For Read Your Language click Translate

12 May 2014

பஞ்பஞ்ச பட்சி சாஸ்திரம்


பஞ்பஞ்ச பட்சி சாஸ்திரம்
பஞ்ச பட்சி சாஸ்திரம்

ஆய கலைகள் என போற்றப்படும் 64 -கலைகளை யும் விட மேன்மை பெற்ற கலைகளாக விளங்குவது நான்கு கலைகள் ஆகும் அதுவே சரகலை:பஞ்சபட்சி: கெவுளி சாஸ்திரம்: கொக்கோகம்: என்ற நான்கு வித சித்தர் கலைகள் ஆகும்.

இந்த அபூர்வ சாஸ்த்திரங்களை யோகிகள்"ஞானிகள்" முனிவர்கள்"சித்தர்களும் பல்லாயிரம் வருடங்களாக மிகவும் இரகசியமாக பயன்படுத்தியும் பாதுகாத்தும் பயிற்சி அளித்தும் வந்துள்ளனர்....

இவைகளை பல வருடம் தம்முடனே இருந்து தொண்டுகள் செய்து குருவின் திருப்பாதமே கதி என இருந்து வரும் விசுவாசமுள்ள சீடனுக்கு மட்டும் இக் கலைகளின் அரிய இரகசியங்களை உபதேசித்து வந்துள்ளனர்.

இதில் பஞ்சபட்சி சாஸ்திரம் எனப்படும் மகத்துவம் வாய்ந்த இக்கலை ஆதியில் எம்பெருமான் ஈசன் அன்னை மகாசக்தி உமையவளுக்கு உபதேசித்த அபூர்வ கலையாகும்.

தமிழ்க் கடவுளாகிய சுப்பிரமணியர் சூரபத்மனுடன் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் போகவே அவனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு தாயாகிய மகாசக்தியால் சுப்பிரமணியருக்கு உபதேசித்த உன்னத கலையாகும் "பஞ்ச பட்சி சாஸ்திரம்" இதனையே சூரனை வதம்செய்ய முருகனுக்கு அன்னை மகாசக்தி வேல் கொடுத்ததாக சொல்வர்.

சூரனை வதம் செய்து வெகு காலம் சென்ற பின்பு குருமுனி யாகிய அகத்திய முனிவருக்கு முருகப் பெருமான் பஞ்ச பட்சி சாஸ்த்திரத்தை உபதேசம் செய்தார்.


அகத்தியரும் மற்ற சித்தர்களுக்கு உபதேசித்தார் இக்கலையைப் பயின்ற சித்தர்களும் தம்மிடம் உள்ள உண்மையான சீடர்களுக்கு மட்டும் குருவழி உபதேசம் அளித்து வந்துள்ளனர்.


பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஜோதிடக்கலையிலும் மேலான மிகவும் துல்லியமான ஒரு காலக்கணிதம் ஆகும்.இது பஞ்ச பூத சக்திகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆகும்.

நவக்கிரகங்கள்,பன்னிரு இராசிகள்,இருபத்தேழு நட்சத்திரங்கள் ஆக மொத்தம் - 48- இவை அனைத்தையும் ஐந்து பட்சிக்குள் (பறவைகள்)அடக்குவதே இதன் சூட்சும இரகசியமாகும்.

பஞ்சபூதம் எனப்படும் நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் எனப்படும் ஐந்து வித மாபெரும் பிரபஞ்ச சக்திகளை பஞ்சபட்சி எனப்படும் வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில்,என ஐந்து வித பறவைகளாக மாற்றி அமைத்து இக்கலையை உருவாக்கியது இறைவனின் வல்லமையாகும்.

சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே
பட்சி தெரிந்தவனிடம் பகைகொள்ளாதே
பல்லி சொல்பவனிடம் பதில் பேசாதே
என்பது பெரியோர் வாக்குவாகும்.

மேற்கண்டபடி பஞ்சபட்சி தெரிந்தவனை பகைத்துக் கொண்டால் பகைத்தவனை எளிதில் சாய்க்கும் வல்லமை அவனுக்கு உண்டு என்பதால்தான்.இன்றும் தென் தமிழகத்தில் இக்கலையின் இரகசியம் அறிந்த ஆசான்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.இக்கலையினைப் பயன் படுத்தி சேவல் சண்டை, ஆட்டுகிடா சண்டை,சிலம்பம் ,பிரச்சனை வழக்குகள்,போன்றவற்றில் தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் வெற்றி பெற வைத்து வருகின்றனர்.

அதே சமயம் பஞ்சபட்சி கலையின் சூட்சும சக்தியைப் பயன்படுத்தி வாழ்வில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரை வாழ்வில் மிகவும் உச்ச நிலையில் உயர்த்தி பணம்,பதவி,புகழ், ஆகிய வற்றை எளிதில் அடைய வைக்க முடியும்.மேலும் பஞ்சபட்சி நுட்பத்தினை அறிந்தவன் ஜெகத்தை ஆள்வான்,அவனை எவரும் வெல்ல முடியாது என்பது அறுதியிட்ட உண்மையாகும்.

இக்கலையை பயன்படுத்தி மாந்திரீக அஷ்ட கர்மம் ஆடலாம்,செய்தொழில்,காரியங்கள்,வாழ்க்கையில் முன்னேற புதுவித திட்டங்கள் போன்றவற்றை உடனே நடைமுறைக்கு கொண்டு வரவும், தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும் முடியும்.மேலும்

நவக்கிரகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை இக்கலைக்கு உண்டு.நாள் ,திதி ,நட்சத்திரம் ,யோகம் ,கரணம் ,நேரம் ,லக்கினம் ,போன்ற அனைத்து தோஷங்களும் பஞ்சபட்சியினைக் கட்டுப் படுத்த இயலாது.

இன்று இத் தெய்வீகக் கலையின் அதிசூட்சும இரகசியங்கள் அறிந்த ஆசான்கள் வெகுசிலர் மட்டும் தான் உள்ளனர்.

உண்மையான மெய்குருவிடம் சென்று பணிந்து இக்கலையை கற்கும் ஒருவனை பஞ்சபூத சக்திகள் துணை நின்று காக்கும்.அவன் வாழ்வில் மேன்மை பெற்று சீரும் சிறப்புடன் வாழ வகை செய்யும்.அதே சமயம் இக்கலையின் மூலமாக சத்ருக்களை துன்புறுத்தவோ,அழிக்கவோ நினைத்தால் ஏழு ஜென்ம பாவ வினைகள் வந்து சேரும்.

எனவே இந்த தெய்வீகக் கலையினை குருவின் வழியில் சென்று கற்று சித்திபெற்று தான் வாழ்வில் வளம் பெறுவதுடன், தன்னைச்சுற்றி உள்ளோரையும் வாழ்வில் வளம் பெறச்செய்யலாம்.


சித்தர்கள் இயற்றிய பஞ்சபட்சி சாஸ்திரம் பற்றிய நூல்கள் அனைத்தும் பூட்டு மட்டுமே,இவற்றின் "திறவுகோல்"ஒரு சில ஆசான்களிடம் மட்டுமே உள்ளது.அதில் குறிப்பிடப்படும் குருகுலமாக எமது "சித்தர் வேதா குருகுலம்"மட்டுமே இன்று உள்ளது.மேலும் இதன் வெளிவராத பல உண்மை இரகசியங்கள் இங்கு பயிற்றுவிக்கப் படுகின்றது.என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

1 -இன்றைய நடைமுறையில் உள்ள பஞ்சபட்சி சாஸ்த்திர நூல்கள் அனைத்தும் ஒரு மூலநூலைப் பார்த்து பிரதி எடுக்கப் பட்டவை என்ற உண்மை விளக்கம்.

2 -"பஞ்சபட்சி வசிய சித்தி" முறை இரகசியம்.இதனை சித்தி செய்தால் மட்டுமே பஞ்சபட்சி எனப்படும் இந்த பஞ்சபூத சாஸ்த்திரம் நமக்கு கட்டுப் பட்டு பூரணமாக வேலை செய்யும்.

3 -"நங்கிலி" என்னும் மூலிகையின் உண்மை இரகசியம். இதன் தெளிவான நேரடி விளக்கம்.

4 -"பஞ்சபட்சி திறவுகோல் இரகசியம்" இந்த இரகசியத் திறவு கோல் மூலமாகத்தான் சித்தர்கள் பஞ்சபட்சி சாஸ்த்திரத்தின் அந்தர நாழிகை,ஜாமம் கணக்கிடும் முறை,எதிரி பட்சியை கணிப்பது, படுபட்சி அறிவது,வளர்பிறையில்,தேய்பிறையில் பட்சிகள் ஜாமம் மாறும் இரகசியம், போன்றவை களை கணித்தார்கள்.இந்த திறவுகோல் இதுவரை எந்த ஒரு சித்தர் நூலிலும் மற்றும் ஓலைச்சுவடி களிலும் பதிவு செய்யப்பட வில்லை.சித்தர் குருகுல பாரம்பரிய முறையில் நேரடி உபதேசமாக மட்டுமே கொடுக்கப்பட்டு வரப்படுகின்றது.

5 - "சிதம்பர இரகசியம்" என்னும் பஞ்சாட்சர மாறல் இரகசிய பிரயோக முறை விளக்கங்கள்.

6 -பஞ்ச பட்சி சாஸ்த்திர முறையில் அஷ்ட கர்ம பிரயோக முறை இரகசிய விளக்கங்கள்.வசியம்,மோகனம்,தம்பனம், ஆகர்ஷணம்,வித்துவேசனம், போன்றவைகளை அனுபவ முறையில் பிரயோகிக்கும் வழி முறைகள்.

"குருவும் தாரமும் வாய்ப்பது இறைவன் செயல்" என்பதற்கிணங்க சித்தர் கலைகளில் உள்ள சூட்சும இரகசியங்களை கற்பிக்கும் குரு கிடைக்க இறைவனின் பேரருள் வேண்டும்.

தொட்டுக் காட்டாத வித்தை
சுட்டுப் போட்டாலும் வராது என்பதற்கிணங்க
இக்கலையின் அதிநுட்ப இரகசியங்களை குருமுறையில் கற்றுக்கொள்ளலாம்.ஜோதிடர்கள் மற்றும் மாந்திரீகம் தொழில் புரிவோருக்கும் சித்தர் கலை ஆர்வலர்களுக்கும் இக்கலையினைக் கற்க ஒரு அரிய வாய்ப்பு.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சாட்சி சாஸ்திரம்பஞ்சம் – வறுமை நீக்கும்



April4
பஞ்ச பூதங்கள் இந்த உலகத்தை இயக்குகின்றன. பஞ்சபூதங்கள் இறையருளால் இயங்குகின்றன. உலகில் காணப்படுகின்ற ஒவ்வொரு பொருளும், பஞ்சபூதத்தால் அல்லது பஞ்ச பூதத்தின் ஒரு கூறினால் ஆனவையே. உருவாயும், அருவமாயும் பஞ்சபூதமுள்ளது. நிலம், நீர் தீ, காற்று, வெட்டவெளி புறமாகிய அண்டத்தில் இருப்பது போல் பிண்டமாகிய நமது உடலாகவும், உடலுக்குள்ளும் உள்ளது. முன்வினைச் செயல்களால் ஏற்படும் விளைவுகளோ அல்லது சாபம், பாபம், தோணம் இவற்றால் ஏற்படும் சரிவுகளோ, வாழ்க்கை துன்பங்களோ பங்சபூதங்களினால் அல்லது பஞ்சபூத ரூபத்தினால் நம்மைத் தாக்கி துன்புறுத்துகின்றன. பஞ்சபூத இயக்க அசைவுகளை அல்லத அதன் விளைவுகளை நமக்கு சாதகமாக மாற்றிவிட்டால் வாழ்வில் எல்லா நலன்களையும் பெறலாம்.
இப்படி பஞ்ச பூத இயக்கத்தை செயல்பாட்டை நமக்கு சாதகமாக, சுலபமாக மாற்றிட, மனுபவித்தில் வெற்றிபெற, செல்வம் பெருபிட சித்தர்கள் நமக்கு வழங்கிய அற்புதக்கலையே பஞ்சபட்சி சாஸ்திரம்.
பஞ்சபட்சி
பஞ்சபட்சி சாஸ்திர குறியீடாக ஐந்து பறவைகளை வைத்தார்கள். உருவகித்தார்கள். அவையே 1. வல்லாறு    2. ஆந்தை 3. காகம். 4. கோழி 5.மயில் பஞ்சபட்சி சாஸ்திரத்தில் எல்லா செயல்களையும் நமக்கு சாதகமாக்க, அஷ்ட கர்மச் செயல்களும் செய்ய வழிவகை இருந்த போதும் செல்வம், பெருக, பஞ்சம், வறுமை நீங்கிட உள்ள வழியை இங்கு பார்ப்போம்.
பஞ்சபட்சி பார்க்கும் விதம்
நீங்கள் அமாவாசை தொடங்கி, பௌர்ணமிக்கு பிறந்தவரா? அப்படியென்றால் உங்களது பட்சி எது என்று பார்க்கும் முறை இதோ.
வல்லாறு பட்சி
அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகினி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். நட்சத்திரம் தெரியவில்லையா ? கவலையில்லை. ஆ. ஆ ஒள முதல் எழுத்தாய் கொண்டவர்களுக்கு வல்லாறுதான் பட்சியாகும். உதாரணமாக அருணாசலம், கந்தசாமி, கார்த்திகேயன், தங்கசாமி, ராம்குமார், கமலா, தருண், பரமேஸ்வரன், லட்சுமி, லாரன்ஸ் இப்படி அ, ஆ கூட்டெழுத்து முதல் எழுத்தாய் உள்ளவர்கள்.
ஆந்தை பட்சி
திருவாதிரை, புனர்பூகம், பூசம் ஆயில்யம், மகம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆந்தை பட்சிக்கு சொந்தக்காரர்கள். இ.ஈ முதல் எழுத்தாய் உள்ளவர்கள் ஆந்தை பட்சிக்கார்கள். உதாரணமாக கிருஷ்ணன், திருநாவுக்கரசு, பிரமிளா, ரிஷி, ரீட்டா, சிந்த இப்படி இ,ஈ, கூட்டெழுத்தாய் அமைந்தவர்களும் ஆந்தை பட்சிக்காரர்களே
காகம் பட்சி
உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திரக்காரர்கள் காகப்பட்சியினைக் கொண்டவர்கள். பெயரில் முதல் எழுத்து உ.ஊ அமைந்தவர்களும் காகப் பட்சிக்காரர்களே, உதாரணமாக உசேன், உண்ணாமலை, முத்துச்சாமி, ருக்மணி, குமார்.
கோழிப்பட்சி
அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் (தனுசு) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோழிப்பட்சிக்காரர்கள். பெயரின் முதல் எழுத்தாய் எ, ஏ, கொண்டவர்களின் கோழிப்பட்சிக்குரியவர்கள். உதாரணமாக ஏழுமலை, தெட்சிணாமூர்த்தி, பெருமாள், தெய்வானை, மேரி, ஜெயலலிதா.
மயில் பட்சி
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மயில் பட்சியின் ஆட்சி உள்ளவர்கள்.  பெயரின் முதல் எழுத்தாய் ஒ,ஓ கொண்டவர்கள் மயில் பட்சிக்குரியவர்களே.
உதராணமாக கோகுல், கோபால், கோவிந்தம்மாள், ஜோசப் இதுவே தேய்பிறையில் அதாவது பௌர்ணமியில் அடுத்த நாளிலிருந்து அமாவாசைக்கு முதல் நாளுக்குள் பிறந்திருந்தால் எல்லாமே மாறிவிடும். அதன் விவரம் வருமாறு :-
தேய்பிறைக்கு பட்சிகள்
 பட்சிநட்சத்திரம்பெயரின் முதல் எழுத்துபட்சி மூலிகை லட்சமி கபாட்ஷம்
              1.

வல்லாறுதிருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி இ, ஈதகரை
2.
ஆந்தைரேவதிஉ,ஊஜோதிப்புல் (அ)மிளகு சாரணை
3.
காகம்அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் (தனுசு)ஒ,ஓவெள்ளருகு (அ)குப்பைமேனி
4.
கோழிஉத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், திருவாதிரை, புனர்பூசம், பூசம்ஆ, ஆ, ஐ, ஒளநீலசங்குபுஷ்பம் கொடிவேலி
5.
மயில்ஆயில்யம், மகம், பூரம்,  பரணி, கிர்த்திகை, ரோகினி,  மிருக சீரிஷம்எ, ஏவெள்ளெருக்கு(அ) நத்தைசூரி
குறிப்பு:-  மூலிகைகளுக்கு முறையாக காப்புக்கட்டி, சாப நிவர்த்தி, பூஜை முறைகள் முழுமையாக முடிக்கப்பட்டு எடுக்கப்பட்டு மேற்கண்ட மூலிகைகளின் வடக்கு வேர் அல்லது ஆணிவேர்.
வளர்பிறையில்
வல்லாறு பட்சிக்கான மூலிகை – விஷ்ணு கரந்தை (நீல நிற பூ)
ஆந்தை பட்சிக்கான மூலிகை – ஆடையட்டி அல்லது தொட்டாற்சிணுங்கி
காகம் பட்சிக்கான மூலிகை – கருந்துளசி அல்லது கருநொச்சி
கோழி பட்சிக்கான மூலிகை – பவளமல்லி அல்லது அழுகண்ணி
ஆந்தை பட்சிக்கான மூலிகை – ஆடையட்டி அல்லது தொட்டாற்சிணுங்கி
மயில் பட்சிக்கான மூலிகை – பலா மரத்தின் வேர் அல்லது வில்வமர வேர்.
படுபட்சி
மேற்கண்ட மூலிகைகளை எடுக்கும்போது படுபட்சி நாள் தவிர்த்து மற்ற
நாட்களில் எடுத்தால்தான் முழுப்பலன் கிடைக்கும். படுபட்சி நாளில் எடுத்தால்
மூலிகை சிறிதும் பலன் தராது என்பதை அறியவும். படுபட்சி என்றால் அந்த பட்சி
மரணமுற்ற அதாவது பலன் இல்லாத, எதிர்மறை பலன்தரும் நாளாகும்.
படுபட்சி விவரம்

பட்சிவளர்பிறைதேய்பிறை
1.வல்லாறுவியாழன், சனிசெவ்வாய்
2.ஆந்தைஞாயிறு, வெள்ளிதிங்கள்
3.காகம்திங்கள்ஞாயிறு
4.கோழிசெவ்வாய்வியாழன், சனி
5.மயில்புதன்வெள்ளி, புதன்

வளர்பிறை மூலிகை எடுக்க சிறந்த நாள் மற்றும் நேரம்மேற்குறித்த நாட்களில் அந்தந்த பட்சிக்கு உள்ளவர்கள் அந்தந்த நாட்களைத் தவிர்த்து மூலிகைகள் எடுக்க, தொழிற் செய்ய நற்பலன்களைப் பெறலாம்.
பட்சிநாள்நேரம்
1.வல்லாறுவெள்ளிகாலை 6.00 முதல் 6.45
2.ஆந்தைபுதன்காலை 6.00 முதல் 6.30
3.காகம்வியாழன்காலை 6.00 முதல் 6.30
4.கோழிபுதன்காலை 6.00 முதல் 6.48
5.மயில்வியாழன்காலை 6.00 முதல் 6.48
தேய்பிறை மூலிகை எடுக்க சிறந்த நாள் மற்றும் நேரம்
பட்சிநாள்நேரம்
1.வல்லாறுவெள்ளிகாலை 6.00 முதல் 6.45
2.ஆந்தைபுதன்காலை 6.00 முதல் 6.30
3.காகம்வியாழன்காலை 8.23 முதல் 8.42
4.கோழிபுதன்காலை 8.23 முதல் 8.42
5.மயில்வியாழன்காலை 8.23 முதல் 8.42
குறிப்பு
நேரம் சூரிய உதயம் காலைர. 6.00 மணி என கணக்கிடப்பட்டு பலன் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் மூலிகை எடுக்கின்ற நாளில் சூரிய உதயத்தை சரியாகக் கணக்கிட்டு, சரியான நேரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக வல்லாறு பட்சிக்கு உரியவர் மூலிகை எடுக்க வெள்ளிக்கிழமை சூரிய உதயம் காலை 5.47க்கு என இருந்தால் 5.47ல் இருந்து 6.32க்குள் மூலிகை எடுத்துவிட வேண்டும்.
அதேபோன்று மூலிகையை தாயத்து (குளிசம்) உள்ளே அடைத்து மூடும்போது இதேபோல் நேரம் அறிந்து உள் அடைக்கவும். நீங்கள் உங்கள் குல தெய்வத்தையும், உங்கள் இஷ்டதெய்வத்தையும் வணங்கி மூலிகையை எடுத்து தாயத்தில் அடைத்து அணிந்து கொள்ள வறுமை நீங்கி செழுமையான வாழ்க்கை வாழலாம். செல்வ கபாட்சமும், நல்ல வருவாய் வருவதையும் அனுபவத்தில் உணரலாம்.

பஞ்சபட்சி சாஸ்திரம்

March15
பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன?
14 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசை அல்லது பவுர்ணமி வருகிறது.இந்த இருநாட்களிலும் சூரியனும் சந்திரனும் முழுவலிமையடைகின்றன.இந்து ஜோதிடப்படி சூரியன் ஆத்மாக்காரகன் எனவும் சந்திரன் மனக்காரகன் எனவும் அழைக்கப்படுகிறது.
பூமியில் பிறக்கும் மனிதன் 14 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் பிறக்கிறான்.அது வளர்பிறை பிரதமை என வைத்துக்கொள்வோம்.அவனது பிறந்த நட்சத்திரம் அசுவினி என வைத்துக்கொள்வோம்.அவனது அசுவினி வளர்பிறையில் வருவதால் பஞ்சபட்சி சாஸ்திரப்படி அவனது பட்சி ஆந்தை வருகிறது.
ஆந்தையின் குணம் என்ன?
அது இரவில் மட்டுமே வெளிவரும்.ஆக, அந்த மனிதனுக்கு பட்டம்,பதவி எல்லாமே இரவில்தான் கிடைக்கும்.தனது பட்சி ஆந்தை என அவன் அறிந்தால்,அவன் ஒருவரிடம் உதவி கேட்டுச்செல்ல வேண்டிய நேரம் இரவு மட்டுமே! பகலில் அவன் உதவி கேட்டால் அந்த உதவி கிடைக்காது.
அவனுக்குஒரு மாதத்தில் (தமிழ்மாதத்தில்) வளர்பிறைகாலமான 14 நாட்களில் காரியங்கள் வெற்றியடையும்.அந்த 14 நாளில் ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் அவனது பறவை(பட்சி)யான ஆந்தைக்கு மரணபட்சிநாளாக அமைகிறது.அந்த நாளில் அவன் செய்யும் எந்த சுபகாரியமும் படுதோல்வியடையும்.மீதி 13 நாட்களில் ஒவ்வொரு நாளிலும் சுமார் 1 1/2 மணி நேரம் அரசபட்சி நேரமாகிறது.அந்த நேரத்தில் அவன் ஒரு சர்வாதிகாரியை சந்தித்தாலும் காரிய வெற்றி உண்டாகிறது.
இந்த பஞ்சபட்சி நேரத்தைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பயன்படுத்துகிறார்கள்.அவர்களது அரசபட்சிநேரம் பல சமயங்களில் ராகுகாலத்திலோ, எமகண்டத்திலோ யதார்த்தமாக அமைந்துவிடுகிறது.இதைத் தான் அந்த அரசியல்வாதிகள் “நான் ராகு காலத்தில் மனுத்தாக்கல் செய்தேன்” என பகுத்தறிவு பகலவன்கள் போல பீற்றிக் கொள்கிறார்கள்

உரோமரிஷி – பஞ்ச பட்சி சாஸ்திரம் – வரலாறு- பதிவு-3

February15
பஞ்ச பட்சி சாஸ்திரம் – வரலாறு :
பாடல்-1
     “”””””சொன்னாரே சூரனை சம்மாரம்பண்ணி
                                       சுப்ரமண்யக் கல்லோசிவன் உபதேசித்தார்
               விண்ணான சூரனை சம்பாரம்செய்து
                                     வெகுகாலம்சென்றபின்பு குருமுனிக்கு உபதேசித்தார்
               வண்ணான கும்பமுனி பதிணென்பேர்க்கும்
                                     கலந்துஉற வாகியல்லோ உபதேசித்தார்
                நன்னாகநான் வெளியாயப் பட்சிவித்தை
                                       நாட்டினேன் உலகத்தில் நன்றாய்த்தானே””””””
                                                                      ——உரோமரிஷி—பஞ்சட்சி சாஸ்திரம்–
   “”””””சொன்னாரே சூரனை சம்மாரம்பண்ணி
                                சுப்ரமண்யக் கல்லோசிவன் உபதேசித்தார்”””””
கொடுமைகள் பல செய்து , தொல்லைகள் பல கொடுத்து , தீய செயல்கள் பல செய்து , அட்டுழியம் தொடர்ந்து செய்து கொண்டிருந்த சூரனை அழித்து அமைதியை உண்டாக்குவதற்காக பார்வதி தேவி தன் சக்தியெல்லாம் ஒன்றாக திரட்டி தன் அம்சமாக வேலை சுப்பிரமணியருக்குக் கொடுத்தார் .
அக்கிரமங்களை வீழ்த்தி , அமைதியை நிலைநாட்ட , சிவபெருமான் -மகிமையை வார்த்தைகளில் சொல்ல முடியாத மிக உயர்ந்த சாஸ்திரமாகிய பஞ்ச பட்சி சாஸ்திரத்தை  சுப்பிரமணியருக்கு உபதேசித்து வெற்றி பெறுவதற்கான திறவுகோலை அவரிடம் ஒப்படைத்தார் .
இங்கே ஒன்றை நாம் தெரிந்து கொள்வோம் : -
பஞ்சபட்சி சாஸ்திரத்தில் உள்ள வெற்றிக்கான திறவுகோல் என்ன என்று இப்பொழுது பார்ப்போம் .
ஒருவருடைய வாழ்நாளில் நல்ல காலம்  , கெட்ட காலம் என இரண்டு காலங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடைபெறும் .
நல்ல காலத்தில் ஒருவர்  எத்தகைய  தீமையான செயல்கள் செய்தாலும் அவரை எளிதாக யாராலும் வெற்றி கொள்ள முடியாது .அவரை அவ்வளவு எளிதாக யாராலும் தண்டிக்க முடியாது .
ஆனால் அந்த நல்ல நேரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கெட்ட காலம் நடைபெறும் .
கெட்ட காலம் நடைபெறும் அந்த சரியான காலத்தைக் கண்டுபிடித்து பயன்படுத்தினால் எவ்வளவு பலசாலியான எதிரியாக இருந்தாலும் , சக்திகள் பல பெற்ற எதிரியாக இருந்தாலும் , எதிரியை வீழ்த்தி வெற்றி பெற்று விடலாம் .
இந்த நேரங்களின் சூட்சும ரகிசயங்களை விரிவாக உரைப்பது தான் பஞ்ச பட்சி சாஸ்திரம் .
இத்தகைய சிறப்பு வாய்ந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தைத் தான் சிவபெருமான் முருகனுக்கு உபதேசித்தார் .
”””விண்ணான சூரனை சம்பாரம்செய்து
                    வெகுகாலம்சென்றபின்பு குருமுனிக்கு உபதேசித்தார்””””””
சுப்பிரமணியர்  பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சூட்சும ரகசியங்களை அறிந்து, அதனை சரியான காலத்தில் பயன்படுத்தி சூரனை அழித்து வெற்றி கொண்டார் .
பஞ்சபட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தி வெற்றி கண்ட சுப்பிரமிணயர், சூரர்களை அழித்து , ஒழித்து வெகுகாலம் ஆன பின்பு உலகத்திலேயே உயர்ந்த சாஸ்திரங்களில் ஒன்றாகக் கருதப்படும் பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
முனிவர்களுக்கு எல்லாம் தலைவராகிய ,
முனிவர்களுக்கு எல்லாம் குருவாகிய ,
அகத்திய முனிவருக்கு சுப்பிரமணியர் உபதேசித்தார் .
      “”””””வண்ணான கும்பமுனி பதிணென்பேர்க்கும்
                                   கலந்துஉற வாகியல்லோ உபதேசித்தார்”””””
சித்தர்களின் தலைவராகிய அகத்திய முனிவர் ,
சித்தர்களின் குருவாகிய அகத்திய முனிவர் ,
18 சித்தர்கள் என்று சொல்லப்படக் கூடிய ,
                                 1 நந்தி                        11 காலங்கி
                                2 அகத்தியர்                          12 அழுகண்ணர்
                                 3 புண்ணாக்கீசர்                13 பாம்பாட்டி
                                 4 புலத்தியர்                         14 அகப்பேய்ச் சித்தர்
                                5 பூனைக்கண்ணர்           15 தேரையர்
                                6 இடைக்காடர்                  16 குதம்பைச் சித்தர்
                                7 போகர்                                 17 சட்டநாதர்
                               8 புலிப்பாணி
                              9 கருவூரார்
                              10 கொங்கணர்
இவர்களில் சிலருக்குப் பதில் உரோமரிஷி , கும்பமுனி , மச்சமுனி , கோரக்கர் என்ற பலரையும் கூட்டித் தொகையைப் பதினெட்டாகப் பல பட்டியல்களையும் கொள்வர் .
18 சித்தர்கள் என்று அழைக்கப்பட்ட மேலே சொல்லப்பட்டவர்களுக்கு அகத்திய முனிவர்  உபதேசம் பண்ணியதோடு நின்று விடவில்லை. அவர்களுடன் ஒன்றாக கலந்து இருந்து ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தும் பொழுது ஏற்படக் கூடிய விளைவுகளையும் ,
கிடைக்கக் கூடிய பலன்களையும் ,
பெறக் கூடிய சக்திகளையும் ,
அவர்களுக்கு வெளிப்பட செயல்படுத்திக் காட்டி செயல் விளைவுத் தத்துவத்துடன் விளக்கி உபதேசித்தார் .
  “””””””நன்னாகநான் வெளியாய்ப் பட்சிவித்தை
                                நாட்டினேன் உலகத்தில் நன்றாய்த்தானே””””””
இவ்வாறாக பல்வேறு நிலைகளைக் கடந்து வந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
யாரும் அறியக்கூடாது என்று மறைத்து வைக்கப் பட்ட பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
இந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் வாழ்க்கையில் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் பாடல்களாக்கி இந்த உலகத்திற்கு வெளிப்படையாக அளித்திருக்கிறேன் என்கிறார்  உரோம ரிஷி .
பாடல்- 2
      “””””””நன்றென்றுஉலகமதில் சொன்னேன் சூட்சம்
                                    நழுகாதே சத்தியமாய் எண்ணிக்கொண்டு
                குன்றென்ற கோபத்தால் கொடுமைநினையாதே
                                  குலநாசம் பிறப்பதரிது குலைக்கும்ஜென்மம்
               வண்டென்ற பட்சியல்லோ மதுவையுண்டு
                                  வகையதுபோல் இதினுடைய சூட்சங்கண்டு
                தொண்டென்ற தொண்டர்கள்போல் உலகமீதில்
                                   தோணாமல் வெகுநினைவாய் வாழ்வார்பாரே””””””””
                                                              ———உரோமரிஷி—பஞ்சபட்சி சாஸ்திரம்—
   “”””””””நன்றென்றுஉலகமதில் சொன்னேன் சூட்சம்
                                  நழுகாதே சத்தியமாய் எண்ணிக்கொண்டு””””””””
இந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் , சூட்சும ரகசியங்களை எல்லாம் உள்ளடக்கி , பாடல்களாக்கி,  பஞ்சபட்சி சாஸ்திரத்தை சொன்னேன் .
நல்லோரை நசுக்க வேண்டும் என்றோ ,
பகைத்தோரை அழித்து இன்பம் காண வேண்டும் என்றோ ,
தீய செயல்களில் ஈடுபட்டு உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்றோ ,
அறியாமையில் வாடும் நெஞ்சங்களை அழ வைக்க வேண்டும் என்றோ ,
நினைத்து பஞ்சபட்சி சாஸ்திரத்தை தவறான வழிகளுக்கு பயன்படுத்தாமல் ,
நேர்மையான எண்ணம் கொண்டு ,
சத்திய வழியில் நடந்து ,
பயன்படுத்தி வெற்றி காண வேண்டும் என்கிறார்  உரோமரிஷி .
 “”””””குன்றென்ற கோபத்தால் கொடுமைநினையாதே
                                   குலநாசம் பிறப்பதரிது குலைக்கும்ஜென்மம்”””””””””
தனக்கு எதிராக தகாத செயல்கள் பல செய்து
தன்னை துன்பத்தில் ஆழ்த்தியவரின் ,
தன்னை மனம் கலங்க வைத்தவரின் ,
தன்னை விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு சென்றவரின் ,
செய்கையால் தன் நிலையில் மாற்றம் அடைந்து , தடுமாற்றத்திற்கு உட்பட்டு, கோபாவேசத்துடன்
உணர்ச்சி வயப்பட்டோ , சிந்தனை தடுமாறியோ , கோபநிலைக்கு தள்ளப்பட்டோ , மனம் தன் நிலையில் இல்லாமல் அவருக்கு எதிராக பஞ்சபட்சி சாஸ்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது .
அப்படி தவறாக பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தினால் நமது குடும்பம் சிதறிப்போகும் .
கர்மவினை நம்மை ஜென்ம , ஜென்மமாக பின் தொடர்ந்து வந்து நமது குலத்தை நாசம் செய்யும் .
ஓவ்வொரு ஜென்மத்திலும் நமக்கு வாழ்க்கையை துன்பம் நிறைந்ததாக கொடுத்து நம்மை வருத்தப்பட வைக்கும் என்கிறார்  உரோமரிஷி .
“”””””வண்டென்ற பட்சியல்லோ மதுவையுண்டு
                                 வகையதுபோல் இதினுடைய சூட்சங்கண்டு””””
பஞ்சபட்சி சாஸ்திரத்தை பயின்று , அதன் சூட்சும ரகசியங்களை அறிந்து, அதன் பலன்களை உணர்ந்து, அதன் மகிமைகளை தெரிந்து ,அதன் சக்திகளை அடைந்த பின் ,
புகழ் பெற வேண்டும் என்ற ஆசையில் அதனை வெளி உலகுக்கு வெளிப்படுத்தாமல் அமைதியாக இயல்பான வாழ்க்கை வாழ வேண்டும் .
வண்டு என்னும் பறவையானது மலரிலுள்ள தேனை சுவைத்து விட்டு அந்த ஆனந்தத்தில் தள்ளாடிக் கொண்டு செல்வது போல்
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சக்தியை அடைந்த பின் அந்த ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிய நிலையிலேயே இருக்க வேண்டுமே ஒழிய ,
தன் சக்தியை அனைவரும் அறியும் படி படம் பிடித்துக் காட்டக் கூடாது என்கிறார்  உரோமரிஷி .
”””””தொண்டென்ற தொண்டர்கள்போல் உலகமீதில்
                             தோணாமல் வெகுநினைவாய் வாழ்வார்பாரே””””””””
வருத்தப்பட்டு கண்ணீர்  சிந்தி வருபவருக்கு கண்ணீரைத் துடைக்கும் கையாகவும் ,
துன்ப வடுக்களால் காயம் பட்டவருக்கு மருந்தாகவும் ,
திக்கு தெரியாதவருக்கு திசை காட்டும் வழிகாட்டியாகவும் ,
இருளில் தத்தளிபவருக்கு வெளிச்சத்தைக் காட்டும் ஒளியாகவும் ,
வாழ்க்கையைத் தவற விட்டவருக்கு புது வாழ்வை தரும் இன்பமாகவும் ,
இந்த உலகத்தில் இருந்து கொண்டு சமுதாயத்திற்கு தான் யார்  என்பதையும், தன் சக்தி எத்தகையது என்பதையும் ,வெளிப்படுத்தாமல்
இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கு தொண்டுகள் பல செய்து மற்றவர்களின் இன்பத்தில் தான் இன்பத்தைக் கண்டு வாழ வேண்டும் என்கிறார்  உரோமரிஷி.
 பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சிறப்புகளையும் வரலாற்றையும் பார்த்த நாம் அடுத்து பஞ்ச பட்சி சாஸ்திரத்தை யாருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
யாருக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது என்பதை பற்றிப் பார்ப்போம் .

உரோமரிஷி-பஞ்ச பட்சி சாஸ்திரம்-சிறப்புகள்-பதிவு-2

February15
பாடல் – 3 :
           “””””பத்தான இந்தநுhற்கிணை யேயில்லை
                                    பண்பான தனங்கோடி ஈந்தாலுந்தான்
                  முத்தான சாஸ்திரத்தை வெளிவிடாதே
                                    முன்னோர்கள் மனதடக்கம் செய்துவைப்பார்
                  வித்தான பொருள்களெல்லாம் இதிலேதோன்றும்
                                    வேதாந்த சுழிமுனையு மிதுவேயாகும்
                 கொத்தான அடிகொடுத்து குடிவரைக்கும்
                                     கூறினேன் வாழ்வதற்காய்க் கூறினேனே””””””
                                        ————— உரோமரிஷி —– பஞ்சபட்சி சாஸ்திரம்–
      “””””பத்தான இந்தநுhற்கிணை யேயில்லை
                                      பண்பான தனங்கோடி ஈந்தாலுந்தான்
             முத்தான சாஸ்திரத்தை வெளிவிடாதே””””””
உலகத்தில் பொது அறிவை ஊட்டும் எத்தனை விதமான புத்தகங்கள் வந்தாலும் ,
அறிவைத் திறந்து ஊக்கம் ஊட்டும் புத்தகங்கள் வந்தாலும் ,
ஆன்மீகத்தை விளக்கும் புத்தகங்கள் வந்தாலும் ,
ஞானத்திற்கான வழியைக் காட்டும் புத்தகங்கள் வந்தாலும் ,
முக்திக்கான வித்தை தன்னுள் கொண்ட புத்தகங்கள் வந்தாலும் ,
நான் யார்  என்பதை வெளிக்கொணரும் புத்தகங்கள் வந்தாலும் ,
ஆதி , அந்தம் சூட்சுமங்களை தன்னுள் அடக்கிய பல்வேறு புத்தகங்கள் வந்தாலும் ,
இந்த உலகத்தில் எத்தகைய புத்தகங்கள் வந்திருந்தாலும் ,
இந்த உலகத்தில் எத்தகைய புத்தகங்கள் வந்துகொண்டிருந்தாலும் ,
இந்த உலகத்தில் எத்தகைய புத்தகங்கள் இனி வந்தாலும் ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்திற்கு இணையான இணை என்று சொல்ல முடியாத புத்தகம் என்ற ஒனறு கிடையாது .
இத்தகைய சிறப்பு வாய்ந்த ,
அதி சூட்சும ரகசியங்களை தன்னுள் கொண்ட பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
ஞானத் திறவுகோலை தன்னுள் கொண்ட பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
கோடிக் கண்க்கில் பணத்தை அள்ளிக் கொடுக்கிறேன் , எனக்கு பஞ்ச பட்சி சாஸ்திரத்தை கற்றுக் கொடு என்று யார்  கேட்டாலும் சொல்லிக் கொடுக்கக் கூடாது .
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் அணு அளவு ரகசியங்களை சொல்லக் கூடாது என்கிறார்   உரோமரிஷி .
               ””””””””முன்னோர்கள் மனதடக்கம் செய்துவைப்பார்”””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை அறிந்து , பயன்படுத்தி , வாழ்க்கையில் வெற்றி கண்டு , அதன் பலனை அனுபவித்து,  சுவைத்த ,நம்முடைய முன்னோர்கள்
தான் அனுபவித்து  சுவைத்த பலன்களை இந்த உலகத்தில் உள்ளவர்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி கண்டு இன்புற்று வாழ வேண்டும் என்ற நோக்கில்,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் அதி சூட்சும ரகசியங்களை எல்லாம் தாங்கள் இயற்றிய பாடல்களில் மறைமுகமாக எழுதி வைத்துள்ளனர் .
“”””””வித்தான பொருள்களெல்லாம் இதிலேதோன்றும்”””””
வித்து என்றால் மூலம் என்று பொருள் .
அதைப் போல மரத்திற்கு வித்து என்பது விதை .
உலகியல் நிலை என்று எடுத்துக் கொண்டாலும் ,
அருளியல் நிலை என்று எடுத்துக் கொண்டாலும் ,
இத்தகைய இரண்டு வேறுபட்ட நிலைகளுக்கும்  மூல வித்தாக இருந்து அதாவது
வாழ்க்கையில் துன்பம் நீக்கி இன்புற்று வாழவும் ,
ஞானத்திற்கான திறவுகோலை பெற்று பிறப்பு , இறப்பு அற்று வாழவும் ,
தேவையான மூல ரகசியங்களை தன்னுள் கொண்ட வித்தாக இருக்கிறது.
அதாவது வாழ்க்கையை இன்பமாக வாழவும் ,ஞானத்தை அடையவும் தேவையான மூல ரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது பஞ்ச பட்சி சாஸ்திரம் .
               “”””””””வேதாந்த சுழிமுனையு மிதுவேயாகும்”””””””
வேதாந்தம்
வேதம் +   அந்தம்  = வேதாந்தம்
வேதம் என்றால் பஞ்சபூதங்கள் என்று பொருள் .
அந்தம் என்றால் முடிவான நிலை , மூலநிலை என்று பொருள் .
பஞ்ச  பூதங்களுக்கு முடிவான நிலையாக , மூல நிலையாக உள்ளது எது என்று கண்டபோது வேதாந்தம் உண்டாயிற்று .
மனிதன் நிலம் , நீர் , நெருப்பு , காற்று , விண் என்ற ஐந்து பஞ்சபூத பிரிவுகளுக்குள் உலகம் , இயக்கமண்டலம் , உயிர்கள் அனைத்தும் அடங்கக் கண்டான் . இந்த ஐந்து பஞ்ச பூதங்களைப் பற்றிய தொகுப்பு தான் வேதம் .
மனிதன் வேதத்தில் விண்ணின் கூட்டான பஞ்ச பூதங்களை உணர்ந்து கொண்டான் .
விண் என்பது இயக்க நிலையின் முதல் கட்டம் என்பதை அறிந்து கொண்டான் .
அது இருப்பு நிலையிலிருந்து பிரிந்தது என்பதை உணர்ந்து கொண்டான் .
ஆகவே மனிதன் இருப்பு நிலையை ஆதி என்றும் , அனாதி என்றும், பிரம்மம் என்றும் , கடவுள் என்றும் , இறைவன் என்றும் ,பூரணம் என்றும் ,பல்வேறு பெயர்களை அதற்கு சூட்டி வேதத்திற்கு முடிவாக முதற்பொருளாக கண்ட அறிவின் விளக்கத்துக்கு வேதாந்தம் என்று பெயரிட்டான் .
உலகத் தோற்ற ரகசியங்களைத் தன்னுள் கொண்ட வேதாந்தத்தை நாம் உணர்ந்து கொள்வதற்கு பஞ்சபட்சி சாஸ்திரம் ஒரு நுழைவு வாயிலாக இருக்கிறது .
       “””””””கொத்தான அடிகொடுத்து குடிவரைக்கும்
                                        கூறினேன் வாழ்வதற்காய்க் கூறினேனே””””””
 பஞ்சபட்சி சாஸ்திரத்தின் சக்திகள் , மகிமைகள் , நன்மைகள் ஆகியவற்றை வார்த்தைகளால் ரகசியமாகவும் , சூட்சுமமாகவும் கூறியிருக்கின்றேன் .
இந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் படித்து பயன்பெற்று சகலவிதமான இன்பங்களையும் , வெற்றிகளையும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக கூறினேன் என்கிறார்  உரோமரிஷி .
பாடல் – 4 :
             “”””””பட்சிவித்தை ஒருபோதும் பழுதேயில்லை
                                         பாராமல் போனதினாலே பழுதேயாகும்
                      கொச்சிவித்தை பலிப்பதுதான் ஏனோலே
                                        குறிகுணங்கள் நேரமங்கே குறைவிதாலே
                    வச்சிவித்தை கருக்குருவும் கண்டபேர்க்கு
                                        வணங்குமடா பட்சிவித்தை மயக்கமில்லை
                    நச்சிவித்தை யிதற்குநிகர்  ஒன்றுமில்லை
                                         நாட்டிலேயித் தொழிலைச் சொல்லொண்ணாதே””””””
                                                ———–உரோமரிஷி—-பஞ்சபட்சி சாஸ்திரம்–
     “”””””பட்சிவித்தை ஒருபோதும் பழுதேயில்லை
                              பாராமல் போனதினாலே பழுதேயாகும்””””””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தி எந்த காரியத்தைச் செய்தாலும் அந்த காரியம் தோல்வியில் முடியாது .
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன் படுத்தி செய்த செயல் தோல்வியில் முடிந்தது ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன் படுத்தி செய்த செயல் கவலையைத் தந்தது ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப்  பயன் படுத்தி செய்த செயல் இழப்புகளைத் தந்தது,
என்று யாராவது சொல்வார்களேயானால் அவர்,
பஞ்ச பட்சி சாஸ்திரத்திற்குரிய நேரங்களை சரியாக அறிந்து இருக்கவில்லை என்று பொருள்.
பஞ்ச பட்சி சாஸ்திரத்திற்குரிய நேரங்களை சரியாக அறிந்து , சரியான காலத்தில் , சரியான உபகரணங்களைக் கொண்டு , சரியான முறையில் பயன்படுத்த தெரியவில்லை என்ற காரணத்தினாலேயே பஞ்ச பட்சி சாஸ்திரம் தவறாகுமே ஒழியே ,
முறைப்படி ஒழுங்காக பஞ்ச பட்சி சாஸ்திரம் பயின்று பயன்படுத்தினால் தவறு ஏற்பட வாய்ப்பு இல்லை என்கிறார்  உரோமரிஷி .
   “””””””கொச்சிவித்தை பலிப்பதுதான் ஏனோலே
                                  குறிகுணங்கள் நேரமங்கே குறைவிதாலே”””””””
காலங்கள் நம்மை துன்பச் சகதியில் தள்ளி விட்டாலும் ,
நேரங்கள் நம்மை அழித்து முன்னேற்றத்தை தடுத்தி நிறுத்தினாலும் ,
நம் மேல் பகை கொண்ட , வெறுப்பு கொண்ட , வஞ்சக நெஞ்சம் கொண்ட, மனிதர்களால் செய்யப்படும் மந்திரம் , யந்திரம் போன்றவை பலித்து நம்மை நம் வாழ்க்கையை துயரக் கடலில் தள்ளி விடக் காரணம்,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முறையாக அறிந்து பயன்படுத்தத் தெரியாததே காரணம் என்கிறார்  உரோமரிஷி .
””””””வச்சிவித்தை கருக்குருவும் கண்டபேர்க்கு
                              வணங்குமடா பட்சிவித்தை மயக்கமில்லை”””””””
பஞ்ச பட்சி சாஸ்திரம் சரியான முறையில் இயங்க வேண்டுமென்றால் அதன் மையக் கருவான சில விஷயங்கள் தெரிந்து இருக்க வேண்டும் அதில் முக்கியமானவை :
1 மௌனவித்தை எனப்படும் பேசாமந்திரம் தெரிந்து இருக்க வேண்டும் .
2 சரம் பார்த்தல் முறையாக பயன் படுத்தத் தெரிந்து இருக்க வேண்டும் .
3 மூலிகையின் அவசியமும் , ரகசியமும் தெரிந்து இருக்க வேண்;டும் .
4 மந்திரம் , யந்திரம் , தந்திரம் உபயோகம் தெரிந்து இருக்க வேண்டும்
இவைகளைத் தவிர வேறு சில முக்கியமான விஷயங்களும் தெரிந்து இருக்க வேண்டும் .
பஞ்சபட்சி சாஸ்திரத்தின் ரகசியங்களை எல்லாம் ஐயம் இன்றி தெரிந்து கொண்டு முறையாக பயன்படுத்தி யார்  ஒருவர்  வெற்றிகொள்ளும் முறைகளை அறிந்து இருக்கிறாரோ ,
அவர்  எந்த காலத்தில் எத்தகைய செயல்களைச் செய்தாலும் , அவருக்கு பஞ்சபட்சி சாஸ்திரம் வெற்றியையே தரும் தோல்வியைத் தராது என்கிறார்  உரோமரிஷி .
””””” நச்சிவித்தை யிதற்குநிகர்  ஒன்றுமில்லை
                              நாட்டிலேயித் தொழிலைச் சொல்லொண்ணாதே””””””
மனிதனின் தவறான செய்கைகளினால் நம் இன்பங்கள் குழி தோண்டி புதைக்கப்பட்டாலும் ,
காலம் நம் வாழ்க்கையை நசுக்கி எள்ளி நகையாடினாலும் ,
துன்பத்தின் துயர ரேகை நம் முகத்தில் படர்ந்தாலும் ,
தோல்வியே நம் வாழ்க்கையின் தாரக மந்திரமானாலும் ,
கிரகங்களின் பார்வை நம்மை எரித்தாலும் ,
பிரபஞ்ச விதிகள் நம்மை நசுக்கினாலும் ,
கர்மவினையின் பாதிப்புகள் நம்மை அலைக்கழித்தாலும் ,
கடவுளின் கருணைப் பார்வை நமக்கு இல்லாவிட்டாலும் ,
இவைகள் அனைத்தையும் களைந்து , இவற்றின் தாக்கத்தைத் தனித்து, இன்பத்தை நமக்கு அளித்து ,
வெற்றி என்னும் எட்டாக்கனியை நாம் சுவைப்பதற்கு கொடுக்கக் கூடிய ஒரு சாஸ்திரம் உலகத்தில் உண்டு என்றால் அந்த சாஸ்திரம் பஞ்ச பட்சி சாஸ்திரம் மட்டும் தான் என்கிறார்  உரோமரிஷி.
இத்தகை சிறப்பு வாய்ந்த வாழ்க்கையை வளமாக்க தேவையான அதி அற்புதமான சூட்சும ரகசியங்களைத் தன்னுள் கொண்ட சிறப்பு மிக்க பஞ்சபட்சி சாஸ்திரத்தை யாருக்கும் சொல்லிக் கொடுக்காதே,
சொல்வது பாவம் என்கிறார்  உரோமரிஷி .

பஞ்சபட்ஷி

February15
பஞ்சபட்ஷி
“உன்னை யொழிய ஒருவரையும்
நம்புகிலேன் பின்னை யொருவருவரை
யான் பின்செல்வேன் – பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை
தீர்த்தருளும் வேலப்பா செந்தில் வால்வே . “

பஞ்ச பட்சிகள் குறித்து ஓர் விளக்கம்
“பஞ்ச பட்சிகள்” என்றால் ஐந்து பட்சிகள் எனப் பொருள்படும். அவை வல்லூறு, ஆந்தை, காகம்,கோழி.மயில் என்பனவாகும்.
“வல்லூறு” என்பது வானில் பறக்கும் ஓர் இன்ப்பறவையாகும்.இதன் இன்மான கருடன் திருமால் வாகனமாகும்.
“ஆந்தை” என்ற பறவையை வடநாட்டில் திருமால் இருப்பிட்மாக மதித்துப் போற்றி வருகின்றர்.
“காகம்” என்பது சனீஸவரனின் வாகனம் என இந்துக்கள் போற்றி வணங்குகின்றனர்.
“கோழி” என்பது முருக பெருமானின் கொடியில் உள்ளதாகும்.”செவப் கொடியோன்” எனத் தமிழ் மக்கள் முருகப் பெருமானை போற்றி வணங்குகின்றனர்.
“மயில்” என்பது முருகப் பெருமானின் வாகனமாகும்.
மேற்கூறிய ஜந்து வகையான பறவைகளைக் கொண்டு நமது முன்னோர்கள் இந்தப பஞ்ச பட்சி சாஸ்திரத்தை உருவாக்கியுள்ளனர் என்பது குற்ப்பிடத்தக்கது. ஒவொருவரின் பிறந்த நட்சத்திரப்படி  ஒவ்வொரு  நாளிலும் அவருக்கு உகந்த  நேரத்தை அறிவதற்கான கணிதம் இது!  அரசு  ஊண் நேரம் நடக்கும் பொழுதில்  செயலாற்றினால் வெற்றி நிச்சயம்! மற்ற  நேரம் பகுதிகளை விலக்கிட வேண்டும். ஏழு நாட்களிலும் பகல் நேர ஐந்து பகுதிகள்,இரவு நேர பகுதிகளை அட்டவணையாக தயாரித்து வைத்துக் கொண்டு மிகுந்த பயன் பெறலாம்! அதாவது ஜோதிடம் ,கைரகை, அகஸ்தியர் ஆருடம்,சகாதேவர் ஆருடம்,பிரசன்னம்,பல்லி சாஸ்திரம்,அங்க சாஸ்திரம்,தேங்காய் ஜோதிடம்,சீதை,ராமர் சக்கரம்,வெற்றிலை பாக்கு ஜோதிடம்,வாக்கு கேட்டல் போன்ற பலவிதமான சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவக தந்து சென்றுள்ளனர்! மேற்கூறிய சாஸ்திரங்களில் மிகவும் சிறந்தது ஜோதிடக் கலையாகும். அடுத்து,கை ரேகை சாஸ்திரம் ஆகும். மற்றதெல்லாம் ஆருட சாஸ்திரம் போல் கூறப்பட்டுள்ளது! மேற்கூறிய சாஸ்திரங்கள் போக,பஞ்ச சாஸ்திரம் என்றொரு கனிதத்தையும் நன்றாக ஆராய்ச்சி செய்து நமக்குத் தந்து சென்றுள்ளனர்.  இதை “புள்ளியல் சாஸ்திரம்” என்றும்  கூருவது உண்டு.வல்லூறு, ஆந்தை, , காகம் ,கோழி ,மயில் 5 பட்சிகள்  ஒவ்வொரு நாளும் தங்களது தொழிலை ஒழுங்காக செய்து வருகின்றன.ஒரு மனிதன் பிறந்த நட்சத்திரத்தை வைத்து,அவனுடைய பட்சி என்ன என்று தீர்மானிக்கப்படுகின்றது. ஒரு மனிதனது பட்சி அரசு ,ஊண் தொழிலை செய்து கொண்டிருக்கும் காலத்தில் அவன் எடுக்கும் முயற்சில் யாவும்  வெற்றியில் முடியும். துயில், சாவு தொழிலை செய்யும் பொழுது அவனுடைய முயற்சிகள் தோல்வியில் முடியும். “நடை” தொழிலை செய்யும் பொழுது அவனுடைய முயற்சி இழுபறியாக இருக்கும் என அறிய வேண்டும். பொதுவக, “பஞ்ச பட்சி சாஸ்ததிரம் ” நல்ல காரியம் ஆரம்பிக்கும், வீடு கட்டுவதற்கும்,கிரகபிரவேசத்திற்கு நல்ல நாள் குறிக்கும்போது பேருதவியாக இருக்கும் எனலாம். ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது போலவே, இந்த சாஸ்திரத்திற்கும் திச-புத்தி-அந்திர காலங்கள் குறிக்கப்பட்டுள்ளன.ஆனால் ஜாதகப்பலன் அளவிற்கு இந்து சாஸ்திரம் வேலை செய்யாது என்பதை வாசகர்கள் உணர வேண்டும்.அதாவது,ஒருவருக்கும திசா புத்திகள் நல்லபடியாக  அமைந்து, பட்சி சாஸ்திரம் திசா-புத்தி சாவு-துயிலாக இருந்தால்,அவரது வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாது! அதே சமயம் பட்சி சாஸ்திர – புத்திகள் அரஇ ஊணாக இருந்தால், அவரது வாழ்வில் மிகவும் சிறப்பான நல்ல பலங்கள் நடைபெறும் என்பது எமது ஆய்வில் உண்மையாகும். அகஸ்தியர், உரோம  ரிஷி,கும்பமுனி,காகபுசுண்டர்,போகர் போன்ற பல ரிஷிகள் “பஞ்ச  பட்சி சாஸ்திரத்தை” தங்களது சுவடி வாயிலாக வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகிகது! மேலும், “திருடு போன பொருள் கிடைக்குமா? காணாமல் போன மாடு திரும்பி வருமா? காணா போன பையன் திரும்பி வருவானா?” போன்ற ஆருடம் சம்பந்தமான கேள்விகளுக்கும் இந்த சாஸ்திரம் பெரிதும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திரத்திற்குரிய பட்சிகள்:
அசுவனி, பரனி, கிருத்திகை,ரோகிணி, மிருகசீரிடம் ஆகிய ஐந்து ந்ட்சத்திரத்திற்கும் பட்சி வல்லூறு, திருவாதிரை, புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம் ஆகிய ஆறு ந்ட்சத்திரத்திற்கும் பட்சி  ஆந்தை ,உத்திராடம் ,அஸ்தம், சித்திரை,சிவாதி, விசாகம் ஆகிய ஐந்து நட்சத்திரத்திற்கும் பட்சி காகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரத்திற்கும் பட்சிகோழி, திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி ஆகிய ஆறு நட்சத்திரத்திற்கும் பட்சி மயில். இதை ஜென்ம நட்சத்திரத்தைக் கொண்டு பார்க்க வேண்டும். ஜென்ம நட்சத்திரம் தெரியாதவர்கள் பெய்ரின் முதல் எழுத்துப்படி அறிய வேண்டும்.
.
வளர்பிறை பட்சி       
நட்சத்திரம்   
தேய்பிறை பட்சி
வல்லுறுஅக்வனி, பரணி, கிருத்தி, ரோஹி, மிருகசிரிஷ்மயில்
ஆந்தைதிருவாதி, புளர்பூச, பூசம், ஆயில்ய, மகம், பூரம்கோழி
காகம்உத்திரம், அஸதம்,சித்திரை,சுவாதி, விசாகம்காகம்
கோழிஅனுஷம்,கேட்டை,மூலம்,பூராட்ம்,உத்ராடம்ஆந்தை
மயில்திருஓண, அவிட்ட, சதயம்,பூரட், உத்திரட், ரேவ.,வல்லுறு
ஒவ்வொரு கிழமையிலும் படுபட்சிகள் வெவ்வேறாக இருக்கும்.அத்துடன் வளர்பிறைக்கும் தேற்பிறைக்கும் கூட த்தியாசமாக இருக்கும்.அவை வருமாறு : நட்சத்திரத்திற்குரிய படுபட்சியுள்ள நாள்களில் பிரயாணம் செல்வது சுப காரியங்கள் செய்வது போன்றவைற்றை விலகுவது நல்லது.

பஞ்ச பட்சி

February15
ஜோதிடத்தில் பஞ்ச பட்சி சாஸ்திரம் உள்ளது. காக புஜண்டர் போன்ற சித்தர்களும் பஞ்ச பட்சி சாத்திரம் பற்றி எழுதி உள்ளனர்.
பட்சி பறப்பது போல நம்முடைய எண்ண அலைகள் பறந்து சென்று , உணர்வுகளைத் தூண்டும் காரணத்தால், பட்சி என்று வைத்தார்கள்.
குறிப்பாக சொல்வதென்றால் – மரமோ – மிருகமோ – தலமோ அல்ல!
அரசாட்சி , சாவு (அ) மரணம் , துயில் , ஊண், நடை என்று பெயர் வைத்தனர்.
அரசாட்சி என்பது நடைமுறையில் செயல்படுதல்.
உ-ம் : தூங்குதல் , சாப்பிடுதல்
உ-ம் : தூங்குதல் , சாப்பிடுதல்.
துயில் – அரூப சக்தி – உயிர் உண்டு உடல் இல்லை ; ஒன்று மற்றொன்றுடன் ஐக்கியமாகுதல்.
ஊண் – பரிணாம வளர்ச்சி மற்றும் உருவ மாற்றங்கள்.
நடை – வளர்ச்சியின் ஆரம்பம் நடைமுறையில் ஏற்படும் சூழ் நிலைகளின் மாற்றங்கள்.
சாவு – உயிரற்ற திடப்பொருள்.
உதாரணம்:
விதை
ஒரு விதையை மண்ணில் புதைத்தால் அதை தூக்கம் எனக் கொள்ள வேண்டும்;
விதை என்கிற ஜடப்பொருள் மண்ணில் புதைந்து ( மற்றொன்றுடன் ஐக்கியம் ஆவதால் இதனை துயில் (அ) தூக்கம் (அ) நித்திரை என்பர்.
இந்த விதைக்கு தண்ணீர் ஊற்றுதல் போன்ற உயிர் வளரும் தன்மைக்கு செய்வது நடை என்பர்.
விதை வளர்ந்து செடியாக மாறி வாழ்வதற்காக காற்றை சுவாசிக்க ஆரம்பித்தல் ஊண் என்பர்.
செடி வளர்ந்து ( சூரிய வெப்பத்தால் பச்சையம் பெற்று பூரண உயிரோட்டம் ஏற்பட்டு பூ, காய்,, கனி என பயன்பட்டால் அது அரசு.
குண மாற்றங்கள், உணர்வுகளின் தாக்கங்கள் எப்போது எப்படி எல்லாம் மாறும் , அதனால் நன்மை உண்டா இல்லையா என்றெல்லாம் அறிவியலார் போல ஆராய்ந்து பகுத்து சாத்திரமாக வகுத்தனர்.
நடைமுறையில் , இந்த அளவிற்கு பகுத்து அறியும், செயல் படும் தன்மை, மெய்ப் பொருள் விளக்கத்தினை அறிவதற்கும் உணர்வதற்கும், பகுத்தறிவுள்ள மனிதன் ஈடுபடுவதில்லை.
புராண, இதிகாசங்களில் கூறப்படும் கருத்துக்களின் மெய்ப்பொருளை எத்தனை பேர் உணர்ந்து, தன் வாழ்க்கை நடைமுறைகளை மாற்றி இருக்கின்றனர் என்றால், ஒருவருமில்லை…..
காரணம் – நடைமுறை வாழ்க்கை நல்ல வாழ்க்கை வாழ விரும்புபவன், அதற்கான வழிமுறைகளைக் கடைபிடிப்பதில்லை!
நன்றி !

No comments:

Post a Comment