For Read Your Language click Translate

10 January 2016

உடலும் பஞ்சபூதங்களும்

அபானன்  என்னும் வாயு ஆசனவாயிலும் குஹ்யத்திலும், இடை, முழங்கால், வயிறு, அடிவயிறு,துடைகளின் சந்தி, துடைகளில் சஞ்சரிக்கின்றது. இதனுடைய செயலாவது கழிவுகளை - அதாவது திட, திரவக் கழிவுகளை, சிறு நீர் மற்றும் மலமாக வெளியேற்றுவதாகும்.
வியானன்  என்னும் வாயு கண், காது, கணுக்கால்கள் முதலியவற்றிலும்,நாக்கு மற்றும் மூக்கு முதலியவற்றிலும் சஞ்சரிக்கின்றது. இதனுடைய செயல் - பிராணாயாமம், கும்பகம், ரோகம், பூரகம் முதலியனவாம்.
சமானன்  என்னும் வாயுவானது நெருப்புடன் கூடியது. இது உடல் முழுவதும் வியாபித்து, 72,000 நாடித் துவாரங்களிலும்  சஞ்சரிக்கின்றது. இதன் செயலானது உண்ட உணவின் சாரத்தை அருந்திய பொருளின் சாரத்தை கிரஹித்து உடலுக்கு புஷ்டியைக் கொடுக்கிறது.
உதானன்  என்னும் வாயு  கால்களிலும் கைகளிலும் அங்கங்கள் சேரும் இடங்களிலும் சஞ்சரிக்கின்றது.  உடலை, எழுந்திரிக்கச் செய்தல், படுத்தல்,குதித்தல் முதலிய செயல்களைச் செய்யவைப்பதாம்.
 நாகன் முதலான  மற்ற ஐந்து வாயுக்கள் உபவாயுக்களாகும்.
 நாகன் என்னும் வாயு கழுத்திலிருந்து கொண்டு வாந்தியை உண்டு பண்ணும். கண்களினால் பார்க்கவும் செய்யும்.
கூர்மன் என்னும் வாயு கண்களிலிருந்து கண்களைத் திறக்கவும் மூடவும் செய்யும்.
கிருகரன் என்னும் வாயு பசி. தாகம், உண்டாக்குவதுடன் தும்மலை உண்டாக்கவும் செய்யும்.
தேவதத்தன் என்னும் வாயு கொட்டாவி விடுதலையும், சோம்பல் முறித்தல் செயலையும் செய்யவைக்கின்றது.
தனஞ்ஜயன் என்னும் வாயு சோகமடையச் செய்யும்.
கர்ப்பத்திலிருந்து சிசுவை வெளியில் தள்ளும்.
மரணமடைந்த சரீரத்தை விடாமல் சில மணி நேரங்கள் காத்து நிற்கும்.
அக்னியிடமிருந்து கண் என்னும் இந்திரியத்தையும்,  உருவத்தையும் , வெண்மை சிவப்பு என்னும் நிறங்களையும்,  ஜீரணம் செய்தலையும்,பிரகாசத்தையும், பொறுமையின்மை, கொடிய தன்மைகள், இளைத்தல் முதலியவையையும், சக்தியையும்  வெப்பத்தையும் பராக்ரமத்தையும் புத்திசாலித்தனத்தையும் கிரஹிக்கின்றது.
தண்ணீரிலிருந்து  நாக்கு என்னும் இந்திரியத்தையும்,  ரசத்தையும்,குளிர்ச்சியையும், அடர்ந்திருத்தலையும் திரவத் தன்மைகளையும்,வியர்வையையும், உடல் மென்மையாக இருக்கும் தன்மைகளையும் கிரஹிக்கின்றது.
பூமியிலிருந்து  மூக்கு என்னும் இந்திரியத்தையும்,  வாசனையையும், கனத்தையும் தைரியத்தையும் பருமனையும் அடைகின்றது.
தோல், இரத்தம், மாமிசம், மேதஸ் எனப்படும் வகை எலும்பு, மஞ்ஜை,சுக்கிலம் முதலானவை  தாதுக்கள் எனப்படும்.


மனிதனால் உண்ணப்பட்ட உணவு ஜடாக்னியால் ஜீரணிக்கப்பட்டு மூன்று விதமாக மாறுகின்றது.
1. ஸ்தூலமான பகுதி மலமாக மாறுகின்றது.
2. ஸ்தூலமும் சூட்சுமமும் இல்லாத இடைப்பட்ட பகுதி தசையாக மாறும்.
3. சூட்சுமமான பகுதி மனதின் அம்சமாகும்.  ஆகையால் தான் மனமானது அன்னமயமானது என கூறப்படுகின்றது.
தண்ணீரினுடைய ஸ்தூல பாகம் சிறுநீராகின்றது.  நடுப்பாகம் இரத்தத்தை அடைகின்றாது; நுண்ணிய பாகம் பிராணனை  அடைகின்றது.  ஆதலால்,பிராணன் ஜலஸ்வரூபம் எனப்படுகிறது.
அக்னியின் ஸ்தூல பாகம் எலும்புகள் ஆகும். மத்திய பாகம் மஞ்ஞை என்னும் தாது ஆகும். நுண்ணிய பாகம் வாக்கு என்று கூறப்படுகின்றது.
ஆதலால் உலகமானது அக்னி, தண்ணீர் , அன்னம் இவற்றின்  சொரூபமாக உள்ளது.


இரத்தத்திலிருந்து தசை உண்டாகின்றது.
தசையிலிருந்து கொழுப்பு உண்டாகின்றது.
கொழுப்பிலிருந்து எலும்புகள் உண்டாகின்றது.
எலும்பிலிருந்து மஞ்ஞை உண்டாகின்றது.
ரேதஸ் மஜ்ஜையிலிருந்து உண்டாகின்றது.
 நாடிகள் மாமிசச் சேர்க்கையால் உண்டாகின்றது.
வாதம், பித்தம், கபம் முதலானவை தாதுக்கள்  என்று சொல்லப்படுகின்றன.
 நம் உடலிலுள்ள தண்ணீர் 10 உள்ளங்கை அளவிலானது.
உணவின் சாரம் 9 உள்ளங்கை அளவு.
இரத்தம் 8 உள்ளங்கை அளவு.
மலம் 7 உள்ளங்கை அளவு.
கபம் 6 உள்ளங்கை அளவு.
பித்தம் 5 உள்ளங்கை அளவு.
மூத்திரம் ( சிறுநீர் ) 4 உள்ளங்கை அளவு.
தண்ணீர் 3 உள்ளங்கை அளவு.
வஸை என்னும் மாமிஸத் திரவம் 2 உள்ளங்கையளவு.
மஜ்ஜை 1 உள்ளங்கையளவு.
சுக்கிலம் 1/2 உள்ளங்கையளவு.  இந்த சுக்கிலமே பலமிக்கது.

உடலிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை 360 ஆகும். இந்த எலும்புகள் 
1. ஜலஜங்கள் - தாமரை போன்ற வடிவுடனிருப்பவை.
2. கபாலங்கள் - தலையிலுள்ள எலும்புகள்
3. ருசகங்கள் - மாதுளை போன்றிருப்பவை
4.ஆஸ்தரணங்கள் - ஆஸனம் போன்ற எலும்புகள்.
5. நளகங்கள் - கணுக்கால் எலும்புகளாகும்.

சரீரத்திலுள்ள சந்தி எலும்புகள்  ( ஒன்றோடொன்று கூடுமிடத்தில் உள்ள எலும்புகள் ) எட்டு வகையாகும். 
1. ரௌரவங்கள் 2. பிரசரங்கள் 3. கந்த சேதனங்கள் 4. உலூகலங்கள் 5.சமுத்திரங்கள் 6. மண்டலங்கள் 7. சங்காவர்த்தங்கள் 8. வாமன குண்டலங்கள் என எட்டு வகையான சந்தி எலும்புகளின் மொத்த எண்ணிக்கை 210 ஆகும்.
ரோமங்கள் மூன்றரை கோடியாகும்.
தஸரதன் மகனே!  இராமச்சந்திர மூர்த்தியே! என் பிரியமானவனே!
 உடலின் சொரூபத்தினை உனக்கு விளக்கினேன். 
மூவுலகிலும் சாரமற்ற ஒன்று இந்த உடல்.
இதைவிட சாரமற்ற பொருள் வேறு எதுவும் கிடையாது.
அபிமானம் என்னும் கெட்ட அகங்காரத்தால், இந்த உடலை எடுத்தவர்கள்,இப்போது நற்கதி அடையத்தக்க சிறந்த உபாயங்களைத் தேடுவதில் புத்தியை வளர்த்துக் கொள்வதில்லை.
இராமனே!  சந்தேகம் என்னும் தீ உன்னுள் வளர்ந்து கொண்டிருக்கின்றது. அறிய வேண்டியிருப்பின், மனதினுள் வையாது எம்மிடம் கேட்பாயாக!
தன் உள்ளத்தினை உணர்ந்த இறைவனின் கூற்றினைக் கேட்ட இராமரும் கேட்க ஆரம்பித்தார்.


thank you:Sps ஆலோசனை மையம் 

‘வளையல் அணியும் பழக்கத்தை காரணமாகத் தான் ஏற்படுத்தியுள்ளார்கள் நம் முன்னோர்

‘‘வளையல் அணியும் பழக்கத்தை காரணமாகத் தான் ஏற்படுத்தியுள்ளார்கள் நம் முன்னோர்.!
‘‘வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது ஏற்படும் ஒலி, நமக்குள் பாசிட்டிவ் எண்ணங்களை உண்டு பண்ணிக்கொண்டே இருக்கும். நமது எண்ணங்கள் தெளிவு பெறும். மூளையின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாகும். நாடி நரம்பில் படும்படி அணியப்படும் வளையல், மேலும் கீழுமாக அசைவுறப் பெறுவதால் ஒரு சின்ன சூடு உண்டாகும். இது உடலின் ரத்த ஓட்டத்தையும், இதயத் துடிப்பையும் சீராக வைத்திருக்கும்.
இப்போது பல வடிவங்களில் வளையல்கள் கிடைக்கின்றன. ஆனால்,பாரம்பர்ய வட்ட வடிவ வளையல் அணிவதே சிறந்தது. வளையலின் சிறப்பம்சமே, அதன் வட்ட வடிவம். இதனால் எப்போதும் ஒரு சந்தோஷ மனநிலையிலேயே இருப்போம். தொடர்ந்து குலுங்கக் குலுங்க வளையல் அணிபவர்களுக்கு, ரத்த அழுத்தம் வராது. சீரற்ற மாதவிடாய் ஏற்படாமலிருக்கும்.
தங்கம், வெள்ளி, கண்ணாடி மற்றும் பித்தளை வளையல்கள் அணிவது பரிந்துரைக்கத்தக்கவை. பருமனான உடல்வாகு கொண்டவர்கள் செம்பு வளையல்கள் அணியலாம். உடலில் தேவையில்லாத கொழுப்பை கரைக்க அது உதவும். பித்தளை வளையல் கனமாக இருக்கும். அதனால், கைகளில் இருக்கும் பிரெஷர் பாயின்ட்டுக்கு நல்லது.
`சீ ஷெல்’ (சிப்பி, கிளிஞ்சல்) வளையல் கள் அணிந்தால்,வாயுத்தொல்லையில் இருந்து  நிவாரணம் கிடைக்கும். பிளாஸ்டிக் வளையல்கள் அணிவதால் பயனேதும் இல்லை’’, கர்ப்பிணிப் பெண்கள் வளையல் அணிய வலியுறுத்தப்படுவதன் அறிவியல் காரணத்தையும்.
‘‘கர்ப்பம் தரித்த நாளில் இருந்தே பெண்கள் தங்க வளையல் அணிவது நல்லது. தங்கம், ஒரு சிறந்த ஆன்டிபயாடிக்காகச் செயல்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். வயிற்றில் இருக்கும் குழந்தையும் நல்ல மூளை செயல்பாட்டுடன் வளரும். பின், வளைகாப்பு நாளில் இருந்து கண்ணாடி வளையல் அணிந்துகொள்ள
லாம். குழந்தைக்கு அதன் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும்,கர்ப்பப்பைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குழந்தையின் மூளை சுறுசுறுப்புடன் இருக்கும்.  பிரசவத்துக்குப் பின் ஏதாவது ஒரு வகை வளையல் கண்டிப்பாக அணிய வேண்டும்’’, வளையல்களை எப்படி அணிய வேண்டும்.
‘‘மணிக்கட்டில் இருந்து கைமூட்டு வரை, சின்னதில் இருந்து பெரிதாக வளையல் அணிவது சிறப்பு. தளர்வாக வளையல்கள் அணிய வேண்டாம். கையில் ஒட்டி உரசிக்கொண்டே இருப்பதுபோல, சின்ன வளையல்களாக அணியலாம். ஃபேஷனுக்காக ஒரு வளையல் மட்டும் அணிவது, ஒரு கையில் மட்டும் வளையல் அணிவதால் எல்லாம் பலன் எதுவும் கிடைக்காது. தமிழ்நாட்டில், மங்களகரமான நிறங்கள் என்பதால் பச்சை மற்றும் சிவப்பு நிற வளையல்களைத்தான் சடங்கு, திருமணம், வளைகாப்பு என சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பயன்படுத்துவார்கள். குணம் பெற உதவும் சக்தி பச்சை நிறத்துக்கு உள்ளது என்பதால்தான் மருத்துவமனைகளில் பச்சை நிறத்தைப் பயன்படுத்தியிருப்பார்கள்.
ஊதா வளையல்கள், முடிவெடுக்கும் திறனை அதிகரிக்க செய்யும். பர்பிள் வளையல்கள், சுய சுதந்திர எண்ணத்தை அதிகரிக்கும். மஞ்சள் நிற வளையல்கள், பாசிட்டிவ் எண்ணத்தைக் கொடுக்கும். கறுப்பு நிற வளையல்கள், மன தைரியத்தை அதிகரிக்கும். தங்கம் மற்றும் வெள்ளி வளையல்கள், எதிர்மறை எண்ணங்கள் நம்மை அண்ட விடாது!’’.
இனி, ஆரோக்கியத்தை நினைத்தும் அணிவோம் வளையல்!

வளையல் தகவல்!
உலகிலேயே அதிகளவில் வளையல் உற்பத்தியாகும் இடம்… இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் நகரம்.
ஹைதராபாத்தில் உள்ள லாட் பஜார், வளையலுக்கு உலகப்புகழ் பெற்ற சந்தை… குறிப்பாக, முத்து வளையல்களுக்கு!
கண்ணாடி வளையல்கள் வட இந்தியாவில் பிரோஜாபாத் என்னுமிடத்தில் அதிகமாக தயாரிக்கப்படுகின்றன.

விளக்கேற்றும் பலன்கள்


காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும்.
பௌர்ணமியன்று விளக்கேற்றும் பலன்கள் :
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று திருவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பலன்
நடைபெறும்.
சித்திரை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும்.
வைகாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் விவாக பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும்.
ஆனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் புத்திர பாக்கியம் ஏற்படும்.
புரட்டாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகும் .
ஐப்பசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசிப்பினிகள் நம்மை விட்டு அகலும் .
கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும், நிலைத்த புகழ் ஏற்படும் .
மார்கழி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் துன்பம் அகலும் .இன்பங்கள் வந்து சேரும் .
பங்குனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தர்ம புண்ணிய சிந்தனைகள் அதிகரிக்கும்.
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்
யாருக்கு என்ன எண்ணெய்
(விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.)
கணபதி - தேங்காய் எண்ணெய்
நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
ருத்திரர் - இலுப்பெண்ணெய்
பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்
எண்ணையும் அதன் பயன்களும்
விளக்கு எண்ணெய் - துன்பங்கள் விலகும்
பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் - பீடை விலகும். எம பயம் அணுகாது
ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.
இலுப்பை எண்ணெய் - பூஜிப்பவருகும், பூஜிகப்படும்
இடத்துக்கும் விருத்தி உண்டு
கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது
தீபம் ஏற்றும் திசைகள்
கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்
மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்
தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.
வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தட ை, சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.
விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள்
ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும்
திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும ்
வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்
சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது.
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை.
இதற்கு ஒரு காரணமும் உண்டு.
திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள்.
எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது
திரிகளும், பயன்களும்
குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும். வீட்டில் மங்களம் நிலைக்கும்.
* வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி மனச் சாந்தி உண்டாகும். புத்திரபேறு உண்டாகும்.
* தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
* வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.வறுமையைப் போக்கும். கடன் தொல்லை தீரும்.
* புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.
* சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
* வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.
வளம் பெருக்கும் அகல்:
கார்த்திகை மதம் பௌர்ணமி அன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நேரத்தில் வீட்டு முற்றங்களில் தீபம் ஏற்றிவைத்தால் அந்த இல்லத்தில் ஐஸ்வரியம் பெருகும் என்பார்கள்.
இந்தநாளின் மற்ற விளக்குகளை விட அகல் விளக்கு ஏற்றுவதே உத்தமமானது என்கிறது ஆன்மீகம்.
அகல் என்பதற்கு விரிவடைதல் என்ற அர்த்தமும் உண்டு.
வாழ்க்கை அனைத்து வசதிகளுடன் விரிவடைந்து வளம் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாடு
விளக்கேற்றும் திசைகள்
1. வடக்குத்திசை - தொழில் அபிவிருத்தி. செல்வம் சேரும்.
2. கிழக்குத்திசை - சகல சம்பத்தும் கிடைக்கும்.
3. மேற்குத்திசை - கடன்கள் தீரும். நோய் அகலும்.
4. தெற்குத்திசை - இந்த திசையில் தீபம் ஏற்றக்கூடாது
விளக்கேற்றும் எண்ணெய் வகைகள்.
1. பசு நெய் - மோட்சம் கிடைக்கும். பாவங்கள் தீரும்.
மகாலட்சுமி அருள் கிடைக்கும்.
2. விளக்கெண்ணெய் - குடும்ப சுகம் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
3. இலுப்பையெண்ணெய் - குலதெய்வ அருள் கிடைக்கும். முன்னோர் சாபங்கள், முற்பிறவிப் பாவங்கள் நீங்கும்.
4. நல்லெண்ணெய் - கடன்கள் தீரும். நோய்கள் நீங்கும்.
5. தேங்காயெண்ணெய் - வினாயகரிற்கு மட்டும் தான் இதில் தீபமேற்ற வேண்டும். திருமணத்தடை நீங்கும்.
6. முக்கூட்டு எண்ணெய் - பசுநெய், விளக்கெண்ணெய், இலுப்பையெண்ணெய் மூன்றும் சமஅளவில் கலந்தது முக்கூட்டெண்ணெயாகும்.
இதில் தீபம் ஏற்றுவதால் தேவ ஆகர்~ணம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். செல்வம் சேரும்.
ஐந்தெண்ணெய் தயாரிக்கும் போது வேப்பெண்ணெய் சேர்க்கக்கூடாது.
பசுநெய்யுடன் நல்ணெ;ணெய் கலப்பதும் தவறானது.
எந்த காரணத்தைக் கொண்டும் கடலையெண்ணெய், சன் ஆயில் கொண்டு தீபம் ஏற்றக்கூடாது.
இதனால் தெய்வ சாபம், தரித்திரம் உண்டாகும்
....

thank you:https://www.facebook.com/ananthanarayanan.ramaswamy/posts/590944577641185

29 December 2015

தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்

உலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த, ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்

 பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை? இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்! உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை! இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்? இதை நாம் ‘பேடண்ட்’ எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்!
தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று! அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று. ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும்! தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள்,டாதி ஒன்பது எழுத்துக்கள்,பாதி ஐந்து எழுத்துக்கள்,யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள்!
சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை!
1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரை
காலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.16-21980 சனிக்கிழமை அமாவாசையன்று கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம் சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது. உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர். ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும்!
அந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்‘புராதனமான கணித சாஸ்திர வெற்றி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்:
“இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது.எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு.
நாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர கிரகணம் தோன்றும், கிரகண அளவு (பரிமாணம்)இவ்வளவு,இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள்.அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது.கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நாஸ்டர்டாமஸ்


நாஸ்டர்டாமஸ் என்னும் ஐரோப்பிய தீர்க்க தரிசி !

By  |

நம் நாட்டு சித்தர் பெருமக்களை ஒப்பிடும்போது , இவை எல்லாம் ஒன்றுமே இல்லை. என்ன பண்ணுவது? அவர் தான் மேலை நாட்டில் பிறந்து விட்டாரே ! அற்புதம் என்று தோன்றும் விஷயங்களை அவர்கள் தான் விளம்பரப் படுத்துவதில் ஜித்தர்களே. அவரை வைத்து எழுதிய புத்தகங்கள் அனைத்தும், மில்லியன் டாலர்களை சம்பாதித்துக் கொடுத்துள்ளன. சரி, நமது நண்பர்களுக்காக – அவரைப் பற்றி ஒரு சில பதிவுகள் . இந்த தகவல்கள், தற்செயலாக நான் படிக்க நேர்ந்தது. நமது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நிச்சயமாக சுவாரஸ்யமாக இருக்கும்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. ‘நூற்றாண்டுகள்’ என்ற இவரது நூல் 942 செய்யுட்களைக் கொண்டது. ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு வரிகள் உள்ளன. இவைகள் காண்டமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு காண்டத்திலும் நூறு பாடல்கள் உள்ளன..
14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது. ஆனால் ஹிந்து மதம் மிக உயரிய நிலையை இந்த நூற்றாண்டில் அடையப் போகிறது என்பதையும் இவர்தான் கூறியுள்ளார். லண்டனில் ஏற்பட்ட மாபெரும் தீ விபத்து, பிரெஞ்சுப் புரட்சி, ஹிட்லரின் எழுச்சியும் வீழ்ச்சியும், கென்னடியின் கொலை போன்றவற்றை இவரால் எப்படித் துல்லியமாகக் கூற முடிந்தது என்பது ஆச்சரியகரமான விஷயம்தான்!
லத்தீனில் ஆழ்ந்த புலமை பெற்ற நாஸ்டர்டாமஸ் அம்மொழியின் செழுமையான வார்த்தைகளைக் கையாண்டிருப்பதால் அதன் உள் அர்த்தம் புரியாமல் அறிஞர்களும் ஜோதிட ஆர்வலர்களும் இன்று வரை அச்சொற்பொருள்களை அறிய தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளில் இந்நூலை முடித்து 1555ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி வெளியிட்டார். நூல் அச்சிடப்பட்ட மேஸ்பான்ஹோம் பிரஸ்ஸின் முன்னே வெகு தூரத்திற்கு நீண்ட வரிசையில் மக்கள் நின்று இதை வாங்கி மகிழ்ந்தனர். ஆனால் சங்கேத மொழியில் பலன்களைக் கொண்டுள்ள பாடல்கள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தின
அவரது மகனுக்கே அவர் ஒரு எச்சரிக்கையை சங்கேத மொழியில் அளித்திருந்தார். ஒரு கடித வடிவில் அது இருந்தது, சீஸர் என்ற பெயருடைய அவரது மகன் 22ம் வயதில் தன் தந்தையின் பெயரைத் தீய வழியில் பயன்படுத்துவார் என்றும் அது அவருக்கு நலம் பயக்காது என்றும் எச்சரித்திருந்தார் நாஸ்டர்டாமஸ். இதை அலட்சியப்படுத்திய சீஸர், தந்தையைப் போல் பலன்கள் கூற வேண்டும் என்ற ஆர்வத்தில் விவாரிஸ் என்ற நகர் அழியப் போகிறது என்று ஆரூடம் கூறினார். ஆனால் அரசாங்கப் படைகளின் பாதுகாப்பில் இருந்த அந்த நகரத்திற்கு ஒரு ஆபத்தும் நேரவில்லை. மக்கள் சீஸரைச் சூழ்ந்து கொண்டு எப்போது நமது நகரம் அழியப் போகிறது என்று கேட்கலாயினர். பளீரென்று சீஸர் ‘இன்னும் மூன்று நாட்களில்’ என்றார். அடுத்த நாள் இரவு அவரே நகருக்குத் தீ வைக்க முயன்ற போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு அரசாங்க வீரர்களால் கொல்லப்பட்டார்.
இதே போல நடந்த இன்னொரு விசித்திரமான சம்பவம் அவர் புகழை வெகுவாகப் பரப்பி விட்டது. புகழ் பெற்ற மருத்துவராகவும் தீர்க்கதரிசியாகவும் அவர் திகழ்ந்ததால் பிரான்ஸிலுள்ள பெரும் தனவந்தர்களும் பிரபுக்களும் அவரை அழைத்துத் தங்கள்குறைகளைப் போக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்தது, ஒரு சமயம் லொரெய்ன் என்ற மாகாணத்தில் இருந்த பெயின்ஸ் கோட்டையின் உரிமையாளரான லார்ட் ப்ளோரின்ஸ்வில்லி அவரை அழைத்தார். அவரது தாயாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பிரபு ப்ளோரின்ஸ்வில்லி கேட்டுக் கொள்ளவே சலான் என்ற தனது நகரிலிருந்து பயணப்பட்டு லொரெய்ன் வந்து தன் சிகிச்சையைத் தொடங்கினார் நாஸ்டர்டாமஸ். சீக்கிரமே அவர் குணமடைந்தார். இதனால் மனம் மகிழ்ந்த பிரபு தன் தாயார் குணமடைந்ததைக் கொண்டாட ஒரு பெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். விருந்து நடக்கும் நாளன்று காலையில் தோட்டத்தில் நாஸ்டர்டாமஸுடன் அவர் உலாவச் சென்றார். அங்கே ஒரு இடத்தில் இரண்டு குட்டிப் பன்றிகள் இருந்தன. ஒன்றின் நிறம் கறுப்பு. இன்னொன்றின் நிறம் வெள்ளை. அதைச் சுட்டிக் காட்டிய ப்ளோரின்ஸ்வில்லி நாஸ்டர்டாமஸிடம் கிண்டலாக “இந்த இரண்டு பன்றிகளின் எதிர்காலம் பற்றிச் சொல்ல முடியுமா” என்று கேட்டார். நாஸ்டர்டாமஸின் உண்மையான பெருமை அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
இரண்டு பன்றிகளையும் உற்றுப் பார்த்த நாஸ்டர்டாமஸ் ப்ளோரின்ஸ் வில்லியிடம் “இதோ இந்த கறுப்புப் பன்றி ஒரு ஓநாய்க்கு உணவாகப் போகிறது. இதோ இந்த வெள்ளைப் பன்றி நமக்கு இரவு விருந்தில் உணவாகப் போகிறது” என்றார். ப்ளோரின்ஸ்வில்லி இதைப் பொய்யாக்கி விட வேண்டுமென்று எண்ணம் கொண்டு தனது சமையல்காரரை ரகசியமாக அழைத்து கறுப்புப் பன்றியை விருந்து உணவிற்குக் கொல்லுமாறு கட்டளையிட்டார். இரவு விருந்தில் தனது அருகில் உட்கார்ந்திருந்த நாஸ்டர்டாமஸிடம் “உங்கள் கூற்றுப் பொய்யாகி விட்டது. இதோ நாம் சாப்பிடுவது கறுப்புப் பன்றியைத்தான்” என்றார். நாஸ்டர்டாமஸோ சிரித்தார். “இல்லை, இது நான் சொன்ன வெள்ளைப் பன்றிதான்” என்றார். உடனே பிரபு தன் சமையல்காரரை அழைத்தார். சமையல்காரர் நடந்ததை விளக்கினார். “கறுப்புப் பன்றியைக் கொன்ற பின்னர் சில நிமிடம் நான் வெளியே போனேன். அப்போது ஒரு நொண்டி ஓநாய் உள்ளே வந்து அந்த மாமிசத்தை உண்டு விட்டது. வேறு வழியின்றி வெள்ளைப் பன்றியையே சமைத்தேன்” என்றார். இந்த விஷயம் வெளியில் பரவவே நாஸ்டர்டாமஸின் புகழ் பெருமளவில் பரவியது. அவரை பய பக்தியுடன் அனைவரும் வணங்கினர்.
இன்னொரு சம்பவம்: ஒரு நாள் மாலையில் அவரைத் தாண்டிச் சென்ற ஒரு இளம் பெண் தனது மாலை வணக்கத்தைத் தெரிவித்து அருகிலுள்ள காட்டில் சுள்ளிகளைப் பொறுக்கப் போவதாகச் சொன்னாள். நாஸ்டர்டாமஸும் அவளிடம் “மாலை வணக்கம் இளம் பெண்ணே” என்று கூறினார். சற்று நேரம் கழிந்து இரவான போது அவள்திரும்பி வந்தாள். அவருக்குத் தனது இரவு வணக்கத்தைத் தெரிவித்தாள். நாஸ்டர்டாமஸ், “மாலை வணக்கம் கூறிய போது இளம் கன்னியாகப் போனாய்; இப்போது இளம் மனைவியாக வந்து விட்டாயே” என்று சிரித்துக் கொண்டே கூறினார். அரண்டு திகைத்துப் போன அவள் ஓடியே விட்டாள். தனது காதலனைக் காட்டில் சந்தித்த அவள் கன்னிமை இழந்ததை நாஸ்டர்டாமஸ் போகிற போக்கில் கூறியது அவரது எதையும் உணரும் ஆற்றலை உணர்த்தியது. நாளுக்கு நாள் அவர் புகழ் பெருகவே அவர் வாயிலிருந்து என்ன சொல் உதிரப் போகிறது என்பதை அனைவரும் அறிய ஆவலுற்றனர். அவர் மரணத்திற்குப் பின்னும் கூட அவர் ஆரூடம் பலித்ததுதான் விசித்திரத்திலும் விசித்திரம்!
நாஸ்டர்டாமஸ் சிறுவயதில் யூதர்களின் மொழியான ஹீப்ரு மொழியைத் தன் தாத்தாவிடமிருந்து கற்றுக் கொண்டார். லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றதோடு கணிதத்திலும் தேர்ச்சி பெற்றார். இத்தோடு ஜோதிடத்தின் மர்மங்களையெல்லாம் ஆழ்ந்து கற்று அதில் நிபுணரானார். தாத்தா இறந்தவுடன் தன் சொந்த ஊருக்குத் திரும்பி பெற்றோருடன் வாழலானார். இயற்கையாகவே செழுமையான குடும்பமாக இருந்ததால் அவர் வாழ்நாளில் ஒரு நாளும் பணத்திற்காகத் துன்பப்பட்டதுமில்லை; செலவழிக்கத் தயங்கியதுமில்லை!
பதினேழாவது வயதில் சட்டம் பயில அவிக்னான் என்ற பெரிய நகருக்கு அவர் சென்றார். அங்கு அவரது புத்தி சாதுரியத்தால் அனைவரையும் விஞ்சி நின்றார். ஆயினும் அவர் பைபிளுக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலாகச் சொல்லவே அவரது பெற்றோர் அவருக்குத் தண்டனை கிடைத்து விடும் என்று பயந்து அவரை ஊருக்குத் திரும்பி வரச் சொல்லி வற்புறுத்தினர். சொந்த ஊருக்கு வந்த நாஸ்டர்டாமஸ் பின்னர் மாண்ட்பெல்லியர் என்ற நகருக்குச் சென்று தனது 19ம் வயதில் மருத்துவம் பயில ஆரம்பித்தார். 1526ல் பெரிய மருத்துவரானார்.
சலான் என்ற நகரில் அவரது வீட்டில் மேல் மாடியில் ஒரு சிறிய அறை இருந்தது. அதைத் தனது பணிகளுக்கான அறையாகக் கொண்ட அவர் அதில் அடிக்கடி தீவிர தியானத்தை மேற்கொண்டு சமாதி நிலையை அடைந்தார். அவர் அகக்கண்ணில் எதிர்காலம் பற்றிய காட்சிகள் தோன்றலாயின அவர் எதிர்காலத்தில் பயணிக்கும் காலப் பயணியாக மாறித் தனக்குப் புலப்பட்டதை எல்லாம் குறித்துக் கொண்டார். அதன் விளைவுதான் அவரது ‘செஞ்சுரீஸ்’ என்ற எதிர்காலக் கணிப்பு நூல்!.
அந்நூலில் சங்கேத பாஷையில் அமைந்த அவரது பாடல்களில் இருந்து சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.
மூன்றாம் காண்டத்தில் 57வது க்வாட்ரெய்னில் (நான்கு வரிச்செய்யுள்) உள்ள நான்கு வரிகள் இவை:-
பிரிட்டிஷ் தேசம் ஏழு முறைகள் மாறுதலைச்சந்திக்கும்
290 ஆண்டுகளில் ரத்தக் கறை தோயும்
ஜெர்மனியில் விடுதலைக்கு ஆதரவிருக்காது
துருக்கிய காலிப்கள் மாறியிருக்கும் ரஷியாவைக் காண்பர்
இங்கிலாந்து சந்தித்த ஏழு மாறுதல்கள்
1)1485ல் பெஸ்வொர்த்தில் நடந்த போர். இங்கிலாந்தை ட்யூடர் வம்சம் ஆள ஆரம்பித்தது
2)1533ல் ரோமுடனான தொடர்பை எட்டாம் ஹென்றி முறித்துக் கொண்டார்.
3)1553ல் ஹென்றியின் மகள் மேரி ரோமன் கத்தோலிக்க மதத்தை மீண்டும் கொண்டு வந்தார். ப்ராடஸ்டண்டுகள் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர்
4)1558 மேரியின் ஒன்றுவிட்ட சகோதரி ப்ராடஸ்டண்டு மஹாராணி ஆனார்.
5)1649ல் பிரிட்டிஷ் அரசர் முதலாம் சார்லஸின் தலை பொதுமக்கள் முன்பாக வெட்டப்பட்டது. ஆலிவர் க்ராம்வெல் சர்வாதிகாரியானார்.
6)1688ல் முதலாம் சார்லஸின் மகன் இரண்டாம் ஜேம்ஸ் செட்ஜ்மூர் போரைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது
7)1775ல் பங்கர் ஹில் போரைத் தொடர்ந்து அமெரிக்கா பிரிட்டனுடனான தொடர்பை முறித்துக் கொண்டது. உலகில் வானளாவிய அதிகாரம் கொண்டிருந்த பிரிட்டிஷ் வீழ்ச்சியை நோக்கிச் சரிய ஆரம்பித்தது. அமெரிக்கா உலகின் உன்னத இடத்தை நோக்கி நடை போட ஆரம்பித்தது.
இதே போல ஒவ்வொரு பாடலும் ஒரு எதிர்காலக் காட்சியைக் காட்டுவது வியப்பூட்டுவதாக உள்ளது.
ஹிந்து மதம் பற்றிய நாஸ்டர்டாமஸின் எதிர்காலக் கணிப்பு இரண்டாம் காண்டத்தில் 13வது பாடலாக மலர்கிறது:-
ஆன்மா இல்லாத உடல் இனியும் புனிதமாகக் கருதப்படமாட்டாது
இறந்த தினத்தன்று ஆன்மா அடுத்த பிறவியை நோக்கிப் பயணிக்கிறது
இறைவனின் நினைப்பு ஆத்மாவை சந்தோஷத்திற்குள்ளாக்கும்
என்றுமுள்ள அக்ஷரத்தைக் கண்டவுடன்.
‘இதர மதங்கள் மறுபிறவியை ஏற்பதில்லை. ஹிந்து மதம் ஒன்றே உடல் ஆத்மாவிற்கு ஒரு சட்டை தான்; நலிந்து கிழிந்த சட்டையை உதறுவது போல ஆன்மா பழைய சரீரத்தை உதறி விட்டு அடுத்த சரீரத்தை நோக்கிச் செல்கிறது என்று கூறுகிறது. இறுதி வரியில் வரும் அக்ஷரம் ஓம் என்பதாகும். ஆக மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தும் ஹிந்து மதக் கொள்கை உலகில் ஓங்கி உயரும் என்பதை நாஸ்டர்டாமஸ் இந்தப் பாவில் தெளிவாக விளக்குகிறார்’.
இப்படி ஒரு விளக்கத்தைத் தருபவர் பெங்களூரைச் சேர்ந்த திரு ஜி.எஸ்,ஹிரண்யப்பா. இவர் ஹிந்து டெஸ்டினி இன் நாஸ்டர்டாமஸ் என்ற நூலில் ஹிந்து மதம் பற்றி நாஸ்டர்டாமஸ் பல பாடல்களில் பூடகமாகக் கூறியுள்ளதைத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
நாஸ்டர்டாமஸின் பாடல்களை விளக்கி உலகின் அனைத்து மொழிகளிலும் ஆயிரக்கணக்கான நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தகுந்த ஒரு செய்தியாகும்!

ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்

விநாயகர் துதி (மேஷம்)
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை…
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியுள் வைத்தபடி போற்றுகின்றேனே.
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக ! விரைகழல் சரணே !
முருகன் துதி (ரிஷபம்)
பேர் ஆதரிக்கும் அடியவர்தம்
பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும்
பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
பெருமான் என்னும் பேராளா!
சேரா நிருதர் குல கலகா!
சேவற்கொடியாய் ! திருச்செந்தூர்த்
தேவா ! தேவர் சிறைமீட்ட
செல்வா ! என்று உன் திருமுகத்தைப்
பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர்
பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா !
வா, வா, என்று உன்னைப் போற்றப்
பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால்
வாராது இருக்க வழக்கு உண்டோ !
வடிவேல் முருகா ! வருகவே !
வளரும் களபக் குரும்பை முலை
வள்ளி கணவா ! வருகவே !
பெருமாள் துதி (மிதுனம்)
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று !
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவு மொன்றாய் இசைந்து !
நரசிம்மர் துதி (கடகம்)
அண்ட சராசரங்களில் நிறைந்த சிம்மன்
அகிலமும் தானாகி அறிவு தந்த சிம்மன்
தொண்டரின் தூதாகி துணை வந்த சிம்மன்
துஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சிம்மன்
மீனாகி வந்து சதுர்வேதம் காத்த சிம்மன்
ஆமையாய் மிதந்து மலை தாங்கி நின்ற சிம்மன்
வராகமாய் பூதேவியை ரக்ஷித்த சிம்மன்
பிரகலாத ஆழ்வானின் பிரசன்ன சிம்மன் !
அனுமன் துதி (சிம்மம்)
விரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய்
உறைவார் முடிவே உணரா முதலோன்
கரைவார் நிறைவே கருதாதவன் போல்
உறைவான் மறையாய் ஒரு நீதியனே !
கண்டேன் ஒரு சீதையையே
கருதேன் இனிய ஸ்ரீராமனையே நான்
வென்றேன் எனவே விழைந்தானையே நான்
கொண்டேன் மனமே குலம்வாழ் வதற்கே !
சரமே தொளையா சகமே மறவா
சரீரா அனுமா ஜமதக் கினிநீ
உரமே உறவே உறவோய் பெரியோய்
உயர்வே அருள்வாய் திருமாருதியே !
கோவிந்தன் துதி (கன்னி)
ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ,
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்,
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே,
நெடியானே ! வேங்கடவா ! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே !
ராகவேந்திரர் துதி (துலாம்)
நெஞ்சத்திலே என்றென்றும் நிலைக்கின்ற ஆலயம்
நாவினிக்கப் பாடி நின்றால் நலமளிக்கும் ஆலயம்
பஞ்சம்பசி துடைக்கின்ற பாராளும் ஆலயம்
பரந்தாமன் அருள்பெற்ற புண்ணியனின் ஆலயம்
கொஞ்சுதமிழ்ப் பாவினிலே கோபுரமாம் ஆலயம்
காவியுடை போர்த்திநின்ற கண்கொள்ளா ஆலயம்
வஞ்ச நெஞ்சம் உடையோரை மாற்றிடுமே ஆலயம்
மாந்தர்குறை தீர்க்கின்ற மகிமை மந்த்ராலயம் !
சிவ துதி (விருச்சிகம்)
நீருளான் தீயுளான் அந்தரத்துள்ளான்
நினைப்பவர் மனத்துள்ளான் நித்தமா ஏத்தும்
ஊருளான் எனதுரை தனதுரையாக
ஒற்றைவெள் ளேறு உகந்தேறிய வொருவன்
பாருளார் பாடலோ டாடல் அறாத
பண் முரன்றஞ்சிறை வண்டினம் பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வதியல்பே !
செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
செல்வ மதிதோய செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே !
துர்க்கை துதி (தனுசு)
இசைதந்து இல்வாழ்வின் இடர்நீக்கிக் காப்பவளே,
விசையுடனே மணமாலை விருப்பமொடு அளிப்பவளே,
திசையெல்லாம் திருவிளங்கத் திருவடியால் நடந்தவளே,
அசைவற்றபொருளதையும் ஆட்சிசெய்வாய் துர்க்கையளே !
துர்க்கை துதி (மகரம்)
சேவித் தெழுந்திருந்தேன் தேவி வடிவங் கண்டேன்
வச்சிரக் கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்
முத்துக்கொண்டைகண்டேன்முழுப் பச்சை மாலை கண்டேன்.
சவுரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக் கண்டேன்
பின்னலழகு கண்டேன் பிறைபோல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங்கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலென்ன கணையாழி மின்னக் கண்டேன்
அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா
வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரே உன்றன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே யுன்றன் மலரடியில் நான் பணிந்தேன் !
சிவன் துதி (கும்பம்)
ஈசனடி போற்றி யெந்தையடி போற்றி
தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும்மலை போற்றி !
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே !
ஸ்ரீரங்கநாதர் துதி (மீனம்)
பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா ! அமரரேறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !
வேதநூற் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்,
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே !
ஊரிலேன் காணியில்லை, உறவுமற் றொருவரில்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே ! ஓ கண்ணனே ! கதறுகின்றேன்
ஆருளர் களைக ணம்மா ! அரங்கமா நகருளானே !

பஞ்சாங்களின் மூலம் மழையின் அளவை தெரிந்து கொள்ளகூறப்பட்டுள்ள கணித முறை.....

நமது பஞ்சாங்களின் மூலம் மழையின் அளவை தெரிந்து கொள்ள கூறப்பட்டுள்ள கணித முறை.....
அந்த,அந்த வருடத்திற்க்கான சாலிவாகன சகாப்தத்தை 8 ஆல் பெருக்கி 9 ஓன்பதால் வகுக்க ,ஈவு போக,மீதி
‪#‎ஒன்றானால்‬ வர்த்தமேகம் என்று பெயர் அதாவது புன்மழையாம் அதாவது மழைக் குறைவு எனவும்.
‪#‎இரண்டானால்‬ கங்கு வர்த்த மேகம் என்று பெயர் அதாவது புயல் வீசும் என்றும்...ஆக வெறும் புயல் என்று மட்டும் என்று அறியலாம்.
‪#‎மூன்றானால்‬ புஷ்கரை மேகம் என்றும், பிரளயமாய்ப் பொழியும் என்றும்.
‪#‎நான்கானால்‬ துரோண மேகம் என்றும் அதாவது வெள்ளப்பெருக்கேற்படும் என்றும்.
‪#‎ஐந்தானால்‬ காள மேகம் என்றும் அதாவது காற்றும் மழையும் கலந்து வீசும் என்றும்.
‪#‎ஆறானால்‬ நீல மேகம் என்றும் அதாவது பெய்த இடத்தே பெய்து மற்ற இடத்து பொய்க்கும் என்றும்.
‪#‎ஏழானால்‬ வருண மேகம் என்றும் அதாவது வெகு மழை பொழியும் என்றும்.
‪#‎எட்டானால்‬ வாயு மேகம் என்றும், மழை பொய்த்து வறட்சி மிகும் என்றும்.
‪#‎ஒன்பதானால்‬ தமோ மேகம் என்றும்,நல்ல மழை பொழிந்து சுபிட்சம் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது....
அவ்வாறானால் இந்த மன்மத வருடம் ‪#‎சாலிவாகன‬ சகாப்பத வருடம் 1937 ஐ 8 ஆல் பெருக்க 15496 வரும்,இதை ஒன்பதால் வகுக்க மீதி ஏழு வரும் என்றும் அதன் மூலம் பார்க்க‪#‎வெகு_மழை‬ என்பது கணித கணக்கு...
அடுத்ததாக....
வருட மேகாதிபதி சூரியனால் கிழக்கு திசையிலும்,சந்திரனாயின் தென்மேற்கிலும்,செவ்வாயின் தெற்கிலும்,புதன்,குருவாகில் வடக்கிலும்,சுக்கிரனாயின் தென்கிழக்கிலும்,சனியாயின் மேற்கிலும் மேகம் உற்பத்தியாகி மழை பெய்யும் என்கிறது சாஸ்திரமே.
அப்படியாயின் இந்த ‪#‎மன்மத‬ வருடம் மேகதாதி பதியாக சந்திரன் வந்துள்ளார் எனவே தென் மேற்க்கு என்றாகிறது....
மேலும் இந்த வருட மேகாதிபதியின் பலனாக‪#‎ஆறு_குளம்_நிரம்பும்_என்றும்_பலவித_நிறம்_உள்ளவர்கள்‬விருத்தி என்றும் கூறப்பட்டுள்ளது....
ஆக இதன்படி காணும் போது இது பருவகால மழை என்றும்,இந்த ‪#‎பேரழிவுக்கு‬ காரணம்,ஏறி,குளம்,கூவம் என்றும் மண்ணின் தன்மை அறியாமல் கட்டங்களை கட்டி,மழை நீர் வடிய,செல்ல வழியில்லாததால் தான் இந்த கஷ்டம் என அறிய முடிகிறது.
‪#‎இயற்க்கை_குறை_சொல்லக்கூடாது‬ என்பது...வினை விதைத்தோம்,வினை அறுக்கிறோம்...காலத்தின் கோலம் 
நன்றி: https://www.facebook.com/Astro-Sadaiyappa-1537796269799506/?fref=nf

பெண்களின் ஜாதகத்தை பலன் சொல்ல எடுத்தாளும் விதிகள்.

பெண்களின் ஜாதகத்தை பலன் சொல்ல எடுத்தாளும் விதிகள்.
0.பெண்களின் உடல் அழகு அறிய ராசி,லக்னம் இவற்றில் எது பலமோ, அந்த அதைக் கொண்டு அறிய வேண்டும்.
1.பெண்களின் ஜாதகத்தில் 8 மிடத்தின் மூலம் கணவரின் ஆயுளை நிர்ணயிக்க வேண்டும்.
கணவன் மரணத்திற்க்கு பின் மறுமணம் மறுக்கப்பட்ட காலம் அது.
2.உடல் சம்பந்தமான கேள்விகளுக்கு லக்னத்தாலும்,ராசியாலும் அறிய வேண்டும்....இவை ஆண்,பெண் இருவருக்கும் பொது.
3.பெண்களின் யோக பலன்களையும்,கணவரின் யோக பலனையும் லக்னத்திற்க்கு ஏழாம் வீட்டின் மூலம் அறிய வேண்டும்.
4.புத்திர பாக்கியம்,செல்வம், ஐந்துடன் ஒன்பதையும் ஆராய்ந்தே சொல்ல வேண்டும்.
5.கற்பு நிலைகளை அறிய நான்குடன் ஏழாமிடத்தையும் ஆராய வேண்டும்.
6.பெண்களுக்கு கணவன் காரகன் செவ்வாய்,என்றும்,குரு என்றும்,சுக்கிரன் என்றும் சில நூல்கள் சொல்லுகின்றன....ஆனால் பெண்களுக்கும் களஸ்திர காரகன் சுக்கிரனே!!
7.தடையில்லாத யோகங்களை பெற ராகு,கேதுவையும்,சூரியனையும் ஆராய்வது முக்கியம்.
எனவே விதிகளை இன்றைய நடைமுறை வாழ்க்கை,சூழ்நிலைக்கு ஏற்ப,சிறு,சிறு மாறுபாடுகள் அடைகின்றன.
நன்றி :https://www.facebook.com/Astro-Sadaiyappa-1537796269799506/?fref=nf

வீடுகளில் ‪நவகிரகங்கள்‬ உறையும் இடங்கள்.



நாம் வசிக்கும் வீடுகளில் ‪#‎நவகிரகங்கள்‬ உறையும் இடங்கள். 
# அடிப்படையானதுதான்#
தெரிந்து_கொள்வோமே‬!!!

‪#‎சூரியன்‬ பூஜையறையில் இருப்பார்,வடக்கிழக்கான ‪#‎ஈசான‬திசையே சூரியனின் இருப்பிடமாகும்.
‪#‎சந்திரன்‬ குளியறையில் இருக்கிறார் என்றும்(சிலர் கேதுவுக்கும் சொல்லுகிறார்கள்) அதாவது ‪#‎கிழக்கு‬ திசை.
‪#‎செவ்வாய்‬ சமையலறையில் இருக்கிறார் அதாவது‪#‎தென்கிழக்கு‬ திசை.
‪#‎புதன்‬ படிப்பு,தொழில் சம்பந்தபட்ட விசயங்கள் கலந்துரையாட, முன்வராந்தா அல்லது வீட்டின் மைத்திய பகுதி.
‪#‎குரு‬ பொக்கிய அறை,அதாவது வடக்கு.இதில் வடகிழக்கில் தியானம் பொன்றவை செய்யும் போது குருவே நிறைந்து இருப்பாராம்.
‪#‎சக்கிரன்‬ வரவேற்பு,படுக்க அறை, துணிமாற்றும் அறை அதாவது ‪#‎தென்மேற்க்கு‬ திசை.
‪#‎சனி‬ இருண்ட அறை, ஆடு,மாடுகள் கட்டும் இடம் அதாவது‪#‎வடமேற்க்கு‬ திசை.
‪#‎ராகு_கேது‬ விட்டின் நுழைவு வாயில் ‪#‎வலது‬ திசையிலும்‪#‎கேது‬ விட்டின் நுழைவு வாயில் ‪#‎இடது‬ திசையில்.

‪#‎நன்றி‬!!!https://www.facebook.com/Astro-Sadaiyappa-1537796269799506/?fref=nf
Astro Sadaiyappa