For Read Your Language click Translate

09 June 2014

திரிகரணசுத்தி



கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா என்றால் ஓரளவுக்கு கிடைக்கிறது. காரணம், திரிகரணசுத்தியுடன் இறைவனை யாரும் வணங்குவதில்லை. திரிகரணசுத்தி என்றால் என்ன? மனிதனுக்கு பொறாமை, கோபம், ஆசை, பகை முதலிய குணங்கள் உள்ளன. இவற்றை தியானம் என்ற தீர்த்தத்தாலும், பொய், கோள்மூட்டுதல், தீயசொல் ஆகியவற்றை ஸ்லோகங்கள், பாடல்கள் உள்ளிட்ட துதி என்னும் தீர்த்தத்தாலும், களவு, கொலை, பிறன்மனை காணுதல் ஆகிய அழுக்குகளை அர்ச்சனை என்ற தீர்த்தத்தாலும் கழுவ வேண்டும். இதுவே திரிகரணசுத்தி எனப்படுகிறது. இவற்றையெல்லாம் கழுவாமல், ஆயிரங்களையும், லட்சங்களையும் கொட்டி பூஜை செய்வதால் பயனேதும் இருக்காது. எல்லாரும் பலனடைய வேண்டுமானால் திரிகரணசுத்தி செய்யுங்கள். ஞானநிலையை அடையுங்கள்.

No comments:

Post a Comment