For Read Your Language click Translate

30 December 2014

நீங்கள் பிறந்த நாளின் யோகம் என்ன?


நீங்கள் பிறந்த நாளின் யோகம் என்ன?

சூரியனின் கதியினை இரண்டாக பிரித்து தை முதல் ஆனி முடிய உத்திராயணம் எனவும், ஆடி முதல் மார்கழி முடிய தக்ஷிணாயனம் எனவும் பிரித்து அறிகின்றோம். உத்திராயணம் காலமாகிய ஆறு மாதங்கள், என்பது தேவர்களுக்கு ஒருநாளின் பகல் பொழுதாகவும், தக்ஷிணாயன காலமாகிய ஆறு மாதங்கள் தேவர்களின் ஒருநாளைய இரவு பொழுதாகவும் அமைவதாக ஜோதிட சாஸ்த்திர காலநிர்ணய சூத்திரம் கூறுகிறது. 

இதே போல உத்திராயணம் திருஓணம் நட்சத்திரத்திலேயும், தட்சிணாயனம் பூசம் நட்சத்திரதிலேயும் தொடங்கும். இந்த நட்சத்திரங்களில் இருந்து சூரியன் சந்திரன் ஆகியோரின் கதியினை வைத்து கணக்கிட்டு அதற்க்கு யோகம் என பெயரிட்டு உள்ளார்கள்.


தினசரி நாட்காட்டியில் குறித்திருக்கும், அமிர்த யோகம், சித்த யோகம், மரணயோகம், பிரபலாரிஷ்ட யோகம் என்பது வேறு. இந்த யோகம் என்பது வேறு. இது வேறு. நட்சத்திரங்களில் இருந்து இருக்கும் தூரத்தினை வைத்து கணக்கிடுவதே இந்த யோகம் ஆகும். இதனை 27 பாகமாக கணக்கிட்டு ஒவ்வொரு பாகத்திற்கும் தனித்தனியாக பெயரிட்டும் தனித்தனியாக பலன்களையும் நமது ஜோதிட ஞானிகள் கூறியுள்ளார்கள்.


நீங்கள் என்ன யோகத்தில் பிறந்துள்ளீர்கள் என தெரிந்து கொள்ள உங்களின் ஜாதகத்தினை எடுத்து பிறக்கும் பொது இருந்த பஞ்சாங்க குறிப்பினை பார்க்கவும். அல்லது, கீழே உள்ள குறிப்பினை க்ளிக் செய்க
இலவச ஜாதக குறிப்பு பெற விபரம் 
உங்கள் பிறப்பு ஜாதகம் இலவசம்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்.DNS.,
ஸ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம், 
கரூர் மெயின் ரோடு,
கொடுமுடி. 638151
ஈரோடு மாவட்டம்.
தொலைபேசி:7667745633

உங்கள் பிறப்பு ஜாதகம்  JPEG  ஃபார்மெட்டில் ஒரு பக்கம் மட்டும் அனுப்பி வைக்கப்படும்.
கீழ்கண்ட விபரங்களை மெயில் அனுப்பவும். numerology2ptk@gmail.com
பெயர்:
அப்பா:
அம்மா:
பிறந்த தேதி:
பிறந்த நேரம்:     AM/PM
பிறந்த ஊர்:
மாவட்டம்:

நீங்கள் என்ன யோகத்தில் பிறந்துள்ளீர்கள் என தெரிந்து கொள்ளகீழே உள்ள இணைப்பினை கொண்டு உங்கள் யோகத்திற்க்கான பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

 

      1. விஷ்கம்பம் யோகம்: பிறரை வெற்றி கொள்ளக்கூடியவராகவும் செல்வங்களை அடையக்கூடியவரகவும் பசு முதலான கால்நடை செல்வம் மூலம் செல்வம் பெறுவார்கள்.

      1. பிரீதி யோகம்:பிற பெண்களின் வசப்பட்டவராக, அவர்கள் சொல்கிற படி கேட்டு நடப்பவராக இருப்பார்
      2. .ஆயுஷ்மான் யோகம்: நீண்ட ஆயுளையும் நோயற்ற உடலையும், பெற்றவராக வாழுவர்.


        1. சௌபாக்கியம் யோகம்: இவருக்கு எப்போதும் மகிழ்சியான வாழ்க்கை அமையும். அதற்க்கு வேண்டிய வசதி வாய்ப்பு அமையும்.
        2. சோபனம் யோகம்: காம வெறி மிகுந்தவராக இருப்பவராகவும், அதனால் பல தொல்லைகளை அனுபவிப்பவரகவும் இருப்பார்.
        3. அதிகண்டம் யோகம்: கொடூரமான புத்தியுடையவராக, பிறரை துன்புறுத்தி தானும் துன்பத்துடன் வாழுவார்.
        4. சுகர்மம் யோகம்:உத்தமமான நடத்தை உள்ளவர். செல்வ வசதியுடன், நல்ல கர்மங்கள் செய்யும் குணத்துடன் இருப்பார்.
        5. திருதி யோகம்: பிறரின் பொருள்கள், பெண்களை அவருக்கு தெரியாமல் அபகரிக்கும் குணத்துடனும், இந்த புத்தியினால் பலருடைய வெறுப்புக்கு ஆளானவராக இருப்பார்.
        6. சூலம் யோகம்: சிறு சிறு விசயங்களுக்கு கோபம், சதா சண்டை போட தயாரான குணமுடன், அதானால் வரும் விளைவுகளுடன் போரடுவார்.
        7. கண்டம் யோகம்: தீய வழியில் மனம் செல்லும். அதிலே திருப்தி உண்டாகும். இதனால் பலவிதமான சிக்கல் ஏற்ப்படும்.
        8. விருத்தி யோகம்: பேச்சிலே சாதுர்யம் மிக்கவராகவும், அதனால் பலவகையில் விருத்திகள் ஏற்ப்படும்.
        9. துருவம் யோகம்: பெரும் செல்வ வளத்துடன் அமோகமாக வாழுவார்.
        10. வியாகதம் யோகம்: கொடூரமான மனம் கொண்டவர். பேச்சிலும் செயலிலும் அது வெளிப்படும்.
        11. அரிஷனம் யோகம்: புத்திசாலி தனம் மிக்கவராக, அதனால் பெரும் புகழ் அடைபவராக இருப்பார்.
        12. வச்சிரம் யோகம்: கம வெறி மிகுந்தவராகவும். தனவந்தரகவும் விளங்குவார். இரண்டு விதமான பெயர் பெருவார்.
        13. சித்தி யோகம்: மகாபிரபுவாக வாழுவர். பலருக்கு ஆதரவாக உதவி செய்து, பலரின் நன்றிக்கு உரியவராக, வசதியாக வாழுவர்.
        14. வியதீபாதம் யோகம்: எப்போதும் மோசமான கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்தும் குணத்துடன் வாழுவார்.
        15. வரியான் யோகம்: கெட்ட வழியிலே நடக்க துநிந்தவராக இருப்பார்கள். க்கமவளியிலே போவதும் அதன் விளைவுகளை அனுபவிப்பார்.
        16. பரீகம் யோகம்: சண்டை போடும் குணம் அதிகம் இருக்கும். செல்வா சௌபாக்கியம் அதிகமாக சேரும்.
        17. சிவம் யோகம்: சாஸ்த்திரம் அறிந்தவனாகவும், செலவ செல்வாக்கினை பெற்றவானாக, சாந்த குணத்துடன் ஆட்சி செய்பவரிடம் மதிப்புள்ளவனாக இருப்பார்.
        18. சித்தம் யோகம்: உத்தமமான போக்கினை உடையவராக, தெய்வீக ஈடுபாட்டுடன் இருப்பார்இருப்பார்கள்.
        19. சாத்தியம் யோகம்: நல்லவழிகளை கண்டறிந்து தவறாமல் அந்த வழியில் நடக்கும் உத்தமன்.
        20. சுபம் யோகம்: அழகும் செல்வமும் பெற்றவனாக, காம இச்சை மிகுந்தவனாகவும், கபம் நோய்கள் மிகுந்தவனாக இருப்பான்.
        21. சுப்பிரம் யோகம்: சாதுர்யமான பேச்சும், ஒழுக்கம் தவறாத நடத்தையும், கொண்டவனாக, மனோதிடம் இல்லாதவனாகவும், கோபம் மிகுந்தவனாகவும் இருப்பான்
        22. பிரம்மம் யோகம்: இரகசியமான செல்வங்களை கொள்பவனாக, தன்னுடைய முன்னேற்றமே முக்கியமானதாக கொள்ளும் குணத்துடன், நியாயமான முடிவுகளை எடுக்கும் குணமுடையோன்
        23. அஜந்திரம் யோகம்: சகலத்தினைப் பற்றியும் தெரிந்தவனாக ஞானியினை போல இருப்பான். தனம், பரோபகார சிந்தனையுடன் இருப்பான்.
        24. வைகிருதி யோகம்: தந்திரம் மிகுந்தவனாகவும், பிறரை தூஷிப்பதே வேலையாக கொண்டு ஆனந்தம் அடைவான். வலிமையினால் செல்வாக்கு பெற்று தனம் அடைவான்

          No comments:

          Post a Comment