For Read Your Language click Translate

Follow by Email

07 May 2014

கொத்தமல்லி முதல் ஸ்ட்ராபெர்ரி வரை!

கொத்தமல்லி முதல் ஸ்ட்ராபெர்ரி வரை!

Photo: கொத்தமல்லி முதல் ஸ்ட்ராபெர்ரி வரை!

வாசலில் காய் வண்டிக்காரரும், கூடையில் காய் கொண்டு வரும் பெண்ணும், மூலைக்கடை அண்ணாச்சியும் கொசுறாக தந்த கொத்தமல்லித்தழையை இப்போது கிராம் கணக்கில் துல்லியமாக எடை போட்டு பன்னாட்டுக் கடைகளில் வாங்குகிறோம். கீரை என்ற பெயரில் வாடி வதங்கிப்போன ஒரு பச்சைக் கட்டை தலையில் கட்டியதை அறியாமல், வீட்டுக்கு வந்து கழுவியதும் அதுவும் சாயம் போகும் கெமிக்கல் உலகில் வாழ்கிறோம்.

எல்லா விஷயங்களுக்கும் மாற்று இருக்கும் இவ்வுலகில் இதற்கு இல்லாமலா போகும்? அபார்ட்மென்ட்டோ தனிவீடோ - ஒரு கையளவு இடம் இருந்தால் கூட அதில் அருமையாக அழகுத்தோட்டம் அமைக்கலாம். கொத்தமல்லி முதல் மல்லிகை வரை, தக்காளி முதல் ஸ்ட்ராபெர்ரி வரை நாமே வளர்க்கலாம்.

கிச்சன் கார்டன் அமைக்க

இதற்கு முதல் தேவை கொஞ்சம் ஆர்வம்... கொஞ்சம் முயற்சி... கொஞ்சம் திட்டமிடல்... அவ்வளவுதான்! என்னதான் சூப்பர் மார்க்கெட்டில் கிலோ கணக்கில் காய்கள் வாங்கினாலும் நாமே வளர்த்த இரண்டு தக்காளியின் சுவை வேறு எதிலும் வராதே. அது மட்டுமல்ல... தோட்டம் என்பது மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய உதவும் சூப்பர் விஷயம்! கிச்சன் கார்டன் என்பது பிளாஸ்டிக் கப்புகளிலும் தண்ணீர் பாட்டில்களிலும் ஏதோ ஒரு செடி வளர்த்து கொசு உற்பத்தியை பெருக்குவதல்ல.

உண்மையில் பெட் பாட்டில்களை வேறு விதமாக பயன் படுத்த முடியும். பாரம்பரிய முறையில் உரம் முதல் அனைத்தும் நாமே தயாரிக்க முடியும். அதிக நேரமோ பணமோ தேவையில்லை. அபார்ட்மென்ட் வாசிகள் மொட்டை மாடியை பயன்படுத்தலாம். குழுவாக இணைந்து தினம் ஒருவர் என்ற முறையில் கூட பராமரிக்கலாம். குழந்தைகளையும் ஈடுபடுத்தலாம்.

என்னென்ன தேவை?

கிச்சன் கார்டனில் அடிப்படைத் தேவைகள் மிகக் குறைவே. மண் தொட்டிகள் எப்போதுமே நல்லது. மண்ணுக்கு நீரை உறிஞ்சி குளிர்ச்சியை தக்க வைக்கும் தன்மை உள்ளதால் செடிகளின் பசுமைக்கு அது கேரண்டி. மண் தொட்டிகளின் கலரில் பிளாஸ்டிக் தட்டுகள் கிடைக்கின்றன. அதன் மேல் தொட்டி வைத்தால் தரை பாழாகாது. மொட்டை மாடிக்கு ஏற்ற சிமென்ட் தொட்டி, மண் தொட்டி, மற்றும் ‘யுவி ட்ரீட்’ செய்த செடி வளர்க்கும் பைகள் கிடைக்கின்றன. தேங்காய் மட்டை, மண், மண்புழு உரம், மூடியில் துளை இட்ட சிறிய பெட் பாட்டில், விதை போன்றவற்றை ரெடி செய்த பிறகு, விதைகளை நர்சரியில் வாங்கலாம்.

மண் மரம் மழை மனிதன்!

இருக்கிற இத்தினியூண்டு இடத்தில் எப்படி ஏராளமாக வளர்ப்பது, தண்ணீர் சிக்கனம், எந்தச் செடியை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றியெல்லாம் அடுத்து வரும் இதழ்களில் விளக்க இருக்கிறார் கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கச் செயலர் பா.வின்சென்ட். இவர் 20 ஆண்டு கால இந்தியன் வங்கி பணிக்குப் பின் விருப்ப ஓய்வு பெற்றவர். சிறுவயது முதல் இவரது பொழுதுபோக்கே அலங்காரச் செடிகள் வளர்ப்பதுதான். சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான இவர், இப்போது வெட்டிவேரை பிரபலப்படுத்துவதையும் நாற்றுகள் உற்பத்தி, இயற்கை விவசாயம், இயற்கை இடுபொருள்கள், மழைநீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு, மருத்துவச் செடிகள் பற்றி வலைப்பூவில்  (maravalam.blogspot.in) பகிர்வதையும் ஆர்வமுடன் செய்து வருகிறார்.வாசலில் காய் வண்டிக்காரரும், கூடையில் காய் கொண்டு வரும் பெண்ணும், மூலைக்கடை அண்ணாச்சியும் கொசுறாக தந்த கொத்தமல்லித்தழையை இப்போது கிராம் கணக்கில் துல்லியமாக எடை போட்டு பன்னாட்டுக் கடைகளில் வாங்குகிறோம். கீரை என்ற பெயரில் வாடி வதங்கிப்போன ஒரு பச்சைக் கட்டை தலையில் கட்டியதை அறியாமல், வீட்டுக்கு வந்து கழுவியதும் அதுவும் சாயம் போகும் கெமிக்கல் உலகில் வாழ்கிறோம்.

எல்லா விஷயங்களுக்கும் மாற்று இருக்கும் இவ்வுலகில் இதற்கு இல்லாமலா போகும்? அபார்ட்...மென்ட்டோ தனிவீடோ - ஒரு கையளவு இடம் இருந்தால் கூட அதில் அருமையாக அழகுத்தோட்டம் அமைக்கலாம். கொத்தமல்லி முதல் மல்லிகை வரை, தக்காளி முதல் ஸ்ட்ராபெர்ரி வரை நாமே வளர்க்கலாம்.

கிச்சன் கார்டன் அமைக்க

இதற்கு முதல் தேவை கொஞ்சம் ஆர்வம்... கொஞ்சம் முயற்சி... கொஞ்சம் திட்டமிடல்... அவ்வளவுதான்! என்னதான் சூப்பர் மார்க்கெட்டில் கிலோ கணக்கில் காய்கள் வாங்கினாலும் நாமே வளர்த்த இரண்டு தக்காளியின் சுவை வேறு எதிலும் வராதே. அது மட்டுமல்ல... தோட்டம் என்பது மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய உதவும் சூப்பர் விஷயம்! கிச்சன் கார்டன் என்பது பிளாஸ்டிக் கப்புகளிலும் தண்ணீர் பாட்டில்களிலும் ஏதோ ஒரு செடி வளர்த்து கொசு உற்பத்தியை பெருக்குவதல்ல.

உண்மையில் பெட் பாட்டில்களை வேறு விதமாக பயன் படுத்த முடியும். பாரம்பரிய முறையில் உரம் முதல் அனைத்தும் நாமே தயாரிக்க முடியும். அதிக நேரமோ பணமோ தேவையில்லை. அபார்ட்மென்ட் வாசிகள் மொட்டை மாடியை பயன்படுத்தலாம். குழுவாக இணைந்து தினம் ஒருவர் என்ற முறையில் கூட பராமரிக்கலாம். குழந்தைகளையும் ஈடுபடுத்தலாம்.

என்னென்ன தேவை?

கிச்சன் கார்டனில் அடிப்படைத் தேவைகள் மிகக் குறைவே. மண் தொட்டிகள் எப்போதுமே நல்லது. மண்ணுக்கு நீரை உறிஞ்சி குளிர்ச்சியை தக்க வைக்கும் தன்மை உள்ளதால் செடிகளின் பசுமைக்கு அது கேரண்டி. மண் தொட்டிகளின் கலரில் பிளாஸ்டிக் தட்டுகள் கிடைக்கின்றன. அதன் மேல் தொட்டி வைத்தால் தரை பாழாகாது. மொட்டை மாடிக்கு ஏற்ற சிமென்ட் தொட்டி, மண் தொட்டி, மற்றும் ‘யுவி ட்ரீட்’ செய்த செடி வளர்க்கும் பைகள் கிடைக்கின்றன. தேங்காய் மட்டை, மண், மண்புழு உரம், மூடியில் துளை இட்ட சிறிய பெட் பாட்டில், விதை போன்றவற்றை ரெடி செய்த பிறகு, விதைகளை நர்சரியில் வாங்கலாம்.

மண் மரம் மழை மனிதன்!

இருக்கிற இத்தினியூண்டு இடத்தில் எப்படி ஏராளமாக வளர்ப்பது, தண்ணீர் சிக்கனம், எந்தச் செடியை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றியெல்லாம் அடுத்து வரும் இதழ்களில் விளக்க இருக்கிறார் கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கச் செயலர் பா.வின்சென்ட். இவர் 20 ஆண்டு கால இந்தியன் வங்கி பணிக்குப் பின் விருப்ப ஓய்வு பெற்றவர். சிறுவயது முதல் இவரது பொழுதுபோக்கே அலங்காரச் செடிகள் வளர்ப்பதுதான். சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான இவர், இப்போது வெட்டிவேரை பிரபலப்படுத்துவதையும் நாற்றுகள் உற்பத்தி, இயற்கை விவசாயம், இயற்கை இடுபொருள்கள், மழைநீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு, மருத்துவச் செடிகள் பற்றி வலைப்பூவில் (maravalam.blogspot.in) பகிர்வதையும் ஆர்வமுடன் செய்து வருகிறார்.