For Read Your Language click Translate

08 May 2014

இணையத்தில் உலாவும் போது நம் தகவல்கள் திருடப்படலாம் அதனை தடுக்கும் முறைகள்

இணையத்தில் உலாவும் போது நம் தகவல்கள் திருடப்படலாம் அதனை தடுக்கும் முறைகள்

இணையத்தில் நாம் உலாவும் போது நம்முடைய தகவல்கள் நமக்கு தெரியாமல் சேகரிக்கப்படுகின்றன .நாம் எந்தெந்த தளங்களுக்கு செல்கிறோம் நாம் தேடும் தகவல்கள் என்னென்ன ? போன்றவை கண்டறியப்படுகிறது .இதனால் நம்முடைய privacy பாதிக்கப்படுகிறது .


இது எப்படி நடக்கிறது எப்படி தடுக்கலாம் என்று பார்க்கலாம்


 நம்முடைய தகவல்கள் சேகரிக்கப்படும் முறைகள் பற்றி :
 
நமக்கு பிடித்த தகவல் இருந்தால் அந்த  தளத்தில் உள்ள facebook like button அல்லது ட்விட்டர் அல்லது buzz போன்றவற்றின் மூலம் share அல்லது like button மூலம் நண்பர்களுடன் பகிர்கின்றோம் .

இவாறு பகிரும் போது நாம் பயன்படுத்தும் browser இல் உள்ள cookies  வழியே  social media tool (face book button) உதவியுடன்  facebook,google போன்றவை நம்முடைய இணையதள பயன்பாட்டை trace செய்கின்றன .

இவ்வாறு trace செய்தவத்தால் அவர்களுக்கு என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு இதோ பதில் ...

நாம் google இல் நமக்கு தேவையான தகவல்களை தேடும் போது நம்முடைய தேடலுக்கு ஏற்றவாறு google விளம்பரங்களை கொடுத்து அதன் வருவாயை அதிகரித்துக்கொள்ளும் 

மேலும் உதாரணத்திற்குjeiguna.blogspot என்பதனை google இல் முதலில் தேடும் பொது jei ,jeitha jeicode, jeikkalam  என காட்டும் பிறகு நான்கைந்து முறைjeiguna.blogspot என தேடி browser இல் உள்ள cookies களை அழித்துவிட்டாலும் நமது தேடல் தகவல்களை வைத்து முதலிலேயே jeiguna.blogspot  என நாளடைவில் நம்முடைய IP வைத்து நமக்கேற்ப காட்டத்தொடங்கும் .
மேற்க்கண்டவற்றால் பெரிய பாதிப்புகள் இல்லை ஆனால் சில தளங்கள்  ( 3rd party websites ) தங்கள் தளம் மற்றும் பொருட்களை விளம்பரப்படுத்த pop-up விளம்பரங்கள் மூலம் browser cookies வழியே தகவல்களை track script வழியே சேகரித்துவிடுகின்றனர்.

இவ்வாறு track script போன்றவற்றை   உங்கள் browser தடை செய்யும் வகையில் பயன்படுத்தவேண்டும் முக்கியமாக facebook தளத்தில் இருந்து பிற தளங்களுக்கு சென்று மீண்டும் facebook தளத்திற்கு செல்லும்போது இந்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன .இதனை தடுக்க உங்கள் browser இல் உள்ள facebook cookies களை delete செய்தபின் பிற தளங்களுக்கு செல்லவேண்டும் .
         
இதனால் பிற தளங்களில் உள்ள track script மீண்டும் facebook செல்லும் போது அந்த தள like button உங்களுக்கு தெரியாமலே like என்று நீங்கள் கொடுத்ததை போல மாற்றிவிடும் வகையில் தயார் செய்திருப்பார்கள் . இன்னும் வைரஸ் ,fishing என பல பிரச்சினைகள் வந்துசேரும் .
 

 எனவே மறக்காமல் facebook cookies களை delete செய்து பிற தளங்களுக்கு செல்லுங்கள். இன்னும் அதிகமாக பாதுகாப்பாக இருக்க உங்கள் IP யை மாற்றிக்கொள்ளுங்கள் அடிக்கடி . இதற்கென பல வழிகள் உள்ளன . பல இலவச software கள் உள்ளன . அவற்றை அடுத்தடுத்து பார்க்கலாம் .முக்கியமாக facebook, twitter போன்றவற்றில் உங்கள் கைப்பேசி ஏன் இருந்தால் அதனை முதலில் நீக்கிவிடுங்கள் .mail id போதுமானது. browser கள் இணையதள பயன்பாட்டிற்கு உதவினாலும் இது போன்ற சில வேலைகளுக்கும் தவறாக  பயன்படுத்தப்படுகின்றன.எனவே நாம் தான் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தவேண்டும். 

இணையதளம் எந்த அளவிற்கு நம் வேலைகளை எளிதாக்கிவிட்டதோ அந்த அளவுக்கு பாதுகாப்பையும் கேள்விக்குறி ஆக்கிவிடும் நாம் பாதுகாப்பாக செயல்படாவிட்டால் .

No comments:

Post a Comment