நம்பினால் நம்புங்கள் கடவுளை வணங்கிய அடையாளத்தை யாராலாவது ஏற்படுத்த முடியும்? முடியும். நம்மூர் பெண்கள் அடிப்பிரதட்சணம் செய்வதால், சில கோயில்களில் அதன் அடையாளங்கள் இருக்கும். அவை பல ...பெண்கள் பல முறை நடந்ததால் ஏற்பட்டவை.
ஆனால் சீனா சாமியார் ஒருவர் தன்னுடைய இரு பாதச்சுவடுகள் மரப்பலகையில் அப்படியே பதியும் அளவுக்கு ஆண்டவனை வணங்கியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
சீனாவில் டோங்ரன் என்ற ஊரில் உள்ள புத்தர் ஆலயத்தில்தான் இந்த அதிசயம். அங்குள்ள மரத்தரையில் 70 வயது சாமியாரான ஹுவா சீயின் இரண்டு பாதங்களும் பதிந்து போயிருக்கின்றன. கடந்த 20 வருடங்களாக அவர் இங்குவந்து வணங்குவதால் இப்படி நேர்ந்துள்ளது.
அந்த மரத்தரையில் சுமார் ஒன்றரை இன்ச் ஆழத்திற்கு அவருடையப் பாதச்சுவடுகள் பதிந்துபோயிள்ளன.

தொடக்க காலத்தில் தினசரி 3 ஆயிரம் முறை விழுந்து விழுந்து தொழுவாராம். தற்போது, வயோதிகம் காரணமாக அது தினசரி 1000 முறை என்று குறைந்திருக்கிறதே தவிர அவருடைய ஆன்மிக ஈடுபாடு குறையவேயில்லை.
பெளத்த மதக்கோட்பாட்டின்படி நிர்வாண நிலையை அடைய தியானமும் தொழுதலும் தேவைதான் என்றாலும், தினசரி 3 ஆயிரம் முறை தொழல் என்பது மிகவும் அதிகபட்சம் என்றும் சமானியர்களால் செய்ய முடியாதது என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் ஹுவா சீ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தொழுதலில் ஈடுபட்டு வருகிறார்.
இவருடைய இந்த சிறப்புத் தொழுகையால் அந்தக் கோயில் அனைவர் கவனத்தையும் கவர்ந்து இழுக்கிறது. தினசரி நூற்றுக் கணக்கான மாணவர்களும், பக்தர்களும் கோயிலுக்கு வந்து புத்தரை தரிசிப்பதுடன் ஹுவா சீ யின் பாதங்கள் பதிந்து காட்சியளிக்கும் மரத்தரையை ஆச்சரியமாக பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.
ஹுவா சீயின் அன்றாட செயல்களில் வேறுபாடு எதுவும் கிடையாது. காலையில் சூரியோதயத்திற்கு முன்பு எழுந்திருருப்பவர் குளித்துவி்ட்டு நேராக கோயிலை நோக்கி நடைபோடுகிறார். வழக்கமாக தான்
விழுந்து வணங்கும் இடத்தில் தன் பாதங்களைப் பதித்துவணங்கத் தொடங்குகிறார். வணங்கி முடித்தவுடன் கோயிலை ஒரு சுற்று சுற்றுகிறார். பிறகு தொழவேண்டும் என்னும்போது மீண்டும் சென்று அதே இடத்தில் வணங்குகிறார். இப்படியே அவர் வணங்கியபடியே இருக்கிறார்..
”2 ஆயிரம், 3 ஆயிரம்னு வணங்கிக்கொண்டு இருந்தேன். இப்பல்லாம் ஆயிரம் முறை தான் தொழ முடிகிறது” என்று வருத்தம் தொனிக்க கூறும் ஹுவா சீ, ”இந்தக் கோயிலை புனரமைத்துள்ளேன். கோயிலைச் சுற்றி சுற்றி வருகிறேன். அதனால் இறந்த பிறகு என் ஆன்மா சிரமப்படாது” என்கிறார் நம்பிக்கையுடன்.
ஹுவா சீ ஒரு பாரம்பரிய சீன வைத்தியரும்கூட. கடவுளை வணங்குவதையும், கடவுளின் பிள்ளைகளான மக்களின் நோய்களைத் தீர்ப்பதிலும் இவர் சுகம் காண்கிறார்.
இப்படியும் ஆட்கள் இருப்பதால்தான் பூமி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதோ!

No comments:
Post a Comment