ஓரு சமுதாயத்தின் பல தரப்பட்ட வளர்ச்சிகளும் நாகரீகமும் அந்தச் சமுதாயத்தின் முக்கிய அங்கமான மொழியின் ஆளுமையிலும் பாவனையிலும் தங்கியிருக்கின்றன. மொழி என்பது மனித உணர்வின் பன்முகத் தேவைகளைச்செயற்படுத்தும்; தரகனாக வேலை செய்கிறது. தரகன் என்பவன் ஒரு விடயத்தின் அடித்தளத்திலும் தொடர்புகளிலும மாற்றங்களிலும் முக்கிய புள்ளியாகக் கருதப் படுபவன். அப்படியே மொழியும் மக்களின் சாதாரண அடிப்படைத் தேவைகள் தொடங்கி அம...
்மக்கள் வாழும் சமுதாயத்தின் கலை கலாச்சார, அரசியல்,பொருளாதார வளர்சியிலும் பெரும் பங்கெடுக்கிறது. இதற்கு உதாரணம் இன்று உலகின் முக்கிய மொழியாகக் கருதப் படும் ஆங்கில மொழி உதாரணமாகும். பதினைந்தாம் றூற்றாண்டிலிருந்து இன்று வரை ஆங்கிலம் உலகிலுள்ள கணிசமான மக்களின் தொடர்பு மொழியாக இருப்பது மட்டுமன்றி தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாத தரகனாகவும்; செயற்படுகிறது. இந்த அணுகு முறையில் மட்டுமன்றி, தமிழ் மொழியின் கலாச்சார ஈடுபாடு,அரசியலில் தமிழுக்கு உள்ள இன்றைய ஆளுமையும் அதன் எதிர்கால இருப்பும் பற்றிப்பேசுவது தமிழார்வலர்களாற் தவிர்க்க முடியாத விடயமாகும். தமிழின் உயர்வுக்கும் வளர்ச்சிக்குமாக ஒன்று பட்டு இணையும் சில அமைப்புக்களின் முயற்சிகளாலும் தனிப்பட்டவர்களின் ஊக்கங்களாலும், தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றிய ஒரு ஆளமான சர்ச்சைகள் நடக்கின்றன.. அந்த முயற்சிகளுக்கு, நேரடியாகவும் மறைமுகமானவும் பல தடைகள் வரும்போதும், மொழியில் ஆர்வம் கொண்டுள்ள புத்திஜீவிகளின் சிந்தனைக்கு இருட்டடிப்பு நடப்பதாலும் பல ஆக்க பூர்வமான படைப்புக்கள் வெளிவருவது, கருத்தரங்கங்கள் நடைபெறுவது, புதிய சிந்தனைகள் துளிர்ப்பது, சிறந்த படைப்புக்கள் வெளிவருவது என்பன தடைபடுகின்றன என்பதையும் மனதிற் கொள்ளவேண்டும்.
ஓரு மொழி என்பது, ஒரு சமுதாயத்தின் உயிர்நாடியாகவிருக்கும்போது, சில குறுகிய கால நலன்களுக்காக அந்த மொழியைக் குறிப்பிட்டகாரணத்திறகாக மட்டும் பாவனையில் கொண்டுவருவதாரல் அம்மொழி; மக்களின் தேவையிலிருந்து தானாகவே மறைந்து விடும் என்பதற்கு, ஒருகாலத்தில் கொடி கட்டிப் பறந்த பல மொழிகள் இன்று மக்களுக்குத் தெரியாத சரித்திரமாகப்போனவை ஒரு சல சான்றுகளாகும். காலம் காலமாகப் பல அரசியற் சிந்தனையாளர்கள், சமுதாய மாற்றங்களுக்கான திட்டங்களைத் தங்கள் படைப்புக்கள் மூலம் மக்கள் மனதில் படைத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் பல் விதமான அடக்கு முறைகளுக்கும் எதிரான ஆயதமாகச் செயற்பட்டவை, சிந்தனையாளர்களின் பேனாக்களாகும்.அவற்றின் தூய படைப்புக்கள் தமிழின் எதிர்காலம்பற்றி எழுதுவது இக்காலத்தின் மிகப்பெரிய தேவையாகும்.
இன்று வலிமைபெருகிய சக்திகளான, தொழில் விஞ்ஞான வளர்ச்சிகளாலும், தமிழ்பற்றிய பெருமைதெரியாத அறியாமையினாலும் தமிழ் ஒரு தேக்கநிலையை அடைவது தவிர்க்க முடியாது. அதேமாதிரி, இலங்கைபோன்ற நாடுகளில் தமிழ் ஒரு அரசகருமமொழியாக இருந்தாலும் அதன் பாவனையும் பராமரிப்பும் திருப்திதரும் வகையில் இல்லை என்பதையும் கருத்திற் கொள்ளவேண்டும்.
வலிமையுள்ள ஆதிக்க சக்தி,; தான் வெற்றி கொண்ட மக்களுக்குத் தந்கள் மொழி;, கலாச்சாரத்தை; திணிப்பதுபோல்( பழைய காலத்தில் இலத்தின், சமஸ்கிரதம் என்பன இருந்ததுபோல், பதினைந்தாம் றூற்றாண்டுக்கால கட்டத்தில் ஸ்பானிஸ், போர்துக்கிஸ் மொழிகளும், நவின காலத்தில் ஆங்கிலமும் இருக்கிறது). இன்றைய கால கட்டத்தில் தமிழ் மொழியைப் பொறுத்தவரையில பல சோதனைகளை எதிhகொள்ளவேண்டியிருக்கிறது, இன்று எதிர் கோக்கும் பிரச்சினைகளைப், பல்லாயிரக்கணக்கான வருடங்களாகத் தமிழ் மொழி, பல மாற்றங்களுக்கு முகம் கொடுத்தது போல, இன்னும் பல உத்வேகத்துடன் முகம் கொடுக்குமா என்பதை இக்கட்டுரை ஆராயவிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்த பாவனையிலிருக்கும் மொழிகளில் தமிழ் மொழி முன்னிடத்தை வகிக்கிறது. பழைய மொழிகளான இலத்தின்.சமஸ்;கிருதம். பாலி போன்ற மொழிகள் காலக்கிரமத்தில் பழக்கத்திலில்லாத மொழிகளாக மாறிப்போய்கொண்டிருக்கும்போது தமிழ் மொழி ஒரு தனித்துவமான ஆளுமையான மொழியாக வளர்ந்து கொண்டிருக்கிறதா, அல்லது தமிழ் மொழி என்பது ஒரு அரசியல் வலிமையான ஆயதமாகக்கணிக்கப்படுகிறதா.அல்லத ு, இன்றைய கால கட்டத்தில், இணையத்தளத்தின்மூலமும், அத்துடனனான பல்வேறு சமுகத் தொடர்பு சாதனங்களாலும் தமிழின் பாவனையும் பதிய வடிவெடுத்துத் தன் வடிவைக் காலத்திற்கேற்றபடி மாற்றிக் கொள்கிறதா போன்ற பல கேள்விகளுக்குப் பதில் தேடுவது இலகுவான காரியமல்ல.
அத்துடன் காலம் காலமாக மக்கள் இடம் பெயர்வதும் தங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் தொடர்ந்து வளர்ப்பதும் ஒரு மொழி, அதனுடைய பன்முகத்தன்மை வளர்ச்சியைக்காணும் ஒரு பரிமாண மாற்றமாகக் கருதப்படுகிறது. இன்று உலகம் ஒரு சிறிய கிராமமாக மாறிக்கொண்டிருக்கிறது. தொழில் நிமித்தம், அரசியற் காரணங்கள், தொடரும் உள்நாட்டுப் பிரச்சினைகள் போன்ற பல காரணிகளால் மக்கள் இடம் பெயர்கிறார்கள். ஆங்கிலம் மட்டும் என்ற ஓரே ஒரு மொழி மட்டும் பாவனையிலிருந்த லண்டன் போன்ற நகரத்தில் இன்று 330 மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். தமிழ் மக்களும் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தேவைகளும் வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் இன்றியமையாத மொழியை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். முக்கியமாக, இலங்கைத் தமிழர்கள் மிகப் பெரிய அளவில் புலம் பெயர்ந்திருக்கிறார்கள் பலர் தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் மிகவும் அக்கறையாகவிருக்கிறார்கள். அவ்வப்போது, ஆங்காங்கே சில மகாநாடுகள் தமிழ் மொழி பற்றி நடக்கின்றன.ஓரு மொழியின் வளர்ச்சிக்குப் பின்புலமாக இருப்பது அந்த மொழியின் ஆளுமையை உணர்ந்த, அந்த மொழியுடன் தங்கள் ஆக்கங்களையிணைத்துக்கொண்ட, எதிர்காலத்திற்கு எப்படி எங்கள் மொழியை முன்னெடுத்துக்கொண்டுபோகலாம் என்ற ஆத்மீக தாகமுள்ள சில புத்திஜீவிகளின் தொடர் முயற்சிகள் மட்டுமல்ல, மொழியைத் தங்கள் வாழும் சமுதாயத்தின் வாழ்வின் நலத்துடனும்,முன்னேற்றத்துடனும் பிணைப்பதற்கு உதவும் பலகலைகளும், ஆய்வுகளும், அரசியலோ அல்லது குழு மனப்பாங்கற்ற மகாநாடுகளும் தொடர்ந்து நடைபெறுவது, தமிழ் மொழியின வளர்ச்சிகளை முன்னெடுக்கும் பணிகளாகவிருக்கும். தமிழர்கள் பலநாடுகளுக்குப் புலம் பெயாந்தாலும் தமிழை வளர்க்கும் உரிய நோக்குடனான உலகமளாவிய ஒரு ஸ்தாபனம் இன்னும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களால் உருவாக்கப்படவில்லை.
இன்று. இந்தியாவில் அரச கரும மொழியாகவிருக்கும் இருபத்திரண்டு மொழிகளில் தமிழும் ஒரு மொழியாகும் 2004ம் ஆண்டு , அன்று இந்திய ஜனாதிபதியாகவிருந்த அப்துல் காலம் என்ற அறிஞராலும், இன்றைய முதல்வராக இருந்த திராவிட முன்னேற்றக் கட்சித்தலைவர் மு. கருணாநிதியாலும் தமிழ் ஒரு செம்மொழி என்று பிரகடனப்படுத்தப்;பட்டது.
நம் மொழி தமிழ்!
திராவிட மொழிக் குடும்பத்தின் மூல மொழி தமிழ். திராவிடக் குடும்பத்தின் முதன்மையான மொழி, மூத்த மொழி, திராவிட மொழிகளின் தாய் மொழி - நம் மொழியாம் தமிழ்.
இந்த மொழிக் கூட்டத்தில் மொத்தம் 26 மொழிகள். அத்தனைக்கும் மூல மொழியாக நம் தாய் மொழியான தமிழ் இருப்பது பெருமைக்குரிய ஒன்று. இவை தவிர 35 சிறு மொழிக் கூட்டத்திற்கும் தமிழே மூல மொழியாக இருப்பது வியப்புக்குரியது.
இன்று தனிச் சிறப்புடன் கூட...
ிய ஒரு மொழியாக திகழும் மலையாளம், 9வது நூற்றாண்டு வரை தமிழின் ஒரு 'டயலக்ட்' ஆகத்தான் இருந்து வந்தது -அதாவது மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ் போல. தமிழிலிலிருந்து நேரடியாக பிரிந்த ஒரு மொழிதான் மலையாளம்.
தமிழை மூன்று காலங்களாக ஆய்வாளர்கள் பிரிக்கின்றனர். கி.மு. 300க்கும், 700க்கும் இடைப்பட்ட காலம் பழந்தமிழ்க் காலம் என்றும், 700க்கும், 1600க்கும் இடைப்பட்ட காலத்தை இடைக்காலத் தமிழ் என்றும், 1600 முதல் இன்று வரையிலான காலத்தை நவீன தமிழ் காலம் என்றும் ஆய்வாளர்கள்
வகைப்படுத்துகின்றனர்.
தமிழ் என்ற பெயர் எப்போது முதல் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை. இருப்பினும் கி.மு. முதலாம் நூற்றாண்டில் தமிழ் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் உள்ளன.
செம்மொழித் தமிழ்...
உலகச் செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்கிறது. செம்மொழி என்பது ஒரு அடையாளம் அல்ல, மாறாக அது ஒரு மொழியின் செம்மையை, சீரை, சிறப்பை, செழுமையை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவுகிறது.
மிகப் பாரம்பரியமான, பழமையான இலக்கியத்தைக் கொண்ட மொழியாக இருக்க வேண்டும். சுயம் இருக்க வேண்டும், வேறொரு பாரம்பரியத்தின் நிழல் அந்த மொழியின் மீது படிந்திருக்கக் கூடாது. அப்படிப்பட்ட மொழியே செம்மொழி என கூறுகிறார் மொழியியல் வல்லுநர் ஜார்ஜ் ஹார்ட்.
இன்று உலகளவில் ஆயிரக்கணக்கான மொழிக் கூட்டங்கள் இருந்தாலும் பேச்சளவிலும், எழுத்தளவிலும் உயிர்ப்புடன் இருப்பது சில நூறு மொழிகள் தான். அதிலும் பழமை வாய்ந்ததாக, பாரம்பரியம் வாய்ந்ததாக, சிறப்பு வாய்ந்ததாக, தங்களுக்கென்று சுயத்தைக் கொண்ட மொழிகள் வெகு சிலதான். அதில் ஒன்று நம் செம்மொழி தமிழ்.
இலக்கணத்திலும், இலக்கியத்திலும் சிறந்த மொழிகளுக்கே இந்த சிறப்பு கிடைக்கிறது. சுமேரிய மொழி, ஆதி எகிப்திய மொழி, ஆதி பாபிலோனிய மொழி, ஹீப்ரூ, சீன மொழி, கிரேக்கம், சமஸ்கிருதம், தமிழ், லத்தீன், மண்டாயிக், சிரியாக், ஆர்மீனியன், பெர்சியன் ஆகியவற்றை செம்மொழிகளாக உலகம் கண்டிருக்கிறது.
ஆனால் இந்த சிறிய மொழிக் கூட்டத்தில் இன்று உலக அளவில் வலுவான வரலாற்றுடன், மிக வீரியமான உயிர்ப்புடன் கூடிய ஒரே மொழியாக தமிழ் மட்டுமே திகழ்கிறது என்பது நிஜம், அது தமிழுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய பெருமை என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழ் தந்த தொல்காப்பியத்திற்கு ஈடு இணையே இல்லை என்பது பல்வேறு செம்மொழிகளை ஆய்வு செய்தவர்கள் அளித்துள்ள தீர்ப்பு.
செந்தமிழ் (செம்மொழியாகிய தமிழ்) எனுஞ்சொல் தமிழில் கிடைத்துள்ள மூலமுதல் நூலான, மூவாயிரம் ஆண்டுப் பழைய தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது.
தமிழ் எனும் சொல்லுக்குக் கிபி 10ஆம் நூற்றாண்டில் எழுந்த பிங்கல நிகண்டு, 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பொருள் கூறுகிறது.
செந்தமிழ் என்பதற்குக் 'கலப்பற்ற தூயதமிழ்' என்று பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி.
செந்தமிழ் எனுஞ் சொல் உணர்வு நிலையில் இலக்கண வரம்பை வற்புறுத்துகிறது. செயல் நிலையில் செம்மொழி ஆக்கத்தை வற்புறுத்துகிறது. மதிப்பீட்டு நிலையில், இலக்கணத்தை வற்புறுத்தாவிடில் கிளைமொழிகள் தோன்றிப் புதுமொழிகளாக மாறும் என எச்சரிக்கிறது என்று மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் விளக்குகிறார்.
செம்மொழி எனுஞ் சொல்லை, அகநானூற்றின் 349 ஆம் பாடல் 'நடுநிலை தவறாத மொழி' எனும் பொருளில் ஆண்டுள்ளது.
தமிழ் எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று தன் தனித்தன்மையைக் காத்து, தன்னை அணைத்து அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து வாழ்ந்து வளர்ந்துவரும் மொழியாகும். ஆங்கிலம் லத்தீன் மொழிக்குக் கடன்பட்டிருப்பது போலவே தமிழ்மொழியும் சமஸ்கிருதத்திற்குக் கடன்பட்டிருப்பதாகக் கருதுவது அறவே பொருந்தாது. பொருள் விளக்கத்தைச் சாகவிடாமல் சொற்களைக் கைவிடுவது ஆங்கிலத்திற்கு இயலாது. ஆனால், சமற்கிருதச் சொற்களுக்கு ஈடான சொற்செல்வங்களைத் தமிழ் அளவின்றிப் பெற்றுள்ளது. இது, முனைவர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் ஆய்வு முடிவு.
தென்னாட்டின்கண் சிறந்தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி, எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும், உயர்தனிச் செம்மொழியே ஆம் என்பது உறுதி. இவ்வளவு உயர்வும் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ்மொழியை உள்நாட்டுப் புன்மொழிகளோடு ஒருங்கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டு உயர்தனிச் செம்மொழி சமற்கிருதம் எனக் கொண்டாற்போலத் தென்னாட்டு உயர்தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடையதாம். இது, 1887இல், சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் அப்போதைய தமிழ்த் துறைப் பேராசிரியரும் வடமொழி வல்லுநருமாகிய வீ.கோ.சூரிய நாராயண சாத்திரி என்ற பரிதிமாற் கலைஞர் முடிவு.
பிறமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் கொண்ட தமிழின் சிறப்பு வியப்பை அளிப்பதாகும். தமிழ், செய்யுள் வடிவிலும் உரைநடையிலும், கிரேக்க மொழிச் செய்யுள்களைக் காட்டிலும் தெளிவுடையதாகவும் திட்பமுடையதாகவும் கருத்தாழம் உடையதாகவும் விளங்குகிறது. தமிழ்மொழி நூல்மரபிலும் பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல்வளம் கொண்டது. இது, முனைவர் வின்சுலோ அவர்களின் முடிவு.
தமிழ்மொழியைச் செவ்வியல் மொழியாக உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் பழந்தமிழர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களின் இம்முயற்சி, கிரேக்கர்களுடன் தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கு முன்னரே ஏற்பட்டுள்ளது. இது, கில்பர்ட்டு சிலேடர் என்ற மொழியறிஞரின் முடிவு.
ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள செனகல் நாட்டின் தாக்கர் பல்கலைக் கழகம் முதன்முதலில் தமிழ்மொழியைச் செவ்வியல் மொழி என்று முடிவு இயற்றி ஏற்றுக் கொண்டது.
தமிழ்நாட்டில், அண்ணர்மலை பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம். திருநெல்வேலியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியன தமிழைச் செம்மொழி என்று தீர்மானம் இயற்றியுள்ளன.
தனிச் சிறப்புக்கு சங்க இலக்கியங்கள்...
தொல்காப்பியம் மட்டுமல்லாமல் தமிழுக்கு மணி மகுடமாக விளங்குபவை சங்க கால இலக்கியங்கள். அவற்றில் பல நம்மிடையே இன்று இல்லை. காலம் அவற்றை அழித்து விட்டது. நமது கைக்குக் கிடைத்துள்ள சில நூல்கள் ஒரு பாணை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தமிழின் தனிச் சிறப்பை வெளிக்காட்ட உதவுகிறது.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அக நானூறு, புற நானூறு, நற்றினை, ஐங்குறுநூறு, பரிபாடல் ஆகியவை அவற்றில் சில. இக்கால கட்டத்தில் தமிழ் இலக்கியம் மிக செழுமையான நிலையில் இருந்தது. சங்க கால இலக்கியம், தமிழின் பொற்காலம் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேபோல தமிழின் தலை சிறந்த அடையாளங்களில் ஒன்று திருக்குறள். தமிழ் என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட வராமல், உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் பொருந்தும் வகையிலான இந்த அரும் படைப்பு, தமிழுக்கு மட்டும் சொந்தமானதல்ல, உலகுக்கே பொதுவானது. அதனால்தான் குறளை உலகப் பொது மறையாக போற்றுகிறது இலக்கிய உலகம்.
கி.பி. 3வது நூற்றாண்டில் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரட்டை காப்பியங்களைக் கண்டது தமிழ். தமிழின் ராமாயணம், மகாபாரதம் என இதைச் சொல்லலாம். அதேபோல கம்ப ராமாயணமும். தமிழின் அபாரமான படைப்புகளில் இதுவும் ஒன்று.
வால்மீகியின் ராயாணத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த படைப்பை கம்பர் படைத்திருந்தாலும், அதன் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் தனது சுய படைப்பு போல இதை அமைத்திருப்பது மிக மிக வியப்புக்குரியது. அது கம்பரின் திறமையா அல்லது தமிழின் செழுமையா என்பதே ஒரு பட்டிமன்றத் தலைப்புக்குரியது. அதனால்தான் இன்றளவும் கம்ப ராமாயாணம் விவாதப் பொருளாக பட்டி தொட்டியெங்கும் வலம் வந்து கொணடிருக்கிறது.
பரவசப்படுத்தும் பக்தி இலக்கியம்
பக்தி இலக்கியத்திலும் தமிழுக்கு தனிச் சிறப்பு உண்டு. குறிப்பாக நாயன்மார் இலக்கியம் தமிழுக்கு கிடைத்த இன்னொரு மகுடம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நான்கு தலை சிறந்த நாயன்மார்கள் ஆவர்.
அதேபோல 12 ஆழ்வார்கள் தமிழுக்கு செய்த சேவை மறக்க முடியாதது. அவர்களில் ஆண்டாளும், குலசேகர ஆழ்வாரும் குறிப்பிடத்தகுந்தவர்கள். சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் படைத்த திருப்பாவை தமிழின் தனிச் சிறப்புக்கு அருமையான உதாரணம்.
தமிழுக்கு அருஞ்சேவை புரிந்தவர்களில் உமறுப் புலவரை குறிப்பிடாமல் இருக்க முடியாது. சீறாப்புராணம் என்ற சீரிய காவியத்தைப் படைத்தவர் உமறுப் புலவர். 5000 பாடல்களில் அண்ணல் நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை அரிய பாடல்கள் மூலம் வடித்துள்ளார் உமறுப் புலவர்.
அதேபோல கிறிஸ்தவ சமுதாயத்தினரின் தாக்கமும் தமிழ் இலக்கியத்தில் விரவிக் கிடக்கிறது. அதிலும் கால்டுவெல், வின்ஸ்லோ, ஜி.யு.போப், பெஸ்கி ஆகியோரின் பங்களிப்பு தமிழுக்கு மிகப் பெரியது. இத்தாலியைச் சேர்ந்த பெஸ்கி படைத்த தேம்பவாணி தமிழின் அரும்பெரும் கவிப் படைப்புகளில் ஒன்றாக ஜொலிக்கிறது.
இப்படி தமிழின் சிறப்புகளையும், அதன் சீரையும், செழுமையையும் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட சிறப்புடைய தமிழ், 2004ம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டாலும் கூட, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அது செம்மொழியாக பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கி விட்டது என்பதே உண்மை.
தமிழின் பிற சிறப்புகள்
- தமிழ் இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பெரும் வரலாறு கொண்டது.
- கி.மு. முதலாம் நூற்றாண்டு மற்றும் கி.மு. 2ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுக்கள் எகிப்திலும், தாய்லாந்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பதிவேட்டில் கடந்த 1997 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஓலைச் சுவடிகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன. அந்த இரண்டுமே தமிழ் சுவடிகள் என்பது பெருமைக்குரியதாகும்.
- இந்திய தொல்பொருள் துறை இந்தியாவில் இதுவரை கண்டுபிடித்துள்ள கல்வெட்டுக்களில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்டவை தமிழ் கல்வெட்டுக்கள் ஆகும். அதாவது 55,000 கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள்.
- தமிழில் கிட்டத்தட்ட 22 வட்டார வழக்குகள் உள்ளன. ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தெனாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி, கொங்கு மற்றும் குமரி ஆகியவையே அவை.
- உலகின் அனைத்துக் கண்டங்களிலும் விரவிப் பரவிக் கிடக்கிறது தமிழ்.
- இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது. மலேசியா, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, வியட்நாம், கயானா, பிஜி, சூரினாம், டிரினிடாட் டொபாகோ, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தமிழர்களும், தமிழும் கணிசமாக உள்ளனர்.
- எத்தகைய மொழிக்கும் ஈடு கொடுக்கக் கூடிய இயல்பும், பாலில் நீர் கலப்பது போல இயைந்து போகும் சிறப்பும் உள்ள மொழி தமிழ்.
இந்தத் தமிழ் செம்மொழியானது கால தாமதம் என்றாலும் இன்றாவது ஆனதே என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் உலகத் தமிழர்கள். உலகத்தின் தலையாய மொழிகளில் ஒன்றாக திகழும் நம் தாய் மொழிக்கு மாநாடு நடத்துவது மேலும் ஒரு மகுடம் சூட்டுவதற்குச் சமம். எத்தனையோ பெருமைகளை தலையில் சுமந்து நிற்கும் தமிழுக்கு, இந்த மணிமகுடம் மேலும் ஒரு பெருமையாக அமையட்டும்.
ஓலைச் சுவடிகளில் உருண்டு புரண்ட தமிழ் இன்று கம்ப்யூட்டர் திரைகளில் ஜாலம் காட்டும் காலத்திலும் நளினம் குறையாமல், நவீனம் மறுக்காமல், பாரம்பரியத்திற்குப் பங்கம் வராமல் தொடர்ந்து பரவசம் காட்டி வருவது தமிழுக்குள்ள மகா சிறப்பு.
குற்றாலம்: குற்றாலம் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் தமிழர்களின் வரலாற்றை நினைவு கூறும் அரிய, பழம் பொருட்கள் கேட்பாரற்று தெருக்களில் கிடக்கிறது. முறையான பரமாரிப்பு இல்லாத காரணத்தால் இந்த தொல்பொருள் அருங்காட்சியகம் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த குடி, தமிழ் குடி என்பதை மெய்ப்பிக்கும் விதமாக தமிழகத்தில் நெல்லை மாவட்ட பகுதிகளில் தொல்பொருள் துறை பல கண்டுபிடி...ப்புகளை மேற்கொண்டு வந்துள்ளது. ஆதிச்சயநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழி தமிழர்களின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றியது.
மூவேந்தர்கள், தமிழ் மக்கள் மற்றும் சில பல குறுநில மன்னர்கள் ஆகியோர் தமது சரித்திரத்தை மண்ணில் கலை பொக்கிஷங்களாக, பொருட்களாக, போர் தளவாடங்களாக, நாணயங்களாக அடுத்து வந்த தலைமுறையினருக்கு விட்டு சென்றுள்ளனர்.
இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்ததை வைத்து தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்றைய வாழ்க்கை, இன்றைய வரலாறு, இன்றைய செயல், நாளைய சரித்திரம் என அறிஞர்கள் சொல்வார்கள். இதை நிரூபிக்கும் இந்த பொருட்களின் தன்மையும், அதன் விலை மதிப்பும், வரலாறும் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை.
அப்படி கிடைக்கும் அரிய பொருட்களில் நாகரிகம், வாழ்க்கை முறை, கல்வெட்டுகளையும், அதில் காணப்படும் வாசகங்களையும் வெளிஉலகத்திற்கு கொண்டு வர அரசு தொல் பொருள் ஆய்வு துறையை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு பணியாளர்களுக்கு பயிற்சியளித்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் அலுவலகம் அமைத்து அப்பகுதியில் கிடைக்கும் அரியவகை பொருட்களை கைப்பற்றி பாதுகாக்கவும், மேலும் அந்த பகுதியில் வேறு ஏதாவது முக்கிய பொருட்கள் கிடைக்கிறதா என ஆராய்ச்சி மேற்கொள்வதும் உண்டு.
இத்துறையின் சார்பில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சேர மன்னர்கள் ஆட்சி புரிந்த கேரள நுழைவு பகுதியும், தமிழக எல்லையும், பாண்டிய மன்னர்கள் ஆளுகைக்குட்பட்ட அன்றைய தென்காசி தாலுகா பகுதியுமான புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் ஒரு அருட்காட்சியகம் அமைக்கப்பட்டது.
இந்த அருட்காட்சியகத்தில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், அதன்பின்னர் மன்னர் ஆட்சிகாலத்தில் பயன்படுத்தப்பட்ட போர் தளவாடங்கள், அரியவகை சிலைகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இந்த அருட்காட்சியகத்தில் உள்ளன.
மேலும் வடநாடுகளை போல் தென் தமிழகத்திலுள்ள தென்காசி தாலுகா பகுதியிலும் பலநூறு ஆண்டுகளுக்கு முன் உடன்கட்டை ஏறுதல் வழக்கம் இருந்துள்ளதை காட்டும் அரிய வகை சிற்பங்களும், கல்வெட்டுகளும் இங்கு உள்ளது.
இப்படி அரிய பொக்கிஷங்கள் நிறைந்துள்ள இந்த அருட்காட்சியகத்தினை பொதுமக்கள் சுற்றி பார்க்கவும், அவற்றை பாதுகாக்கவும் தற்போது போதிய வசதிகள் இல்லை. இதனால் இந்த அரிய பொருட்கள் கேட்பாரற்று, பராமரிக்கப்படாமல் சாலையின் ஓரத்திலும், வழிபாதையிலும் கிடக்கிறது.
இவற்றை விரைந்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றால சீசனுக்கு வந்து செல்லும் பல லட்சக்கனக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிடவும், அவர்கள் தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளும் விதமாகவும் இந்த அருட்காட்சியகத்தை புதிய இடத்தில் புனரமைத்திட வேண்டும்.
இல்லையேனில் அரிய பொக்கிஷங்கள் நிறைந்திருக்கும் இந்த அருட்காட்சியம் பரமாரிப்பின்றி அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தொல்பொருள்துறை சீரமைப்பது காலத்தின் அவசியம், அவசரம்...செய்யுமா அரசு...?
தமிழக கோவில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைபாடுகலாகட்டும், தூண்களில் ஒரு நூல் இல்லை கூட கோணல் இல்லாமல் கட்டப்பட்ட 1000 கால் மண்டபங்கள் ஆகட்டும், 1000 ஆண்டுகளாக இயற்க்கை சீற்றங்களால் கூட சிறு தேய்வுகள் இன்றி, எந்த வண்ண பூச்சும் இன்றி நிமிர்ந்து நிற்கும் தஞ்சை கோபுரம் ஆகட்டும். இன்னும் ஆதி தமிழர்கள் செய்த பற்பல அற்புதமான விஷயங்கள் பற்றி வியப்புடன் பேசும் நாம் இதை பற்றிய தேடலை மேற்கொண்டோமா? அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விஷத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்....
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்று மா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி (வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால் வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரிமா
1/64 - கால்வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ் முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - ����மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைபடி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.
அடேங்கப்பா எந்த மொழியிலும் இல்லாத decimal calculation !!!!!!!
nano particle தான் மிக சிறியது என்று உலகமே பேசிகொண்டிருக்கையில் நம் முன்னோர்கள் அதைவிட சிறிய துகளுக்கு கூட calculation போடிருக்கிரார்கள் என்றால் மிகவும் வியக்கத்தக்க ஒன்றே.
இவ்வளவு கணிதமும் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது!!!!!
இந்த எண்களை வைத்தே நுணுக்கமான பல வேலைகளை செய்துள்ளனர் என்றால் நம் முன்னோர்களின் அறிவையும் ஆற்றலையும் எண்ணி பாருங்கள்.
இன்றைக்கு உள்ள மேம்பட்ட தொழில்நுட்பத்தை வைத்தே நம்மால் செய்ய இயலாத பல அற்புதங்களை அன்றே செய்து வைத்து விட்டனர்.
கால்குலேடரையும், தொழில்நுட்ப வளர்ச்சி என்று இளைய தலை முறை கூறிக்கொண்டிருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம், தமிழர்களின் சாதனையை பற்றிய தேடல் தொடரும்...!!!
(நான் இட்ட தலைப்புக்கும் உள்ளே இருந்த பொருளும் வேறுமாதிரியாக உள்ளதே என என்னலாம். வலைத்தளத்தில் பல தொடர் பதிவுகள் சென்றுகொண்டிருப்பதால் புது புது தலைப்புகள் இட்டால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் இவ்வாறு இட்டுள்ளேன்.)
இப்பதிவு பற்றிய தங்களின் கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன...
நன்றி!!!
ம.ஞானகுரு
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.
குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ்,
இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு பனை நாடு, ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன. அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.
குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.
இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.
வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்!
இப்பதிவு பற்றிய உங்களின் கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன....
நன்றி!!!
ம.ஞானகுரு
்மக்கள் வாழும் சமுதாயத்தின் கலை கலாச்சார, அரசியல்,பொருளாதார வளர்சியிலும் பெரும் பங்கெடுக்கிறது. இதற்கு உதாரணம் இன்று உலகின் முக்கிய மொழியாகக் கருதப் படும் ஆங்கில மொழி உதாரணமாகும். பதினைந்தாம் றூற்றாண்டிலிருந்து இன்று வரை ஆங்கிலம் உலகிலுள்ள கணிசமான மக்களின் தொடர்பு மொழியாக இருப்பது மட்டுமன்றி தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாத தரகனாகவும்; செயற்படுகிறது. இந்த அணுகு முறையில் மட்டுமன்றி, தமிழ் மொழியின் கலாச்சார ஈடுபாடு,அரசியலில் தமிழுக்கு உள்ள இன்றைய ஆளுமையும் அதன் எதிர்கால இருப்பும் பற்றிப்பேசுவது தமிழார்வலர்களாற் தவிர்க்க முடியாத விடயமாகும். தமிழின் உயர்வுக்கும் வளர்ச்சிக்குமாக ஒன்று பட்டு இணையும் சில அமைப்புக்களின் முயற்சிகளாலும் தனிப்பட்டவர்களின் ஊக்கங்களாலும், தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றிய ஒரு ஆளமான சர்ச்சைகள் நடக்கின்றன.. அந்த முயற்சிகளுக்கு, நேரடியாகவும் மறைமுகமானவும் பல தடைகள் வரும்போதும், மொழியில் ஆர்வம் கொண்டுள்ள புத்திஜீவிகளின் சிந்தனைக்கு இருட்டடிப்பு நடப்பதாலும் பல ஆக்க பூர்வமான படைப்புக்கள் வெளிவருவது, கருத்தரங்கங்கள் நடைபெறுவது, புதிய சிந்தனைகள் துளிர்ப்பது, சிறந்த படைப்புக்கள் வெளிவருவது என்பன தடைபடுகின்றன என்பதையும் மனதிற் கொள்ளவேண்டும்.
ஓரு மொழி என்பது, ஒரு சமுதாயத்தின் உயிர்நாடியாகவிருக்கும்போது, சில குறுகிய கால நலன்களுக்காக அந்த மொழியைக் குறிப்பிட்டகாரணத்திறகாக மட்டும் பாவனையில் கொண்டுவருவதாரல் அம்மொழி; மக்களின் தேவையிலிருந்து தானாகவே மறைந்து விடும் என்பதற்கு, ஒருகாலத்தில் கொடி கட்டிப் பறந்த பல மொழிகள் இன்று மக்களுக்குத் தெரியாத சரித்திரமாகப்போனவை ஒரு சல சான்றுகளாகும். காலம் காலமாகப் பல அரசியற் சிந்தனையாளர்கள், சமுதாய மாற்றங்களுக்கான திட்டங்களைத் தங்கள் படைப்புக்கள் மூலம் மக்கள் மனதில் படைத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் பல் விதமான அடக்கு முறைகளுக்கும் எதிரான ஆயதமாகச் செயற்பட்டவை, சிந்தனையாளர்களின் பேனாக்களாகும்.அவற்றின் தூய படைப்புக்கள் தமிழின் எதிர்காலம்பற்றி எழுதுவது இக்காலத்தின் மிகப்பெரிய தேவையாகும்.
இன்று வலிமைபெருகிய சக்திகளான, தொழில் விஞ்ஞான வளர்ச்சிகளாலும், தமிழ்பற்றிய பெருமைதெரியாத அறியாமையினாலும் தமிழ் ஒரு தேக்கநிலையை அடைவது தவிர்க்க முடியாது. அதேமாதிரி, இலங்கைபோன்ற நாடுகளில் தமிழ் ஒரு அரசகருமமொழியாக இருந்தாலும் அதன் பாவனையும் பராமரிப்பும் திருப்திதரும் வகையில் இல்லை என்பதையும் கருத்திற் கொள்ளவேண்டும்.
வலிமையுள்ள ஆதிக்க சக்தி,; தான் வெற்றி கொண்ட மக்களுக்குத் தந்கள் மொழி;, கலாச்சாரத்தை; திணிப்பதுபோல்( பழைய காலத்தில் இலத்தின், சமஸ்கிரதம் என்பன இருந்ததுபோல், பதினைந்தாம் றூற்றாண்டுக்கால கட்டத்தில் ஸ்பானிஸ், போர்துக்கிஸ் மொழிகளும், நவின காலத்தில் ஆங்கிலமும் இருக்கிறது). இன்றைய கால கட்டத்தில் தமிழ் மொழியைப் பொறுத்தவரையில பல சோதனைகளை எதிhகொள்ளவேண்டியிருக்கிறது, இன்று எதிர் கோக்கும் பிரச்சினைகளைப், பல்லாயிரக்கணக்கான வருடங்களாகத் தமிழ் மொழி, பல மாற்றங்களுக்கு முகம் கொடுத்தது போல, இன்னும் பல உத்வேகத்துடன் முகம் கொடுக்குமா என்பதை இக்கட்டுரை ஆராயவிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்த பாவனையிலிருக்கும் மொழிகளில் தமிழ் மொழி முன்னிடத்தை வகிக்கிறது. பழைய மொழிகளான இலத்தின்.சமஸ்;கிருதம். பாலி போன்ற மொழிகள் காலக்கிரமத்தில் பழக்கத்திலில்லாத மொழிகளாக மாறிப்போய்கொண்டிருக்கும்போது தமிழ் மொழி ஒரு தனித்துவமான ஆளுமையான மொழியாக வளர்ந்து கொண்டிருக்கிறதா, அல்லது தமிழ் மொழி என்பது ஒரு அரசியல் வலிமையான ஆயதமாகக்கணிக்கப்படுகிறதா.அல்லத
அத்துடன் காலம் காலமாக மக்கள் இடம் பெயர்வதும் தங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் தொடர்ந்து வளர்ப்பதும் ஒரு மொழி, அதனுடைய பன்முகத்தன்மை வளர்ச்சியைக்காணும் ஒரு பரிமாண மாற்றமாகக் கருதப்படுகிறது. இன்று உலகம் ஒரு சிறிய கிராமமாக மாறிக்கொண்டிருக்கிறது. தொழில் நிமித்தம், அரசியற் காரணங்கள், தொடரும் உள்நாட்டுப் பிரச்சினைகள் போன்ற பல காரணிகளால் மக்கள் இடம் பெயர்கிறார்கள். ஆங்கிலம் மட்டும் என்ற ஓரே ஒரு மொழி மட்டும் பாவனையிலிருந்த லண்டன் போன்ற நகரத்தில் இன்று 330 மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். தமிழ் மக்களும் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தேவைகளும் வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் இன்றியமையாத மொழியை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். முக்கியமாக, இலங்கைத் தமிழர்கள் மிகப் பெரிய அளவில் புலம் பெயர்ந்திருக்கிறார்கள் பலர் தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் மிகவும் அக்கறையாகவிருக்கிறார்கள். அவ்வப்போது, ஆங்காங்கே சில மகாநாடுகள் தமிழ் மொழி பற்றி நடக்கின்றன.ஓரு மொழியின் வளர்ச்சிக்குப் பின்புலமாக இருப்பது அந்த மொழியின் ஆளுமையை உணர்ந்த, அந்த மொழியுடன் தங்கள் ஆக்கங்களையிணைத்துக்கொண்ட, எதிர்காலத்திற்கு எப்படி எங்கள் மொழியை முன்னெடுத்துக்கொண்டுபோகலாம் என்ற ஆத்மீக தாகமுள்ள சில புத்திஜீவிகளின் தொடர் முயற்சிகள் மட்டுமல்ல, மொழியைத் தங்கள் வாழும் சமுதாயத்தின் வாழ்வின் நலத்துடனும்,முன்னேற்றத்துடனும்
இன்று. இந்தியாவில் அரச கரும மொழியாகவிருக்கும் இருபத்திரண்டு மொழிகளில் தமிழும் ஒரு மொழியாகும் 2004ம் ஆண்டு , அன்று இந்திய ஜனாதிபதியாகவிருந்த அப்துல் காலம் என்ற அறிஞராலும், இன்றைய முதல்வராக இருந்த திராவிட முன்னேற்றக் கட்சித்தலைவர் மு. கருணாநிதியாலும் தமிழ் ஒரு செம்மொழி என்று பிரகடனப்படுத்தப்;பட்டது.
தமழ் மொழியின் எதிர்காலம் பற்றிப் பேசும்;போது,ஒவ்வொரு வினாடியும் அளவிடமுடியாத விதத்தில் வளர்ந்து வரும் தொழில் விஞ்ஞானத்தில் ஆங்கிலம் சீனம், ஜப்பான் போன்ற மொழிகள் முன்னிடம் வகிக்கினறன, அந்த நோக்கிற்பார்க்கும்போது தமிழ்மொழியின் வளர்ச்சியும் முன்னேற்றமும் எப்படி இருக்கும் என்பது தமிழார்வம் கொண்டவர்களின் கேள்வியாகவிருக்கிறது. இன்று பாவனையிலிருக்கும் மொழிகள் பல தடுக்க முடியாதளவு அழிந்துகொண்டிருக்கின்றன.... 28 விகிதமான மொழிகள் கிட்டத்தட்ட நூறு மக்களால் மட்டும் பேசப்படுகிறது. சில நாடுகளிலுள்ள சிறுபான்மை மக்களின் மொழிகளை, அந்நாட்டின் ஆட்சியிலமர்ந்திருக்கும் பெரும்பான்மை அரசுகள் அழித்துக்கொண்டுவருகின்றன.
அத்துடன் இன்று, தமிழ் மொழிக்குமட்டுமல்லாது பல மொழிகளுக்கும், அதிகளவில முன்னேறிக்கொண்டுவரும் தொழில், விஞ்ஞான, ஊடகப் பெருக்கக்களுக்குடன் நின்றுபிடிக்கமுடியுமா என்பதாகும். இன்றைய கால கட்டத்தில் தொழிற்துறையில்,உலகம் பரந்த விதத்தில் முன்னிற்பது ஆங்கில மொழியாகும். ஆனால் மக்களின் பாவனை மொழியுடன் ஒப்பிடும்போது,மான்டரின் (சீனா)மொழியை, 1025 கோடி மக்களும், ஸ்பானிய மொழியை 390 கோடி மக்களும், ஆங்கிலத்தை 328 கோடி மக்களும், ஹின்தி மொழியை 405 கோடிமக்களும், அராபிய மொழியை 452 மக்களும்;,வங்காள மொழியை 250 கோடி மக்களும் பாவனைப்படுத்துகிறார்கள். அதில் தமிழ் மொழியைப் பேசபவர்கள் ஒட்டு மொத்த உலகிலும் 74 கோடி இருக்கிறார்கள்.இந்தியாவில் அறுபது கோடி மக்களாலும், ஒட்டுமொத்த உலகிலும் எழுபது கோடி மக்களாலும் தமிழ் பேசப்படுகிறது. தமிழ் மொழியிலிருந்து தழுவி வந்த (மலையாளம் போன்ற திராவிட மொழிகள்) மொழியைப்பேசுபவர்களையும் ஒன்று சேர்த்தால் நூற்றுப் பத்துக்கோடிக்கு மேலாகலாம் என்று கணிக்கப்படுகிறது.
இந்தியாவிலும் இலங்கையிலும் பத்தொன்பது பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பீடங்கள் உள்ளன. அத்துடன உலகின் பல முக்கிய நாடுகளான அமெரிக்கா,இங்கிலாந்து, கனாடா, அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளின் பல்கலைக்கழகங்களும் தமிழின் முதுமைக்கலாச்சாரத்தை ஆராய்கின்றன. தமிழ் பேசும் மக்கள் இன்று உலகின் பல பகுதிகளிலும் (கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேலான நாடுகளில்) வாழ்கிறார்கள். அத்துடன் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அந்தமான் தீவுகளில் தமிழ் உத்தியோக மொழியாகப் பாவிக்கப் படுகிறது.
தமிழ் மொழி இந்தியாவின் ஆதிக்குடிகளான திராவிட மக்கள் பேசிய முக்கிய மொழியாகும். தமிழ் நாடென்று ஒன்றிருந்தாலும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லாதிருப்பதால், தமிழின் எதிர்காலம் பற்றிய பயம் பல தமிழர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து கொண்டு வருகின்றது என்று அண்மையில் ஒரு பேராசிரியர் குறிப்பிட்டார்.ஆனால், இன்று தமிழகத்தில ஆட்சி செய்யும் அரசியற் கட்சிகள் தமிழின் பெருமையை வைத்துச் செய்த பிரசாரத்தால் ஆட்சிக்கு வந்தவை. தொடர்ந்தும் ஆடசியிலிருப்பவை. ஓரு காலத்தில், ஆங்கில நாடான இங்கிலாந்தின் அரசகரும மொழி ஆங்கிலமாகவிருக்கவில்லை. இந்தியா அன்னியரின் ஆதிக்கத்திலிருந்தபோது தமிழ் மொழி மட்டுமல்லாது இந்திய மொழிகள் அரசமொழிகளாகவிருக்கவில்லை. ஆனாலம் பல இந்திய மொழிகள் உலகம் தெரிந்த மொழிகளாக மாறின. இரவிந்திரநாத தாகூரின் எழுத்தும் அவரின் கீதாஞ்சலியும் நோபல் பரிசைப் பெற்றது. இன்று தமிழகத்தில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருக்கிறது. மிக முக்கியமான எழுத்தாளர்கள், விஞ்ஞானி அப்துல்கலாம் சினிமாத் துறையில் அப்துல் ரகுமான் போன்ற கலைஞர்கள் உலகம் தெரிந்தவர்களாகவிருக்கிறார்கள்.
தமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சிகள் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் மிகவும் முக்கியமாக ஆராயப்படுகிறது. இவை, தமிழின் புதிய பரிமாணத்தையுண்டாக்கும் காரணிகளாக அமைகின்றன. இந்தியாவின் ஆதிக்குடிகளான திராவிட மக்கள், ஆரியரின் வருகையை (கிட்டத் தட்ட கி.மு 2000 வருடங்கள்) ஒட்டித் தென்பகுதிக்கு மட்டுமல்லாது இந்தியவின் பல பகுதிகளிலும் சிதறிவாழவேண்டிய நிலை ஏற்பட்டது. அன்னியர் வருகையால் மக்கள் இடம் பெயர்வது, அவர்களது கலாச்சாரம்,மொழி என்பன வேறுபடுதல் அல்லது மாறுபடுதல், சேர்ந்துபோதல், சோர்ந்து போதல்,என்பன இன்றியமையாதன என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். உரோமரின் வருகையால், பிரித்தானியத் தீவின் பழைய கலாச்சாரம் ஒழிக்கப்பட்டது. ஸ்பானியரின் ஆதிக்கத்தால் தென் அமெரிக்க ஆகிக் குடிகளான மாயன் இன மக்களின் மொழி கலாச்சாரம் நிர்மூலமாக்கப்பட்டது.
போர்துக்கேயரால் வெனிசுவேலா போன்ற நாடுகளின் கலாச்சாரம் அழிக்கப்பட்டது. ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பால், அவுஸ்திரேலிய, அமெரிக்க, தாஸ்மேனிய, நியுஸீலண்ட் நாடுகளின் ஆதிக்குடிமக்கள் வாழக்கைமுறையும் கலாச்சாரமும் உருக்குலைந்தன. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக,இந்தியாவுக்கு வருகை தரும் அன்னியரால் சிதறிய இந்தியாவின் ஆதிமக்களான திராவிடரின் மொழி கலாச்சாரத்தில் பல்வேறு விதங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன.
காலக்கிரமத்தில், பற்பல காரணங்களால் எந்த மொழியிலும் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அதேபோல், தமிழ் மொழியிலும் பல மாற்றங்கள்-பிரிவுகள் ஏற்பட்டன.அறிஞர் கமில் ஷிவலபில் ( 17.9.1927-17.01.2009,திராவிடம் , சமஸ்கிரதம் போன்றவற்றின் ஆதிமூலங்களை ஆராயந்தவர்) அவர்களின் கருத்துப்படி, தமிழர்கள், கற்கால காலகட்டத்தில (பத்தாயிரம் வருடங்களுக்கு முந்திய கால கட்டம்), அதாவது மனித இனம் கற்களால் ஆயதம்செய்து தொழில் வளர்ச்சிசி பெற்ற ( நியொலித்திக்); கட்டத்தைச்சேர்ந்வர்கள் என்கிறார். அதாவது, மனித நாகிரீகம் வளர்ந்த காலம் மத்திய தரைக்கடலையண்டிய நாடுகளின் வளர்ச்சியும் கிட்டத்தட்ட இதேகால கட்டமாகும். ஏனவே, தமிழின் மொழியின் ஆரம்ப வயது கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்கள் என்பது பெரும்பாலும் பொருத்தமாகவிருக்கிறது.
இன்றைக்கு கிட்டத்தட்ட 4 அல்லது 5 ஆயிரம் வருடங்கயுக்கு முன் படிப்படியாக நடந்த அன்னியர்களின் வருகையால் பிளவுபட்டத் திராவிட மக்கள், மூன்று பெரும் பிரிவானார்கள் அத்துடன் அவர்களின் ஆதித் திராவிட மொழியும் பல மாறுதல்களை எதிர் நோக்கின. ஆதித் திராவிட மொழி,இன்றைய கால கட்டத்தில், கிட்டத்தட்ட முப்பத்தைந்து சிறு பிரிவுளாகக் கிடக்கின்றன என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தென்பகுதிதத் திராவிட மொழிப்;பிரிவுகள்: தமிழ் மலையாளம், கொடகு, கோடா, ரோடா, கன்னடா, துலு.என்று பேசப்படுகிறது. மத்தியபகுதிக்குச்சென்ற திராவிடமொழி;தெலுங்கு, கோண்டி, கோண்டா, பெங்கோ, மன்டா,குயி, குவி, கோலம், நாய்க்கி, பார்ஜ், காட்பா, என்று சொல்லப்படுகிறது. வடக்குக்குப் பிரிந்த திராவிடமொழி: குருக், மால்ரே, பராஹ்யி என்று பிரிந்தனவாம்.
இப்பிரிவுகள் ஒரேயடியாக நடக்காமல் பற்பல கால கட்டங்களில் கொஞ்சம் கொஞசமாக மாறுதலடைந்தன. உதாரணமாக, மலையாளம் ஒரு ஆளுமையான மொழியாக 13ம் நூற்றாண்டில் பாவனைககு வந்தது. திராவிட மக்களும் பற்பல பிரிவாகி பல தரப்பட்ட வாழ்க்கைமுறைகளயும் உள்வாங்கிக் கொண்டார்கள். நாடுநகர்நோக்கி வந்தவர்கள், கிராமத்திலேயே வாழ்பவர்கள், காடுகளை அண்டி வாழ்பவர்கள் என்று மூன்று பெரிய கலாச்சாரப் பிரிவு உருவெடுத்தது. நாகரிகமும் அதை ஒட்டி வளர்ந்தது.தமிழ்; நாகரிகம் எஜிப்த்திய நாகரிக காலத்தில் வளர்ந்திருந்தது என்பதற்குத் தற்காலத்தில் கண்டெடுக்கப்படும் தொல்பொருட்கள் சாட்சியங்கள் சொல்கின்றன.
பண்டைத்தமிழரின் வாழ்வும் வரலாறும், தமிழ்கள் மூன்று சங்கங்களை வைத்துத் தமிழ் வளர்த்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அறிஞர் ஷெலபிலவின் கூற்றுப்படி, தமிழர்கள் அப்படி வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. பூம்புகார் நகர் 11.000 வருடங்களுக்கு முன்னிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதேகால கட்டத்தில் உலகின் வேறு ஒரு பகுதியில் வாழ்ந்த அட்லாண்டிப் பிரதேசத்தைச்சேர்ந்த அட்லாண்டிக் மக்களைக் கடற்கோள் அழித்துவிட்டதாக கிரேக்க அறிஞர் பிளாட்டோ எழுதியிருக்கிறார். அதுபற்றிய ஆராய்ச்சிகள் இன்று மேற்கத்திய தொல்பொருள் வல்லுனர்களால் ஆராயப் படுகிறது.
தமிழ் நாட்டின் பல இடங்களில் உள்ள குகைகளில் பல கால கட்டங்களை அடையாளப் படுத்தும் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன , சிலவற்றின வயது, கி.மு 9.10 நூற்றாண்டுகளாக மதிக்கப் படுகிறது.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடற்கோளால் அழிந்துபோன தமிழகத்தின் சரித்திரம் பற்றிய உண்மையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அக்காலத்தில் இந்தியா , இலங்கையுடன் மட்டுமன்றி, ஆபிக்கக் கண்டத்தையும் தொட்டிருக்கலாம், சிங்கப்பூர், பாளி போன்ற பகுதிகளுக்கும் பரவியிருக்கலாம் என்பது ஐதிகம்.அக்கால கட்டத்தில், உலகில் பல பூகோள மாற்றங்கள் நடந்ததை யாரும் மறுக்க முடியாது. இன்றைய, பிரித்தானியா, அன்றைய காலகட்டத்தில்,ஐரோப்பாவின் ஒருபகுதியாகவிருந்தது. ஐரோப்பா, ஆபிரிக்காவுடன் இணைந்திருந்ததது.
அந்த மாற்றத்துக்கு முன் உலகில் பல நாகரிகங்கள் வளர்ந்திருக்க முடியாது என்றோ, மாபெரும் கடற் கோளாறால் அழிந்து விட்டது என்றோ சொல்வதை மறுக்க முடியாது. ஆனாலும் , தமிழ் மொழி பற்றிய ஆய்வுகள் கி.மு. மூன்றாம் நூற்றதண்டுகளாக உறுதியாகவிருக்கிறது (கடந்த 5000 வருடங்களாக). தமிழின் பழம் தொன்மை பற்றிய உண்மைகளைப் பல தடவை மறைப்பதற்கான முயற்சிகள் வேண்டுமென்றே எடுக்கப்பட்டிருப்தும் அறியவருகிறது. தற்போது பல இடங்களில் நடைபெறும் தொல்பொருள் ஆராய்ச்சிகள் மூலம் தமிழர் கலாச்சாரம் பற்றி அவ்வப்போது சில செய்திகள் வருகின்றன. பல்லாயிரம் வருடங்களாகவளர்ந்த தமிழரின் நாகரிக வளர்ச்சியின் ஒரு சின்னமாக, 1836ம் ஆண்டில் நியசீலாந்தில் தொல்பொருள் வல்லுனர்களாற் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழம் சின்னம் பழம் தமிழரின் கடலாண்மையைக்காட்டுகிறது. திராவிடரின் பழம் கலைகள் ஹரப்பா போன்ற சிந்துவெளிப்பிரதேசங்களிற் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.
இப்படியான தொன்மையான தமிழ் மொழி எதிர்காலத்தில் பாவனையற்ற மொழியாகி விடுமா அல்லது ஒட்டுமொத்தமாக அழிந்து விடுமா என்ற கேள்வி அங்குமிங்குமாக எழுப்பப்படுகிறது.
இன்று உலகில் கிட்டத்தட்ட ஆறாயிரத்தும் மேலான மொழிகள் பேசப்படுகின்றன. பெரும்பாலான மொழிகள் ஆபிரிக்காவின் பல்லின மக்களாற் பேசப்படுகிறது. ஓரு மொழியின் அல்லது ஒட்டுமொத்தமாக இன்று பாவனையிலிருக்கும் பல மொழிகளின்; மூலங்கள் பலவாக இருக்கலாம். மனித இனம் நாகரிகமடைந்து மொழி வளர்ச்சிபெற்ற காலத்தில் பழக்கத்திலிருந்த நாற்பதுக்கும் மேலான உலகின் ஆதி மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றென்று. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு குறிப்பிடுகிறது. அவற்றிற் சிலமொழிகள: சுமெரியன், எஜிப்தியன், ஹிபுறு, பினோசியன்,அரமிக்(இயேசு பேசிய மொழி), இந்தோ யூரோப்பியன், கிரேக்க மொழி, பழைய பாரசீக மொழி, லத்தின், பழைய வடக்கு அரபு மொழி,பழைய தென்பகுதி அரபு மொழி, ஜேர்மானிக், முதிய சீன மொழி, பழைய தமிழ் மொழி என்பன சிலவாகும்.
ஆனாற் திராவிட அறிஞர்கள் தமிழ் மொழி பழக்கத்திலிருந்த காலத்தை மிக மிகத் தொன்மையானதாகக் கருதுகிறார்கள் (50 000 வருடங்கள்). தமிழ் மொழியின் வளர்சிசிக்குத் தடையாயிருந்த சமஸ்கிரதம், கி.மு 2000 ஆண்டு (இந்தியாவுக்கு ஆரியர் வருகை) காலகட்டத்தில் இந்து-ஐரோப்பிய மொழிகள் என்ற தொடர்பில் பாரசீக (ஈரான்) நாடுவழியாக (இந்தியாவுக்கு)ப் பரவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
தமிழ் மொழியின் வளர்ச்சியின் பல பரிமாணங்களை ஆராய்பவர்கள் ,கி.மு 300 தொடக்கம்,- கி;பி 700 வரைக்குமுள்ள காலத்தை; இலக்கியத் தமிழ்க்காலம் என்றும்,கி;பி 700 தொடக்கம் 1600 வரையுள்ள காலகட்டத்தைப் பக்தித் தமிழ் கால கட்டமென்றும் 1600 தொடக்கம் இன்றுவரை வளரும் தமிழைத். தூயதமிழ்காலம் என்றும் வரையறுக்கிறார்கள்.
இக்கால கட்டத்தில், தமிழ், இலக்கிய, பக்தி படைப்புக்களிலிருந்த சமஸ்கிரதத்தைக் களையப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன என்று தெரிகிறது.
தமழ் மொழியின் எதிர்காலம் பற்றிப் பேசும்;போது,ஒவ்வொரு வினாடியும் அளவிடமுடியாத விதத்தில் வளர்ந்து வரும் தொழில் விஞ்ஞானத்தில் ஆங்கிலம் சீனம், ஜப்பான் போன்ற மொழிகள் முன்னிடம் வகிக்கினறன, அந்த நோக்கிற்பார்க்கும்போது தமிழ்மொழியின் வளர்ச்சியும் முன்னேற்றமும் எப்படி இருக்கும் என்பது தமிழார்வம் கொண்டவர்களின் கேள்வியாகவிருக்கிறது. இன்று பாவனையிலிருக்கும் மொழிகள் பல தடுக்க முடியாதளவு அழிந்துகொண்டிருக்கின்றன. 28 விகிதமான மொழிகள் கிட்டத்தட்ட நூறு மக்களால் மட்டும் பேசப்படுகிறது. சில நாடுகளிலுள்ள சிறுபான்மை மக்களின் மொழிகளை, அந்நாட்டின் ஆட்சியிலமர்ந்திருக்கும் பெரும்பான்மை அரசுகள் அழித்துக்கொண்டுவருகின்றன.
அத்துடன் இன்று, தமிழ் மொழிக்குமட்டுமல்லாது பல மொழிகளுக்கும், அதிகளவில முன்னேறிக்கொண்டுவரும் தொழில், விஞ்ஞான, ஊடகப் பெருக்கக்களுக்குடன் நின்றுபிடிக்கமுடியுமா என்பதாகும். இன்றைய கால கட்டத்தில் தொழிற்துறையில்,உலகம் பரந்த விதத்தில் முன்னிற்பது ஆங்கில மொழியாகும். ஆனால் மக்களின் பாவனை மொழியுடன் ஒப்பிடும்போது,மான்டரின் (சீனா)மொழியை, 1025 கோடி மக்களும், ஸ்பானிய மொழியை 390 கோடி மக்களும், ஆங்கிலத்தை 328 கோடி மக்களும், ஹின்தி மொழியை 405 கோடிமக்களும், அராபிய மொழியை 452 மக்களும்;,வங்காள மொழியை 250 கோடி மக்களும் பாவனைப்படுத்துகிறார்கள். அதில் தமிழ் மொழியைப் பேசபவர்கள் ஒட்டு மொத்த உலகிலும் 74 கோடி இருக்கிறார்கள்.
தமிழின் எதிர்காலம்: முச்சங்கம் வைத்து வளர்த்த தமிழ், இயல் இசை நாடகம் என்ற பெயரில் பன்முக வளர்ச்சியைக் கொண்ட தமிழின் எதிர்காலம் என்ன என்பதுதான இக்கட்டுரையின் நோக்கமாகும். ஓருமொழி வளர, அந்த மொழிக்கு உரிமை கொண்டாடும் மக்கள் அதைப் பேசவேண்டும் , படிக்கவேண்டும்,பல கலைகள் மூலமும் பரப்பவேண்டும்.
தமிழ் ஆதிகாலத்தில் அரசர்களின் உதவியுடன் வளர்க்கப்பட்டது. புலவர்கள் அரசர்களைப் பகழ்ந்துபாடுவதன்மூலம் தமிழை வளர்த்தார்கள். அன்றைய ஆண் பெண் புலவர்களால எழுதப்பட்ட அகநானுறு,புறநானுறு போன்றவற்றால் அன்றைய சமுதாயத்தின் நிலையை இன்றைய மக்கள் அறியும்வழியைத் தந்திருக்கிறார்கள். திருவள்ளுவரின் திருக்குறள் அறப்பால், பொருட்பால்,காமத்துப்பால் என்ற முப்பகுதிக்குறல்களால் தமிழர் கடைபிடித்த வாழ்வு நியதியை உலகுக்குக் காட்டியிருக்கிறார். தமிழ்நாட்டில் மக்களால் கடைப்பிடிக்கப்பட்ட மதங்களான சைவம். வைஷ்ணவம், பௌத்தம், ஜைனம் என்ற பல மதத்தைச்சேர்ந்தவர்கள், பாகுபாடற்ற விதத்தில்,; தமிழை பல விதத்திலும் வளர்த்திருக்கிறார்கள். சித்த வைத்தியமும், யோகாசனமும், பரதமும் தமிழர்கலைகள் இவற்றை எங்கள் மூதாதையர் அழகிய தமிழில் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். எழுத்து, இலக்கணம், இலக்கியம். பக்தி.பரதம், வைத்தியம், தத்துவம் என்ற பற்பல பிரிவுகளை; கண்டது தமிழ் மொழி;.
எழுத்துவடிவில் வரமுதல் மொழிகள் வாய் மொழியாக வளர்க்கப் பட்டது. இலத்தின்,சமஸ்கிரதம் போன்றவையும் இப்படியே வளர்ந்தன. அத்துடன் மொழிகள் இசைமூலமும். நாடகங்கள், கிராமியப்பாடல்கள், நாட்டுக கூத்துக்கள், கதாப்பிசங்கங்கள், போன்ற பல வழிகளாலும் வளர்க்கப்பட்டன. தமிழின் பெருமை,சித்திரம், சிற்பங்களில் பதிக்கப்பட்டது. இந்தியா மட்டுமல்ல. தமிழக்கலையின் பிரதிபலிப்புக்கள் அண்டை நாடுகள் பலவற்றிலும் தடம் பதித்திருக்கின்றன
அத்துடன் இன்று, தமிழ் மொழிக்குமட்டுமல்லாது பல மொழிகளுக்கும், அதிகளவில முன்னேறிக்கொண்டுவரும் தொழில், விஞ்ஞான, ஊடகப் பெருக்கக்களுக்குடன் நின்றுபிடிக்கமுடியுமா என்பதாகும். இன்றைய கால கட்டத்தில் தொழிற்துறையில்,உலகம் பரந்த விதத்தில் முன்னிற்பது ஆங்கில மொழியாகும். ஆனால் மக்களின் பாவனை மொழியுடன் ஒப்பிடும்போது,மான்டரின் (சீனா)மொழியை, 1025 கோடி மக்களும், ஸ்பானிய மொழியை 390 கோடி மக்களும், ஆங்கிலத்தை 328 கோடி மக்களும், ஹின்தி மொழியை 405 கோடிமக்களும், அராபிய மொழியை 452 மக்களும்;,வங்காள மொழியை 250 கோடி மக்களும் பாவனைப்படுத்துகிறார்கள். அதில் தமிழ் மொழியைப் பேசபவர்கள் ஒட்டு மொத்த உலகிலும் 74 கோடி இருக்கிறார்கள்.இந்தியாவில் அறுபது கோடி மக்களாலும், ஒட்டுமொத்த உலகிலும் எழுபது கோடி மக்களாலும் தமிழ் பேசப்படுகிறது. தமிழ் மொழியிலிருந்து தழுவி வந்த (மலையாளம் போன்ற திராவிட மொழிகள்) மொழியைப்பேசுபவர்களையும் ஒன்று சேர்த்தால் நூற்றுப் பத்துக்கோடிக்கு மேலாகலாம் என்று கணிக்கப்படுகிறது.
இந்தியாவிலும் இலங்கையிலும் பத்தொன்பது பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பீடங்கள் உள்ளன. அத்துடன உலகின் பல முக்கிய நாடுகளான அமெரிக்கா,இங்கிலாந்து, கனாடா, அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளின் பல்கலைக்கழகங்களும் தமிழின் முதுமைக்கலாச்சாரத்தை ஆராய்கின்றன. தமிழ் பேசும் மக்கள் இன்று உலகின் பல பகுதிகளிலும் (கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேலான நாடுகளில்) வாழ்கிறார்கள். அத்துடன் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அந்தமான் தீவுகளில் தமிழ் உத்தியோக மொழியாகப் பாவிக்கப் படுகிறது.
தமிழ் மொழி இந்தியாவின் ஆதிக்குடிகளான திராவிட மக்கள் பேசிய முக்கிய மொழியாகும். தமிழ் நாடென்று ஒன்றிருந்தாலும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லாதிருப்பதால், தமிழின் எதிர்காலம் பற்றிய பயம் பல தமிழர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து கொண்டு வருகின்றது என்று அண்மையில் ஒரு பேராசிரியர் குறிப்பிட்டார்.ஆனால், இன்று தமிழகத்தில ஆட்சி செய்யும் அரசியற் கட்சிகள் தமிழின் பெருமையை வைத்துச் செய்த பிரசாரத்தால் ஆட்சிக்கு வந்தவை. தொடர்ந்தும் ஆடசியிலிருப்பவை. ஓரு காலத்தில், ஆங்கில நாடான இங்கிலாந்தின் அரசகரும மொழி ஆங்கிலமாகவிருக்கவில்லை. இந்தியா அன்னியரின் ஆதிக்கத்திலிருந்தபோது தமிழ் மொழி மட்டுமல்லாது இந்திய மொழிகள் அரசமொழிகளாகவிருக்கவில்லை. ஆனாலம் பல இந்திய மொழிகள் உலகம் தெரிந்த மொழிகளாக மாறின. இரவிந்திரநாத தாகூரின் எழுத்தும் அவரின் கீதாஞ்சலியும் நோபல் பரிசைப் பெற்றது. இன்று தமிழகத்தில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருக்கிறது. மிக முக்கியமான எழுத்தாளர்கள், விஞ்ஞானி அப்துல்கலாம் சினிமாத் துறையில் அப்துல் ரகுமான் போன்ற கலைஞர்கள் உலகம் தெரிந்தவர்களாகவிருக்கிறார்கள்.
தமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சிகள் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் மிகவும் முக்கியமாக ஆராயப்படுகிறது. இவை, தமிழின் புதிய பரிமாணத்தையுண்டாக்கும் காரணிகளாக அமைகின்றன. இந்தியாவின் ஆதிக்குடிகளான திராவிட மக்கள், ஆரியரின் வருகையை (கிட்டத் தட்ட கி.மு 2000 வருடங்கள்) ஒட்டித் தென்பகுதிக்கு மட்டுமல்லாது இந்தியவின் பல பகுதிகளிலும் சிதறிவாழவேண்டிய நிலை ஏற்பட்டது. அன்னியர் வருகையால் மக்கள் இடம் பெயர்வது, அவர்களது கலாச்சாரம்,மொழி என்பன வேறுபடுதல் அல்லது மாறுபடுதல், சேர்ந்துபோதல், சோர்ந்து போதல்,என்பன இன்றியமையாதன என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். உரோமரின் வருகையால், பிரித்தானியத் தீவின் பழைய கலாச்சாரம் ஒழிக்கப்பட்டது. ஸ்பானியரின் ஆதிக்கத்தால் தென் அமெரிக்க ஆகிக் குடிகளான மாயன் இன மக்களின் மொழி கலாச்சாரம் நிர்மூலமாக்கப்பட்டது.
போர்துக்கேயரால் வெனிசுவேலா போன்ற நாடுகளின் கலாச்சாரம் அழிக்கப்பட்டது. ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பால், அவுஸ்திரேலிய, அமெரிக்க, தாஸ்மேனிய, நியுஸீலண்ட் நாடுகளின் ஆதிக்குடிமக்கள் வாழக்கைமுறையும் கலாச்சாரமும் உருக்குலைந்தன. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக,இந்தியாவுக்கு வருகை தரும் அன்னியரால் சிதறிய இந்தியாவின் ஆதிமக்களான திராவிடரின் மொழி கலாச்சாரத்தில் பல்வேறு விதங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன.
காலக்கிரமத்தில், பற்பல காரணங்களால் எந்த மொழியிலும் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அதேபோல், தமிழ் மொழியிலும் பல மாற்றங்கள்-பிரிவுகள் ஏற்பட்டன.அறிஞர் கமில் ஷிவலபில் ( 17.9.1927-17.01.2009,திராவிடம்
இன்றைக்கு கிட்டத்தட்ட 4 அல்லது 5 ஆயிரம் வருடங்கயுக்கு முன் படிப்படியாக நடந்த அன்னியர்களின் வருகையால் பிளவுபட்டத் திராவிட மக்கள், மூன்று பெரும் பிரிவானார்கள் அத்துடன் அவர்களின் ஆதித் திராவிட மொழியும் பல மாறுதல்களை எதிர் நோக்கின. ஆதித் திராவிட மொழி,இன்றைய கால கட்டத்தில், கிட்டத்தட்ட முப்பத்தைந்து சிறு பிரிவுளாகக் கிடக்கின்றன என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தென்பகுதிதத் திராவிட மொழிப்;பிரிவுகள்: தமிழ் மலையாளம், கொடகு, கோடா, ரோடா, கன்னடா, துலு.என்று பேசப்படுகிறது. மத்தியபகுதிக்குச்சென்ற திராவிடமொழி;தெலுங்கு, கோண்டி, கோண்டா, பெங்கோ, மன்டா,குயி, குவி, கோலம், நாய்க்கி, பார்ஜ், காட்பா, என்று சொல்லப்படுகிறது. வடக்குக்குப் பிரிந்த திராவிடமொழி: குருக், மால்ரே, பராஹ்யி என்று பிரிந்தனவாம்.
இப்பிரிவுகள் ஒரேயடியாக நடக்காமல் பற்பல கால கட்டங்களில் கொஞ்சம் கொஞசமாக மாறுதலடைந்தன. உதாரணமாக, மலையாளம் ஒரு ஆளுமையான மொழியாக 13ம் நூற்றாண்டில் பாவனைககு வந்தது. திராவிட மக்களும் பற்பல பிரிவாகி பல தரப்பட்ட வாழ்க்கைமுறைகளயும் உள்வாங்கிக் கொண்டார்கள். நாடுநகர்நோக்கி வந்தவர்கள், கிராமத்திலேயே வாழ்பவர்கள், காடுகளை அண்டி வாழ்பவர்கள் என்று மூன்று பெரிய கலாச்சாரப் பிரிவு உருவெடுத்தது. நாகரிகமும் அதை ஒட்டி வளர்ந்தது.தமிழ்; நாகரிகம் எஜிப்த்திய நாகரிக காலத்தில் வளர்ந்திருந்தது என்பதற்குத் தற்காலத்தில் கண்டெடுக்கப்படும் தொல்பொருட்கள் சாட்சியங்கள் சொல்கின்றன.
பண்டைத்தமிழரின் வாழ்வும் வரலாறும், தமிழ்கள் மூன்று சங்கங்களை வைத்துத் தமிழ் வளர்த்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அறிஞர் ஷெலபிலவின் கூற்றுப்படி, தமிழர்கள் அப்படி வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. பூம்புகார் நகர் 11.000 வருடங்களுக்கு முன்னிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதேகால கட்டத்தில் உலகின் வேறு ஒரு பகுதியில் வாழ்ந்த அட்லாண்டிப் பிரதேசத்தைச்சேர்ந்த அட்லாண்டிக் மக்களைக் கடற்கோள் அழித்துவிட்டதாக கிரேக்க அறிஞர் பிளாட்டோ எழுதியிருக்கிறார். அதுபற்றிய ஆராய்ச்சிகள் இன்று மேற்கத்திய தொல்பொருள் வல்லுனர்களால் ஆராயப் படுகிறது.
தமிழ் நாட்டின் பல இடங்களில் உள்ள குகைகளில் பல கால கட்டங்களை அடையாளப் படுத்தும் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன , சிலவற்றின வயது, கி.மு 9.10 நூற்றாண்டுகளாக மதிக்கப் படுகிறது.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடற்கோளால் அழிந்துபோன தமிழகத்தின் சரித்திரம் பற்றிய உண்மையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அக்காலத்தில் இந்தியா , இலங்கையுடன் மட்டுமன்றி, ஆபிக்கக் கண்டத்தையும் தொட்டிருக்கலாம், சிங்கப்பூர், பாளி போன்ற பகுதிகளுக்கும் பரவியிருக்கலாம் என்பது ஐதிகம்.அக்கால கட்டத்தில், உலகில் பல பூகோள மாற்றங்கள் நடந்ததை யாரும் மறுக்க முடியாது. இன்றைய, பிரித்தானியா, அன்றைய காலகட்டத்தில்,ஐரோப்பாவின் ஒருபகுதியாகவிருந்தது. ஐரோப்பா, ஆபிரிக்காவுடன் இணைந்திருந்ததது.
அந்த மாற்றத்துக்கு முன் உலகில் பல நாகரிகங்கள் வளர்ந்திருக்க முடியாது என்றோ, மாபெரும் கடற் கோளாறால் அழிந்து விட்டது என்றோ சொல்வதை மறுக்க முடியாது. ஆனாலும் , தமிழ் மொழி பற்றிய ஆய்வுகள் கி.மு. மூன்றாம் நூற்றதண்டுகளாக உறுதியாகவிருக்கிறது (கடந்த 5000 வருடங்களாக). தமிழின் பழம் தொன்மை பற்றிய உண்மைகளைப் பல தடவை மறைப்பதற்கான முயற்சிகள் வேண்டுமென்றே எடுக்கப்பட்டிருப்தும் அறியவருகிறது. தற்போது பல இடங்களில் நடைபெறும் தொல்பொருள் ஆராய்ச்சிகள் மூலம் தமிழர் கலாச்சாரம் பற்றி அவ்வப்போது சில செய்திகள் வருகின்றன. பல்லாயிரம் வருடங்களாகவளர்ந்த தமிழரின் நாகரிக வளர்ச்சியின் ஒரு சின்னமாக, 1836ம் ஆண்டில் நியசீலாந்தில் தொல்பொருள் வல்லுனர்களாற் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழம் சின்னம் பழம் தமிழரின் கடலாண்மையைக்காட்டுகிறது. திராவிடரின் பழம் கலைகள் ஹரப்பா போன்ற சிந்துவெளிப்பிரதேசங்களிற் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.
இப்படியான தொன்மையான தமிழ் மொழி எதிர்காலத்தில் பாவனையற்ற மொழியாகி விடுமா அல்லது ஒட்டுமொத்தமாக அழிந்து விடுமா என்ற கேள்வி அங்குமிங்குமாக எழுப்பப்படுகிறது.
இன்று உலகில் கிட்டத்தட்ட ஆறாயிரத்தும் மேலான மொழிகள் பேசப்படுகின்றன. பெரும்பாலான மொழிகள் ஆபிரிக்காவின் பல்லின மக்களாற் பேசப்படுகிறது. ஓரு மொழியின் அல்லது ஒட்டுமொத்தமாக இன்று பாவனையிலிருக்கும் பல மொழிகளின்; மூலங்கள் பலவாக இருக்கலாம். மனித இனம் நாகரிகமடைந்து மொழி வளர்ச்சிபெற்ற காலத்தில் பழக்கத்திலிருந்த நாற்பதுக்கும் மேலான உலகின் ஆதி மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றென்று. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு குறிப்பிடுகிறது. அவற்றிற் சிலமொழிகள: சுமெரியன், எஜிப்தியன், ஹிபுறு, பினோசியன்,அரமிக்(இயேசு பேசிய மொழி), இந்தோ யூரோப்பியன், கிரேக்க மொழி, பழைய பாரசீக மொழி, லத்தின், பழைய வடக்கு அரபு மொழி,பழைய தென்பகுதி அரபு மொழி, ஜேர்மானிக், முதிய சீன மொழி, பழைய தமிழ் மொழி என்பன சிலவாகும்.
ஆனாற் திராவிட அறிஞர்கள் தமிழ் மொழி பழக்கத்திலிருந்த காலத்தை மிக மிகத் தொன்மையானதாகக் கருதுகிறார்கள் (50 000 வருடங்கள்). தமிழ் மொழியின் வளர்சிசிக்குத் தடையாயிருந்த சமஸ்கிரதம், கி.மு 2000 ஆண்டு (இந்தியாவுக்கு ஆரியர் வருகை) காலகட்டத்தில் இந்து-ஐரோப்பிய மொழிகள் என்ற தொடர்பில் பாரசீக (ஈரான்) நாடுவழியாக (இந்தியாவுக்கு)ப் பரவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
தமிழ் மொழியின் வளர்ச்சியின் பல பரிமாணங்களை ஆராய்பவர்கள் ,கி.மு 300 தொடக்கம்,- கி;பி 700 வரைக்குமுள்ள காலத்தை; இலக்கியத் தமிழ்க்காலம் என்றும்,கி;பி 700 தொடக்கம் 1600 வரையுள்ள காலகட்டத்தைப் பக்தித் தமிழ் கால கட்டமென்றும் 1600 தொடக்கம் இன்றுவரை வளரும் தமிழைத். தூயதமிழ்காலம் என்றும் வரையறுக்கிறார்கள்.
இக்கால கட்டத்தில், தமிழ், இலக்கிய, பக்தி படைப்புக்களிலிருந்த சமஸ்கிரதத்தைக் களையப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன என்று தெரிகிறது.
தமழ் மொழியின் எதிர்காலம் பற்றிப் பேசும்;போது,ஒவ்வொரு வினாடியும் அளவிடமுடியாத விதத்தில் வளர்ந்து வரும் தொழில் விஞ்ஞானத்தில் ஆங்கிலம் சீனம், ஜப்பான் போன்ற மொழிகள் முன்னிடம் வகிக்கினறன, அந்த நோக்கிற்பார்க்கும்போது தமிழ்மொழியின் வளர்ச்சியும் முன்னேற்றமும் எப்படி இருக்கும் என்பது தமிழார்வம் கொண்டவர்களின் கேள்வியாகவிருக்கிறது. இன்று பாவனையிலிருக்கும் மொழிகள் பல தடுக்க முடியாதளவு அழிந்துகொண்டிருக்கின்றன. 28 விகிதமான மொழிகள் கிட்டத்தட்ட நூறு மக்களால் மட்டும் பேசப்படுகிறது. சில நாடுகளிலுள்ள சிறுபான்மை மக்களின் மொழிகளை, அந்நாட்டின் ஆட்சியிலமர்ந்திருக்கும் பெரும்பான்மை அரசுகள் அழித்துக்கொண்டுவருகின்றன.
அத்துடன் இன்று, தமிழ் மொழிக்குமட்டுமல்லாது பல மொழிகளுக்கும், அதிகளவில முன்னேறிக்கொண்டுவரும் தொழில், விஞ்ஞான, ஊடகப் பெருக்கக்களுக்குடன் நின்றுபிடிக்கமுடியுமா என்பதாகும். இன்றைய கால கட்டத்தில் தொழிற்துறையில்,உலகம் பரந்த விதத்தில் முன்னிற்பது ஆங்கில மொழியாகும். ஆனால் மக்களின் பாவனை மொழியுடன் ஒப்பிடும்போது,மான்டரின் (சீனா)மொழியை, 1025 கோடி மக்களும், ஸ்பானிய மொழியை 390 கோடி மக்களும், ஆங்கிலத்தை 328 கோடி மக்களும், ஹின்தி மொழியை 405 கோடிமக்களும், அராபிய மொழியை 452 மக்களும்;,வங்காள மொழியை 250 கோடி மக்களும் பாவனைப்படுத்துகிறார்கள். அதில் தமிழ் மொழியைப் பேசபவர்கள் ஒட்டு மொத்த உலகிலும் 74 கோடி இருக்கிறார்கள்.
தமிழின் எதிர்காலம்: முச்சங்கம் வைத்து வளர்த்த தமிழ், இயல் இசை நாடகம் என்ற பெயரில் பன்முக வளர்ச்சியைக் கொண்ட தமிழின் எதிர்காலம் என்ன என்பதுதான இக்கட்டுரையின் நோக்கமாகும். ஓருமொழி வளர, அந்த மொழிக்கு உரிமை கொண்டாடும் மக்கள் அதைப் பேசவேண்டும் , படிக்கவேண்டும்,பல கலைகள் மூலமும் பரப்பவேண்டும்.
தமிழ் ஆதிகாலத்தில் அரசர்களின் உதவியுடன் வளர்க்கப்பட்டது. புலவர்கள் அரசர்களைப் பகழ்ந்துபாடுவதன்மூலம் தமிழை வளர்த்தார்கள். அன்றைய ஆண் பெண் புலவர்களால எழுதப்பட்ட அகநானுறு,புறநானுறு போன்றவற்றால் அன்றைய சமுதாயத்தின் நிலையை இன்றைய மக்கள் அறியும்வழியைத் தந்திருக்கிறார்கள். திருவள்ளுவரின் திருக்குறள் அறப்பால், பொருட்பால்,காமத்துப்பால் என்ற முப்பகுதிக்குறல்களால் தமிழர் கடைபிடித்த வாழ்வு நியதியை உலகுக்குக் காட்டியிருக்கிறார். தமிழ்நாட்டில் மக்களால் கடைப்பிடிக்கப்பட்ட மதங்களான சைவம். வைஷ்ணவம், பௌத்தம், ஜைனம் என்ற பல மதத்தைச்சேர்ந்தவர்கள், பாகுபாடற்ற விதத்தில்,; தமிழை பல விதத்திலும் வளர்த்திருக்கிறார்கள். சித்த வைத்தியமும், யோகாசனமும், பரதமும் தமிழர்கலைகள் இவற்றை எங்கள் மூதாதையர் அழகிய தமிழில் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். எழுத்து, இலக்கணம், இலக்கியம். பக்தி.பரதம், வைத்தியம், தத்துவம் என்ற பற்பல பிரிவுகளை; கண்டது தமிழ் மொழி;.
எழுத்துவடிவில் வரமுதல் மொழிகள் வாய் மொழியாக வளர்க்கப் பட்டது. இலத்தின்,சமஸ்கிரதம் போன்றவையும் இப்படியே வளர்ந்தன. அத்துடன் மொழிகள் இசைமூலமும். நாடகங்கள், கிராமியப்பாடல்கள், நாட்டுக கூத்துக்கள், கதாப்பிசங்கங்கள், போன்ற பல வழிகளாலும் வளர்க்கப்பட்டன. தமிழின் பெருமை,சித்திரம், சிற்பங்களில் பதிக்கப்பட்டது. இந்தியா மட்டுமல்ல. தமிழக்கலையின் பிரதிபலிப்புக்கள் அண்டை நாடுகள் பலவற்றிலும் தடம் பதித்திருக்கின்றன
நம் மொழி தமிழ்!
திராவிட மொழிக் குடும்பத்தின் மூல மொழி தமிழ். திராவிடக் குடும்பத்தின் முதன்மையான மொழி, மூத்த மொழி, திராவிட மொழிகளின் தாய் மொழி - நம் மொழியாம் தமிழ்.
இந்த மொழிக் கூட்டத்தில் மொத்தம் 26 மொழிகள். அத்தனைக்கும் மூல மொழியாக நம் தாய் மொழியான தமிழ் இருப்பது பெருமைக்குரிய ஒன்று. இவை தவிர 35 சிறு மொழிக் கூட்டத்திற்கும் தமிழே மூல மொழியாக இருப்பது வியப்புக்குரியது.
இன்று தனிச் சிறப்புடன் கூட...
ிய ஒரு மொழியாக திகழும் மலையாளம், 9வது நூற்றாண்டு வரை தமிழின் ஒரு 'டயலக்ட்' ஆகத்தான் இருந்து வந்தது -அதாவது மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ் போல. தமிழிலிலிருந்து நேரடியாக பிரிந்த ஒரு மொழிதான் மலையாளம்.
தமிழை மூன்று காலங்களாக ஆய்வாளர்கள் பிரிக்கின்றனர். கி.மு. 300க்கும், 700க்கும் இடைப்பட்ட காலம் பழந்தமிழ்க் காலம் என்றும், 700க்கும், 1600க்கும் இடைப்பட்ட காலத்தை இடைக்காலத் தமிழ் என்றும், 1600 முதல் இன்று வரையிலான காலத்தை நவீன தமிழ் காலம் என்றும் ஆய்வாளர்கள்
வகைப்படுத்துகின்றனர்.
தமிழ் என்ற பெயர் எப்போது முதல் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை. இருப்பினும் கி.மு. முதலாம் நூற்றாண்டில் தமிழ் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் உள்ளன.
செம்மொழித் தமிழ்...
உலகச் செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்கிறது. செம்மொழி என்பது ஒரு அடையாளம் அல்ல, மாறாக அது ஒரு மொழியின் செம்மையை, சீரை, சிறப்பை, செழுமையை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவுகிறது.
மிகப் பாரம்பரியமான, பழமையான இலக்கியத்தைக் கொண்ட மொழியாக இருக்க வேண்டும். சுயம் இருக்க வேண்டும், வேறொரு பாரம்பரியத்தின் நிழல் அந்த மொழியின் மீது படிந்திருக்கக் கூடாது. அப்படிப்பட்ட மொழியே செம்மொழி என கூறுகிறார் மொழியியல் வல்லுநர் ஜார்ஜ் ஹார்ட்.
இன்று உலகளவில் ஆயிரக்கணக்கான மொழிக் கூட்டங்கள் இருந்தாலும் பேச்சளவிலும், எழுத்தளவிலும் உயிர்ப்புடன் இருப்பது சில நூறு மொழிகள் தான். அதிலும் பழமை வாய்ந்ததாக, பாரம்பரியம் வாய்ந்ததாக, சிறப்பு வாய்ந்ததாக, தங்களுக்கென்று சுயத்தைக் கொண்ட மொழிகள் வெகு சிலதான். அதில் ஒன்று நம் செம்மொழி தமிழ்.
இலக்கணத்திலும், இலக்கியத்திலும் சிறந்த மொழிகளுக்கே இந்த சிறப்பு கிடைக்கிறது. சுமேரிய மொழி, ஆதி எகிப்திய மொழி, ஆதி பாபிலோனிய மொழி, ஹீப்ரூ, சீன மொழி, கிரேக்கம், சமஸ்கிருதம், தமிழ், லத்தீன், மண்டாயிக், சிரியாக், ஆர்மீனியன், பெர்சியன் ஆகியவற்றை செம்மொழிகளாக உலகம் கண்டிருக்கிறது.
ஆனால் இந்த சிறிய மொழிக் கூட்டத்தில் இன்று உலக அளவில் வலுவான வரலாற்றுடன், மிக வீரியமான உயிர்ப்புடன் கூடிய ஒரே மொழியாக தமிழ் மட்டுமே திகழ்கிறது என்பது நிஜம், அது தமிழுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய பெருமை என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழ் தந்த தொல்காப்பியத்திற்கு ஈடு இணையே இல்லை என்பது பல்வேறு செம்மொழிகளை ஆய்வு செய்தவர்கள் அளித்துள்ள தீர்ப்பு.
செந்தமிழ் (செம்மொழியாகிய தமிழ்) எனுஞ்சொல் தமிழில் கிடைத்துள்ள மூலமுதல் நூலான, மூவாயிரம் ஆண்டுப் பழைய தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது.
தமிழ் எனும் சொல்லுக்குக் கிபி 10ஆம் நூற்றாண்டில் எழுந்த பிங்கல நிகண்டு, 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பொருள் கூறுகிறது.
செந்தமிழ் என்பதற்குக் 'கலப்பற்ற தூயதமிழ்' என்று பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி.
செந்தமிழ் எனுஞ் சொல் உணர்வு நிலையில் இலக்கண வரம்பை வற்புறுத்துகிறது. செயல் நிலையில் செம்மொழி ஆக்கத்தை வற்புறுத்துகிறது. மதிப்பீட்டு நிலையில், இலக்கணத்தை வற்புறுத்தாவிடில் கிளைமொழிகள் தோன்றிப் புதுமொழிகளாக மாறும் என எச்சரிக்கிறது என்று மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் விளக்குகிறார்.
செம்மொழி எனுஞ் சொல்லை, அகநானூற்றின் 349 ஆம் பாடல் 'நடுநிலை தவறாத மொழி' எனும் பொருளில் ஆண்டுள்ளது.
தமிழ் எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று தன் தனித்தன்மையைக் காத்து, தன்னை அணைத்து அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து வாழ்ந்து வளர்ந்துவரும் மொழியாகும். ஆங்கிலம் லத்தீன் மொழிக்குக் கடன்பட்டிருப்பது போலவே தமிழ்மொழியும் சமஸ்கிருதத்திற்குக் கடன்பட்டிருப்பதாகக் கருதுவது அறவே பொருந்தாது. பொருள் விளக்கத்தைச் சாகவிடாமல் சொற்களைக் கைவிடுவது ஆங்கிலத்திற்கு இயலாது. ஆனால், சமற்கிருதச் சொற்களுக்கு ஈடான சொற்செல்வங்களைத் தமிழ் அளவின்றிப் பெற்றுள்ளது. இது, முனைவர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் ஆய்வு முடிவு.
தென்னாட்டின்கண் சிறந்தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி, எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும், உயர்தனிச் செம்மொழியே ஆம் என்பது உறுதி. இவ்வளவு உயர்வும் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ்மொழியை உள்நாட்டுப் புன்மொழிகளோடு ஒருங்கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டு உயர்தனிச் செம்மொழி சமற்கிருதம் எனக் கொண்டாற்போலத் தென்னாட்டு உயர்தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடையதாம். இது, 1887இல், சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் அப்போதைய தமிழ்த் துறைப் பேராசிரியரும் வடமொழி வல்லுநருமாகிய வீ.கோ.சூரிய நாராயண சாத்திரி என்ற பரிதிமாற் கலைஞர் முடிவு.
பிறமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் கொண்ட தமிழின் சிறப்பு வியப்பை அளிப்பதாகும். தமிழ், செய்யுள் வடிவிலும் உரைநடையிலும், கிரேக்க மொழிச் செய்யுள்களைக் காட்டிலும் தெளிவுடையதாகவும் திட்பமுடையதாகவும் கருத்தாழம் உடையதாகவும் விளங்குகிறது. தமிழ்மொழி நூல்மரபிலும் பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல்வளம் கொண்டது. இது, முனைவர் வின்சுலோ அவர்களின் முடிவு.
தமிழ்மொழியைச் செவ்வியல் மொழியாக உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் பழந்தமிழர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களின் இம்முயற்சி, கிரேக்கர்களுடன் தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கு முன்னரே ஏற்பட்டுள்ளது. இது, கில்பர்ட்டு சிலேடர் என்ற மொழியறிஞரின் முடிவு.
ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள செனகல் நாட்டின் தாக்கர் பல்கலைக் கழகம் முதன்முதலில் தமிழ்மொழியைச் செவ்வியல் மொழி என்று முடிவு இயற்றி ஏற்றுக் கொண்டது.
தமிழ்நாட்டில், அண்ணர்மலை பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம். திருநெல்வேலியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியன தமிழைச் செம்மொழி என்று தீர்மானம் இயற்றியுள்ளன.
தனிச் சிறப்புக்கு சங்க இலக்கியங்கள்...
தொல்காப்பியம் மட்டுமல்லாமல் தமிழுக்கு மணி மகுடமாக விளங்குபவை சங்க கால இலக்கியங்கள். அவற்றில் பல நம்மிடையே இன்று இல்லை. காலம் அவற்றை அழித்து விட்டது. நமது கைக்குக் கிடைத்துள்ள சில நூல்கள் ஒரு பாணை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தமிழின் தனிச் சிறப்பை வெளிக்காட்ட உதவுகிறது.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அக நானூறு, புற நானூறு, நற்றினை, ஐங்குறுநூறு, பரிபாடல் ஆகியவை அவற்றில் சில. இக்கால கட்டத்தில் தமிழ் இலக்கியம் மிக செழுமையான நிலையில் இருந்தது. சங்க கால இலக்கியம், தமிழின் பொற்காலம் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேபோல தமிழின் தலை சிறந்த அடையாளங்களில் ஒன்று திருக்குறள். தமிழ் என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட வராமல், உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் பொருந்தும் வகையிலான இந்த அரும் படைப்பு, தமிழுக்கு மட்டும் சொந்தமானதல்ல, உலகுக்கே பொதுவானது. அதனால்தான் குறளை உலகப் பொது மறையாக போற்றுகிறது இலக்கிய உலகம்.
கி.பி. 3வது நூற்றாண்டில் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரட்டை காப்பியங்களைக் கண்டது தமிழ். தமிழின் ராமாயணம், மகாபாரதம் என இதைச் சொல்லலாம். அதேபோல கம்ப ராமாயணமும். தமிழின் அபாரமான படைப்புகளில் இதுவும் ஒன்று.
வால்மீகியின் ராயாணத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த படைப்பை கம்பர் படைத்திருந்தாலும், அதன் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் தனது சுய படைப்பு போல இதை அமைத்திருப்பது மிக மிக வியப்புக்குரியது. அது கம்பரின் திறமையா அல்லது தமிழின் செழுமையா என்பதே ஒரு பட்டிமன்றத் தலைப்புக்குரியது. அதனால்தான் இன்றளவும் கம்ப ராமாயாணம் விவாதப் பொருளாக பட்டி தொட்டியெங்கும் வலம் வந்து கொணடிருக்கிறது.
பரவசப்படுத்தும் பக்தி இலக்கியம்
பக்தி இலக்கியத்திலும் தமிழுக்கு தனிச் சிறப்பு உண்டு. குறிப்பாக நாயன்மார் இலக்கியம் தமிழுக்கு கிடைத்த இன்னொரு மகுடம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நான்கு தலை சிறந்த நாயன்மார்கள் ஆவர்.
அதேபோல 12 ஆழ்வார்கள் தமிழுக்கு செய்த சேவை மறக்க முடியாதது. அவர்களில் ஆண்டாளும், குலசேகர ஆழ்வாரும் குறிப்பிடத்தகுந்தவர்கள். சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் படைத்த திருப்பாவை தமிழின் தனிச் சிறப்புக்கு அருமையான உதாரணம்.
தமிழுக்கு அருஞ்சேவை புரிந்தவர்களில் உமறுப் புலவரை குறிப்பிடாமல் இருக்க முடியாது. சீறாப்புராணம் என்ற சீரிய காவியத்தைப் படைத்தவர் உமறுப் புலவர். 5000 பாடல்களில் அண்ணல் நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை அரிய பாடல்கள் மூலம் வடித்துள்ளார் உமறுப் புலவர்.
அதேபோல கிறிஸ்தவ சமுதாயத்தினரின் தாக்கமும் தமிழ் இலக்கியத்தில் விரவிக் கிடக்கிறது. அதிலும் கால்டுவெல், வின்ஸ்லோ, ஜி.யு.போப், பெஸ்கி ஆகியோரின் பங்களிப்பு தமிழுக்கு மிகப் பெரியது. இத்தாலியைச் சேர்ந்த பெஸ்கி படைத்த தேம்பவாணி தமிழின் அரும்பெரும் கவிப் படைப்புகளில் ஒன்றாக ஜொலிக்கிறது.
இப்படி தமிழின் சிறப்புகளையும், அதன் சீரையும், செழுமையையும் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட சிறப்புடைய தமிழ், 2004ம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டாலும் கூட, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அது செம்மொழியாக பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கி விட்டது என்பதே உண்மை.
தமிழின் பிற சிறப்புகள்
- தமிழ் இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பெரும் வரலாறு கொண்டது.
- கி.மு. முதலாம் நூற்றாண்டு மற்றும் கி.மு. 2ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுக்கள் எகிப்திலும், தாய்லாந்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பதிவேட்டில் கடந்த 1997 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஓலைச் சுவடிகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன. அந்த இரண்டுமே தமிழ் சுவடிகள் என்பது பெருமைக்குரியதாகும்.
- இந்திய தொல்பொருள் துறை இந்தியாவில் இதுவரை கண்டுபிடித்துள்ள கல்வெட்டுக்களில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்டவை தமிழ் கல்வெட்டுக்கள் ஆகும். அதாவது 55,000 கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள்.
- தமிழில் கிட்டத்தட்ட 22 வட்டார வழக்குகள் உள்ளன. ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தெனாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி, கொங்கு மற்றும் குமரி ஆகியவையே அவை.
- உலகின் அனைத்துக் கண்டங்களிலும் விரவிப் பரவிக் கிடக்கிறது தமிழ்.
- இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது. மலேசியா, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, வியட்நாம், கயானா, பிஜி, சூரினாம், டிரினிடாட் டொபாகோ, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தமிழர்களும், தமிழும் கணிசமாக உள்ளனர்.
- எத்தகைய மொழிக்கும் ஈடு கொடுக்கக் கூடிய இயல்பும், பாலில் நீர் கலப்பது போல இயைந்து போகும் சிறப்பும் உள்ள மொழி தமிழ்.
இந்தத் தமிழ் செம்மொழியானது கால தாமதம் என்றாலும் இன்றாவது ஆனதே என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் உலகத் தமிழர்கள். உலகத்தின் தலையாய மொழிகளில் ஒன்றாக திகழும் நம் தாய் மொழிக்கு மாநாடு நடத்துவது மேலும் ஒரு மகுடம் சூட்டுவதற்குச் சமம். எத்தனையோ பெருமைகளை தலையில் சுமந்து நிற்கும் தமிழுக்கு, இந்த மணிமகுடம் மேலும் ஒரு பெருமையாக அமையட்டும்.
ஓலைச் சுவடிகளில் உருண்டு புரண்ட தமிழ் இன்று கம்ப்யூட்டர் திரைகளில் ஜாலம் காட்டும் காலத்திலும் நளினம் குறையாமல், நவீனம் மறுக்காமல், பாரம்பரியத்திற்குப் பங்கம் வராமல் தொடர்ந்து பரவசம் காட்டி வருவது தமிழுக்குள்ள மகா சிறப்பு.
குற்றாலம்: குற்றாலம் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் தமிழர்களின் வரலாற்றை நினைவு கூறும் அரிய, பழம் பொருட்கள் கேட்பாரற்று தெருக்களில் கிடக்கிறது. முறையான பரமாரிப்பு இல்லாத காரணத்தால் இந்த தொல்பொருள் அருங்காட்சியகம் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த குடி, தமிழ் குடி என்பதை மெய்ப்பிக்கும் விதமாக தமிழகத்தில் நெல்லை மாவட்ட பகுதிகளில் தொல்பொருள் துறை பல கண்டுபிடி...ப்புகளை மேற்கொண்டு வந்துள்ளது. ஆதிச்சயநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழி தமிழர்களின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றியது.
மூவேந்தர்கள், தமிழ் மக்கள் மற்றும் சில பல குறுநில மன்னர்கள் ஆகியோர் தமது சரித்திரத்தை மண்ணில் கலை பொக்கிஷங்களாக, பொருட்களாக, போர் தளவாடங்களாக, நாணயங்களாக அடுத்து வந்த தலைமுறையினருக்கு விட்டு சென்றுள்ளனர்.
இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்ததை வைத்து தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்றைய வாழ்க்கை, இன்றைய வரலாறு, இன்றைய செயல், நாளைய சரித்திரம் என அறிஞர்கள் சொல்வார்கள். இதை நிரூபிக்கும் இந்த பொருட்களின் தன்மையும், அதன் விலை மதிப்பும், வரலாறும் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை.
அப்படி கிடைக்கும் அரிய பொருட்களில் நாகரிகம், வாழ்க்கை முறை, கல்வெட்டுகளையும், அதில் காணப்படும் வாசகங்களையும் வெளிஉலகத்திற்கு கொண்டு வர அரசு தொல் பொருள் ஆய்வு துறையை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு பணியாளர்களுக்கு பயிற்சியளித்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் அலுவலகம் அமைத்து அப்பகுதியில் கிடைக்கும் அரியவகை பொருட்களை கைப்பற்றி பாதுகாக்கவும், மேலும் அந்த பகுதியில் வேறு ஏதாவது முக்கிய பொருட்கள் கிடைக்கிறதா என ஆராய்ச்சி மேற்கொள்வதும் உண்டு.
இத்துறையின் சார்பில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சேர மன்னர்கள் ஆட்சி புரிந்த கேரள நுழைவு பகுதியும், தமிழக எல்லையும், பாண்டிய மன்னர்கள் ஆளுகைக்குட்பட்ட அன்றைய தென்காசி தாலுகா பகுதியுமான புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் ஒரு அருட்காட்சியகம் அமைக்கப்பட்டது.
இந்த அருட்காட்சியகத்தில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், அதன்பின்னர் மன்னர் ஆட்சிகாலத்தில் பயன்படுத்தப்பட்ட போர் தளவாடங்கள், அரியவகை சிலைகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இந்த அருட்காட்சியகத்தில் உள்ளன.
மேலும் வடநாடுகளை போல் தென் தமிழகத்திலுள்ள தென்காசி தாலுகா பகுதியிலும் பலநூறு ஆண்டுகளுக்கு முன் உடன்கட்டை ஏறுதல் வழக்கம் இருந்துள்ளதை காட்டும் அரிய வகை சிற்பங்களும், கல்வெட்டுகளும் இங்கு உள்ளது.
இப்படி அரிய பொக்கிஷங்கள் நிறைந்துள்ள இந்த அருட்காட்சியகத்தினை பொதுமக்கள் சுற்றி பார்க்கவும், அவற்றை பாதுகாக்கவும் தற்போது போதிய வசதிகள் இல்லை. இதனால் இந்த அரிய பொருட்கள் கேட்பாரற்று, பராமரிக்கப்படாமல் சாலையின் ஓரத்திலும், வழிபாதையிலும் கிடக்கிறது.
இவற்றை விரைந்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றால சீசனுக்கு வந்து செல்லும் பல லட்சக்கனக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிடவும், அவர்கள் தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளும் விதமாகவும் இந்த அருட்காட்சியகத்தை புதிய இடத்தில் புனரமைத்திட வேண்டும்.
இல்லையேனில் அரிய பொக்கிஷங்கள் நிறைந்திருக்கும் இந்த அருட்காட்சியம் பரமாரிப்பின்றி அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தொல்பொருள்துறை சீரமைப்பது காலத்தின் அவசியம், அவசரம்...செய்யுமா அரசு...?
தமிழர்கள் வரலாறு-02
காவிரிப்பூம்பட்டினம்
தமிழகத்தில் 99 % ஊர்களின் பெயர் காரனப்பெயராகவே அமைந்துள்ளது அதன் படியே சோழநாட்டின் காவிரியாறு கடலிலுடன் கலக்கின்ற புகார்முகத்தில் இருந்த காரணத்தினால் 'புகார்' என்றும், 'பூம்புகார்' என்று அழைக்கப்பட்ட இந்நகர் அக்காலகட்டத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத்திற்கும் பெயர்போன் துறைமுகநகர். மேலும் கடற்கரை நகரத்தைப் பட்டினமென அழைப்பது பழந்தமிழ் வழக்கு. காவிரியின் கழிமுகத்தில் உருவான நகரமென்பதால் 'காவிரிப்பூம்பட்டினமென்றும்' அழைக்கப்பட்டது.
சோழர்களின் ஒரு தலைநகரமாகவும், இதையும் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் சோழர்கள் ஆண்டார்கள் என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன.
சிலப்பதிகாரத்தின் 'இந்திரவிழவு எடுத்த காதையில்' ஆசிரியர் இளங்கோ புகார் நகர், 'மருவூர்ப் பாக்கம்',
'பட்டினப்பாக்கம்',
'நாளங்காடி' என மூன்று முக்கிய பகுதிகளாக விளங்கியதையும், அப்பகுதியில் காணப்பட்ட மக்களின் தொழில்கள, வீதிப்பெயர்கள் பற்றியெல்லாம் விரிவாகவே எடுத்துரைப்பார்.
மருவூர்பாக்கம்:
இது கடலோரம் அமைந்த அழகிய நகர் இங்கு மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது. இங்கு கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பானை, தானியங்கள், தங்க வைர வியாபாரிகள் பலர் வாழ்ந்துள்ளனர்.
பட்டினப்பாக்கம்:
இது கடற்கரைக்கு மேற்கே அமைந்த நகரமாகும், இங்கு அரச குடும்பம், உயர் அதிகாரிகள், வியாபாரிகள், நடன, கட்டிட கலைர்கள், மருத்துவர் வாழ்ந்துள்ளனர்.
கி.பி.2ஆம் நூற்றாண்டளவில் வணிகர்கள் உரோமாபுரியிலிருந்தும் (யவனர்கள்), சாவகத்திலிருந்தும் ( இன்றைய இந்தோனேசியா), வட இந்தியாவிலிருந்தும், ஈழத்திலிருந்தும் இங்கு வந்து வணிகம் செய்தார்கள். சோழ வணிகர்கள் இங்கிருந்து சாவகம், காழகம் (இன்றைய பர்மா), ஈழம் போன்ற நாடுகளுக்கு இத்துறைமுகத்திலிருந்து புறப்பட்டு வாணிகம் செய்தார்கள்.
வேற்று நாடுகளிலிருந்தெல்லாம் மக்கள் புலபெயர்ந்து வந்து இப்புகார் நகரில் வாழ்ந்ததை சிலம்பின்'கடல் ஆடும் காதையில்' வரும் 'கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்' என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.
இளங்கோவின் 'சிலப்பதிகாரத்திலும்' , மேலும் பல புறநானூற்றுச் செய்யுள்களிலும் புகார் பட்டினம் பற்றிய செய்திகள் கிடக்கின்றன. உதாரணமாக சிலப்பதிகாரத்தின் 'இந்திரவிழவு எடுத்த காதை', 'கடல் ஆடு காதை' போன்ற பகுதிகளில் புகார் பற்றியும், அந்நகர அமைப்பு பற்றியும், அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் தகவல்கள் காணப்படுகின்றன. இத்துறைமுகத்திற்கு வந்து குவிந்த பொருட்கள் பற்றிப் பட்டினப்பாலை பின்வருமாறு கூறும்:
"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும் ....
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்" (பட்டினப்பாலை 185-193).
மேற்படி செய்யுள் வரிகளில் பல உண்மைகள் தெரிய வருகின்றன. குதிரைகள் கடல்வழியாகக் கொண்டு வரப்பட்டன ('நீரின் வந்த நிமிர்பரிப் புரவி). 'காலின் வந்த' என்பது காற்றின் உதவியினால் வந்த எனப் பொருள்படும். 'காலின் வந்த கருங்குறி மூடை' என்பது பருவக் காற்றின் உதவியினால் வந்த கப்பல்களில் கரிய மிளகு மூட்டைகள் கொண்டுவரப்பட்டன என்பதைக் குறிக்கும். 'வடமலைப் பிறந்த பொன்னும் மணியும்' என்னும் வரிகள் இமயமலைப் புறத்தில் கிடைத்த பொன்னும் மணியும் கங்கையாற்றின் முகத்துவாரத்தின் வழியாகக் கடல்மூலம் வந்ததையும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கத்திலிருந்து சந்தனமும் ('குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்') , அகிலும், தென்னாடான பாண்டிநாட்டுக் கடல்களிலிருந்து முத்துக்களும் ('தென்கடல் முத்து'), கிழக்குக் கடல் வழியாக சாவகத்திலிருந்து பவழமும் ('குணகடல் துகிர்'), கங்கைக்கரை ஊர்களிலிருந்து உள்ளூரிலிருந்து மற்றும் வெளியூர்களான ஈழம் , காழகம் ஆகியவற்றிலிருந்து பல்வேறு பொருட்களும் ('கங்கை வாரியும் காவிரிப் பயனும் .... ஈழத் துணவும் காழகத் தாக்கமும்') இவ்விதம் உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகம் சிறந்து விளங்கும் நகராகப் புகார் விளங்கியதை அறிய முடிகிறது.
உறையூர் முதுகண்ணனின் சோழன் நலங்கிள்ளியைப் புகழ்ந்து பாடும் புறநானூற்றுச் செய்யுளில் வரும்'கூம்பொடு மீப்பாய் கலையாது மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்' வரிகள் ஆழமாகவும் கலமாகவும் பல கப்பல்கள் தங்குவதற்கேற்ற வகையில் அமைந்திருந்த புகார் பற்றிக் கூறும்.
மேலும் மருவூர்ப்பாக்கத்தின் சுற்றுப்புறங்களிலும், பட்டினப்பாக்கத்தின் அயலிலும் வீரம் மிக்க மறவர்கள் படைக்கலங்களுடன் விளங்கியதை "மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும் பட்டின மருங்கின் படைகெழு மாக்களும் " ((இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 76-77).
இது தவிர நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைநாட்டுப் பொருட்டு ஐவகையான மன்றங்களும்
1.வெள்ளிடை மன்றம்,
2.இலஞ்சி மன்றம்,
3.பூத சதுக்கம்,
4.நெடுங்கல் நின்ற மன்றம்,
5.பாவை மன்றம், பட்டினப்பாக்கத்தில் இருந்ததையும் சிலம்பு விவரிக்கிறது .
மேலும் காவிரிப்பூம்பட்டினத்தில்
1.மலர்வனம்,
2.உய்யாவனம்,
3.சம்பாதி வனம்,
4.சுவேர வனம் மற்றும்
5.உவ வனம் ஆகிய ஐவகை வனங்களும் இருந்ததாக மணிமேகலை இல் உள்ளது . அத்துடன் நகரில்
சிவன், திருமால், பலராமன், இந்திரன், முருகன், சூரியன், சந்திரன்,அருக தேவன் ஆகியோருக்குக் கோட்டங்கள் (கோயில்கள்) அமைந்திருந்ததை சிலம்பு பின்வருமாறு கூறும்:
"அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும் " (கனாத்திரம் உரைத்த காதை; 9-13).
இதுதவிர நகரில் ஏழு புத்த விகாரங்களுமிருந்ததை மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியன கூறும் (சிலம்பு, 'நாடு காண் காதை'; 14: 'இந்திர விகாரம் ஏழுடன் போகி'; மணிமேகலை; 'இந்திர விகாரம் என எழில் பெற்று').
ஸ்தபதி வை.கணபதியின் 'நகரமைப்புக் கலை' ஆய்வுக் கட்டுரையினை ஆதாரமாக வைத்து நா.பார்த்தசாரதி தனது 'பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும்' நூலில் பின்வருமாறு குறிப்பிடுவார்: "மயமதம் கூறும் நகரமைப்புக் கலை இலக்கணப்படி மொத்தச் சுற்றளவில் 20இல் ஒரு பாகம் 'குடும்ப பூமி' என்ற பெயரில் குடியிருப்புக்களுக்கும், பிற பகுதிகள் தோட்டங்கள், நீர் நிலைகள், இளமரக்காக்கள் ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்விதமாகப் புகழ்பெற்று விளங்கிய வாணிக நகரான பூம்புகார் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புயல் காற்றடித்து வெள்ளப் பெருக்கெடுத்து நீரில் மூழ்கி விட்டதை மணிமேகலை குறிப்பிடுகிறது
மணிமேகலையில் இந்த நகரின் அழிவு இவ்வாறு குறிப்பிடபடுகிறது. அதாவது வருடாவருடம் இந்திர விழா கொண்டாடும் சோழ மன்னன் அந்த ஆண்டு கொண்டாடததால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி நகர் அழிந்ததாக குறிப்பிடுகிறது.
அங்கு கிடைக்கபெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு அங்கு "சிலபதிகார அருங்காட்சியகம்" ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரம் இன்னும் பிரதிபலித்து கொண்டுள்ளது. இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளபட்டால் இன்னும் பல வெளிவராத நம் பெருமைகள் வெளிவர வாய்ப்புள்ளது. தமிழர்கள் அனைவரும் அங்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும்... தமிழர்கள் பற்றிய தேடல் மேலும் தொடரும்...
இப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை இட்டு செல்லுங்கள்...

Saturday, July 28, 2012
தமிழர்கள் வரலாறு-1
தமிழக கோவில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைபாடுகலாகட்டும், தூண்களில் ஒரு நூல் இல்லை கூட கோணல் இல்லாமல் கட்டப்பட்ட 1000 கால் மண்டபங்கள் ஆகட்டும், 1000 ஆண்டுகளாக இயற்க்கை சீற்றங்களால் கூட சிறு தேய்வுகள் இன்றி, எந்த வண்ண பூச்சும் இன்றி நிமிர்ந்து நிற்கும் தஞ்சை கோபுரம் ஆகட்டும். இன்னும் ஆதி தமிழர்கள் செய்த பற்பல அற்புதமான விஷயங்கள் பற்றி வியப்புடன் பேசும் நாம் இதை பற்றிய தேடலை மேற்கொண்டோமா? அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விஷத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்....
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்று மா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி (வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால் வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரிமா
1/64 - கால்வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ் முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - ����மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைபடி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.
அடேங்கப்பா எந்த மொழியிலும் இல்லாத decimal calculation !!!!!!!
nano particle தான் மிக சிறியது என்று உலகமே பேசிகொண்டிருக்கையில் நம் முன்னோர்கள் அதைவிட சிறிய துகளுக்கு கூட calculation போடிருக்கிரார்கள் என்றால் மிகவும் வியக்கத்தக்க ஒன்றே.
இவ்வளவு கணிதமும் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது!!!!!
இந்த எண்களை வைத்தே நுணுக்கமான பல வேலைகளை செய்துள்ளனர் என்றால் நம் முன்னோர்களின் அறிவையும் ஆற்றலையும் எண்ணி பாருங்கள்.
இன்றைக்கு உள்ள மேம்பட்ட தொழில்நுட்பத்தை வைத்தே நம்மால் செய்ய இயலாத பல அற்புதங்களை அன்றே செய்து வைத்து விட்டனர்.
கால்குலேடரையும், தொழில்நுட்ப வளர்ச்சி என்று இளைய தலை முறை கூறிக்கொண்டிருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம், தமிழர்களின் சாதனையை பற்றிய தேடல் தொடரும்...!!!
(நான் இட்ட தலைப்புக்கும் உள்ளே இருந்த பொருளும் வேறுமாதிரியாக உள்ளதே என என்னலாம். வலைத்தளத்தில் பல தொடர் பதிவுகள் சென்றுகொண்டிருப்பதால் புது புது தலைப்புகள் இட்டால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் இவ்வாறு இட்டுள்ளேன்.)
இப்பதிவு பற்றிய தங்களின் கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன...
நன்றி!!!
ம.ஞானகுரு
Tuesday, July 24, 2012
தமிழர்களின் வரலாறு
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.
குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ்,
இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு பனை நாடு, ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன. அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.
குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.
இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.
வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்!
இப்பதிவு பற்றிய உங்களின் கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன....
நன்றி!!!
ம.ஞானகுரு
No comments:
Post a Comment