கற்பக விருட்சத்தின் மகிமை என்ன `கேட்டதை எல்லாம் கொடுக்குமாம்…கற்பக விருட்சம்’ என்று சொல்வதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். வேண்டியதை எல்லாம் தந்து அருள்பவள் சக்தி தேவி. அம்பிகையைப் போலவே கேட்டதைத் தந்து அருளும் மரம் தான் இந்த கற்பக விருட்சம். தெய்வ அற்புதம் நிறைந்தது. பாற்கடலில் உள்ள அமுதத்தை எடுப்பதற்காக தேவர்கள் அனைவரும் சேர்ந்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும், மகாமேருவை மத்தாகவும் பயன்படுத்தி, ஆழமாகக் கடைந்து கொண்டிருந்த போது, அந்த அற்புதம் நடந்தது. அப்போது பாற்கடலில் இருந்து 16 வகையான பொருட்கள் விதவிதமாக வெளிவந்து கொண்டிருந்தன. அப்படி தோன்றிய பொருட்களில் வலம்புரிச்சங்கையும், சாளக்ராமத்தையும் மகாவிஷ்ணு தன் கையில் எடுத்துக் கொண்டார். திரவியங்கள், பொன், மாணிக்கம், சிந்தாமணிகள் என்று பல பொருட்களும் வெளிவந்தன. அவை, ஒவ்வொன்றும், ஒவ்வொரு திசைக்குச் சென்று விட்டன. தொடர்ந்து, பச்சை நிறத்தில் மரக்கிளை போல பாசிக்கற்றைகள் பின்னியது போல ஒரு உருவம் அழகாக நீரில் மிதந்து வந்தது. அந்த மரம் போன்ற உருவத்தின் நடுவில் ரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு தேவி பொற்காசுகளை இரைப்பது போன்று மகாலட்சுமியை போன்ற அழகுடன் நின்று கொண்டிருந்தாள். அந்த மரம் குபேரதிசையான வடக்கு நோக்கி செல்லத் தொடங்கியது. அதைக் கண்டு முனிவர்கள் வியந்தனர். அவர்கள் அதைப் பார்த்த உடன், “ஆகா…கற்பக விருட்சம்..! ஆகா…கற்பக விருட்சம்..!” என்று இரண்டு கைகளையும், கன்னத்தில் போட்டுக் கொண்டு கும்பிட்டனர். தேவர்களோ அமிர்தத்தை மட்டுமே எதிர்பார்த்தபடி இருந்ததால் இதைக் கவனிக்காமல் இருந்தனர். பச்சை நிறம் பூசிய இரண்டு தேன்கூடுகள் இணைந்தது போன்று தெய்வ சக்திகள் நிறைந்து இருந்தது இந்த மரம். தெய்வ சக்திகள் நிறைந்த இந்த மரம் கேட்டதைத் தரும் சக்தியுடையது. இதன் உள்ளே இருக்கும் தேவிக்கு ஸ்வர்ணவர்ஷிணி என்று பெயர். இவள் பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமிக்குச் சமமானவள். இவள் அள்ளி அள்ளிக் கொடுப்பதில் நிகரற்றவள் என்று கற்பக விருட்ச தியான சுலோகம் கூறுகிறது. கற்பகத் தருவை அதில் உறைந்திரு
No comments:
Post a Comment