இந்திய வரலாறு-10
புராண காலம்
வேதங்கள், உபநிடதங்களுக்கு அடுத்து வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவை புராணங்கள்.
வேதங்கள், உபநிடதங்களின் பெருமைகள் மற்றும் கருத்துக்கள் புராண காலத்தில்பின்பற்றப்பட்டன. புராணங்களை வேதவியாசர் எழுதினார் எனப்படுகிறது. இவருக்குக் கிருஷ்ணத்வைபாயனர் என்ற பெயரும் உண்டு. தவிர கருப்பு நிறத்துடன் தீயில் தோன்றியவர் என்று அந்தசொல்லுக்குப் பொருள். வேதவியாசர் என்பது தனி ஒருவர் பெயரா? அல்லது ஒரு குழுவின் பெயராஎன்பது தெரியவில்லை. ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வொரு வியாசர் இருந்ததாகவும்கூறப்படுகிறது.
வேத வியாசரின் காலத்தினை கருத்தில் கொண்டு இப்புராணங்கள் கி.மு 7 ஆம்நூற்றாண்டிற்கு முந்தயவையாக கருதப்படுகிறது. இவைகளில் சிறியவை உப புராணங்கள் என்றுஅழைக்கப்பெறுகின்றன.
வேத வியாசர் புராண சம்ஹிதை என்றொரு நூல் எழுதினார் என்றும் இதை அவர் தன் சிஷ்யர்லோமஹர்ஷனுக்கு (அ) ரோம ஹர்ஷனுக்கு உரைத்ததாகவும், அது பின்னர் வாய்மொழியாகவேவழிவழியாக வந்ததெனவும் கூறப்படுகிறது. எனவே, முதல் நூலுக்கும் தற்போதுகிடைத்துள்ளவற்றிற்கும் வேறுபாடுகள் இருப்பது இயற்கை. ரோமஹர்ஷனர் வாயு புராணத்தினையும்இணைத்து 19 புராணங்கள் என்று கூறியதாக ஒரு செய்தியுண்டு.
மேலும் உடலின் கூற்றுகளை இந்த 18 புராணங்களின் உருவகமாகக் கூறுவது ஒரு பண்டைய வழக்கம்
பிரம்ம புராணம் – முன் நெற்றி
பத்ம புராணம் - இதயம்
விஷ்ணு புராணம் – வலது புஜம்
சிவ புராணம் – இடது புஜம்
ஸ்ரீமத்பாகவத புராணம் – இரண்டு நேத்ரங்கள்
நாரத புராணம் – நாபி
மார்கண்டேய புராணம் – வலது கால்
அக்னி புராணம் - இடது கால்
பவிஷ்ய புராணம் – வலது முட்டிக்கால்
பிரம்மவைவர்த்த புராணம் – இட்து முட்டிக்கால்
லிங்க புராணம் – வலது கணுக்கால்
வராஹ புராணம் – இட்து கணுக்கால்
வாமன புராணம் – ரோமம்
கூர்ம புராணம் – சருமம்
மத்ஸ்ய புராணம் – வயிறு
கருட புராணம் – ம்ஞ்சையும் கொழுப்பும்
பிரம்மாண்ட புராணம் – எலும்பு
முப்பெரும் கடவுளர்களாக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் வணங்கப்படுகிறார்கள்.இவர்களில் படைக்கும் தொழில் கொண்டவர் பிரம்மா; காக்கும் தொழில் கொண்டவர் விஷ்ணு; அழிக்கும்தொழில் கொண்டவர் சிவன் என, இவர்களைப் போற்றி வணங்குகிறது வேதம். பிரம்ம வைவர்த்தபுராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய புராண நூல்களில் இந்த மூவரின்தோற்றமும், அவர்கள் தத்தமக்குரிய பணிகளை ஏற்ற விவரமும், அவர்களின் பூரண மஹிமையும்சித்திரிக்கப்படுகின்றன.
பன்னெடுங்காலமாக பிரம்மாவை ஆலயங்களில் வழிபடக்கூடாது என்ற சம்பிரதாயம் நடைமுறையில்இருந்து வருகிறது. புண்ணிய பாரதத்தில் ஒன்றிரண்டு கோயில்கள் தவிர, பிரம்மாவுக்கு வேறுஆலயங்கள் கிடையாது. சிவனுக்குத் தனி வழிபாடு செய்பவர்கள் சைவர்கள் எனப்படு கின்றனர்.விஷ்ணுவுக்குத் தனி வழிபாடு செய்பவர்கள் வைணவர்கள் எனப்படுகின்றனர். பிரம்மனை மட்டும்தனியாக வழிபடும் சம்பிரதாயமோ, பிரிவோ இல்லை. பல ஆலயங்களில் விஷ்ணுவும் சிவனும் சேர்ந்துஹரிஹர ஸ்வரூபமாகப் பூஜிக்கப்படுகின்றனர்.
இந்த மகா புராணங்களில் பிரம்மனின் பெருமைகளை கூறுபவை ராஜசிக புராணம் (பிரம்மவைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், பவிசிய புராணம், வாமன புராணம், பிரம்ம புராணம்,பிரம்மாண்ட புராணம்) என்றும், திருமாலின் பெருமையைக் கூறுபவை சத்துவ or சாத்விக புராணம்(பத்மபுராணம், விஷ்ணு புராணம், நாரத புராணம், பாகவத புராணம், கருட புராணம், வராக புராணம்) என்றும்,சிவபெருமானது பெருமைகளை கூறுபவை தாமச புராணம் என்றும் அழைக்கப்பெறுகின்றன. இவையேஇந்துக்களின் முக்கிய குணங்களான சத்வம், ரஜஸ், தமஸ் என்றழைக்கபடுகிறது.
1.பிரம்ம புராணம்( சுமார் 13000 ஸ்லோகங்கள்):
புராணங்களில் முதலில் தோன்றியது. எனவே இதனை ஆதிபுராணம் என்றும்கூறுகின்றனர். இது ராஜசிக புராண வகையைச் சார்ந்ததாகும். பிரம்மாவைப் பற்றியும், அவருடையஉலகப் படைப்புகளைப் பற்றியும் கூறுவது. கலியுகத்தில் ஏற்படும் கெடுதல்களும், மக்கள் மேற்கொள்ளவேண்டிய கடமைகளும், பக்தியின் அவசியமும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.நைமிசாரணியத்தில் சனகாதி முனிவர்களுக்கு சூதமுனிவர் பிரம்ம புராணத்தைப் பற்றி கூறினார். (வியாசரின் சீடன் ரோமஹர்ஷணர் கூறியதாகவும் சொல்லப்படும்)
இந்தப் பேரண்டப் படைப்பு, 2. பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும் 3. வெவ்வேறுமன்வந்தரங்கள் 4. சூரிய வமிச, சந்திர வமிச வரலாறு 5. அரச பரம்பரைகள் சரிதம். இந்த ஐந்தும் பிரம்மபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக எல்லாப் புராணங்களும் அரி, அரன், அயன் என்றமும்மூர்த்திகளைப் பற்றி கூறினும் சிவபுராணங்களில் சிவனை உயர்த்தியும், சிலவற்றில் விஷ்ணுவைஉயர்த்தியும் பேசப்பட்டுள்ளன. பிரம்ம புராணம் ஒரு ராஜசிக புராணம். பிரம்ம புராணத்தின் முதல் நூல்கிடைக்கப் பெறவில்லை என்றும், எனவே மகாபாரதம், ஹரிவம்சம், வாயுபுராணம், மார்க்கண்டேயபுராணம், விஷ்ணு புராணம் ஆகியவற்றிலிருந்து செய்திகளைத் தொகுத்து தற்போது கிடைத்துள்ளபிரம்ம புராணம் உருவாக்கப்பட்டது என்பர். இது மிகப்பெரியதோ மிகச் சிறியதோ இன்றி நடுத்தரமாகஉள்ளது.
இவ்வுலகம் எப்படி உருவானது என்பதை பற்றி பிரம்ம புராணத்தில் உள்ள குறிப்பு:
எங்கும் நீர் சூழ்ந்திருக்க, பிரம்மனாகிய பகவான் விஷ்ணு துயில் கொண்டிருந்தார். நீருக்கு நரஎன்றும், அயன என்றால் படுக்கை என்றும் பொருள். எனவே நாராயணன் என்று பெயர் பெற்றார்.நீரிலிருந்து ஓர் அண்டம் (முட்டை) வெளித்தோன்றியது. அதனுள் பிரம்மா இருந்தார். அவர் சுயம்புஆவார். அவர் முட்டையின் இருபகுதியிலிருந்து சுவர்க்கத்தையும், பூமியையும் ஆக்கினார்.அவ்விரண்டிலும் ஆகாயம், திக்குகள், காலம், மொழி, உணர்வுகள் உற்பத்தி செய்யப்பட்டன. பிரம்மாவின்மனதிலிருந்து மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் என்ற சப்தரிஷிகளைத்தோற்றுவித்தார். பின்னர் ருத்திரனையும், சனத் குமாரரையும் தோற்றுவித்தார்.
பிரம்மா ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் படைத்து அவர்கள் மூலம் மக்கள் பெருக்கத்துக்குவித்திட்டார். ஆணின் பெயர் சுவயம்புமனு; பெண்ணின் பெயர் சதரூபை. இவர்களின் புத்திரன் மனு.மனுவிலிருந்து வளர்ந்த மக்கள் மானிடர்(அ) மானவர் எனப்பட்டனர். அத்தம்பதியருக்கு வீரன்,பிரியவிரதன், உத்தானபாதன் என்று மூவர் பிறந்தனர். உத்தானபாதனின் மகன் துருவன், துருவநக்ஷத்திரமாக விளங்குகிறார். துருவன் பரம்பரையில் தோன்றிய பிராசீனபர்ஹிக்கு பிரசேதனர்கள்எனப்படும் பதின்மர் பிறந்தனர். அவர்களுக்கு உலக வாழ்க்கையில் விருப்பமின்றித் தவம் செய்யப்புறப்பட்டனர். உலகைப் பராமரிக்க ஆள் இல்லாததால் எங்கும் காடுகள் பெருகி விட்டன. பிரசேதனர்கள்கோபம் கொண்டு வாயுவையும், அக்கினியையும் தோற்றுவித்துக் காடுகளை அழித்தனர். அப்போதுசோமன், ஓர் அழகிய பெண் மரீஷையுடன் பிரசேதனர்களை அணுகி, அவர்கள் கோபத்தை சாந்தமாக்கிமரீஷையை மனம் செய்வித்தார்.
2.பத்ம புராணம்(சுமார் 55000 ஸ்லோகங்கள்)
வேத வியாசர் எழுதிய பதினெண் புராணங்களில் இரண்டாவது பத்ம புராணம். பிரமனின்ஒருநாள் என்பது ஒரு கல்பமாகும். பிரமனின் ஒருநாள் முடிவில் இந்தப் பேரண்டம் அழிவுற்றது. எங்கும்இருள் சூழ்ந்தது. அடுத்த நாள் காலையில் உலகம் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொருகல்பத்திலும் ஒவ்வொரு புராணம் இயற்றப்பட்டது. அவை முறையே
பதினெண் புராணங்கள் - ஸ்ரீமகா விஷ்ணுவின் உருவம்
1.பிரம புராணம் - பிரம கல்பம்,
2. பத்ம புராணம் - பத்ம கல்பம்,
3. விஷ்ணு புராணம் - வராக கல்பம்,
4. சிவ புராணம் - ச்வேத கல்பம்,
5. பாகவத புராணம் - சாரசுவத கல்பம்,
6. நாரத புராணம் - வ்ரிஹத் கல்பம்,
7. மார்க்கண்டேய புராணம் - ச்வேத வராக கல்பம்,
8. அக்னி புராணம் - ஈசான கல்பம்,
9. பவிஷ்ய புராணம் - அகோர கல்பம்,
10. பிரமவைவர்த புராணம் - ரசுந்த்ர கல்பம்,
11. லிங்க புராணம் - கல்பந்த கல்பம்,
12. வராஹ புராணம் – மனுகல்பம்,
13. கந்த புராணம் - தத்புருஷ கல்பம்,
14. வாமன புராணம் – சிவகல்பம்,
15. கூர்ம புராணம் - லக்ஷ்மி கல்பம்,
16. மத்ஸ்ய புராணம் - கல்பாதி கல்பம்,
17. கருட புராணம் - கருட கல்பம்,
18. பிரமாண்ட புராணம் - பவிஷ்ய கல்பம்
சிவசர்மா, சோமசர்மா போன்ற அந்தணர்களின் கதையையும், காசியப முனிவர்-திதியின் விரித்திரனின்கதையும், சுகலை,சுதேவா போன்ற பலரின் கதையையும் பத்ம புராணம் விளக்குகிறது.
3.விஷ்ணு புராணம்(சுமார் 23000 ஸ்லோகங்கள்)
மைத்ரேய முனிவரின் கேள்விகளுக்குபராசர மகரிஷி கூறியவை விஷ்ணு புராணமாகதொகுக்கப்பட்டுள்ளது. உலகம் உண்டான விதம்? எந்த வஸ்துவின் சொரூபமாக இருக்கிறது? எங்கிருந்துஎப்படி உண்டாயிற்று? எப்படி எங்கே லயப்பட்டது? இனி எங்கே லயமாகும்? நிலம், நீர், நெருப்பு, காற்று,விசும்பு எனும் ஐந்து பருப்பொருட்களில் (பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் பஞ்சபூதங்களின்நிலை என்ன? எதனால் அவை விளங்கும்? இவ்விஷயங்களையும் தேவதைகள் முதலானவருடையஉற்பத்தியையும், மலைகள், கடல்கள் இவற்றின் தோற்றத்தையும் பூமியிருக்கும் விதத்தையும் சூரியன்,சந்திரன், கோள்கள் ஆகியவற்றின் நிலையையும் அளவுகளையும் தேவர்களின் வம்சங்களையும்,மனுக்களையும், மனுவந்தாரங்களையும், மகாகல்பங்களையும், நான்கு யுகங்களால்விகற்பிக்கப்பட்டவையான கல்பங்களின் பிரிவுகளையும் அவற்றின் முடிவு நிலைகளையும், சகலயுகதர்மங்களை பற்றி இப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது
உலகம் திருமால் என்கிற விஷ்ணுவினால் உருவாக்கப்பட்டது, அவரின் சொரூபமாகவேகாட்சியளிக்கிறது, அவரின் எண்ணப்படியே இயங்குகிறது என்பதை விஷ்ணு புராணம் விளக்குகிறது.
பிரபஞ்சத்தின் தோற்றம், வராக அவதாரம், தேவ மனித படைப்புகள், வருணாசிரமம் போன்ற பலவற்றைவிஷ்ணு புராணம் விளக்குகிறது.
4.சிவ புராணம் (அ) வாயு புராணம்(சுமார் 24000 ஸ்லோகங்கள்)
பதினெண் புராணங்களில் நான்காவது புராணமாகும். பதினென் புராணங்களின் வரிசையில் சிலர் சிவ புராணத்திற்கு பதிலாக வாயு புராணத்தினை சேர்க்கின்றார்கள். நைமிசாரண்ணியம் எனும் வனத்தில் வசிக்கும் முனிவர்கள் ஒன்றிணைந்து, வருமான சூதமா முனிவரிடம் சிவபெருமானது பெருமைகளை கூறும் படி வேண்டினார்கள். சூதமா முனிவர் வியாஸ மகரிஷியின் சிஷ்யராவர். அவர் கூறிய சிவனது பெருமைகளின் தொகுப்பே சிவ புராணமாகும். சோதிர் லிங்க தோற்றம், திருமாலிற்கும் பிரம்மாவிற்கும் வரம் கொடுத்தது, சிவலிங்கத்தின் மகிமை, சிவபூஜைக்கான விதிமுறைகள், சிவ பூஜை மந்திரங்கள், மன்மதன் எரிப்பு என பல்வேறு சிவபெருமைகளை இந்நூல் கூறுகிறது.
இப்புராண நூலில் சரப புராணம். ததீசி புராணம், வினாவிடைப் புராணம், சிதம்பர புராணம் என்னும் நான்கு பகுதிகளை திருமலைநாதர் என்பவர் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்.
வாயு புராணம் என்பது சிவபெருமான் பெருமைகளை வாயு பகவான் கூறியதாகும்.
வாயு புராணம் பூர்வ பாகம், உத்தர பாகம் என்று இரண்டு பெரும் பிரிவுகளை கொண்டது. மேலும் 112 அத்தியாயங்களேயும், இருபத்து நான்காயிரம்(24,000) ஸ்லோகங்களையும் உள்ளடக்கியது. இது வாயுபகவானால் கூறப்பட்டதால் வாயு புராணம் என அழைக்கப்படுகிறது.
5.லிங்க புராணம்(சுமார் 10000 ஸ்லோகங்கள்)
இப்புராணம்லிங்க வழிபாட்டின் மேன்மையை எடுத்துரைக்கிறது. இது பத்தாயிரம் (10,000)ஸ்லோகங்களை உள்ளடக்கியதாகும். பஞ்ச பூதங்களின் தோற்றம், இந்து காலக் கணக்கீடு, பிரபஞ்சத்தின்தோற்றம் என பலவற்றை இந்நூல் எடுத்துச்சொல்கிறது. சூதர், நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு லிங்கபுராணத்தை விவரிக்கலானார்.
பஞ்ச பூதங்களின் தோற்றம்
பேரொளியாய் விளங்கும் ஜோதி சொரூபம் சிவம். அந்த ஜோதி லிங்கத்திலிருந்துஅனைத்துலகுக்கும், ஆதாரமானதும், வேதங்கள் கொண்டாடுவதுமான லிங்கம் உண்டாயிற்று.தமக்கென வித்து ஏதுமின்றி, அனைத்து உயிருக்கும் தானே வித்தாகி பிறந்திருக்கும் அப்பெருமானின்ஏவலாய் மாயையிடம் இருந்து மகத்தத்துவம் உண்டாயிற்று. அதனிடமிருந்து முக்குணங்களோடு கூடியஅகங்காரம் உண்டானது. தாமசம் எனப்பட்ட அகங்காரத்தினிடமிருந்து ஒலி எழுந்தது.பேரொலியிடமிருந்து ஆகாயமும், அதிலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்துநீரும், நீரிலிருந்து நிலமும் உண்டாயின.
வைகாரிகம் எனப்பட்ட அகங்காரத்தினிடமிருந்து இந்திரியங்களுக்கு அதிஷ்டான தெய்வம்உண்டாயிற்று. தைஜசம் என்னும் அகங்காரத்தினிடமிருந்து ஞானேந்திரியங்கள் ஐந்தும்,கர்மேந்திரியங்கள் ஐந்தும், மனமும் உண்டாயின. தத்துவங்கள் ஓர் அண்டமாகி பிரளய நீரில் மிதந்துகொண்டிருக்கையில் அதற்கு உயிர் உண்டாகி அதில் பிரம்மன் தோன்றுவார். அவரே அயன், அரி, அரன்என்று படைத்தல், காத்தல், அழித்தல் என்ற காரியங்களுக்கேற்ப அழைக்கப்படுகின்றார்.பிரம்மாண்டத்தினிடையே பதினான்கு லோகங்களும் அடங்கி உள்ளன. அகங்காரத்தை மகத்தத்துவம்சூழ்ந்திருக்கும். அதனைப் பிரகிருதி புருஷன் தன்னிடம் லயம் கொண்டிருப்பான். பிரளயத்தின் முடிவில்மூவரும் ஒன்றாக ஐக்கியமாகி விடுவர்.
கால அளவு
இதில் பிரம்மனின் பகல், இரவு பற்றி நான்கு யுகங்கள், யுகச் சந்திகள் பற்றி விளக்குவது,மனிதர்களின் கால அளவுகளும் தேவர்களுக்கான கால அளவுகளும் விவரிக்கப்படுவதே கால அளவு (அ)காலப் பரிமாணம் எனப்படுகிறது.
சிருஷ்டி
அனைத்துக்கும் எட்டாது விளங்கும் அந்தப் பரம்பொருளுக்குத் தோற்றமோ அளவோ கிடையாது.அனைத்தும் அதனிடமிருந்து உண்டாகி, அதனையே அடைகின்றன. திருமால் பாம்பணையில் துயில்கொள்கையில் நான்கு லோகங்களும் பிரளய வெள்ளத்தில் அழிந்து விட்டன. அதைக் கண்டு அவர்பன்றியாக உருவெடுத்து (வராக அவதாரம்) நீரில் மூழ்கி அவற்றை மீட்டு வந்து முன் போல் அமைத்துசிருஷ்டிகளைத் தொடங்கலானார். பிரமன் சிருஷ்டியைத் தொடங்கி தாமச சிருஷ்டிகள் எனப்பட்ட ஐந்துவகை சிருஷ்டிகள் அவரிடமிருந்து தோன்றின. அவை தமசு, மோகம், மகாமோகம், தாமிஸ்ரம்,அந்ததாமிஸ்ரம் ஆகும். அடுத்து பசு முதலான விலங்குகள், தேவர்கள், மனிதர்கள், பூதம், பேய் முதலானசிருஷ்டிகள் தோன்றின. பின்னர் பிரம்மனிடமிருந்து சனகர், சனந்தனர், சனத்சுஜாதர், சனத்குமாரர்,ருத்திரர் தோன்றினர். அவர்கள் சிருஷ்டித் தொழிலில் ஈடுபடாமல் மகேசுவரனிடம் மனத்தைச் செலுத்திஅவனது தியானத்தில் ஈடுபட்டனர். அடுத்து பிரமன், புலஸ்தியர், கிருது, பிருகு, அத்திரி, மரீசி, புலகர்,தக்கன், வசிஷ்டர், ஆங்கிரசு, தருமர் ஆகிய பத்துப் பேரைத் தோற்றுவித்தார். அவர்கள் மூலம் உலகிலேசிருஷ்டியைப் பரப்ப சுவாயம்பு மனு என்ற ஆணையும், சதரூபை என்னும் பெண்ணையும் பிரமன்படைத்தார். இவ்வாறு சிருஷ்டி பெருகலாயிற்று. தக்கன் மகள் சசியை வையகம் அனைத்துக்கும்ஆதிகாரணனான ஈசன் மணந்தார். ஈசன் அனேக ருத்திரதைத் தோற்றுவித்தார். உலகம் முழுவதும்அவர்கள் நிறைந்தனர். சம்சார பந்தத்தில் சிக்காது, சிறப்பின்றி ருத்திரர்களை ஈசன் படைத்ததைக் கண்டுபிரமன் அவரிடம் அவ்வகை சிருஷ்டி உலகுக்கு ஏற்றதல்ல என்று கூற, ஈசன் நீ குறிப்பிடும் சிருஷ்டிகள்எமக்கு ஏற்றதல்ல; அவற்றை நீயே படைப்பாயாக என்று பிரம்மனிடம் தெரிவித்தார். நான்முகன்மாயையைக் கொண்டு சிருஷ்டிகளை வகுத்தார். ருத்திரன் தாம் படைத்த சிருஷ்டிகளை யோகத்தால்உலகை விட்டு மறையச் செய்தார்.
6.கருட புராணம்(சுமார் 19000 ஸ்லோகங்கள்)
கருட புராணம் இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். வைணவ புராணமானஇதில்விஷ்ணுவும் கருடனும்(பறவைகளின் அரசன்) உரையாடுவது போன்று அமைந்துள்ளது.மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றிஇதன் இரண்டாம் பகுதி விளக்குகிறது. இப்புராணத்தில் வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தினகட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவாதிக்கிறது. மொத்தம் பத்தொன்பது ஆயிரம் செய்யுட்கள்கொண்ட இப்புராணம், பூர்வ கந்த மற்றும் உத்திர கந்த என்ற இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றைஉடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர,புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள்,பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்குஇசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும்மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு,அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம்குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும்.நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும். அவை கீழேகொடுக்கப்பட்டுள்ளன.
தண்டனையின்பெயர்
பாவ செயல்கள்
தண்டனை விபரம்
தாமிஸிர நரகம்
பிறருக்குச் சொந்தமான மற்றவர்மனைவியை விரும்புதல் அல்லதுஅபகரித்தல், பிறரது குழந்தையைஅபகரித்தல், பிறரது பொருளை ஏமாற்றிஅபகரித்தல்
நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலானகட்டைகளாலும் கதைகளாலும்அடிப்பார்கள்.
அநித்தாமிஸ்ரநரகம்
கணவனும் மனைவியும் சேர்ந்துவாழாமல் ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல்,கணவன் மனைவியை வஞ்சித்தலும்மனைவி கணவனை வஞ்சித்தலும்.
உழன்று, கண்கள் தெரியாத நிலையில்இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்துதவிப்பார்கள்
ரௌரவ நரகம்
பிறருடைய குடும்பத்தை, அதாவதுவாழும் குடும்பத்தைக் கெடுத்தல்,பிரித்தல், அழித்தல், அவர்களின்பொருள்களைப் பறித்தல்.
பாவிகளை எமகிங்கரர்கள் சூலத்தில்குத்தித் துன்புறுத்துவார்கள்.
மகா ரௌரவநரகம்
மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தைவதைத்தல், பொருளுக்காக குடும்பங்களைநாசம் செய்தல்.
குரு என்ற கோரமான மிருகம்பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதிபலவகையிலும் ரணகளப்படுத்திதுன்புறுத்தும்.
கும்பிபாகம்
சுவையான உணவுக்காக, வாயில்லாஉயிர்களை வதைத்தும் கொன்றும்பலவிதங்களில் கொடுமைப்படுத்துதல்
எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ளஎண்ணெய்க்கொப்பறையில் போட்டு,எமதூதர்கள் பாவிகளைத்துன்புறுத்துவார்கள்.
காலகுத்திரம்
பெரியோர்களையும் பெற்றோர்களையும்அடித்து அவமதித்தல், துன்புறுத்தியும்பட்டினி போடுதல்.
அதே முறையில் அடி, உதை, பட்டினிஎன்று அவர்கள் வதைக்கபடுவார்கள்.
அசிபத்திரம்
தெய்வ நிந்தனை செய்தல்,தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப்பின்பற்றுதல்
பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டுஇனம் புரியாத ஒரு பயமுடன்அவதிப்படுவார்கள்.
பன்றி முகம்
குற்றமற்றவரைத் தண்டித்தல், நீதிக்குப்புறம்பாக அநீதிக்குத் துணைபோதல்
பன்றிமுகத்துடனும் கூர்மையானபற்களுடனும் உள்ள ஒரு மிருகத்தின்வாயில் அகப்பட்டு, கூர்மையானபற்களால் கடிக்கப்பட்டு பாவிகள்தண்டிக்கப்படுவார்கள்.
அந்தகூபம்
உயிர்களைச் சித்திரவதை செய்தல்,கொடுமையாகக் கொலை செய்தல்.
கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும்நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள்கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.
அக்னிகுண்டம்
பிறருக்கு உரிமையான பொருள்களை,தனது வலிமையாலும் செல்வாக்காலும்அபகரித்து வாழ்தல், பலாத்காரமாக தனதுகாரியங்களை நிறைவேற்றிக்கொள்தல்.
பாவிகள் ஒரு நீண்ட தடியில்மிருகத்தைப்போல் கைகால்கள்கட்டப்பட்ட நிலையில் எரியும்அக்னிகுண்டத்தில் வாட்டிஎடுக்கப்படுவார்கள்.
வஜ்ரகண்டகம்
சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோகூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள்அடைதல்
நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக்கட்டித்தழுவ ஜீவன்கள்நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.
கிருமிபோஜனம்
தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச்சுரண்டிப்பிழைத்தல்.
பிறவற்றைத் துளைத்துச் செல்லும்இயல்புடையது கிருமிகள் மூலம் பாவிகள்கடித்துத் துளையிட்டுதுன்புறுத்தப்படுவார்கள்
சான்மலி
நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப்பாராமல், உறவுமுறையைக்கூடப்பாராமல் யாருடனாவது எப்படியாவதுகூடி மகிழுதல்.
பாவிகளை முள்ளாலான தடிகளாலும்முட்செடிகளாலும் எமகிங்கரர்கள்துன்புறுத்துவார்கள்.
வைதரணி
நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப்புறம்பாக நடந்தல்.
வைதரணி என்ற ரத்தமும், சீழும்,சிறுநீரும், மலமும், கொடிய பிராணிகளும்இருக்குமொரு நதியில் பாவிகள் விழுந்துதுன்பப்படுவார்கள்.
பூபோதம்
சிறிதும் வெட்கமின்றி இழிவானபெண்களுடன் கூடுதல்,ஒழுக்கக்குறைவாக நடத்தல், எந்தலட்சியம் இன்றி வாழ்தல்
பாவிகளை விடமுடைய பூச்சிகள்,பிராணிகள் கடிக்கும்.
பிராணி ரோதம்
பிராணிகளைக் கொடுமைப்படுத்தல்
கூர்மையான பாணங்களை பாவிகளின்மீது எய்து துன்புறுத்துவார்கள்.
விசஸனம்
பசுக்களைக் கொடுமை செய்தல்.
பாவிகளுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடிகொடுத்துத் துன்புறுத்துவார்கள்.
லாலா பக்ஷம்
மனைவியைக் கொடுமைப்படுத்திமுறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக்கெடுத்தல்.
பாவிகளும் அதே முறையில்வதைக்கப்படுவார்கள்.
சாரமேயாதனம்
வீடுகளை தீவைத்தல், சூறையாடுதல்,உயிர்களை வதைத்தல், விடத்தைக்கொடுத்துக் கொல்லுதல், மக்களைக்கொன்றுகுவித்தல்
விசித்திரமான கொடிய மிருகங்கள்பாவிகளை வதைக்கும்.
அவீசி
பொய்சாட்சி சொல்தல்
நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசிஅழுத்தப்படும்.
மீதமுள்ள புராணங்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
நன்றி!!!
ம.ஞானகுரு
No comments:
Post a Comment