For Read Your Language click Translate

Follow by Email

10 May 2014

மருத்துவ குணமுள்ள மரங்கள்

Monday, 3 December 2012

 ஞானமரம் மகிழமரம்: இதை ஞானமரம் என்று புகழ்வார்கள். இதற்கு திருவண்ணாமலை மரம் என்ற வேறொரு பெயரும் உண்டு. வியாழக்கிழமை இந்த மரத்தைக் குருவாக எண்ணி பூஜை செய்து வருவோர்க்கு அறிவு தெளிவாக கிடைக்கும்.

கொன்றை மரம்: இதைப் பிரணவ மரம் என்று சொல்வார்கள். இதை முருகனை நினைத்து செவ்வாய், சஷ்டி காலங்களில் பூஜை செய்திட துஷ்ட சக்திகள் நம்மிடம் நெருங்காது. இந்த மரம் திருவெண்காடு பகுதியில் அதிகம் காணப்படுகிறது.

குறுந்த மரம்: இதை மாணிக்கவாசகர் மரம் என்று சொல்வதுண்டு. வாஸ்து பரிகார மரமாகிய இம்மரத்தை வாஸ்துக்குறையுள்ள வீட்டின் தோட்டத்தில் வளர்க்க வேண்டும்.

வெள்ளை மன்தாரை: குருவாயூர் கோவில் மரம் என்றும் அழைக்கலாம். இதை வீட்டுத் தோட்டத்தில் வைத்து பூஜை செய்து வந்தால் நினைத்ததைக் கொடுக்கும் தன்மை கொண்டது. மந்தாரையில் மஞ்சள் வகையும் உள்ளது. இதை முறையோடு பூஜை செய்தல் வேண்டும்.

சம்தானக மரம்: நந்தி விருட்சம் என்று அழைக்கப்படும் இம்மரத்தை வீட்டில் உரிய திக்கில் வளர்த்து பூஜித்தால் பிள்ளைகள் நல்லவர்களாக வளர்ந்து உயர்நிலையைப் பெறுவார்கள்.

பும்சிக மரம்: சந்தான பாக்கியத்தைத் தரக்கூடிய இந்த விசேட தெய்வ விருட்சத்தைப் பூஜை செய்தால் மலடியும் குழந்தை பெறுவாள் என்று கூறப்படுகிறது. பும்சிகம் தமிழகப் பகுதிகளில் சில இடங்களில்தான் உண்டு. இதை ஆராதனைகள் செய்து இதன்கீழ் யாகம் நடத்தி வழிபட வாரிசு ஒன்றை நிச்சயம் பெறலாம்.

அரிசந்தன மரம்: இந்த விருட்சத்தை தோட்டத்தில் வளர்ப்போ ருக்கு தீமைகள் நெருங்கி வந்தாலும், அருகில் வந்தபின் மறைந்துவிடும்.

பன்னீர்பூ மரம்: இந்த மரத்தை வீட்டில் வணங்குவோருக்கு வாகன விபத்துக்கள் தவிர்க்கப்படும். இதை திருச்செந்தூர் கோவில் மரம் என்றும் அழைப்பார்கள்.

பெருந்தும்பை: தனலட்சுமி செடி என்ற பெயர் இதற்கு உண்டு. இதை வணங்குவதால் பிறரால் நமக்கு வரும் எதிர்ப்புகள் தீயசெயல்கள் அகலும்.

ஜலம்தரா மரம்: தொட்டால் சிணுங்கி செடிக்கு இப்பெயர் உண்டு. இதையும் தனலட்சுமி செடி என்பர். இச்செடி வளரும் இடத்தில் நிலம் வாங்கி வீடு கட்ட அந்த இடம் வளம்பெற்று திகழும்.

குடும்பநலச்செடி: வீட்டுத் துளசி மாடத்தரு கில் துளசிச் செடியும், ஜலந்தரா என்ற தொட்டால் சிணுங்கி செடியையும் ஒரே அளவில் வைத்துத் தனித் தொட்டியில் வளர்க்க வேண்டும். இதனால் கணவன் மனைவி உறவு பலப்படும்

அகண்ட வில்வம்: காளஹஸ்தி கோவில் மரம் என்ற பெயர் உள்ள இதற்கு அதிர்ஷ்ட மரம் என்றும் பெயர் உண்டு. இம்மரத்தைச் செடி பருவத்தில் திங்களன்று பூஜை செய்துவந்தால் வீடு அதிர்ஷ்டகரமாக விளங்கும். சகல சௌகர்யங்களும் கிடைக்கும். பூஜை ஆகமவிதியோடு செய்தால் பலன் கிட்டும்.

விடாத்ழை மரம்:- ஆரோக்யமாக வாழவும், நோய்கள் விலகி நிம்மதி பிறக்கவும் இம்மரத்தை பூஜை செய்து வரவேண்டும். இதற்குச் சனீஸ்வர மரம் என்ற பெயரும் இருக்கிறது. சனீஸ்வரனின் 7 1/2 பிடி அர்த்தாட்டம சனி காலத்தில் இவ்விருட்ச பூஜை பலன்தரும்.

திருமண மரம்: பின்னை மரம்தான் திருமணப் பேற்றைத் தரும் தெய்வ விருட்சமாக விளங்குகிறது. திருமணம் தடைபடும் ஆண்- பெண்கள் இம்மரத்திற்கு சுபநாளில் பூஜை செய்து அதன்கீழ் மங்கள பூஜைகள் செய்தால் உடனே திருமணக்காலம் வரும்.

கதம்ப மரம்: மதுரை மீனாட்சியம்மன் கோவில் மரம் என்றழைக்கப் படும் இந்த விருட்சம் தீய சக்திகளை விரட்டும் தன்மை கொண்டது. வெள்ளிக் கிழமைகளில் இந்த மரம் பூஜிக்கத் தகுந்தது.

செல்வ மரம்: கருநெல்லி மரத்தைத்தான் செல்வமரம் என்பார்கள். இதை லட்சுமி மரம், (ப்ராஸ் பொடி) என்றும் சொல்வது வழக்கத்தில் உள்ளது. இம்மரத்தை இல்லத்தில் வளர்த்து வணங்கி வர செல்வ வளம் பெருகும்.

சௌபாக்ய மரம்: சண்பக மரத்தைத்தான் சௌபாக்ய விருட்சம் என்று அழைக்கிறோம். வெள்ளிக்கிழமை, அஷ்டமி தினங்களில் சௌபாக்ய அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்டு பிரார்த்திக்க குடும்பத்தில் சௌபாக்கிய நிலை உண்டாகும்.

பிராய் மரம்: மின்னலைத்தடுக்கும் மரம் என்று இதை அழைப்பார்கள். இந்த வகை மரங்கள் திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறையில் முன்பு இருந்ததால் ஊரின் பெயர் அப்படி வந்ததுகானாம் வாழை செடியின் மருத்துவ குணங்கள்:-

மழைக்காலம் வந்து விட்டாலே சாலை ஓரங்களிலும், காலியாக கிடக்கும் நிலங்களிலும் செழித்து வளரும் செடி கானாம் வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமைத்து சாப்பிட்டால் பலன்களை பெறலாம்.

தாது விருத்தியாகும்

நன்றாக சுத்தம் செய்த கானாம் வாழைக் கீரையையும், அரைக்கைப்பிடியளவு முருங்கைப் பூவையும், துவரம்பருப்பையும் சேர்த்து கூட்டு வைத்து, நெய் கூட்டி சாதத்த...ுடன் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். உடலில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும்.

கானாம்வாழைக் கீரை மற்றும் தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் வகைக்கு 100 கிராம் எடுத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். விந்து முந்துதல் பிரச்னையும் தீரும்.

கானாம்வாழைக் கீரையை கொட்டைப் பாக்கு சேர்தது அரைத்துச் சாப்பிட்டால் போகம் நீடிக்கும். காம உணர்வும், ஆண்மையும் அதிகரிக்கும். கானாம் வாழைக் கீரைச் சாறில் கசகசாவை ஊற வைத்து அரைத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்கும்.

காய்ச்சால் குணமாக

எந்த வகையான சாதாரண காய்ச்சல் ஏற்பட்டாலும், கானாம்வாழை இலையை கைப்பிடி அளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு வதக்கி, ஆழாக்குத் தண்ணீர் விட்டு அரை ஆழாக்களவிற்குச் சுண்டக்காய்ச்சி, அந்த கசாயத்தை காலை, மாலை, இரண்டு வேளைக்கு ஒரு அவுன்சு கொடுத்து வந்தால் சாதாரண காய்ச்சல் குணமாகும். கானாம்வாழைக் கீரையுடன் சிறிது மிளகு கூட்டி அரைத்துச் சாப்பிட்டால் குளிர் ஜூரம் உடனே குணமாகும்.

கானாம் வாழைக் கீரையைக் கைப்பிடி அளவு அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். அடிக்கடி சாப்பிட்டால் வெட்டைச் சூடு குறையும். கானாம்வாழைக் கீரையுடன் வேப்பந்துளிர், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும்.

இரத்த பேதி குணமாகும்

கைப்பிடி அளவு கானாம் வாழை இலையையும், அருகம் புல்லையும்,மை போல அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து, ஆழாக்கு பசும்பாலில் கலந்து காலை, மாலையாக கொடுத்து வந்தால் ரத்த பேதி குணமாகும்.


Photo: உலக புவி நாள்!. இந்த வாரம் முழுவதுமே உலக புவி வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த பூமிக்கு என்னவெல்லாம் நம்மாலும் நமக்கு முந்தய சந்ததியினராலும் அறிந்தும், அறியாமலும் கேடுகள் செய்யப்பட்டுவிட்டன என்பதை அறிந்து, சரி செய்து, இந்த உலகம் செழித்து நம் சந்ததியினர் சுபிட்சமான சுகவாழ்வு வாழ நம்மால் ஆன அனைத்து திருத்தங்களையும் மேம்பாடுகளையும் செய்ய துவங்குவோமாக!

நம் ஒவ்வொருவரின் எல்லா சிறிய முயற்சிகளும் சேர்ந்து நிச்சயமாக பெரும் பலனை தரும்.

# இன்றிலிருந்து, இப்போதிலிருந்தே நாம் வாழும் பூமியும் நமக்கு சுவாசத்திற்கான தகுந்த காற்றை தரும் வாயுமண்டலத்தையும் மாசுபடுத்தாமல் காத்து மேம்படுத்த நம்மாலான சிறு சிறு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று நாம் ஒவ்வொருவரும் உறுதி செய்து செயல்படுத்துவோமாக!

Via Kareem Gani(Tree group post)