For Read Your Language click Translate

08 May 2014

ஆன்லைனில் வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க! சரிபார்க்க!

ஆன்லைனில் வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க! சரிபார்க்க!
வெளி நாடுகளில் வாழும் அன்பு சகோதர சகோதரிகளே! வணக்கம். ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்ட நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் வாக்கு சீட்டு மட்டுமே! நாம் வெளி நாட்டில் வாழ்ந்தாலும், அந்நிய செலாவணி மூலம் நம் நாட்டின் பொருளாதாரம் சிறந்து விளங்க நம்மால் ஆன பங்களிப்பை ஆற்றி வருகிறோம்! வாக்களிப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை.

கடந்த மாதம் ஏதோ நம் மத்திய அரசு வரும் தேர்ல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் முறை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. எனவே ஒவ்வொரு தமிழரும் நம் ஊரில் நம்முடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? இல்லையெனில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளுங்கள்!

கீழே காணும் இந்த URL -ஐ காப்பிசெய்து ADDRESS BAR -இல் பேஸ்ட்  செய்து உங்கள் மாவட்டம், தொகுதி முதலியவற்றை தேர்ந்தெடுத்து, உங்கள் ஊர், தெரு, குடும்ப உறுப்பினர்களின் வாக்காளர் பெயர், உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என சரிபார்த்து சேர்க்கலாம்.
 
http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp

சப்போர்ட் செய்யவில்லையெனில் தமிழ் எழுத்துருக்களை தரவிறக்கம் செய்து பின் சரி பார்க்கவும். புதிதாய் விடுபட்ட பெயர்களை சேர்க்க படிவம் 6 , ஏதேனும் எழுத்து பிழை பெயரிலோ, முகவரியிலோ இருப்பின் அவற்றை சரிசெய்ய படிவம் 8 , திருமணமாகி வேறு ஊருக்கு சென்றாலோ, வேறு ஊருக்கு மாறுதலாகி சென்றாலோ, முகவரி, தொகுதி மாற்றம் செய்ய படிவம் 8 A பயன் படுத்தி விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்ப படிவங்களை பெற இங்கே சொடுக்கவும்! அல்லது இந்த URL -ஐ காப்பிசெய்து ADDRESS BAR -இல் பேஸ்ட் செய்து விண்ணப்பிக்கலாம்!
 
http://www.elections.tn.gov.in/forms.htm
 
அறிய இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்!

தமிழராய், இந்தியராய் பிறந்ததில் பெருமை கொள்வோம்! வாழ்க தமிழகம்! வளர்க பாரதம்!

நன்றி! குண சேகரன்!

No comments:

Post a Comment