For Read Your Language click Translate

10 July 2014

ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு



சிலர் ஆவிகளைப் பார்த்ததாகக் கூறினால் நாம் நம்ப மறுக்கின்றோம். அவர்கள் கண்களுக்குத் தெரியும் ஆவி நமது கண்களுக்குத் தெரியாததே காரணம். ஆவிகள் எல்லோரது கண்களுக்கும் தெரியாது. எல்லோரும் ஆவிகளை உணர முடியாது. சிலருடைய கண்களுக்கு மட்டும்தான் ஆவிகள் தெரியும். சிலரால் மட்டுமே ஆவிகளை உணர முடியும். ஆவிகள் யாருடைய கண்களுக்குத் தெரியும். ஆவிகளை உணரக்கூடியவர்கள் யார் என்பதைக் கீழே பார்ப்போம்.

ஜோதிட சாஸ்திரம் மனிதனின் அம்சத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துக் காட்டியுள்ளது. அப்பிரிவுகள் பொதுவாக கணங்கள் என்று அழைக் கப்படுகின்றன. அவை தேவ கணம். மனித கணம் மற்றும் ராக்ஷஸ கணம் ஆகும். இந்த மூன்று கணங்களின் இயல்புக்கு ஏற்ப மனிதனின் இயல்புகளும், குணங்களும், உணர்ச்சிகளும் மாறும். குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இந்த கணங்களுக்கு உரியவர் என்று ஜோதிட சாஸ்திரம் பிரித்துக் காட்டியுள்ளது. அவைகளைப் பார்ப்போம்.

தேவ கணம்: அஸ்வினி, மிருக சீரிஷம், பூசம், புனர் பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம் மற்றும் ரேவதி.

மனுஷ கணம்: பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி.

ராக்ஷஸ கணம்: கிருத்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம் மற்றும் சதயம்.

குறிப்பிட்ட கணங்களுக்குரிய பொதுவான குணங்களையும், இயல்புகளையும் பார்ப்போம்

தேவ கணம்: மென்மையான இயல்பு, தெய்வீக எண்ணங்கள், தெய்வீக தொடர்புகள், பக்தி, பிறரை நேசிக்கும் தன்மை, அநீதிகளை எதிர்த்தல், இனியவாக்கு, மற்றவருக்கு அருளும் தன்மை.
ராக்ஷஸ கணம்: கடுஞ்சொல், தீமை செய்தல், அநாகரிக செயல்கள், தெய்வ பக்தி குறைவு, நிந்தனை செய்தல், பிறரை குரூரமாக தண்டித்தல் போன்ற அசுர குணங்கள்.
மனுஷ கணம்: தேவ கணம் மற்றும் அசுர கணம் இரண்டும் பொருந்திய குணம். அவ்வப்போது மாறுபடும் குணம். மற்றும் தன்மைகள்.
மேலே கூறப்பட்டவை, நட்சத்திரங்கள் அடிப்படையில் இருக்கும் குண இயல்புகள் ஆகும். சில நேரங்களில் ஒருவர் பிறந்த லக்னத்தின் இயல் புகளின் அடிப்படையில், இயல்புகள், குணங்கள் கலந்து நிற்கும்.
பொதுவாக இந்த ஆவிகள், மனுஷ கணம் மற்றும் ராக்ஷஸ கணங்களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே கண்களுக்கோ அல்லது உணர்வுகளுக்கோ புலனாகும். அவ்வாறு ஆவிகள் புலனா கும்போது, இந்த ஆவிகளின் உருவம் இவ்விரு பிரிவினருக்கும் வெவ்வேறாகத் தோற்றம் அளிக்கும்.
மனுஷ கணத்தில் பிறந்தவர்களுக்கு ஆவிகள்-பேய், ராக்ஷதர்கள் போன்ற அருவருப்பான மற்றும் கோரமான வடி வங்களில் உணர முடியும். இவ்வாறு உணரும்போது அவர்கள் பயம், பீதி போன்ற உணர்வுகளை அடைவார்கள். சில நேரங்களில் அவர்களின் மனநிலை கூட பாதிக்கப்படலாம்.
ராக்ஷஸ கணத்தில் பிறந்தவர்களுக்கு, ஆவிகள் சாத்வீகமான மனுஷ வடிவங்களில் உணர முடியும். ஆனால் மனுஷ கணத்தினரைப் போல பயம், பீதி போன்ற உணர்வுகள் இவர்கள் அடைவதில்லை. மாறாக அதன் மீது ஒரு ஈர்ப்பு சக்தியையும் பெறுகின்றனர்.
இயற்கையான இந்த நிகழ்வுகளை வேறு எதனுடனும் இணைக்க முடியாது. மந்திர சக்திகள் மூலம் சித்தி பெற்று ஆவிகளை பார்ப்பவர்களும், தொடர்பு கொள்பவர்களும், மேற்கூறிய விளக்கங்களுக்கு அப் ;பாற்பட்டவர்கள்.
மந்திர சக்தி மூலம் ஆவியுடன் தொடர்பு கொண்டவர்கள், அவர்கள் ராக்ஷஸ கணம் அல்லது மனுஷ கணத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அதனை சாதிக்க இயலும். பொதுவில் மனோகாரகன் சந்திரன் வலுவிழந்து உள்ள மனுஷ கண ஜாதகர் ஆவிகளுடன் எதிர்பாராத தொடர்பு ஏற்பட் டால்,அவர்களது மனோநிலை கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது

No comments:

Post a Comment