For Read Your Language click Translate

27 May 2014

ஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெகிழ வைக்கும் நூறாண்டு வரலாறு!



வழக்கமான நெல் விவசாயத்தைவிட, விதை, நீர், நேரம் என அனைத்தையும் குறைத்து, மகசூலை மட்டும் அதிகமாகக் கொடுப்பதுதான் எஸ்.ஆர்.ஐ. (SRI-System of Rice Intensification) எனப்படும் ‘ஒற்றை நாற்று நடவு முறை‘. தற்போது, தமிழக அரசின் புண்ணியத்தால் ‘செம்மை நெல் சாகுபடி‘ என்ற பெயரில் அது மறுஅவதாரம் எடுத்துள்ளது.
இந்த முறையானது, ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த மடகாஸ்கர் தீவில் நடைமுறையில் இருக்கிறது என்றும். அதை, 1960-களில் ஒரு பாதிரியார் கண்டுபிடித்து வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக... அதாவது 1905-ம் ஆண்டிலேயே, ஒற்றை நாற்று முறையில் நடவு செய்திருக்கிறார்கள் தமிழக விவசாயிகள் என்றால்... ஆச்சர்யமூட்டும் செய்திதானே.
1910-ம் ஆண்டுகளில் வெளிவந்து கொண்டிருந்த, ‘பிழைக்கும் வழி’ என்ற தமிழ் மாத இதழில், ‘ஒற்றை நாற்று நடவு’ மற்றும் ‘கெஜ நடவு’ என்ற தலைப்பில் சில கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஒற்றை நாற்று நடவு பற்றி குழந்தை வேலுடையார் என்பவரும், கெஜ நடவைப் பற்றி வைத்தியலிங்கம் பிள்ளை என்பவரும் தங்களுடைய அனுபவங்களை அதில் பதிவு செய்திருக்கின்றனர். இவை இரண்டுமே கிட்டத்தட்ட இணையான விஷயங்கள்தான். இதன் மூலம் கொத்துக் கொத்தாக நாற்று நடும் பழக்கம் இருந்த அந்தக் காலத்திலேயே ஒற்றை நாற்று நடவுமுறை பற்றிய அறிவு, தமிழக விவசாயிகளுக்கு இருந்தது என்பது உறுதியாகத் தெரிகிறது.
பசுமை விகடன்,25 செப்டம்பர் 2009.

No comments:

Post a Comment