For Read Your Language click Translate

08 May 2014

2D CAD -Free software. for Civil and Mechanical Engr

சிவில் மற்றும் மெக்கானிக் துறையினருக்கு உதவும் அசத்தலான 2D CAD இலவச மென்பொருள்.


தொழில்நுட்ப வரைபடங்கள் , கட்டிடகலை திட்டங்கள் , கிராபிக் வடிவமைப்பு மற்றும் இயந்திர பாகங்களின் வடிவமைப்புக்கு உதவும் ஒரு பயனுள்ள இலவச மென்பொருளைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

மெக்கானிக் துறையில் டிசைன் என்ற வார்த்தையை கேட்டதும் உடனடியாக கணினியில் என்ன மென்பொருள் பயன்படுத்துகிறீர்கள் என்று யாரும் கேட்பதற்கில்லை காரணம் அனைவருக்குமே தெரியும் ஆட்டோகேட் (AutoCAD) மென்பொருள் தான் அது , AutoCad  ஒரு பெரிய கடல் தான் இதில் இருக்கும் பல சேவைகளைக்கூட நாம் இன்றும் பயனபடுத்தாமல் தான் இருக்கிறோம், இந்நிலையில் தொழில்நுட்ப வரைபடங்கள் வரைய ஒரு பயனுள்ள இலவச மென்பொருள் வந்துள்ளது, மென்பொருளின் பெயர்  LibreCAD.


இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவலாம். இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் பதிப்புகளில் கிடைக்கிறது. நமது சொந்த வேலை மற்றும் அலுவலக வேலைக்கும் இந்த மென்பொருளை இலவசமாக பயன்படுத்திக்கொள்லலாம், 2D -ல் அனைத்துவிதமான கடினமான படங்களும் எளிதாக சில மணித்துளிகள் செலவு செய்து வரையும் வண்ணம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் வெளிவந்த சில மாதங்களிலே பலதரப்பட்ட மக்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது அந்த அளவிற்கு எளிமையாகவும் அனைவரும் பயன்படுத்தும் வண்ணமும் இருக்கிறது. AutoCad பயன்படுத்தும் நண்பர்களுக்கும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி இதில் இருக்கும் பல சிறப்பான சேவைகளை எளிதாக  பயன்படுத்தலாம்.மெக்கானிக் மற்றும் சிவில் துறையில் உள்ள நண்பர்களுக்கு இந்தப்பதிவை கொண்டு சேர்க்கும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறோம்.

No comments:

Post a Comment