For Read Your Language click Translate

29 May 2014

பயன்படுத்தாக வேர்ட் வசதிகள்


அன்றாடம் பயன்படுத்தும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களில், முதலிடம் பெறுவது எம்.எஸ். வேர்ட் தொகுப்பாகும். இந்த தொகுப்பில் எண்ணிக்கையில் அடங்காத வசதிகள் இருந்தாலும், ஒரு சிலரே அவை அனைத்தையும் அறிந்துள்ளனர். இது குறித்து நடத்திய ஆய்வில் 80 சதவீதம் பேர், 20 சதவீத வசதிகளையே பயன்படுத்தி வருவதாகத் தெரிந்துள்ளது. அறியாத, ஆனால் அதிகம் பயனுள்ள சில வேர்ட் வசதிகளை இங்கு காணலாம்.
1. பேஸ்ட் (Paste):

முதலில் வந்த வேர்ட் தொகுப்பில், பேஸ்ட் வசதி ஓரளவிற்கே தரப்பட்டு வந்தது. ஆனால், இப்போ துள்ளவற்றில், பேஸ்ட் வசதிகளில் பல நுண்ணிய வசதிகளும் தரப்படுகின்றன. சாதாரணமாக வெறும் பேஸ்ட் வசதி மட்டுமே கொண்டதாக இருப்பதில்லை. ஹோம் டே ப் அழுத்தி, கிளிப் போர்டு குரூப் தேர்ந்தெடுத்து, அதில் பேஸ்ட் ஆப்ஷன் கிளிக் செய்தால், இந்த வசதிகளைக் காணலாம். பேஸ்ட் வசதியின் மாறா நிலையை, நீங்கள் விரும்பும்படி அமைத்திட வழிகள் காட்டப்படுகின்றன. இவற்றை அணுகும் முறையை இங்கு பார்க்கலாம்.
ஆபீஸ் 2010ல் பைல் டேப் கிளிக் செய்து, ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இடது புறம் உள்ள அட்வான்ஸ்டு என்ற பிரிவிற்குச் செல்லவும்.
ஆபீஸ் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, அப்ளிகேஷன் என்பதனைக் கிளிக் செய்திட வும். இங்கும் இடது பிரிவில், அட்வான்ஸ்டு என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆபீஸ் 2003ல், டூல்ஸ் மெனுவில், ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கவும். பின்னர் எடிட் என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. ரீசன்ட் (Recent):
பைல் ஒன்றை நாம் குறிப்பிட்ட போல்டரில் சேவ் செய்திருப்போம். ஆனால், பதட்டத்தில் வேறு இடங்களில் தேடி, பைல் இல்லை என நினைத்து விரக்தி அடைவோம். விண்டோஸ் சர்ச் வசதி மூலம் இதனைத் தேடிப் பெறலாம் என்றாலும், அதற்கு அதிக நேரம் தேவைப்படும். இதற்கு உடனடியாகத் தீர்வு தரக்கூடிய வசதி ரீசன்ட் (Recent) வசதி ஆகும். இதனைப் பெற பைல் டேப் கிளிக் செய்து, இடது பிரிவில் Recent என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு அண்மையில் நீங்கள் பயன்படுத்திய பைல்களின் பட்டியல் கிடைக்கும். ஆபீஸ் 2007ல் ஆபீஸ் பட்டன அழுத்தி, கிடைக்கும் விண்டோக்களில் இதனைக் காணலாம். ஆபீஸ் 2010ல் இது இன்னும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இங்கு சேவ் செய்திட மறந்த பைல்களைக் கூடத் தேடிக் காணலாம். இங்கு பைல்களுக்கு அடுத்த படியாக, ஜெம் கிளிப் போன்ற படத்தைக் காணலாம். இதில் கிளிக் செய்தால், குறிப் பிட்ட அந்த பைல் பின் செய்து வைக்கப்படும். இந்த பட்டியலில் இருந்தே நாம் பைலை எடுத்து எடிட் செய்திட முடியும். நீங்களாக, மீண்டும் பின் அழுத்தி பட்டியலில் இருந்து நீக்காதவரை, இந்த பைல் இதிலேயே இருக்கும்.
3. டெம்ப்ளேட் (Template):
பலர், தாங்கள் உருவாக்கும் அனைத்து வேர்ட் டாகுமெண்ட்களுக்கும், ஒரே மாதிரியான வடிவமைப் பினையே பயன்படுத்துவார்கள். ஒரு சில கிளிக் செய்தால், ஒவ்வொரு டாகுமெண்ட்டும் ஒரு புதிய வடிவமைப்பில் அமைக்கலாம். இதற்கு டெம்ப்ளேட்டுகள் உதவுகின்றன. இந்த டெம்ப் ளேட்டுகளைத் தேடி, நமக்கு வசதியானதைத் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளாம். நாமும் புதிய டெம்ப்ளேட்டுகளை உருவாக்கி சேவ் செய்து வைத்துப் பயன்படுத்தலாம்.
4. ஆட்டோ கரெக்ட் (Auto Correct):
இந்த வசதி, நாம் டைப் செய்திடுகையில் நம்மை அறியாமல் நாம் ஏற்படுத்தும் சொல் பிழைகளைத் திருத்தி அமைக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘the’ என்பதற்கு ‘teh’ என டைப் செய்தால், அதனைத் திருத்தி அமைக்கும். இந்த அட்டவணையைப் பயன்படுத்தி, நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்களைப் போட்டு வைக்கலாம்.
5. ரீபிளேஸ் (Replace):
பலர் இந்த வசதியினைப் பயன்படுத்தும் வழியினை மேற்கொண்டிருப்பார்கள். ஆனால், இதனை கூடுதல் வசதிகள் கிடைப்பதற்குப் பயன்படுத்தும் வழிகளை அறியாமல் இருப்பார்கள். எடுத்துக்காட்டாக, டேப் கீயினை அழுத்தி, பெரிய இடைவெளியை உருவாக்கலாம். ஏற்கனவே உள்ள சொல்லுடன், இன்னொரு சொல் தொகுதியை உருவாக்கலாம். இடாலிக்ஸ் வடிவில் அமைந்த அனைத்து சொற்களையும் போல்டாக மாற்றலாம். இப்படி பல வசதிகளை இதில் நம் விருப்பத்திற்கேற்ற வகையில் அமைக்கலாம். மேலே தரப்பட்டவை மட்டுமின்றி, இன்னும் பல வசதிகள் வேர்ட் தொகுப்பில் உள்ளன. இவற்றைப் பொறுமையாகத் தேடி அறிந்து, கூடுதல் வசதிகள் பெற பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment