றி விரைவில் தனியொரு பதிவாக எழுதிட முயற்சிக்கிறேன்.

போகர் பாஷாணங்களை இரு பெரும் பிரிவுகளாய் வகைப் படுத்தியிருக்கிறார். அவை பிறவிப் பாஷாணம் மற்றும் வைப்புப் பாஷாணம். பிறவிப் பாஷாணமென்பது இயற்கையான மூலங்களில் இருந்து நேரடியாகக் பெறப் படுவது. இவற்றில் முப்பத்தி இரண்டு வகை இருப்பதாக கூறியிருக்கிறார். இந்த பாஷாணங்கள் பூமியில் இயற்கையாய் விளையும் தாதுக்கள், தாவர இனங்களில் இருந்து பெறப்படுபவை, உயிரினங்களில் இருந்து பெறப்படுபவைகள் என இயற்கையின் பல்வேறு அம்சங்களில் இருந்து பெறக்கூடியவை.

இனி 32 வகையான பிறவிப் பாஷாண வகையின் பட்டியலை பார்ப்போம்.

கறடகப் பாஷாணம்
வெள்ளைப் பாஷாணம்
அபிரகப் பாஷாணம்
காரமுகில்ப் பாஷாணம்
சிலா மதப் பாஷாணம்
சீதாங்கப் பாஷாணம்
கச்சாலப் பாஷாணம்
அஞ்சனப் பாஷாணம்
கற்ப் பாஷாணம்
கற்பரிப் பாஷாணம்
சாலங்கப் பாஷாணம்
அவுபலப் பாஷாணம்
சிலைப் பாஷாணம்
தாளகப் பாஷாணம்
சர காண்டப் பாஷாணம்
இலிங்கப் பாஷாணம்
காந்தப் பாஷாணம்
பலண்டுறுகப் பாஷாணம்
துத்தப் பாஷாணம்
கௌரிப் பாஷாணம்
சங்குப் பாஷாணம்
குதிரைப்பற்ப் பாஷாணம்
தொட்டிப் பாஷாணம்
சிரபந்தப் பாஷாணம்
அமிர்தப் பாஷாணம்
தாளம்பப் பாஷாணம்
வைகிரந்தப் பாஷாணம்
வீரப் பாஷாணம்
கெந்தகப் பாஷாணம்
மிருதாரப் பாஷாணம்
சூதப் பாஷாணம்
கோளகப் பாஷாணம்

இவற்றின் பெயர்களில் இருந்தே இவை எந்த மூலத்தில் இருந்து பெறப்பட்டவை என்பதை அறியலாம். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான குண நலன்களைக் கொண்டவை. இது பற்றியும் தனது நூலில் போகர் விரிவாக கூறியிருக்கிறார். இவற்றில் சில பாஷாணங்கள் மட்டுமே தற்போது அறியப் பட்டு புழக்கத்தில் இருக்கிறது.

மேலதிக ஆராய்ச்சிகள் நடக்குமேயானால் போகர் கூறிய மற்ற பாஷாணங்கள் பற்றிய தெளிவுகள் நமக்கு கிடைக்கலாம். வாய்ப்புள்ள அனைவரும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும், அல்லது ஈடுபடுவோருக்கு தேவையான வசதிகளை செய்து தருவதன் மூலம் மறைந்து போன அரிய தகவல்களை மீட்டெடுத்து மக்கள் நலம் பேண பயன்படுத்திடலாம்.

நாளைய பதிவில் பாஷாணங்களின் மற்றொரு வகையான வைப்புப் பாஷாணம் பற்றி பார்ப்போம்.

போகர் தனது போகர்12000” என்ற நூலில் பாஷாணங்களை இரு வகையாக கூறியிருப்பதையும், முதல் வகையான பிற்விப் பாஷாண்ம் பற்றியும் பார்த்தோம். இன்று மற்றொரு வகையான வைப்புப் பாஷாண்ம்பற்றி பார்ப்போம்.

வைப்பு முறை என்பது சித்த மருத்துவம் மற்றும் இரசவாதத்தில் பயன்படுத்தப் படும் ஒரு முறையாகும்.இதன் படி தாழ்வான சில பொருட்களைக் கொண்டு தேவையான உயர் நிலை பொருளை உருவாக்குவதாகும்.மற்றொரு வகையில் சொல்வதானால் இயற்கையாக கிடைக்கும் மூலங்களைக் கொண்டு செயற்கையான மூலம் ஒன்றினை தயாரிப்பதாகும்.

இப்படி வைப்பு முறையில் உருவாக்கப் பட்ட பாஷாணங்களை சித்தர்கள் பயன்பாட்டில் வைத்திருந்தனர்.போகர் இந்த முறை பாஷாணங்களை முப்பத்தி இரண்டு வகைகளாக கூறுகிறார்.

அவையாவன..

புத்தோட்டித் தொட்டி வைப்புப் பாஷாணம்
பொன் தொட்டி வைப்புப் பாஷாணம்
செப்புத் தொட்டி வைப்புப் பாஷாணம்
இந்திர வைப்புப் பாஷாணம்
நாக வைப்புப் பாஷாணம்
இலவண வைப்புப் பாஷாணம்
காசு வைப்புப் பாஷாணம்
சோர வைப்புப் பாஷாணம்
கெந்தக வைப்புப் பாஷாணம்
நீல வைப்புப் பாஷாணம்
சூத வைப்புப் பாஷாணம்
தைல வைப்புப் பாஷாணம்
இரசித வைப்புப் பாஷாணம்
குங்கும வைப்புப் பாஷாணம்
துத்த வைப்புப் பாஷாணம்
துருசு வைப்புப் பாஷாணம்
இரத்த வைப்புப் பாஷாணம்
பஞ்சபட்சி வைப்புப் பாஷாணம்
கோடா சூரி வைப்புப் பாஷாணம்
பவளப் புற்று வைப்புப் பாஷாணம்
அரிதார வைப்புப் பாஷாணம்
வாரணக்கேந்தி வைப்புப் பாஷாணம்
கோழித்தலை கந்தி வைப்புப் பாஷாணம்
எருமைநாத் தொட்டி வைப்புப் பாஷாணம்
சவ்வீர வைப்புப் பாஷாணம்
வெள்ளை வைப்புப் பாஷாணம்
தீமுறுகல் வைப்புப் பாஷாணம்
கருமுகில் வைப்புப் பாஷாணம்
சாதிலிங்கம் வைப்புப் பாஷாணம்
மிருதார்சிங்கி வைப்புப் பாஷாணம்
இரத்தசிங்கி வைப்புப் பாஷாணம்
ஏமசிங்கி வைப்புப் பாஷாணம்

நடைமுறையில் இவற்றில் சிலவற்றை மட்டுமே தயாரிக்க முடிந்திருக்கிறது.தயாரிப்பின் சூட்சுமங்கள் யாவும் மறைபொருளாய் பாடல்களில் மறைந்து நிற்கிறது.குருவருளுடன் கூடிய தொடர்ச்சியான ஆராய்ச்சிகளினால் மட்டுமே இந்த தயாரிப்பு முறைகளை கட்டவிழ்க்க இயலும். அரிய சில பாஷாணங்களைத் தயாரிக்கும் பரம்பரை சித்த மருத்துவர்கள் இன்னமும் நம்மிடையே இருக்கின்றனர். ஆனால் இந்த கலை அந்தந்த பரம்பரையினருடன் காலம் காலமாய் முடங்கி இருக்கிறது அல்லது அழிந்து வருகிறது என்பதுதான் உண்மை.

வைப்புப் பாஷாணங்கள் என்பவை கதையோ, கற்பனையோ இல்லை, மிகத் தெளிவாக வரையறுக்கப் பட்ட ஓர் இரசாயன அறிவியல்.இவற்றை முறையாக ஆவணப் படுத்துவதன் மூலம் அரியதோர் மருத்துவக் கலையினை காப்பாற்றிட முடியும்.இன்றைய நவீன விஞ்ஞானம் சாதிக்க சிரமப் படும் பலவற்றை தமிழ் சித்தர்களின் கண்டறிந்து பயன் படுத்தி வந்திருக்கின்றனர்.அழிந்தது போக இருப்பதையாவது கண்டறிந்து பாதுக்காக்கும் பொறுப்பும் கடமையும் தமிழராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கிற்து.

நவ பாசாணங்கள் மருத்துவக் குணம் கொண்டவை
மனித வாழ்வில் அவனுக்கு சொந்தமானது என்று எதுவும் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக முருகப் பெருமான் ஆண்டியாக நின்ற இடம் பழனி. இந்த கோவிலில் உள்ள தண்டாயுதபாணி சிலை நவ பாசாணத்தால் செய்யப்பட்டதாகும். நவ பாசாணங்கள் மருத்துவக் குணம் கொண்டவை. அவற்றின் பெயர்கள் வருமாறு:- லிங்க பாசாணம் (இதய வலிமை), குதிரை பல் பாசாணம் (நரம்புத் தளர்ச்சி), கார்முகில் பாசாணம் (சூடு தணிக்க), ரசசெந்தூரம் (தோல் வியாதிகளுக்கு), வெள்ளை பாசாணம் (கண் கோளாறு நீங்க), ரத்த பாசாணம் (தாது குறையை நீக்கும்), கம்பி நவாசரம் (உடலில் உள்ள துர் நீரை வெளியேற்றும்), கவுரி (பொதுவான மருத்துவ குணம்), சீதை (அனைத்து பாசாணங்களையும் வேலை செய்ய வைக்கும் தன்மை உடையது).

நாளைய பதிவில் முற்றிலும் புதியதோர் தகவலுடன் சந்திக்கிறேன்.

1 comment:

  1. ஐயா போகர் 12000 நூல் காபி வேண்டும் உங்கள் தொலைபேசி எண் வேண்டும் என் நம்பர் 8270791785 கொடைக்கானலில் ரெடியம் தனிமம் இருக்கிறது அந்த பகுதியில் இருக்கும் செடிகள் தன்னைத்தானே பிராகாசிகிரது இதைப்பற்றி கூருங்கள் ஐயா

    ReplyDelete