For Read Your Language click Translate

06 May 2014

முதலுதவிக்கு வீட்டில் இருக்கு மருந்து

anybody house first (money), whether or not there should definitely be a first-aid box.
ஒவ்வொருத்தர் வீட்டிலும் முதல் (பணம்) இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ஒரு முதலுதவி பெட்டி இருக்க வேண்டும். அதில் காய்ச்சல்  தலைவலி தீடீரென்று ஏற்படும் வெட்டுக்காயம், தீக்காயம், அல்லது குழந்தைகள் குறும்பாக விளையாடும் போது ஏற்படும் காயங்கள் போன்றவற்றிற்கு  தேவையான மருந்து மாத்திரைகள் பேண்ட்எய்ட், காட்டன், தைலம், ஆயின்மெண்ட், டிங்சர், டெட்டால், ஆன்டிபயாடிக் பவுடர் போன்றவற்றை  வைத்திருத்தல் அவசியம்.

குழந்தைகள் இருக்கும் வீட்டில் குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். ஆதலால் வீட்டிலுள்ள பினாயில், பூச்சி மருந்து, எறும்புப் பொடி,  போன்றவற்றை, குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு பூச்சி ஏதேனும் கடித்து, கடித்த இடத்தில் பரவிய விஷத்தை  நீக்க உடனடியாக வெங்காயத்தை நறுக்கி தேய்த்தால் விஷம் இறங்கும்.

தேனீ கொட்டிவிட்டால் எருக்கம் பாலைக் கடிவாயில் வைத்தால் வலியின் தன்மை குறையும். பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் கடித்து விட்டால் கடித்த  இடத்திற்கு மேலும் கீழம் ஒரு ஈரத்துணி அல்லது கயிறை வைத்து நன்கு இறுக்கமாக கட்டி பிறகு மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்கவும்.

குளவி கொட்டிவிட்டால் அந்த இடத்தை தண்ணீரால் நன்கு கழுவிய பின் காலமைன் லோஷனைத் தடவினால் வலி குறையும். காலில் அட்டைப்பூச்சி  ஒட்டிக்கொண்டால் அதன் மேல் சிறிது உப்பையோ, புகையிலையோ போட்டால் பூச்சி உடனே கீழே விழுந்து விடும்.

No comments:

Post a Comment