மந்திரங்கள் எதுவாக இருந்தாலும்,உடல் சுத்தத்துடன் ஜபிப்பது அவசியம்.வாய் விட்டுச் சொல்லுவதை விட, மனதுக்குள் சொல்லுவது/ ஜபிப்பதே நன்று.ஏனெனில்,மனதுக்குள் ஒரு மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்த உடனேயே மனமானது ஒரே கவனத்தில் குவிய ஆரம்பித்துவிடுகிறது.
சரி மந்திரங்களை ஜபிக்கும் நாட்களில் தாம்பத்யம் கொள்ளலாமா?காம நடவடிக்கைகளில் ஈடுபடலாமா?
தாராளமாக! ஆனால்,மந்திரம் ஜபிக்கும் நேரத்தில் மட்டும் உடல் சுத்தமாக இருக்க வேண்டும்.காம நடவடிக்கைகள் மனிதனின் வழக்கமான நடவடிக்கைகள்.உடல் சுத்தமில்லாமல் மந்திர ஜபம் செய்யும்போது பாவம் சேர்வதோடு,அந்த ஜப எண்ணிக்கை குறிப்பிட்ட எண்ணிக்கையைத் தொட்டதும் மாபெரும் விபத்து,காயம்,மன நிலை பாதித்தல் ஏற்படுகிறது.
இதேபோலத்தான் அசைவம் சாப்பிடுவதும்.அசைவம் சாப்பிட்டப்பின்னர் அன்று முழுவதும் எந்த மந்திரமும் ஜபிக்காமல் இருப்பது கட்டாயம்.மீறினால்,ஏடாகூடமாக ஏதாவது நிகழும்.எச்சரிக்கை:
மனிதர்கள் வாழும் இந்த பூமியில் ஏழு கோடி மந்திரங்கள் மனிதர்களின் மத்தியில் புழங்குகின்றன.இவற்றில் பல மந்திரங்களை ஒரே ஒரு முறை ஜபிப்பதற்கே ஆயுள் முழுவதும் (ஜபிப்பவர்) பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும்.இந்த மந்திரங்கள் தற்போது காட்டுக்குள் வாழும் மகான்களிடம் மட்டுமே இருக்கின்றன.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
No comments:
Post a Comment