ஒருவர் இந்த முறைப்படி பலன் சொல்ல விரும்பினால் (அ ) நேரத்தை தேர்ந்தெடுக்க விரும்பினால் பலன் தேர்தெடுத்து இந்த முறையில் சொல்லப்படும். பலங்கள் பிரஸ்ன, (அ ) கபால, (அ ) கேரள ஜோதிட முறைப்படி கூறும் பலங்களுக்கு ஒத்து இருக்கும். மேலும் உறுதியாகவும், தெளிவாகவும், நம்பிக்கையுடனும் பலங்கள் கூறுவதற்கு பயனாகும். தெரிவதால்! சகுனங்கள் தெளிவான சரியான குறிக்காட்டிகளாகும். எனவே இவைகள் ஜோதிடகளுக்கு சரியான வாழ்காட்டிகளாகும்.
சகுனங்களை கொண்டு தக்க முடிவுகளை மக்கள் எடுக்கிறார்கள். அவர்கள் இதில் மேலும் திருமணம் நிச்சயிப்பதிலும், வீடு வாங்குதல் போன்றவைகளிலும் நிமித்தங்கள் கெடுதலானவைகளாகவோ மனக்கஷ்டமோ காண்பாரேயாகில் மேலும் அவர் காரியத்தைத் தொடருவதில்லை. வராஹமிஹிரர் சொல்வது ஒரு நிமித்தம் முற்பிறவியில் செய்த நன்மை , தீமைகளைப் பொறுத்து ஒருவரது செயல் நிறைவேறுவதை வெளிப்படுத்துகிறது. எனவே நிமித்தங்கள் என்பவை மூட நம்பிக்கையில்லை நிமித்தங்கள் என்பது சகுனம் என்பதாகும்.
இது ஒரு விருவான பொருள் இதில் பலன் கூறுவதற்குத் திறமை வேண்டும். பிருஹத் ஜாதகத்தில் வராஹமிஹிரர் விரிவாகக் கையாண்ட நிமித்தங்கள் பற்றியவைகளை ஒருவர் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் நேரடியாக முடிவுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒன்றுக்கதிகமான நிமித்தங்கள் இருந்தால் அவைகள் அந்தத் தனி மனிதனை விளக்கங்களையே சாரும். எப்படியும் ஒருவர் கெட்டிக்காரராக இருப்பது நல்லது.
1. ஒரு நாள் ஒரு குரு மனிதர்களைப் பற்றியும், ஜோதிடத்தைப் பற்றியும் தன்னுடைய சீடர்களுடன் விவரித்துக் கொண்டிருந்தார். ஒரு கனவான் அப்போது அங்கு வந்து ஒரு முக்கியமான விஷயத்தைப்பற்றி ஆலோசனை செய்ய வேண்டும் என்றார்.
குரு, வாருங்கள் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். வந்தவர் மாணவர்கள் முன்னிலையில் விளக்குவதற்குத் தயக்கம் காட்டினார். மாண்வர்களை வெளியே போகுமாறு சொல்லமுடியாது. அந்தக் கனவானை குருஜி ஒரு தனியான இடத்திற்கு அழைத்துச் செல்லவும் முடியாது. இம்மாதிரி எதிர் பாராத சூழ்னிலையில் அவள் தனியே வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் என்றார். சில மாதங்கள் கழிந்தது. அவளிடமுருந்து ஒரு கடிதம் கூட இல்லை. ஆகையால் நான் தொல்லைப்படுகிறேன். நான் என்னுடைய
மணவாழ்க்கைப்பற்றி கவலைப்படுகிறேன் என்றார்.
வந்தவர் தன்னுடைய துக்கரமான கதையைச் சொல்லிக் கொண்டிருந்த போது குருவின் மனைவி ஒரு தாம்புக்கயிறும் வாளியும் எடுத்துக் கொண்டு தெருவில் ஒரு பொதுக் கிணற்றுக்கு தண்ணீர் கொண்டு வரச் சென்றார். அந்தப் கனவான் தன்னுடைய உரையை முடிக்கும் முன்னரே, குருவின் மனைவி உள்ளே வந்த அவள் கிண்ற்றிலிருந்து தண்ணீர் சேந்திக் கொண்டிருந்த போது தாம்புக்கயிறு அறுந்து விட்டதால் வாளியைக் கிணற்றிலிருந்து எடுத்து தரும்படி கோரினார்.
குரு தம் சீடர்கள் பக்கம் திரும்பி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் இதை ஒரு நிமித்தமாக (சகுனமாக ) எடுத்துக் கொண்டு கவனமாக அலசி பலன் கூறுங்கள் என்று சொன்னார். அவர்களில் பலர் தயக்கமின்றி உடனே கணவன் மனைவியினர் மத்தியில் இருந்த பிணைப்பு மஞ்சல் கயிறு ( அ ) தாலிக்கயிறு என்பது அந்தத் தாம்புக் கயிறு அறுந்துவிட்டது. என்பது மாங்கல்ய சரடு துண்டிக்கப்பட்டதை காட்டுகிறது. ஆகையால் வந்தவரின் மனைவி திரும்பவும் சேரமாட்டாள். கணவன் மனைவியருக்குள்ள பந்தம் மேலும் தொடர முடியாது என்றனர்.
ஆனால் மாணவரில் ஒருத்தர் மாறுபாடாக பலன் சொன்னார்.அதைகுரு ஆலோசித்தார் மாணவர், ஐயா, நான் அவர்கள் கூறியதை ஒப்புக் கொள்ளவில்லை.எனக்குத் தெரிவதெல்லாம் அவர் மனைவி கூடிய விரைவில் அவரிடம் (கணவரிடம்) வந்து சேர்ந்து கொள்வார். கணவனும் மனைவியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கிணற்றில் உள்ள ஒட்டு மொத்த தண்ணீர் மாதிரி சேர்ந்து ஒன்றாக வாழ்ந்தவர்கள். அந்தக் கயிறும், வாளியும் தீய சக்தியைப் போலும் இந்த கிணற்றில் உள்ள நீருடன் வாளியில் எடுத்த நீரும் ஒன்றாக சேர்ந்தது. அதுபோல இந்த கணவனுடைய கெட்டகாலம் முடிந்த்து. அவரடைய மனைவி திரும்ப அவரிடம் வந்து அவர்களுடைய குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்துவாள் என்றார்.
இப்படி ஒன்றிற்கு மேற்பட்டவை குறிக்கப்படுவதால் ஒரு புத்தி நுட்பமான விளக்கம் தேவைப்படுகிறது. தண்ணீரை இறைத்த பின் கயிறு இற்று விட்டிருந்தால் அவள் திரும்பி வருவதென்பது முடியாதது ஏனெனில் தண்ணீர் பிறிந்து வந்த பின்னரே தாம்புக்கயிறு இற்றுப்போய்விட்டதாகக் காண்ப்படுகிறது.
2. ஒரு கனவான் ஒரு குறிப்பிட்ட பெண்ணை தன் மகனுக்கு திருமணம் முடிக்க தீர்மானிக்கிறார். அவர் தடுமாறுகிறார். அவர் அந்த பெண்ணை திருமணம் முடிக்க நிச்சயம் செய்ததுடன் சிறிது காலம் காத்திருந்து ஒரு தொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள பேராசை கொண்டு முயன்று காத்திருக்கிறார். எனவே அவர் ஒரு ஜோதிடரை ஆலோசனை கேட்கிறார். அவர்கள் விவாதம் செய்து கொண்டிருந்த போது ஒரு தபால்காரர் ஒரு திருமண அழைப்பிதழ் கடிதத்தை ஜோதிடரிடம் கொடுக்க ஜோதிடர் ஏற்கனவே பார்த்த பெண்ணையே திருமணம் முடிக்க தயக்கமின்றி கனவானுக்கு அறிவுறுத்துகிறார். ஏனெனில் திருமண அழைப்பிதழ் வந்தது திருமணத்தை நிச்சயிக்க நல்லதான அறிகுறி ஜோதிடர் விளக்கம் கூறும் போது தபால்காரர் அரை டஜன் மணமகன் ஜாதகங்களைக் கொண்ட ஒரு கடிதத்தைக் கொடுத்திருந்தார். காத்திருந்து பாருங்கள் என்று கனவாரிடம் கூறக் கூடும். ஆனால் அந்தக் கடிதம் ஏற்கனவே நிச்சியிக்கப்பட்டுள்ளதைக் காட்டுவதாலும், அந்த திருமணம் உடனேயே நடக்க இருப்பதாலும், ஏற்கனவே பார்த்த பெண்ணை நிச்சயம் செய்யுங்கள் என்று மட்டுமே கூறக்கூடும். சில வாரங்களில் திருமணம் நிச்சியிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. அந்த தம்பதியர் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் ஜோதிடைரை ஆலோசனை கேட்டாலும் கேட்காவிடினும், திருமணம் நடத்தினால் திருமண வாழ்க்கை அவர்களின் தலைவிதிப்படியே இருக்கும். திருமணம் நடக்குமா, நடக்காதா என்பதை ஜோதிடர் திருமணம் நடக்கும் முன்னரே தெரிவிப்பார்.
மணவாழ்க்கையில் ஏதாவது விரும்பத்தகாத முடிவிகள் இருந்தால், ஒருவர் திருமணம் வேண்டும் போது ஜோதிடர் அவ்விளைவுகளைப் பற்றி கூறுவது அழகல்ல என்பதை நான் உணருகிறேன்.
3. ஒரு அதிகாரி ஜோதிடர் ஒருவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து, நோய் வாய்ப்பட்டுள்ள தன்னுடைய பாட்டியார் நோயினின்று மீள்வாரா? அல்லது மரிப்பாரா என்று கேட்டு உள்ளார். அவர் சில ஏற்பாடுகளைச் செய்யவும், தன் சொந்த வீட்டிற்குச் செல்லவிடுப்புக்கு மனுச் செய்ய வேண்டும் என்றும் கேட்டார்.
ஜோதிடர் 101க்குள் அவரை ஒரு எண்ணைக் கேட்க அவர் 7 என்று சொல்கிறார். ஜோதிடர் கணக்கு போட்டிருக்கும் போது, அவர் வீட்டின் உள்ளே தன்னுடைய மனைவியும்
விருந்தாளியும் ஒரு சோக நிகழ்ச்சியை பற்றி பேசிக் கொண்டு இருந்தார். நான் செய்தி தாளின் மூலமாக இறந்ததைப்பற்றி படித்தபோது உண்மையிலேயே துக்கம் அடைந்தேன். அதை ஒரு பெரிய இழப்பாக நான் எடுத்துக் கொள்ளுகிறேன். ஏனெனில் அவர் என்னுடைய குடும்பத்திற்கு அபகரியமாக இருந்தார். அது நாட்டிற்கும் கூட இழப்பு ஆகும் என்று தெரியவந்தது. மேலும் ஒரு புரோகிதர் அப்போது வந்து தன்னுடைய தந்தையின் வருடாப்தீகம் செய்யப்பட உள்ளது என்று ஜோதிடரை நினைவுபடுத்தினார். கேட்பவர் தன்னை தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கருதி ஜோதிடர் உடனே பலன் சொல்லவில்லை. அவர் என்ன பலன் கூற வேண்டும், என்று சில சாக்கு போக்குகளைக் கொண்டு சில நிமிடங்களைக் கடத்தினார். ஜோதிடர் இளைஞ்ச்ரே நீண்ட காலவிடுப்பு எடுத்துக் கொண்டு உடனே உங்கள் பாட்டனாருடைய இடத்திற்கு விரையுங்கள். காலத்தை வீணாடிக்க வேண்டாம் என்று கூறினார். ஜாதகர் வந்து சேருவதற்கு முன்னரே நோயாளி இறந்துவிட்டார். இப்படிப்பட்ட குறிப்புகள் தவறாது எப்போதும் உண்மையாகும்.
4.ஒருவர் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று ஆவலுற்று ஜோதிடரிடம் தம்பதியயினரின் ஜாதகங்களை கொடுத்து பலன் சொல்லும்படி கேட்கிறார்.அப்போது பெண்மணி உள்ளே வந்து அடுத்த நாள் தன்னுடைய சகோதரியின் குழந்தையை அதனுடைய பிறந்த நாள் விழாவில் ஆசீர்வதிக்க தன் வீட்டிற்கு வரும் படி அழைக்கிறார். ஜோதிடர் என்ன பலன் கூறியிருப்பார் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். கடவுள் எப்போதுமே ஜோதிடருக்கு அதிசயக்கத்தக்க பலங்களை துல்லியமாக கூறுவதற்கு உறுதுணை செய்வதில் கவனமாக இருக்கிறார் எனினும் அவர்கள் முற்பிறவியில் தரும காரியங்களில் திருப்திகரமாக ஈடுபாடு கொண்டு செய்தவர்கள் மட்டும் ஜோதிடரை ஆலோசனை கேட்க வருவார்கள்.
முற்பிறவியில் கெடுதலான பாவ காரியங்களைச் செய்து அதன் பயனாக இப்பிறவியில் ஒவ்வொரு வாழ்க்கை முறையிலும் தோல்வியைக் கண்டவர்கள் மட்டுமே ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள். கைதேர்ந்த ஜோதிடர்கள் கூட அவர்களுடைய கணிப்புகளை தவறுதலாக செய்த பலங்கள் தோல்வியுறும். ஏனெனில் அவர்கள் அடிப்படியாக உபயோகப்படுத்தும் வழிகளால் உண்மைகளை தவறுதலாகக் அடிப்பையாக உபயோகப்படுத்தும் வழிகளால் உண்மைகளை தவறுதலாகக் கணக்கிடுவதால்தான். அந்த ஜாதகம் திறமையும் நல்லறிவையும் பெற்றவராக நடிக்கும் ஜோதிடர்களால் கணிக்கப்பட்டிருக்கும் அல்லது அந்த துரதிருஷ்டமான கேட்பவர் 16 என்ற என்ணை சொல்லியிருக்கக்கூடும். ஜோதிடர் அதை 60 என்று தவறாக செவி மடுத்து அதன்படி கணக்கிட்டு கடைசியில் தோல்வியடைந்த பலங்களாக இருந்திருக்கக்கூடும். தவறுதலாகக் கேட்டது கேட்பவருடைய கர்மாவின் படி கடவுளுடைய செயலாகும். ஆக எல்லாமே கடவுளின் சக்தியாலே செயல்படுகின்றன. கடவுள் கைதேர்ந்த ஜோதிடர்கள் சொல்லக் கூடிய சரியான வழி முறையைக்காட்டாமலும் அல்லது நல்ல பலங்களைச் சொல்ல விடாமலும் இவருடைய விஷயத்தில் மட்டும் செய்கிறார். ஏனெனில் இவர் ஒரு பெரிய பாவியாயிருப்பதால் கைதேர்ந்த ஜோதிடைகள் மூலம் பலங்கள் கேட்பது முதல் எதிலும் ஏமாற்றத்தையே ஏற்றுக் கொள்பவராக ஆகிறார்.
ஒருவர் எந்த ஜோதிடரையும் ஆலோசனை கேட்கலாம். ஜாதகரும் ஜோதிடரும் நலம் பயக்கக்கூடிய காலத்தை பெற்றிருந்தால் மட்டுமே ஜோதிடர் துல்லியமான பலங்களை கூறமுடியும். கெட்ட காலம் அவர்களுக்கு இருந்தால் ஒவ்வொன்றும் தவறும். அதனால் கேட்பவர் மன அமைதி பெற முடியாது. நாற்காரியங்கள் மட்டுமே நல்ல பலங்களை தரும். நிச்சயமாக நற்காரியங்கள் மட்டுமே மன அமைதியை தருவதால் நல்ல செயல்களையே செய்யவேண்டும் என ஜோதிடம் நினைவூட்டுகிறது. கிருத்துவ ஏடுகளில் எதிலுமே ஜோதிடம் பொய்பிக்கபட்டதே இல்லை. அது எங்கேயும் தடுக்கப்படவில்லை. ஆனால் அதை சரியாக உபயோகிப்பதில் நம்மை எச்சரிக்கை செய்கிறது.
No comments:
Post a Comment