For Read Your Language click Translate

Follow by Email

22 January 2017

இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா?
இந்துச் சைவர்கள் புலால் உண்ணுவதை மறுக்கின்றனரா?
.
சைவர்கள் உயிர் வாழ்க்கைக்கு, மற்ற உயிர்களுக்கு மிகக் குறைந்த துன்பம் தரும் வகையில் சைவ உணவு மட்டும் உண்ணும்படி கற்பிக்கப்படுகின்றனர். ஆனால் தற்காலத்தில் எல்லா இந்துக்களும் சைவ உணவு உண்பவர்களாக இல்லை.
இன்று இருபது விழுக்காடு இந்துக்கள் சைவமாக இருக்கிறார்கள். சைவ உணவு உண்பவர்கள் வட இந்தியாவை விட தென் இந்தியாவில் அதிகமானோர் உண்டு. ஏனெனில் வட இந்தியாவின் காலநிலை மற்றும் கடந்த கால முகலாயர் செல்வாக்கும் காரணமாகிறது.
நமது சமயம் கடுமையான விதிகளான "கட்டாயம் செய்ய வேண்டியவை, நிச்சயம் செய்யத் தகாதவை" போன்றவற்றைச் சார்ந்திருக்கவில்லை. நமது சமயத்தில் கட்டளைகள் இல்லை. சைவ சமயம் நமது உடலுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஞானத்தை நமக்கு கொடுத்துள்ளது.
அர்ச்சகர்களும் சமயச் சான்றோரும் கண்டிப்பாக சைவமாக இருக்கிறார்கள். மிகவுயர்ந்த புனிதத் தன்மையைக் காக்கவும் ஆன்மீக உணர்வும் கொண்டு அவர்களின் பொறுப்புகளை நிறைவேற்றவும் அவர்களது இயல்பான தூய்மையைத் தூண்டவும் முடிகிறது. யோகப் பயிற்சி செய்யவும் தியானப் பயிற்சியில் வெற்றி காணவும் கண்டிப்பாக காய்கறியுண்போராக இருக்க வேண்டும். பொதுவாக இராணுவத்தினரும் சட்ட அமலாக்கப் பிரிவினரும் சைவமாக இருப்பதில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும் பொருட்டு சற்று மூர்க்கமாக இருக்க வேண்டியிருகிறது.
இத்தகைய கேள்விகளுக்கு வரையறுக்கப்பட்ட விதியான இன்னா செய்யாமை (அகிம்சை) ஒர் இந்துவின் பதிலின் அடிப்படையாகும். அகிம்சை என்பது ஒருவருக்கு அல்லது ஒர் உயிருக்கு உடலால், மனத்தால், உணர்ச்சியால் வன்முறை செய்யக்கூடாது என்பதாகும். வன்முறையை கடுமையாக எதிர்ப்பவர் இயல்பகவே சைவ உணவுக்கு மாறிவிடுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அவரவர் மனசாட்சியே நல்ல ஆசானாகிறது.
நாம் இறைச்சி, மீன், கோழி, முட்டை ஆகியவற்றை உண்ணும் பொழுது அவற்றின் அதிர்வுகளை நாம் கிரகிப்பதால் நம் உடலின் நரம்பு மண்டலங்களில் போய்ச் சேர்கின்றன. இவை இரசாயனமாகி நமது மன உணர்வுகளை மாற்றுகிறது. கீழ்நிலை குணங்களான பயம், கோபம், பொறாமை, குழப்பம், ஆத்திரம் போன்றவற்றிற்கு ஆளாகிறோம்.
சைவ தீட்சை பெறுவதற்கு முன் சைவமாக மாறும்படியும் அதன் பிறகு அதனை விடாமல் கடைப்பிடிக்கும்படியும் ஆலோசனை கூறுகிறார்கள். ஆனால் பலர் தீட்சை பெறாதவர்களை சைவமாக மாறும்படி வலியுறுத்துவதில்லை.
அசைவமாயிருப்பவர்களை விட சைவமாயிருப்பவர்களின் குடும்பத்தில் குறைந்த பிரச்சனைகள் இருப்பதை அறியமுடியும்.
புகழுக்குறிய திருமறைகள் இறைச்சி உண்பதை எதிர்க்கின்றன. யசுர் வேதம் (36.18) பூமியில் நீரிலும் வெளியிலும் வாழும் எல்லா ஜீவராசிகளிடமும் அன்பைப் பொழிய வேண்டுமெனக் கூறுகிறது. 2,200 ஆண்டுக்கு முற்பட்ட நன்னெறிகளின் கருவூலமான திருக்குறள் கூறுகிறது: வேறொரு உயிரைக் கொன்று கிடைத்தது தான் அந்த இறைச்சி என்று மனிதன் உணர்ந்தால் அதை உண்ண மாட்டான்.
"உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்."
(குறள் 257)
இந்துக்கள் புலால் உண்ணுவதற்கு எதிரான காரணங்களை நன்கு அறிந்திருக்கிறார்கள். சிலர் முழுமையாக கைவிட்டு விட்டனர். சுவையான ஆரோக்கியமான சைவ உணவு இருக்கும் போது புலால் வேண்டுவதேன்?
துன்புறுத்திக் கொன்று கிடைத்த இறைச்சியைப்பற்றி நன்கு சிந்தித்துப் பார்ப்பவர்கள் புலால் உண்ண மறுப்பார்கள். உணவு தூய்மையாயிருந்தால் நமது மனமும் இதயமும் தூய்மையாயிருக்கும்.
இந்துக்கள் இதற்காகவும் மற்ற விஷயங்களுக்காகவும் வழிகாட்டியாக அவர்களது குரு, அவர்களது மனச்சாட்சி மற்றும் புலால் மறுப்பதால் விளையும் நன்மைகள் பற்றிய அறிவு முதலியவற்றை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்கின்றனர். முழு சைவ உணவை உண்டு மகிழ்கிறார்கள்.
சில நல்ல இந்துக்களும் அசைவ உணவு உண்கிறார்கள் என்பது உண்மைதான். அவ்வாறே சில இந்துக்கள் சைவமாக இருந்தும் அவ்வளவாக நல்லவர்களாக இருப்பதில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை!.
இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மில்லியன் கணக்கான மக்கள் சைவமாக உள்ளனர். ஏனெனில் அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க விரும்புகின்றனர். புலால் உண்ணுவது அதிகரிப்பதால் தான் வன்முறை அதிகரித்து வருகிறது, அதைத் தவிர்க்கலாம் என்ற மனப்போக்கிற்காக சைவமாகின்றனர். அங்கெல்லாம் சைவ உணவு பற்றி நல்ல நல்ல நூல்கள், சஞ்சிகைகள் “Diet for a New America by John Robbins” , “Vegetarian Times”. “ How to Win an Argument with a Meat-Eater by Mr. Robbins”. போன்றன வெளிவந்துகொண்டிருக்கின்றன.
- ஹவாய் இமாலயன் அகாதமியின் “இந்து சமயம் பற்றிய 10 கேள்விகள்” நூலிலிருந்து.
*

திருவள்ளுவர் உட்பட இந்து ஆன்மீகப் பெரியோர்கள் கொல்லாமையை வற்புறுத்துகிறார்கள். ‘அருள் ஆட்சி ஆங்கில்லை ஊன் தின்பவர்க்கு’ என்பது வள்ளுவர் வாக்கு. எல்லாவற்றிலும் உயர்ந்த அறம் கொல்லாமை (அஹிம்ஸா பரமோ தர்ம:) என்று முன்னோர் தெளிவுறக் கூறியுள்ளனர். திருவள்ளுவரும் ‘புலால் மறுத்தல்’ என்ற அதிகாரத்தைத் துறவற இயலில் வைத்துள்ளார் என்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.
இப்போது சமுதாயம் மாறிவிட்ட நிலையில் நாம் மனித சமத்துவத்துக்கு எதிரானதாகிவிட்ட வர்ணம் என்பதைக் களைய வேண்டியிருக்கிறது.
ஆனால் ஆசிரமம் என்பது வாழ்க்கையின் படிநிலை. பிரம்மசரியம் (மாணாக்க நிலை); கிரஹஸ்தம் (கல்விமுடிந்து சம்பாதிக்கிற காலத்தில் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தை ஏற்படுத்தும் நிலை), வானப்பிரஸ்தம் (குடும்பக் கடமைகளை நிறைவேற்றிவிட்ட பின்னர் பந்தங்களைத் துறந்து காட்டுக்குப் போகும் நிலை); சன்யாசம் (உலகியல் பற்றுக்கள் எல்லாவற்றையும் துறந்து இறைவனை அடையும் பொருட்டுத் தவம் மேற்கொள்ளும் நிலை) ஆகிய நிலைகள் அதே பெயரிலும் வடிவிலும் இல்லாவிட்டால் செயல்முறைப் படிநிலைகளாக இருக்கத்தான் செய்கின்றன. கல்வி, திருமணம், வயது முதிர்ச்சி ஆகியவை ஏற்படத்தான் செய்கின்றன. ஆனால் நாம் நமது மதம் விதித்த அறவழியில் செல்லாமல், இறுதிவரை பொருள்தேடுவதிலேயே கவனமாக இருப்பதால் மாணவன், குடும்பஸ்தன் என்ற நிலைகளைத் தாண்டுவதே இல்லை.
அப்படி அல்லாமல் ஒருவருக்கு மாணவப் பருவத்திலேயும் இறைநாட்டம் வந்துவிடலாம். ஆக, எந்த நிலையில் இருந்தாலும், தன்னில் இருக்கும் இறைத்தன்மையை வளர்ப்பது என்னும் ஆன்மீகப் பாதையை ஒருவர் தேர்ந்தெடுத்துவிட்டால் அவருக்குத் தாவர உணவே சாதகமாக இருக்கும் என்பது இந்து சமயத்தின் பரிந்துரை.
மாமிசம் மனித உணவு அல்ல!
முட்டை, மீன், இறைச்சி, புழு முதலானவையும் மாமிசம் ஆகும்.)
தாவர உணவே மனிதருக்குத் தகுதியான உணவு!
மனிதர் உடலமைப்பு, தாவர உணவு உண்ணும் விலங்குகள் உடலமைப்பு போலவே இருக்கிறது. மாமிச உணவு விலங்கு உடல் அமைப்பு, வேறுபட்டு இருப்பதை எல்லோரும் காணமுடியும்.மனிதர் மற்றும் தாவர உணவு விலங்குகள் பற்கள், நகங்கள் தட்டையாக இருக்கின்றன. ஆனால், பூனை, நாய் முதலான மாமிச விலங்குகளின் பற்களும், நகங்களும் கூர்மையாக இருக்கின்றன.
மனிதரும், தாவர உணவு விலங்குகளும் நீரை உதடுகளால் உறிஞ்சிக் குடிக்கின்றன. ஆனால், மாமிச உணவு விலங்குகள் நாக்கால் நீரை நக்கிக் குடிக்கின்றன. மாமிச உணவு விலங்குகள் பச்சையாக மாமிசத்தை தின்கின்றன. ஆனால், மனிதர் மாமிசத்தை வேக வைத்துப் பக்குவப்படுத்தியே தின்கின்றனர். இவற்றால், மாமிசம் மனிதர் உணவு அல்ல் தாவர உணவுதான் மனிதர் உணவு என்பது தெளிவாகிறது.
தாவர உணவில் சக்தி இல்லை; மாமிச உணவில் சக்தி இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், மிகு பளு தூக்கும் யானை, விரைந்து ஓடும் குதிரை, உழைக்கும் மாடு, பால் தரும் பசு முதலான எல்லாம் தாவர உணவே கொள்கின்றன. “ஹார்ஸ் பவர்”என்று கூறுகிறோம். அந்த “ஹார்ஸ்” குதிரை தாவர உணவே தின்கிறது. பசு தின்னும் தாவரமே பாலாகிறது. அந்தப் பால் சக்தியான உணவு. அந்தப் பாலிலிருந்துதான் நெய் தயாராகிறது. முதலானவை எல்லாம் இலை, தழை, புல் முதலான உணவு உண்பனவே!
இந்த விலங்குகள் தின்னும் தாவர வகை சிலவே. அவை கிடைக்கலாம், சில காலத்தில் கிடைக்காமலும் போகலாம். ஆனால், மனிதருக்கு எத்தனை வகையான உணவு. அரிசி, கோதுமை, பட்டாணி, கடலை, முதலான தானியங்களும், அவரை, தக்காளி முதலான காய்கறிகளும், வாழை, மாம்பழம், முதலான பழங்களும் என பலவகையான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை சேர்த்து (ஸ்டாக்) வைக்கிறான். இவற்றை கொண்டு சக்தியான உணவைப் பெறலாம். பிறகு ஏன் மாமிசத்தின் பக்கம் போகிறான்? அதில் தாவரத்தைக் காட்டிலும் அதிக சக்தி பெறமுடியுமா?
தம் உடலையும், குழந்தைகளையும் மனிதர் எவ்வளவு சிரத்தையோடு காப்பாற்றுகின்றனர். அதே போல விலங்குகள், தம் உடலையும், குட்டிகளையும் சிரத்தையோடு காப்பாற்ற உரிமை இல்லையா?
தனக்கும், தன் குழந்தைக்கும் தீங்கு செய்வாரோடு சண்டை போடுகின்றனர் மனிதர் அதற்காக வழக்கு மன்றம் போகவும் செய்கின்றனர். ஆனால், விலங்குகள் மனிதரோடு சண்டை இட முடியுமா? வழக்கு மன்றம் போக முடியுமா?
தாய், தன் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்தால் எப்படி எல்லாம் வளர்க்கலாம் என்று கற்பனை செய்து மகிழ்கிறாள். அதே போல கோழி தன் முட்டையில் வளரும் குஞ்சு வெளியே வந்தால் எப்படிப் பாதுகாக்கலாம் என்று கற்பனை செய்து மகிழாதா? அந்த முட்டை வெளியே வந்து குஞ்சு வெளியே வரும் முன் அதனை எடுத்துத் தின்பது எவ்வளவு கொடுமை? முட்டை நிலையில் மூச்சு காணப்படுகிறது. என்று அமெரிக்க டாக்டர் கூறியுள்ளார். அதனால், அது மாமிசமே; தாவர உணவு அன்று. அதுமட்டுமல்லாமல் சேவலும் கோழியும் சேர்ந்து தோன்றிய அசுத்த பொருள்களால் ஆனது முட்டை அது உண்ணத்தக்கது அன்று.
தன்னை வீட்டிலிருந்தோ, பணியிலிருந்தோ விலக்கி விட்டால் மனிதன் எவ்வளவு துன்பம் அடைகின்றான்? தண்ணீரில் வாழும் மீனை தரையில் போட்டால் அது எவ்வளவு துடிதுடித்துத் துன்பம் அடைகிறது. அதனைக் கொன்று தின்னுவது கொடுமை! கொடுமை! வெளியேற்றியதால் வேதனை அடைபவனே தண்ணீரை விட்டு வெளியே போட்ட மீனின் வேதனையை அறிய முடியும்.
இப்படி இந்த ஊமை விலங்குகளுக்குக் கொடுமை செய்து துன்பம் தந்து பெற்ற மாமிசத்தை உண்டு மனிதன் நலமாக வாழ முடியுமா? மனிதருக்கு ஒன்றுமே நேராதா?எந்த குற்றமும் செய்யாத நிலையில் பிறக்கும் போதே, குருடு, நொண்டி, ஊமையாக, வறுமையில் ஏன் பிறக்கிறது குழந்தை? காரணம் சொல்ல முடியுமா? கருணையுள்ள கடவுள் இப்படி யாரையும் செய்யமாட்டார். அதனால், முன் பிறவியில் செய்த பாபங்களின் விளைவு இவை என அறிதல் வேண்டும்.
பாபங்கள் ஐந்து என்பர். அவை இம்சை, பொய், திருடு, காமம், பா¢க்ரஹம் (பற்று) இவற்றுள் பெரும் பாபம் எது? உங்களுக்குத் தெரியும். இம்சையே பெரும் பாபம்.உன்னை அடித்தவனை நீ திருப்பி அடித்தால் அது அத்தனை பாபம் அன்று ஆனால், உனக்கு எந்த தீங்கும் செய்யாத விலங்கை கொன்று மாமிசமாகக் தின்னுகிறாயே அது எத்தனை பெரும் பாபம். மகா பெரும் பாபம்.
ஆனால், எல்லா தருமங்களும், சான்றோர்களும், சாஸ்திரங்களும் தன்னை ஒன்றும் செய்யாத விலங்குகளைக் கொன்று தின்னும் பாபி கடவுளை, குருவை, சாஸ்திரங்களைத் தொடும் பாக்கியத்தை இழக்கிறான் என்று கூறுகின்றனர். நல்லோர் தொடர்புகளையும் அவன் இழக்கிறான். அதனால்தான் விரத நாட்களில் மாமிசம் உண்ணுதலை விலக்குகிறான். என்றுமே புலால் உண்ணுதலை நீக்கினால் எவ்வளவு நன்மை அடையலாம்.
மஹாவீரர், புத்தர், ஏசு, இராமன், அனுமான், அல்லா முதலானவர் காலத்தில் மாமிசம் உண்டார்களா?
ஆகையால், மாமிசம் உண்ணுதலை விட்டு அந்த மகா சான்றோர்களைப் போல நாமும் மகான் ஆன்மாவாக ஆக முயற்சிப்போமாக.

இன்று நாம் சாப்பிடுகிற, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளில்,ஏதோ ஒருவகையில் மிருகங்களில் இருந்து பெறப்பட்ட பல வேதிப்பொருள்கள்
சுவைக்காகவும்,நிறத்திற்காகவும்...
கலக்கப்படுகிறது.

இத்தகைய மிருகங்களில் இருந்து பெறப்பட்ட வேதிப்பொருள்களில்
எது நாம் சாப்பிடுகிற உணவில்
சேர்க்கப்பட்டுள்ளது என்பதனை நாம் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.
குறிப்பாக ingredients என்கிற தலைப்பின் கீழ் சேர்மானங்கள்
உணவுபாக்கெட்டின் ஒரு பகுதியில்
வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.
அதில் நீங்கள் கவனிக்க வேண்டியது
E என்று பெரிய ஆங்கில எழுத்தில் ஆரம்பித்து அதன் தொடர்ச்சியாக எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
(நம்மூரில் விற்பனையாகும் உணவுப்பொருள்களின் பாக்கெட்டுகளில் 'E' குறிப்பிடப்படாமல் வெறும் எண் மட்டும் கூட குறிப்பிட்டு இருக்கலாம்)
'E' - என்றால் ஐரோப்பா என பொருள்படும்.
எண்கள் வேதிப்பொருளினை குறிப்பிடும்.
'e' -என்றால் எமல்சிபையர் என பொருள்படும்.
நூற்றுக்கணக்கில் இது போன்ற குறியீடுகள் உலகளவில் இன்றும்
நடைமுறையில் இருக்கிறது.
அவற்றில் சில மிருக (எருது,கோழி மற்றும் பன்றி) இறைச்சிகளில் இருந்தும்,கடலில் இருந்தும் பெறப்படும் வேதிப்பொருள்களை குறிக்கிறது.
அந்த குறியீட்டு எண்கள் மற்றும் அது குறிக்கும் வேதிப்பொருள்கள்.....
E120-
கொச்சினில்
(cochineal)
E441-
ஜெலட்டின்
(gelatin)
E542-
எலும்பு பாஸ்பேட்
(bone phosphate)
E570-
ஸ்டெரிக் அமிலம்
(stearic acid )
E572-
மெக்னீசியம் ஸ்டிரேட் மற்றும்
கால்சியம் ஸ்டிரேட்
(magnesium stearate and calcium stearate)
E585-
பெர்ரோஸ் லாக்டேட் (ferrous lactate)
E620-
குளுட்டாமிக் அமிலம்
(glutamic acid)
E621-
மோனோசோடியம் குளுட்டாமேட்
(monosodium glutamate)
E626-
குவானிலிக் அமிலம்
(guanylic acid)
E631-
டைசோடியம் இனோசினேட்
(disodium inosinate)
E635-
டைசோடியம் 5'-ரிபோநீக்ளியோ டைடுகள்
(disodium 5'-ribonucleotides)
E640 -
கிளைஸின் மற்றும் அது சார்ந்த சோடியம் உப்பு
(glycine and its sodium salt)
என்ன நண்பர்களே....
நீங்கள் சைவப்பிரியர் என்றால், சாப்பிடுவதற்கு முன் உணவு பாக்கெட்டை (பிஸ்கட்,மேகி,சிப்ஸ், பப்பிள் கம்,கேக்,சாக்லேட் என எதுவாகவும் இருக்கலாம்) கொஞ்சம் திருப்பி பாருங்கள்.
மேலே சொன்ன குறியீடுகளில்
ஏதேனும் ஒன்று இருந்தாலும்,அந்த உணவுப்பொருளில் அசைவம் கலந்திருக்கிறது என உணர்ந்து கொள்ளுங்கள்.

thank you:https://www.facebook.com/vegetarian1111/posts/525826480786085
Vegetarian சைவம்