For Read Your Language click Translate

Follow by Email

12 July 2014

Kethuvin குணமும்! கிரகங்களின் சேர்க்கை…
இலக்கினத்தில் இராகு நிற்க:
 மெலிந்த, நெடிய உடல், இளமையில் வறுமை, எதையும் சுயமாகசெய்யமுடியாதவர். வஞ்சமும், குரூரமும், படபடத்த மனமும், சிவந்த கண்களும்,சாப்பாட்டுப் பிரியனும், மறைமுகமாக வேறொருவர் மனைவியை எவருக்கும்தெரியாமல்  அடைபவன்.
இலக்கினத்தில் கேது நிற்க:
குறுகிய உருவமும், கெளரவ பதவி அடைதல், காடுமலை சுற்றும் ஞானியாய்,இலைதழைகளை தின்று திரிபவன். பெரும் பொருள் தேடிவைப்பவன்.பெண்களுக்கு நேசன். ஆளடிமை, கொஞ்சம் பொய் பேசுதல்,
இரண்டில் இராகு நிற்க:
கண்நோய், இருமனைவிகள் ஏற்படும், சரளமாய் பேசும் நகைச்சுவைபேச்சாளன், மத்திய வயதில் யோகசாலி. பெண்களின் மேல் விருப்பமுள்ளவன்,கர்ப்பிணிப்பெண்ணின் சாபத்தைப் பெற்றவன்.
இரண்டில் கேது நிற்க:
பொருள் தேடி செலவழிப்பான். ஞானமிகுந்தபேச்சாளி. மனைவி அமைவதில்ஏதாவது கோளாறு இருக்கும். பலவித புராணங்கள், இதிகாசங்கள் கற்பான்.அறிவான வார்த்தைகள் பேசுபவன்.
மூன்றில் இராகு நிற்க:
தன்னைத்தானே புகழ்ந்து கொள்பவர். காதுநோய் உள்ளவர்.தைரியமுள்ளவன். அரசாங்க ஆதரவு மிக்கவன். அரசு ஆதரவு கிட்டும்.பெண்ணால் வாழ்வில் முன்னேறுவான். பலபெண்களுடன் போகம்கொள்வான். புத்திரம் குறைவானவன். உள்ளொன்று வைத்து புறம் பேசுபவன்.
மூன்றில் கேது நிற்க:
தயவு தாட்சண்யமற்றவர். இளைய சகோதரமற்றவர். உண்மையை பேசமாட்டார். பிடிவாதக்காரன். பெண் சுகமற்றவன். தாமதங்களுடையவன்.
நான்கில் இராகு நிற்க :
தாய்க்கு கண்டம், பூமி மனை உண்டாகும், தகப்பன் சொத்தைவிரும்பாதவன்.அமைச்சன் போல் அறிவுரை சொல்வான். வாகனங்கள்உடையவன். ஆளடிமை, பெருங்கீர்த்தி உடையவன். விஷபயம் உள்ளவன்.ஜென்ம பகை உடையவன். பக்தி உடையவன்.
நான்கில் கேது நிற்க:
பலவித்தைகளை உடையவன். மனைவியிடம் சுகமற்று, பரத்தையர் மேல்பிரியமுள்ளவன். ஜோதிடமறிந்து பலன் சொல்பவன்.
ஐந்தில் இராகு நிற்க:
அறிவும், கல்வியும் மிகுந்தவன். ஆண்குழந்தையற்றவன். சுற்றத்தாருக்குஆகாதவன். அடக்க ஒடுக்கமானவன். பருவமடையாத பெண் இவனுடன்தொடர்பில் இருப்பால். அதனாலே, உலகில் தப்பானவனாக கருதப்படுவான்.குணம் கெட்டவன். மனவழுத்தம் மிகுந்தவன். தாய் மாமனுக்கு தோஷம். ஊர்ஊராகத்திரிபவர்.
ஐந்தில் கேது நிற்க:
அறிவுடையவன். குழந்தைகள் பிறந்து இறக்கும். ஊரில் கெட்டபெயர்இல்லாமல் வாழ்பவன். பெண்களின் பேச்சைக் கேட்பவன்.சொத்துள்ளவர்களுக்கு விரோதி. தாய் மாமனுக்கு தோஷம். அலைச்சல்உள்ளவர்.
ஆறில் இராகு நிற்க:
பலசாலி, தந்திரசாலி. பிணியற்றவர். எதிரிகளை வெல்லும் திறன் பெற்றவர்.தாய்மாமன் விடு கெடும். ஆட்சியாளர்களுக்கு விருப்பமானவன். கம்பீரமும்,மேனி அலங்காரமும், பெண்களைக்கண்ட உடன் மோகம் கொள்வதும்,
ஆறில் கேது நிற்க:
விவசாயி. காணி நிலம், பயிர், பச்சை என்று வாழ்பவன். இளம்பெண்களுக்குவிருப்பமானவன். பலவகையில் பொருள்தேடி, அண்டியவர்க்குஆதரவளிப்பவன். ஆச்சாரமும், தற்பெருமையும் உள்ளவர். உண்ணாமல்இருப்பவர்.
ஏழில் இராகு நிற்க:
மனைவிக்கு தீமை. கண்டம் ஏற்படும். இருமனைவிகள். பூமி பொருள்தேடுவான். பெண்களை நம்பாதவன். மனைவியின் சொத்து கிட்டும்.கபடுகுணம். எவரையும் நம்பாதவன். தொட்ட காரியத்தை முடிப்பதில் தீரன்.நோயுடையவளோ, பகை குணம் கொண்டவளோ மனைவியாக வாய்ப்பாள்.
ஏழில் கேது நிற்க:
கணவன்மனைவி பிரிவினை, காலதாமத திருமணத்தையும் தரும். நோயுள்ளமனைவியும். பகையோடு பேசுபவளாகவும், ஆனால், புகழுடையவன்.இவன்மேல் புத்திரர்கள் விருப்பமுடையவர்களாக இருப்பார்கள்.
எட்டில் இராகு நிற்க:
உற்சாகன், கம்பீரமுள்ளவன். படபடப்பை வெளியில் காட்டாதவன். விஷபயம்உடையவன். வாய்பேச்சில் வல்லவன். பலபேருடன் விருப்பமுள்ளவன்.மனைவியின் சாபத்தைப் பெற்றவன். வெறுப்பும், குரோதமும், பிணியும்ஏற்படும். வாக்கு பலிதமுடையவன்.
எட்டில் கேது நிற்க:
எடுத்த பணியை முடிப்பவன். நோயுள்ள மனைவி. மனைவி விரும்பும் மனிதன்.அதிக கீர்த்தியும், பல பூமியும் உடையவன். தேய்வக்குற்றத்தால் வாழ்வில்ஏற்றத்தாழ்வு இருக்கும்.
ஒன்பதில் இராகு நிற்க:
தந்தைக்கு கண்டம். பாக்கிய இழப்பு. குலத் துரோகி. குடும்பத்தை கலைக்கும்குரூப எண்ணம் கொண்டவன், பொருளும் செல்வமும் ஆயுள் மட்டும் இருக்கும்.அண்டியோரைக் காப்பவன். சர்ப்பதோஷம் உண்டு.
ஒன்பதில் கேது நிற்க:
நாளுக்குநாள் விருத்தி. தந்தை சொத்து வந்து செரும்.  நட்டமான பொருளும்கைக்கு வந்து சேரும். புத்திர தோஷம் உண்டு. சிறிய தகப்பனுக்கு தோஷம்.
பத்தில் இராகு நிற்க:
வேதங்கள் முதற்கொண்டு ஜோதிடம் வரை கற்று தேர்வான். பல தொழிகள்பார்ப்பான். இவனுடன் பல ஜனங்கள் இணைவார்கள். ஆட்சியாளர்களுக்குஇணக்கமானவன். வாக்கு பலிதமுள்ளவன். மனைவிசுகமற்றவன்.உயர்பதவியை அடைவான். சதா பிரயானமும் வீண்செலவும்உடையவன்.
பத்தில் கேது நிற்க:
பெரும் பொருள் தேடிவைப்பான். மனைவியின் சொல்லைதட்டாதவன்.தானதருமங்கள் செய்பவன். யாருக்கும் அடங்காதவன். கம்பீரமாக சிரிப்பவன். மருத்துவம், இர்சாயனம் சார்ந்த துறையில் இருப்பார்.இளகிய மனம் உடையவர்.
பதினொன்றில் இராகு நிற்க:
 கலைத்துறையில் இருப்பார். அதில் வருவயும், இலாபமும் அடைவார். திடீர்பணக்காரராகவும், புறம்போக்கு நிலத்தை தனதாக்கிக் கொள்பவர். போட்டிபந்தயங்களில் வெற்றிபெறுபவர். மனைவியை நம்பாதவன். வேறொரு பெண்துணை உண்டாகும்.
பதினொன்றில் கேது நிற்க:
செல்வந்தர்.பொருள் தட்டுப்பாடு இருக்காது. நண்பர்களிடம் நல்ல செல்வாக்குஉண்டு. நிலபுலத்தால் இலாபம். தானாக பொருள் கூடும். வார்த்தையில்கள்ளமில்லை.உலகில் நல்ல பேர் எடுப்பான்.அண்டியவர்க்கு ஆதரவளிப்பான்.தியாகம் உடையவன். எவர்க்கும் அஞ்சாதவன்.
பனிரெண்டில் இராகு நிற்க:
முதுமையில் நோயுடையவன். புண்ணியங்கள் செய்பவன். தீய சகவாசம். நீச்சசகவாசத்தால் அதிக செலவு. வருவாய் குறைவு இருக்காது. உறவுகளும்,நண்பர்களும் உதவுவார்.
பனிரெண்டில் கேது நிற்க:
முக்திக்கு வழி வகுக்கும் இது கடைசி பிறவி என்பர். மறுபிறவி இல்லை.பிறவித்துன்பத்தில் இருந்து விடுதலை. கடைசி காலத்தில் பிணிகள் இல்லை.புனிதன். உத்தமன். நினைத்ததை முடிப்பவன். வெளியுலகில் உள்ளோர்க்குநல்லவனாய் இருப்பார்.
இலக்கினத்தில் இராகு இருக்க, ஏழில் கேது நிற்கும் இந்த ஜாதகர்க்கு,இளவயதில் திருமணம் செய்யக்கூடாது. மீறி செய்தால், திருமண வாழ்வுநீடிக்காது. திருமண முறிவினைக் கொடுத்து விடும். இதேபோல,இரண்டாமிடத்தில் கேது நின்றால், அந்த ஜாதகர்க்கு சன்னியாசி யோகத்தைதந்துவிடும்.
இலக்கினத்திற்கு 6, 8, 12 ல் தாய்க்குக் காரகனான சந்திரன் நின்று, நான்காம்வீட்டில் கேது நின்றால், தாய்க்கு மரணத்தைத் தந்துவிடும். இதேபோல்,நான்காம் வீட்டில் கேதுவும், சனியின் மகனான மாந்தியும் கூடியிருக்க,ஜாதகரின் கடைசி காலம்வரை குடியிருக்கக் கூட வீடு இருக்காது.
 இராகு, கேதுக்களுக்கு வாரநாட்களில் இடம்தரவில்லை. அஷ்டவர்க்ககணிதத்திலும் பரல்கள் ஒதுக்கப்படவில்லை. காரணம், இவையிரண்டும்மாயக்கிரகங்கள் என்பதால், நிழல்களுக்கு தனியாக இயங்கும் தன்மைஇருக்காது என்பதை அடிப்படையாகக் கொண்டு வாரநாட்களில் பங்கோ,அஷ்டவர்க்கக் கணிதத்தில் பரல்களோ ஒதுக்கப்படவில்லை. அதனால்,  கேதுதன் தசாகாலத்தை  செவ்வாயின் தசாகாலமான 7 வருடத்தைப்போல, தன்தசாகாலத்தை 7 வருடமாக தருகிறான். செவ்வாயைப் போலவே பலன்களதனக்கு அதிகாரம் கிடைக்கும் காலங்களில் தன் தீர்ப்பை தயங்காமல்வழங்குகிறான். அதனால், கேது  தசா, புக்தி,அந்தரம் நடப்பில்உள்ளவர்களும்,   கேதுவால் பாதிக்கப்பட்டவர்களும்,    செவ்வாய்கிழமையன்று, மந்திரத்தையும்,சுலோகத்தையும் பாடி வணங்கலாம்.
வீடு வாசலை சுத்தம் செய்தபின், குளித்து முடித்துசெவ்வாய் கிழமைகாலையில் 6.00மணிமுதல் 7.00வரை          செவ்வாய்க்குரிய ஓரையானசெவ்வாய் ஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்கவேண்டும்.  ஒவ்வொருதினத்தின் முதல் ஓரை அந்த தின அதிபதியின் ஓரையாகும். இங்கே  கேதுவுக்குஎன்று தனிக்கிழமைகள் வருவதில்லை என்பதால் செவ்வாயைப்போல்,பலன்தரும் செவ்வாய் ஆளும்   செவ்வாய்க்கிழமை அன்று, யாருடையஜாதகத்தில் வலுக்குறைந்த  கேது உள்ளாரோ அவர் மட்டும், பூஜைநேரத்தில்பல நிறத்தாலான வேட்டியோ, சேலையோ, அணிந்து கொண்டு, ஆமணக்குஎண்ணெய்(விளக்கு எண்ணெய்), தூய நல்லெண்ணெய், பசும்நெய் இந்தமூன்றையும் சரிசமமாக கலந்து ஒன்றாக்கி பஞ்சமுக விளக்கில் நிறைவாய்இட்டு, பஞ்சமுக குத்துவிளக்கை எரியவிட வேண்டும். சார்ட் அட்டையில் கேதுவுக்காக  வரைந்து வைத்துள்ள கிரக கோலத்தின்மேல்  கொள்ளுவைப்  பொடிசெய்து பூஜை அறையிலோ, வழிபாட்டுத்தளத்திலோ, கால்மிதிபடாதஇடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும். மேலும்,  பாம்பு போல் துருக்கம்கல்லில் வரைந்த, அல்லது, செதுக்கியோமந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும். தூபக்கரண்டியில்தீக்கங்குகளை வைத்து, அதில் இடுவதற்காக செம்மரப்பொடியை எடுத்துவைத்துக் கொள்ளவும். பின்னர் கொள்ளு சாதத்தை, நாம் இதுவரை புலங்காத,பயன்படுத்தாத தட்டில் நிவேதனப் படையலாக வைக்கவும்.    கேதுவின்அதிதேவதையான பிரம்மா படத்தையும், அதனருகில் தர்ப்பைப் புல்லையும்மந்திரக் கோலம் அருகில்  வைக்கவும்.
செவ்வாய்க்கிழமையன்று ஒருவேளை உணவாக  கொள்ளுவை வேகவைத்துசாதத்துடன் உண்ணவும். மறுவேளை கொள்ளுவையும் உணவாக்கிக் கொள்ள,தங்கள் சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது மனமுறுகி  மந்திரக்கோலத்தை இமை கொட்டாமல், பார்த்துக்கொண்டே, எத்தனையோ பிறவிகளாய் புத்தியில் அறிவிக்கப்பட்டுதொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய்       கேது பகவானே!    என   கேதுவின்     துதிப்பாடலை மனமுறுகி ஒன்பதுமுறைமனதுக்குள் துதிக்க, பனிபோல் பிறவித்துன்பம் விலகும்.
கேதுபொன்னங் கிரிஇடமாப் போதுவான்; மோகினியால்முன்னம் தலையிழந்தமூர்த்தியான் – மன்னுகையில்மோதுகதை அஞ்சல் உள்ளான் மூண்டகருநிறத்தான்கேதுஎன்று சொல்வர் கிளந்து.       
                    கேது துதி.
பொன்னையின் னுரத்தில் கொண்டோன் புதல்வர்தம்பொருட்டால்ஆழிதன்னையே கடந்து முன்னம் தண் அமுது அளிக்கல் உற்றபின்னைநின்கரவால் உண்ட பெட்பினில் சிரம்பெற்றுஉயர்ந்தாய்என்னை ஆள கேதுவே இவ்விருநிலம் போற்றத் தானே!!
அபிராமி அந்தாதி.
 என்குறைதீர நின்றே ஏத்துகின்றேன் இனியான் பிறக்கின்நின்குறையே அன்றியார் குறை காண் இரு நீள் விசும்பின்மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடைமெல்லியலாய்!
தன்குறை தீர எங்கோன் சடைமேல் வைத்த தாமரையே. 72.
தங்குவார் கற்பகத் தாருவின் நீழலில் தாயரின்றிமங்குவர் மண்ணில் வழுவாப்பிறவியை மால்வரையும்பொங்குவார் ஆழியும் ஈரேழ் புவனமும்பூத்தவுந்திக்கொங்கிவர் பூங்குழலால் திருமேனி குறித்தவரே! 76.   
உங்களின் ஜென்ம நட்சத்திரம்  கேது சாரம் பெற்றிருந்தால், அதாவது அசுவினி, மகம், மூலம், என இந்த மூன்றில் ஒன்று, ஜென்ம நட்சத்திரமாகஇருந்தால், அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு மரத்தைநட்டுவிடவேண்டும். அது  அசுவினியில்   பிறந்திருந்தால் எட்டிமரத்தையும்,மகத்தில் பிறந்திருந்தால், ஆலமரத்தையும், மூலத்தில் பிறந்திருந்தால்,மாமரத்தையும், நட்டுபராமரித்து வந்தால், கேதுவால் நிகழ்ந்த பலக்குறைவுநிவர்த்தியாகி பலம்பெறும்.
 இலக்கினத்திற்கு எந்தெந்த இடங்களில் கேது இருந்தால், பாதிப்பானநிலையில் கெடுபலன்களைத் தரும் என்பதை கண்டோம். இது மட்டுமல்ல.இரிடபத்தில் நீசம் பெற்ற   அமைப்பையுடையவர்களும், இலக்கினத்துக்கு  8, 12 ல்  கேது மறைந்துள்ளவர்களும், இலக்கினாதிபதிக்கு 8, 12 ல் கேது  மறைந்து உள்ளவர்களும்,  பாவியான, சூரியன், சந்திரன், செவ்வாயுடன்கூடிய, கேது எவர் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்களும், இந்த எளியபரிகாரத்தை செய்வது நல்லது.   கேது தசை, கேது புக்தி,அல்லது கேதுஅந்தரம், இந்த மூன்றும் நடப்பில் இருப்பவர்களும், கேது தசையோ,   கேதுபுக்தியோ நடப்பில் இருப்பவர்களோ, அல்லது மூன்றில் ஏதோவொன்றுநடப்பில் உள்ளவர்களும், இங்கே குறிப்பிடப்பட்டுள்ளபடிமந்திரக்கோலத்தையும், சுலோகத்தையும் பயன்படுத்தி வளம்பெறவாழ்த்துக்கள்.

1,5,9தர்மதிரிகோண-அறம்,2,6,10 அர்த்த திரிகோண-பொருள்,3,7,11காம திரிகோண-இன்பம்,4,8,12மோட்ச திரிகோண-மோட்சம்
நம் திருவள்ளுவர் எழுதிய “திருக்குறள்” எனும் நூலில், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று முப்பாலைக் குறித்து எழுதியுள்ளார். இது தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனுக்கும் தெரிந்த விடயம். ஒரு மனிதன் அறம், பொருள், இன்பம் மூன்றையும் அடைந்து, அனுபவித்து முடித்து அதன்பின் வீடுபேற்றை அதாவது சுவர்க்கத்தை அடைய முயலவேண்டும் என்பதே அய்யனின் வாக்கு. இதைத்தான் ஜோதிடமும் கூறுகிறது. என்னவெனில்,

1,5,9 இம்மூன்று வீடுகளும் தர்மதிரிகோண வீடுகளாகும். தர்மம் என்றால் அறம் என்று அர்த்தமாகும்.

2,6,10 இம் மூன்று வீடுகளும் அர்த்த திரிகோண வீடுகளாகும். இவ்வீடுகள் பொருள், செல்வத்தைக் குறிக்குமிடமாகும்.

3,7,11 இம்மூன்று காம திரிகோண வீடுகளாகும். இவ்வீடுகளைக் கொண்டு இன்பம், சிற்றின்பம் இவைகளைக் காணலாம்.

4,8,12 இம்மூன்று வீடுகளும் மோட்ச திரிகோண வீடுகளாகும். மோட்சம் என்பது வீடுபேற்றைக் குறிக்கும்.

இலக்கினத்திற்கு 12 ம் வீடு, இந்த பிறப்பின் வீடுபேற்றை (மோட்சம்) அறியுமிடமாகும்.

ஐந்தாமிடத்திற்கு 12ம் வீடு, அதாவது 4ம் வீடு, இனி வரப்போகும் பிறப்பிற்கு வீடுபேற்றை அறியுமிடமாகும்.

ஒன்தாமிடத்திற்கு 12 ம் வீடு, அதாவது 8ம் வீடு, போன பிறப்பிற்கான வீடுபேற்றை அறியுமிடமாகும்

Thank you narayanasamy jagadeesan 
        
        
ரசமணி | வாலை ரச மணி | தாரகை மணி | வல்ல மணி | பேத மணி | வக்கிர மணி | அஞ்சனம் | மாந்ரீகம் | சர்வ வசியமை | சர்வ அஞ்சனம் | குபேர  வசியமை | குபேர  அஞ்சனம் | காளிகா தேவி வசிய அஞ்சனம் | சிவசக்தி பூஜை அஞ்சனம் | சுதர்சன வசிய அஞ்சனமை | தாராதேவி அஞ்சனம் | நவமோகினி அஞ்சனம் | வசிய சஞ்சிவி அஞ்சனம்ஏவல் பில்லி சூன்யம் | ஏழரை சனி | 7 1/2 சனி | ஏழரை சனி பலன் | 7 1/2 சனி பலன் | சனி பெயர்ச்சி பலன் | அஷ்டமசனி | கண்டசனி | கண்டகுரு | அஷ்ட குரு |  அர்த்தாஷ்ட குரு | ராகு கேது | தசா பத்தி