For Read Your Language click Translate

08 May 2014

என்னென்ன மரங்களை வளர்க்கலாம்?மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?புதிய தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்


அபாய எல்லையில் பயணிக்கிறது பூமி! -அதிர்ச்சியூட்டும் விஞ்ஞானி!

”பூமி மீது இதுவரை இல்லாத அளவிற்கு கார்பன்-டை-ஆக்சைடு (கரியமில வாயு) அடர்த்தி அதிகமாகி இருக்கிறது.அதிலும் இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா ஜப்பான் ஹிரோஷிமா நகரம் மீது வீசிய அணுகுண்டு போன்று 4 அணுகுண்டு வீசினால் எவ்வளவு வெப்பம் வெளி வருமோ அந்தளவுக்கு வெப்பம் உயருகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆய்வுகளில் மனிதர்கள் செய்யும் தவறு...களால் தான் பூமி வேகமாக வெப்பமடைகிறது என விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். சுருக்கமாக சொல்வதானால் தற்போது அபாய எல்லையில் பயணிக்கிறது நம் பூமி”

//கார்பன்-டை-ஆக்சைடை எப்படி குறைப்பது என்றால் மிக பிரமாண்டமாக 1000 லெட்சம் கோடிகள் செலவு செய்து ஒரு தொழிற்ச்சாலை அமைத்து அதனை ஆக்ஸிஜனாக மாற்ற முடியும்...
அதை நீயும் நானும் எளிமையாக செய்யலாம்....
ஒரு செடியை நட்டு மரமாக வளர்த்துவிடு அது பார்த்து கொள்ளும்


என்னென்ன மரங்களை வளர்க்கலாம்?

மணற்பாங்கான கரையோர நிலங்களில் வளர்க்கக் கூடியவை : பின்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டு வாதுமை.
சிறுமரங்கள் : புங்கன், சரக்கொன்றை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, ரெட் கார்டியா, செண்பகம், கறிவேப்பிலை

மரச்சாலை மரங்கள் : வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி




பழவகை மரங்கள் : நாவல், நெல்லிக்காய், பலாமரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளா, சபோட்டா, இலந்தை, சீதாப்பழம், மாதுளை, அரநெல்லி, கரம்போலா, பிம்ப்ளீ

பறவைகளை வசீகரிக்கும் மரங்கள் : கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, நெய்பழம், கம்பளி, இலுப்பை, ஸபோட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி



அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள் : பூந்திக்கொட்டை, பூமருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆஃப் தி ஃபாரெஸ்ட், மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, கேஸியா ஜாவா, ஆத்துப் பூவரசு, நெருப்புக் கொன்றை

*அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.




எப்போது நடலாம்?

மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது. பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வையிலான மழைக்காலம் இதற்கு ஏற்றது. தாழ்வான பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால், இம்மாதங்கள் ஏற்றவை. மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.



மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?





வனத்துறை அலுவலகங்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் விசாரித்து வாங்கலாம். வனத்துறை தோட்டங்களில் குறைந்த விலையில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும். இல்லையேல் நர்சரிகளில் நீங்கள் விரும்பும் மரக்கன்றுகளை வாங்கி நடலாம். மரக்கன்றுகளை வாங்கும் இடத்திலேயே, அவற்றை பராமரிப்பது, உரமிடுவது குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.







வாடிப்பட்டி பகுதியில் மரத்தில் அமைக்கப்பட்ட நர்சரி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு விரிவடைந்து வருகிறது. பலன்தரும் மரங்கள் நர்சரி கார்டன்களில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இன்று அதன் தொழில்நுட்பம் மாறி, மரங்களிலே நர்சரி அமைக்கும் நடைமுறை பிரபலமாகி வருகிறது. எடுத்துக்காட்டாக, முருங்கை மரத்தில் கிளைகளில் முன்பகுதிகளில் (மென்மையான) அந்த மேல்பகுதி மரப்பட்டைகளின் தண்டுப்பகுதியை மட்டும் காயப்படுத்தாமல், மேல் தோல்பகுதியை எடுத்துவிடுகின்றனர்.

பின், தேங்காய் நார் கழிவை ...அதன் ஈரப்பதத்தோடு தோல் உரிக்கப்பட்ட பகுதியில் வைத்து பாலிதீன் காகிதம் (டிரான்ஸ்பேரண்ட் பேப்பர்) சுற்றி மேலும் கீழும் கட்டப்படுகிறது. வெளியில் இருந்து பார்த்தால் தேங்காய் கழிவு, தெளிவாக தெரியும்.40 நாட்கள் மரத்தில் பதியம் போடப்படுகிறது. வேர் வெளியே வருகிறது. பதியம் போட்ட மேல் பகுதியில் இருந்து மேல் பகுதியை வெட்டி எடுத்து விடுகின்றனர். இது நர்சரிக்கு அனுப்பப்படுகிறது. நர்சரியில் இது மறுபடியும் பாக்கெட்டில் பதியம் செய்யப்படுகிறது. ஓரிரு நாளில் இது விற்பனைக்கு தயாராகி விடுகிறது. இவ்வாறு தோட்டத்தில் பதியம் செய்யப்படுவதற்கு தோட்ட உரிமையாளருக்கு ஒரு பதியத்திற்கு ரூ. 5 வீதம் வழங்கப்படுகிறது. இதனால் தோட்டக்காரருக்கும், இதை விற்பனை செய்பவருக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது. இப்புதிய தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். மேலும் விபரங்களுக்கு, அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை அணுகலாம்.

.





90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்த...ு விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.

* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.

தொடர்புக்கு :
www.chepparaivalaboomigreenworld.com
நன்றி:சா. சின்னதுரை (புதிய தலைமுறை பயிற்சிப் பத்திரிக்கையாளர்)
 
Photo: Our Nature Protect Us Where Ever We Go ... So Please Protect Our Nature ...
நகரங்களில் மரம் வளர்ப்பு!




“நாங்கள் மண் தரையே கண்ணில் படாத கான்க்ரீட் காடுகளில் வசிக்கிறோம். நாங்கள் என்ன மரத்தை வளர்ப்பது?” என்று நகரவாசிகள் கேட்கலாம். உங்கள் வீட்டுக்கு முன்பு கார், பைக் விட கொஞ்சமேனும் இடம் நிச்சயம் இருக்குமில்லையா? அது போதும். கொத்தனார் ஒருவரை கூப்பிட்டு 2க்கு 2 அளவில் குழிதோண்டி, முருங்கை வளர்க்க ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தித்தர சொல்லுங்கள். பெரிய பராமரிப்பு தேவையின்றி அதுபாட்டுக்கு வளரும் மரம் முருங்கை மரம். தெரிந்தவர்களிடம் ஒரு கிளை வாங்கி வந்து நட்டு வைத்தால், அது பாட்டுக்கு வளர்ந்து நிற்கும். இரண்டு வருடங்களில் ஐநூறு, அறுநூறு காய்கள் காய்த்துத் தொங்கும். முருங்கை கீரையும் போனஸ்.


Photo

கலப்பு மரம் வளர்ப்பு

தற்போதைய சூழலில் வேலையாள் பற்றாகுறை தண்ணீர் பற்றாகுறை போன்ற பிரசினைகளால் விவசாயிகள் மத்தில் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, இருந்தபோதும் சம்சரிகளிடம் சிறு தயக்கம் மரம் வைத்தால் 25, 30 ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமே அதுவரை வருமானத்திற்கு என்ன செய்வது என்ற குழப்பம், இதற்க்கு தீர்வு தான் கலப்பு மரம் வளர்ப்பு

ஒரே வகையான வயது அதிகம் உடைய மரங்களை வைத்துவிட்டு பலவருடம் காத்திருப்பதைவிட வெவ்வேறு வயதுடைய மரங்களை கலந்து நடுவதன்மூலம் சில ஆண்டு...களுக்கு ஒரு முறை வருமானம் கிடைக்கும், வரப்பு ஓரங்களில் தேக்கு, வேங்கை, மகோகனி, ரோஸ்வூட், மாஞ்சியம், ஆச்சா போன்ற மரங்களையும் இடையில் குமிழ், மலைவேம்பு போன்ற மரங்களையும் 15 அடி இடைவெளில் நடவேண்டும் இடைப்பட்ட பகுதில் சிங்குனிய சவுக்கு 5 அடி இடைவெளில் நடவேண்டும். இவ்வாறு நடும்போது சவுக்கு 4 ஆண்டுகளிலும் குமிழ் 8 ஆண்டிலும் வருமானம் தரும், குமிழ் மருதாம்பு மரம் என்பதால் அடுத்த 7 ஆண்டுகளில் இரண்டம்முரையாக அறுவடைக்கு வரும், தேக்கு, வேங்கை, மகோகனி போன்ற மரங்களை 20, 25 ஆணுகளுக்குபின் அறுவடை செய்யலாம்.

நடவு முறையை பார்போம்

மரம் நடும் இடத்தை இரண்டுசால் உளவு ஓடியபின் 2 * 3 அடி அளவுள்ள குழிகளை 5 அடிக்கு 5 அடி இடைவெளில் எடுத்து அதில் தொளுவுரமிட்டு சிலநாள் ஆரபோடவேண்டும், அதன்பின் தரமான நாற்றுகளை வாங்கி நடவு செய்யலாம், வரப்பு ஓரங்களில் தேக்கு, வேங்கை, மகோகனி, ரோஸ்வூட், மாஞ்சியம், ஆச்சா போன்ற மரங்களை 15 அடிக்கு 15 அடி இடைவேளிலும், உட்புறம் 15 அடிக்கு 15 அடி இடையில் குமிழ், மலைவேம்பு போன்ற மரங்களை சில வரிசைகள் நடவேண்டும் இடைப்பட்ட பகுதில் சிங்குனிய சவுக்கு 5 அடிக்கு 5 அடி (படத்தில் உள்ளதுபோல்) இடைவெளில் நடவேண்டும். இம்முறையில் மரம் வளர்க்கும் போது நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருமானம் கிடைப்பதுடன் வேலையாள் பற்றாகுறை தண்ணீர் பற்றாகுறை போன்ற பிரசினைகளும் வருவதில்லை. 
Photo: கலப்பு மரம் வளர்ப்பு
 
தற்போதைய சூழலில் வேலையாள் பற்றாகுறை தண்ணீர் பற்றாகுறை போன்ற பிரசினைகளால்  விவசாயிகள் மத்தில் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, இருந்தபோதும் சம்சரிகளிடம் சிறு தயக்கம் மரம் வைத்தால் 25, 30 ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமே அதுவரை வருமானத்திற்கு என்ன  செய்வது என்ற குழப்பம், இதற்க்கு தீர்வு தான்  கலப்பு மரம் வளர்ப்பு

ஒரே வகையான  வயது அதிகம் உடைய மரங்களை வைத்துவிட்டு பலவருடம் காத்திருப்பதைவிட வெவ்வேறு வயதுடைய மரங்களை கலந்து நடுவதன்மூலம் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வருமானம் கிடைக்கும், வரப்பு ஓரங்களில் தேக்கு, வேங்கை, மகோகனி, ரோஸ்வூட், மாஞ்சியம்,  ஆச்சா போன்ற மரங்களையும் இடையில் குமிழ், மலைவேம்பு  போன்ற மரங்களையும் 15 அடி இடைவெளில் நடவேண்டும் இடைப்பட்ட பகுதில் சிங்குனிய சவுக்கு 5 அடி இடைவெளில் நடவேண்டும். இவ்வாறு நடும்போது சவுக்கு 4 ஆண்டுகளிலும் குமிழ் 8 ஆண்டிலும் வருமானம் தரும், குமிழ் மருதாம்பு மரம் என்பதால் அடுத்த 7 ஆண்டுகளில் இரண்டம்முரையாக அறுவடைக்கு வரும்,  தேக்கு, வேங்கை, மகோகனி போன்ற மரங்களை 20, 25 ஆணுகளுக்குபின் அறுவடை செய்யலாம்.

நடவு முறையை பார்போம்

மரம் நடும் இடத்தை இரண்டுசால் உளவு ஓடியபின் 2 * 3 அடி அளவுள்ள குழிகளை 5 அடிக்கு 5 அடி இடைவெளில் எடுத்து அதில் தொளுவுரமிட்டு சிலநாள் ஆரபோடவேண்டும், அதன்பின் தரமான நாற்றுகளை வாங்கி நடவு செய்யலாம், வரப்பு ஓரங்களில் தேக்கு, வேங்கை, மகோகனி, ரோஸ்வூட், மாஞ்சியம்,  ஆச்சா போன்ற மரங்களை 15 அடிக்கு 15 அடி இடைவேளிலும், உட்புறம் 15 அடிக்கு 15 அடி  இடையில் குமிழ், மலைவேம்பு  போன்ற மரங்களை சில வரிசைகள் நடவேண்டும் இடைப்பட்ட பகுதில் சிங்குனிய சவுக்கு 5 அடிக்கு 5 அடி (படத்தில் உள்ளதுபோல்) இடைவெளில் நடவேண்டும். இம்முறையில் மரம் வளர்க்கும் போது  நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருமானம் கிடைப்பதுடன் வேலையாள் பற்றாகுறை தண்ணீர் பற்றாகுறை போன்ற பிரசினைகளும் வருவதில்லை.  

மரம் வளர்ப்போம் வளம்பெறுவோம்... 
http://maram2020.blogspot.in/2013/12/blog-post.html
மரம் வளர்ப்போம் வளம்பெறுவோம்...





No comments:

Post a Comment