For Read Your Language click Translate

07 May 2014

தமிழா நீ ஒரு சகாப்தம்- தமிழ் வழிக் கல்வியில் படித்தவன்



Photo: ஒரு மனிதனுக்கு அவன் தாய்மொழியை தவிர வேறு மொழிகள் தெரியவில்லை என்று சொன்னால் அது அவனுக்கு அவமானம் இல்லை, மாறாக அவனது தாய்மொழியே அவனுக்கு தெரியவில்லை அல்லது தாய்மொழியில் பேச அவன் விரும்பவில்லை என்று சொன்னால் அது தான் அவனுக்கு அவமானம். ஆனால் அந்த அவமானத்தை நம்மில் பலர் கௌரவமாகவும், பெருமையாகவும் நினைக்கின்றனர். இது மிகவும் வெட்கக்கேடானது. எவன் ஒருவன் தமிழில் பேச தயங்குகிறானோ அவன் தமிழனாக இருக்க தகுதியற்றவன்.

இந்த உலகில் நம் தமிழ்மொழிக்கு ஈடான வரலாற்று பெருமையோ, இலக்கிய புலமையோ வேறெந்த மொழிக்கும் கிடையாது. அப்படிப்பட்ட தமிழ்மொழியை பேச தயங்குபவர்களை தமிழின் அருமை புரியாத மொழிக் குருடர்கள் என்றே நான் கூறுவேன். தமிழனாக பிறந்த, தமிழையே உயிர் மூச்சாக்கக் கொண்ட அனைவரும் பெருமைப்பட வேண்டும். அந்த பெருமையை இந்த உலகமும் அறிய தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம் தமிழ்மொழிக்காக பங்காற்றிட வேண்டும். நிச்சயமாக ஒரு நாள். இந்த உலகம் தமிழ்மொழியின் அருமையை புரிந்து கொண்டு நம் தமிழ்மொழியை உலக மொழியாக ஏற்றுக்கொள்ளும் காலம் வரும்....



கலக்கலான தகவலுக்கு தமிழா நீ ஒரு சகாப்தம்..................................


https://www.facebook.com/tamilaneorusahaptam

இந்த செய்தியை பகிருங்கள்




தமிழ் வழிக் கல்வியில் படித்தவன் திடீர் என்று வேறு மொழிக்கு மாறும் போது எப்படி இருக்கும் என்றுத் தெரியுமா?

கண்கள் இரண்டையும் யாரோ இறுக்கமாக கட்டி காட்டில் தள்ளி விட்டது போல் இருக்கும். திக்கு தெரியாத காட்டில் கட்டை அவிழ்த்து விட்டு அனைத்தையும் தன் மொழியில் புரிந்துக் கொண்டு படித்தவர்களே துணிச்சலாய் நடந்து பாதையைக் கடந்து வென்று இருக்கிறார்கள்.

ஆரம்பக் கல்வியை தாய் மொழியில் படித்து பின் வேறு மொழிக...்கு மாறியவனால் மட்டுமே எதைக் கேட்டாலும் தாய் மொழியிலும் விளக்கி , வேறு மொழியிலும் விளக்க முடியும்.ஆங்கில வழியில் படித்தவனிடம் இந்த எண்ணை வகுத்து ஈவு மீதி எழுது என்று சொல்லிப் பாருங்கள்.ஈவு என்றால் என்னவென்று கேட்பான்.

# முகத்தை தொங்கப் போட்டு நான் தமிழ் மீடியம் படித்தவன் என்றுச் சொல்லாதீர்கள்.தலை நிமிர்ந்து நான் தாய் மொழியில் பயின்றவன் என்றுச் சொல்லுங்கள்.



ஒரு மனிதனுக்கு அவன் தாய்மொழியை தவிர வேறு மொழிகள் தெரியவில்லை என்று சொன்னால் அது அவனுக்கு அவமானம் இல்லை, மாறாக அவனது தாய்மொழியே அவனுக்கு தெரியவில்லை அல்லது தாய்மொழியில் பேச அவன் விரும்பவில்லை என்று சொன்னால் அது தான் அவனுக்கு அவமானம். ஆனால் அந்த அவமானத்தை நம்மில் பலர் கௌரவமாகவும், பெருமையாகவும் நினைக்கின்றனர். இது மிகவும் வெட்கக்கேடானது. எவன் ஒருவன் தமிழில் பேச தயங்குகிறானோ அவன் தமிழனாக இருக்க தகுதியற்றவன்.
இந்த உலகில் நம் தமிழ்மொழிக்கு ஈடான வரலாற்று பெருமையோ, இலக்கிய புலமையோ ...வேறெந்த மொழிக்கும் கிடையாது. அப்படிப்பட்ட தமிழ்மொழியை பேச தயங்குபவர்களை தமிழின் அருமை புரியாத மொழிக் குருடர்கள் என்றே நான் கூறுவேன். தமிழனாக பிறந்த, தமிழையே உயிர் மூச்சாக்கக் கொண்ட அனைவரும் பெருமைப்பட வேண்டும். அந்த பெருமையை இந்த உலகமும் அறிய தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம் தமிழ்மொழிக்காக பங்காற்றிட வேண்டும். நிச்சயமாக ஒரு நாள். இந்த உலகம் தமிழ்மொழியின் அருமையை புரிந்து கொண்டு நம் தமிழ்மொழியை உலக மொழியாக ஏற்றுக்கொள்ளும் காலம் வரும்....






No comments:

Post a Comment