For Read Your Language click Translate

Showing posts with label இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் தகவல்கள். Show all posts
Showing posts with label இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் தகவல்கள். Show all posts

08 May 2014

இலவசமாக பிளாக்கர் டெம்ப்ளேட்ஸ் டவுன்லோட் செய்ய ...

நாம் இன்டர்நெட் மூலம் அனுப்பும் தகவல்கள் பாதுகாப்பாக சென்றடைகிறதா? என்பதை அறிவுது எப்படி?


நாம் இன்டர்நெட் மூலம்  அனுப்பும் தகவல்கள் பாதுகாப்பாக சென்றடைகிறதா? என்பதை அறிவுது எப்படி?

 

பொதுவாக இன்டர்நெட் மூலம் கிரெடிட் கார்ட் விபரங்கள் வங்கி கணக்கு விபரங்கள் போன்றவற்றை அனுப்பும் போது அவை பாதுகாப்பாக சென்றடைகிறதா? ஏன்பதை அறிந்து கொள்வதற்கு நீங்கள் எந்த இணையத்தள முகவரியை பயன்படுத்தி உங்கள் முக்கிய தகவல்களை அனுப்புகிறிர்களோ அந்த இணையத்தளத்தை ப்ரவுசரின் உதவியோடு திறக்கும் போது, பிரவுசரின் கீழே வலதுபக்க மூலையில் சிறிய லாக் ஒன்று தெறிகிறதா? என்று பாருங்கள்.


மேலும் லாக் மூடிய வடிவில் இருக்க வேண்டும். லாக் திறந்த மாதிரி இருந்தால் உங்கள் டேட்டா பாதுகாப்பாக சென்றடைய வாய்ப்பில்லை என்று பொருள். லாக் லாக் வடிவில் இருக்கும் போது நீங்கள் ஏதாவது செர்வருக்கு அனுப்பும் முக்கிய தகவல்களையோ அல்லது செர்வரிலிருந்து உங்களுக்கு அனுப்பப்படும் முக்கிய தகவல்களையோ வேறு யாரும் இடையில் படிக்க முயற்சிக்கும் போது படிக்க இயலாத வண்னம் என்கிறிப்ட் செய்து அனுப்பப்படும்.

 

ஆனால் ப்ரவ்சரில் லாக் தெரியாவிட்டாலோ அல்லது லாக் திறந்த நிலையில் இருந்தாலோ நீங்கள் ஏதாவது செர்வருக்கு அனுப்பும். முக்கிய தகவல்களோ அல்லது செர்வரிலிருந்து உங்களுக்கு அனுப்பப்படும் முக்கிய தகவல்களோ என்கிரிப்ட் செய்யப்படாமல் சாதாரண டெக்ஸ்ட் வடிவில் அனுப்பப்படும். இதனால் டேட்டா பரிமாற்றத்தின் போது மற்றவர்கள் இதனை எளிதாக படிக்க முடியும்.

 

எளிய முறையில் படங்களுடன் குழந்தைகள் ஆர்வமுடன் பதிலளிக்கும் வகையில் கேள்விகள் உள்ளன .

எளிய முறையில் படங்களுடன் குழந்தைகள் ஆர்வமுடன் பதிலளிக்கும் வகையில் கேள்விகள் உள்ளன .

  • எண்கணித புதிர்கள் .
  • அல்ஜீப்ரா
  • ஜாமென்றி
  • லாஜிக் புதிர்கள்
  • கணித விளையாட்டுகள் ,
  • விரைவாக முடிவெடுக்கும் திறனை வளர்க்கும் விளையாட்டுகள்
  • சீட்டாட்ட புதிர்கள்
  • ஐன்ஸ்டீன் புதிர்கள்
  • கணித Dictionary
  • மறைந்துள்ள பொருட்களை கண்டறிவது
  • வயதை கண்டறிதல் , நேரம்  கண்டறியும் புதிர்கள் 
  • எளிய கூட்டல்,கழித்தல், பெருக்கல்& வகுத்தல் என நீள்கிறது .
              முக்கியமாக குழந்தைகளின் பெற்றோர்கள்  , ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பகுதிகளும் கொடுத்துள்ளனர் .  இதற்கென தனி குழுக்கள் அமைத்து செயல்படுத்தி வருகின்றனர் .

 நேரம் கிடைத்தால் நாம் கூட போய் ஜாலியாக  கற்றுக்கொள்ள நிறைய தகவல்கள் உள்ளன .......

           மேற்கூறிய அடிப்படை திறன்கள்  குழந்தைகள் பள்ளி பாடங்களை எளிதாக , விரைவாக கற்று அதிக மதிப்பெண் பெற உதவுகின்றன என்பது கூடுதல் தகவல் .மொத்தத்தில் இணையதளம் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு இன்றி எல்லோருக்கும் பயன்படுகிறது என்பதில் சந்தேகமே இல்லை . 


குட்டீஸ்களை கணித புலிகளாக்க உதவும் இணையதளங்களின் தொகுப்பு :














   இவை அனைத்தும் இலவச சேவை வழங்கும் தளங்கள் , இன்னும் சில  கட்டணம் வசூலிக்கும் தளங்களும் உள்ளன ...
    
           உலக அளவில் கணிணியை உபயோகப்படுத்தும் குட்டீஸ் பட்டியலில் நாம் இந்தியாவிற்கு 23 ம் இடம் .தமிழில் இத்தகைய வசதிகள் கொண்ட இணையதளம் இதுவரை இல்லை என்பது வருந்தத்தக்க  விஷயம்.

இலவச நூல்கள் இணையத்தில் கிடைக்கிறது

இலவச நூல்கள் இணையத்தில் கிடைக்கிறது

கல்வி கற்கும் மாணவர்களுக்கு இணையத்தில் தகவல்களுடன், நூல்களும் இலவசமாகக் கிடைக்கின்றன. அவ்வகையில் அண்மையில்  தளம் ஒன்றைப்  பார்க்க நேர்ந்தது.  அதன் முகவரி: http://sciencebooksonline.info.  . இந்த தளம் சென்றால், இதன் இடது பக்கம்  உள்ள பிரிவில்  Astronomy, Biology, Chemistry, Computer science, Earth sciences, Engineering, Mathematics, Medicine  மற்றும்  Physics  என்ற பிரிவுகள் காணப்படுகின்றன.

எந்த பிரிவில் நூல்கள் வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்திடலாம். அந்த பிரிவில் உள்ள நூல்கள் பட்டியலிடப்படுகின்றன. இதில் நமக்கு வேண்டிய நூலைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடலாம். சில நூல்கள், ஆன்லைனிலேயே படிக்கக் கிடைக்கின்றன.  பெரும்பாலான நூல்கள் பி.டி.எப். பைலாகக் கிடைக்கின்றன. இவற்றிற்கான லிங்க்குகளில் கிளிக் செய்தால், குறிப்பிட்ட நூல்களை கம்ப்யூட்டரில் சேவ் செய்வதற்கான விண்டோ கிடைக்கும். சேவ் செய்து பின்னர் படிக்கலாம். தேவைப்பட்ட பக்கங்களை அச்செடுத்தும் வைத்துக் கொள்ளலாம்.

உங்கள் ப்ளோக்கின் (Blog) மதிப்பை அறிய.......

உங்கள் ப்ளோக்கின் (Blog) மதிப்பை அறிய.......

உங்கள் வலைப்பதிவின், இணையத்தின் மதிப்பை அறிய http://bizinformation.org/ என்னும் தளம் உதவுகிறது இங்கு சென்று உங்கள வலைமுகவரியை உள்ளீடு செய்தால்....

வலையின் மதிப்பீடு
நாள்தோறும் பார்வையிடப்படும் பக்கங்கள்
பார்வையாளர் எண்ணிக்கை
மொத்த பக்கங்கள் எனப் பல விவரங்களையும் அறிந்துகொள்ளமுடிகிறது

இணையத்தில் இலவச டாக்டர் நம் உடல் நோய்களுக்கு தீர்வு சொல்ல இருக்கிறார்.

இலவச டாக்டர் நம் உடல் நோய்களுக்கு தீர்வு சொல்ல இருக்கிறார்.
 
தினமும் நம் உடலில் புதிது புதிதாக தோன்றும் சிறு நோய்கள் இதற்காக மருத்துவமனைக்கு ஒட வேண்டாம் வீட்டில் இருந்தபடியே மருத்துவரிடம் நம் நோய்க்கான பிரச்சினையைச் சொல்லி தீர்வு காணலாம். இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

உணவகமும் மருத்துவமனையும் எல்லா நாடுகளிலும் அதிகரித்து வருகின்றன இருந்தும் எல்லா மருத்துவமனைகளிலும் கூட்டம் குறைந்தபாடில்லை அந்த அளவிற்கு மக்களுக்கு நோய் ஒரு நண்பனாகவே மாறி உள்ளன. சிறிய தலைவலி முதல் காய்ச்சல் வரை அத்தனைக்கும் மருத்துவமனைக்கு செல்வதை குறைக்க நமக்கு உதவுவதற்காக இணையத்தில் ஒரு மருத்துவர் உள்ளார்.

இவரிடம் நமக்கு இருக்கும் பிரச்சினைகளை தெளிவாக கூறினால் உடனடியாக மருந்தும் கூறுவார்.

இணையதள முகவரி : http://symptoms.webmd.com/symptomchecker இந்தத்தளத்திற்கு சென்று நாம் நோயின் அறிகுறியை கூறினால் போதும் உடனடியாக தீர்வு. உதாரணமாக நமக்கு தலைவலி என்று வைத்துக்கொள்வோம் இங்கு சென்று தலைவலி என்று கூறியவுடன் எந்த நோய் இருந்தால் தலைவலி வரும் என்று ஒரு பெரிய பட்டியலே கொடுக்கிறது. 

அதிலும் குறிப்பாக ஒற்றை தலைவலி என்று கூறினால் இன்னும் சுருக்கப்பட்டு என்ன நோயாக இருக்கலாம் என்று கூறுகிறது. நோயின் பெயரைக் கூறி தீர்வு தேடலாம். எந்த பயனாளர் கணக்கும் தேவையில்லை உடனடியாக நோயைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். 

மருத்துவத்துறையில் இருக்கும் நம் நண்பர்களுக்கும் பொது மக்களுக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

சில கம்பெனிகளில் இமெயில் மட்டுமே பயன்படுத்தும் படி கட்டுப்பாடுகளை வைத்து இருப்பார்கள் THEN இணையத்தளங்களை இமெயில் மூலம் படிக்கும் வசதி

இணையத்தளம் படிக்கலாம் வாங்க......இமெயில் மூலம்

சில கம்பெனிகளில் இமெயில் மட்டுமே பயன்படுத்தும் படி கட்டுப்பாடுகளை வைத்து இருப்பார்கள். இதனால் நாம் நமக்கு பிடித்தமான அல்லது நாமக்கு அவசரமாக இணையத்தளங்களை பார்க்க வேண்டும் , படிக்க வேண்டும் என்றால் முடியாமல் தவிப்போம். இந்த பிரச்சினைகளை போக்கி இணையத்தளங்களை இமெயில் மூலம் படிக்கும் வசதியை செய்து தருவதற்கு என்று ஒரு இணையத்தளம் உள்ளது. www.webtomail.co.cc  இந்த இணையத்தளத்திற்கு சென்று நாம் படிக்க வேண்டிய இணைத்தளத்தின் முகவரியை சப்ஜெக்டாக டைப் செய்து , நமது இமெயில் முகவரியில் இருந்து www.webtomail.co.cc என்ற முகவரிக்கு  மெயில் அனுப்பி வைக்க வேண்டும். உதாரணமாக www.google.com என்ற முகவரியை நாம் பார்க்க வேண்டும் என்றால் www.google.com என்று இந்த முகவரியை இமெயிலின் சப்ஜெக்டாக டைப் செய்து அனுப்ப வேண்டும்.நாம் அனுப்பிய சிறிது நேரத்தில் நாம் அனுப்பிய இணையத்தளத்தின் பக்கங்களை HTML  வடிவில் நமது இமெயிலுக்கு அனுப்பி வைப்பார்கள். நாம் அதனை படித்தோ பார்த்தோ தெரிந்து கொள்ளாலாம். என்ன
நண்பர்களே உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமல்லவா...

ஹலோ ...ஹலோ....என்னங்க ....... வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு  போங்களேன்

அதிசய இணையதளம் வேலை தேடுபவர்களுக்கு

அதிசய இணையதளம் வேலை தேடுபவர்களுக்கு
வேலை கோரி விண்ணப்பிப்போரையும், வேலை தரக் காத்திருப்போரையும் 30 விநாடிகளில் இணைத்து இருதரப்புக்கும் திருப்திகரமான 'ரிசல்ட்' கிடைக்க வழிவகுக்கிறது கார்ப்-கார்ப்.காம் இணையதளம்.விர்ஜீனியாவைத் தலைமையிடமாகக் கொண்டு 2007ல் நிறுவப்பட்ட நிறுவனம் கார்ப்-கார்ப்.காம். அன்று முதல் இதுவரை பல ஆயிரம் பேருக்கு உரிய வேலைகளை இந்தத் தளம் வாங்கித் தந்துள்ளது. குறிப்பாக பொருளாதார நெருக்கடி காலகட்டத்திலும் கூட தொய்வில்லாமல் பல ஆயிரம் பேருக்கு இதன் மூலம் வேலை கிடைத்துள்ளது வியப்புக்குரிய ஒன்றாகும்.கார்ப்-கார்ப் பயன்படுத்தும் FETCH தொழில்நுட்பம் மூலம் வேலைக்கு ஊழியரைத் தேடுவோர் தங்களுக்குரிய விண்ணப்பதாரர்களை 30 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியும் என்பது தான் இதன் சிறப்பம்சம். 

வேலை கோருவோர், தனக்குப் பிடித்த, பொருத்தமான வேலை எது என்று இங்கே தேடிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அதேபோல வேலை தருவோரும், தங்களுக்குப் பொருத்தமான நபர் யார் என்பதை தேடிப் பார்க்க வேண்டியதில்லை. அதை கார்ப்-கார்ப் நிறுவன இணையதள சாப்ட்வேரே அழகாக செய்து முடித்து விடுகிறது. கிட்டத்தட்ட ஒரு 'விர்ச்சூவல் அசிஸ்டென்ட்' ஆக மாறி வேலை தேடுவோர் மற்றும் நிறுவனங்களின் வேலையை சுலபமாக்கி விடுகிறது.வேலாக்கு பணியாளரைத் தேடும் நிறுவனம் தனது தேவையை இந்த இணையதளத்தில் பதிவு செய்து விட்டால் போதும். உடனடியாக அதற்குரிய விண்ணப்பதாரர்களை அலசி ஆராய்ந்து, 30 விநாடிகளில் பத்து பேர் கொண்ட பட்டியலை அது கொடுத்து விடும். அந்த பத்து பேரும் டாப் 10 விண்ணப்பதாரர்களாக இருப்பார்கள். இதன் மூலம் உரியவர்களைத் தேடும் வேலையும் குறைகிறது, நல்ல பணியாளர் கிடைக்கவும் வழி ஏற்படுகிறது.இதுகுறித்து கார்ப்-கார்ப் நிறுவனத்தின் சிஇஓ பிரபாகரன் முருகையா கூறுகையில், ஒவ்வொரு நாளும் வேலைக்கு ஆள் தேட செலவிடும் நேரத்தில் 30 சதவீதத்தை எங்களது FETCH முறை மிச்சப்படுத்தித் தருகிறது. இப்போதைய அதிவேகமான காலகட்டத்தில் இது மிகவும் அவசியமான, அத்தியாவசியமான ஒன்றாகும்.

சரியான பணியாளரை தேர்வு செய்து அவர்களை பணியில் அமர்த்தும்போது, தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களின் வேலைத் திறன் 20 சதவீத அளவுக்கு உயரும். தேவையில்லாத நேரச் செலவு குறையும், திறமையான ஊழியர் கிடைக்கும்போது வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான தயாரிப்புகளை அளிக்க முடியும். நிறுவன வளர்ச்சிக்கும் அது பெரிதும் உதவும்.குறிப்பாக சொல்ல வேண்டுமானால், முற்றிலும் திறமையான 50 பணியாளர்களைக் கொண்ட ஒரு நிறுவனத்தின் உற்பத்தித் திறன் 10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் டாலர் வரை வருவாய் உயரும்.

இதுதவிர கார்ப்-கார்ப்.காம் இணையதளம், அமெரிக்கா முழுவதும் ஐடி கன்சல்டிங் நிறுவனங்களுக்காக 20க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது. இதன் மூலம் சிறிய நிறுவனங்களும் பலனடைந்துள்ளன.தற்போது கார்ப்-கார்ப்.காம் இணையதளத்தின் வாடிக்கையாளர் பட்டியல் மிக நீண்டது. 6000க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் வேலைத் தேவையை நாங்கள் பூர்த்தி செய்கிறோம். மாதந்தோறும் 30,000க்கும் மேற்பட்ட புதிய வேலை ஒப்பந்தங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவிய காலகட்டத்திலும் கூட நாங்கள் கணிசமான வளர்ச்சியைக் காண முடிந்தது. இதற்கு எங்களது இணையதளத்தில் நாங்கள் பயன்படுத்தி வரும் நவீன தொழில்நுட்பமே காரணம். இதன் மூலம் துல்லியமான முடிவுகள், வாடிக்கையாளர்கள் திருப்தி, அனுபவம் வாய்ந்த, திறமையான ஊழியர்கள் கிடைப்பது என பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன.வரும் ஆண்டுகளில் கார்ப்-கார்ப்.காம் இணையதளத்தின் சேவையை உலகம் தழுவிய அளவில் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் முருகையா.

http://www.corp-corp.com

இணையத்தில் எங்கெங்கு உங்கள் புகைப்படங்கள் உள்ளன என்று கண்டறிய

இணையத்தில் எங்கெங்கு உங்கள் புகைப்படங்கள் உள்ளன என்று கண்டறிய
Search your images online with TinEye
இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள். உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright and watermark ) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள்.ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும். இதையெல்லாம் எப்படி கண்டறிவது?

இதற்கு தான் TinEye என்று ஒரு புதுமையான இணையதளம் உள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளளன என்று விரைவாக தேடித்தரும். உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தின் இணைப்பு கொடுத்ததும் அல்லது உங்கள் கணிப்பொறியில் இருந்து அப்லோட் (upload) செய்தும் தேடலாம். இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது.

Search your images online with TinEyeஇதன் மூலம் தேடுபொறிகளில் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒளிப்படங்களை வினாடிகளில் கண்டுபிடித்து தரும். மேலும் உங்கள் புகைப்படங்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்திருந்தாலும் கண்டுபிடித்துவிடும். இது இலவச சேவை தான். இதனை வலை உலவிகளில் நீட்சியாகவும் (addon IE/firefox) பயன்படுத்தி எளிதாக தேடலாம்.

எந்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்ளாதவர்களும் எதாவது இணையத்தில் தரவிறக்கிய படங்களையும் தேடலாம். முடிவுகள் எந்தெந்த இணையதளங்களில் காணப்படுகிறது என்று அறியலாம்.

இணையதள முகவரி : http://www.tineye.com/

இலவச மின் நூல் தளம் - பயனுள்ள முகவரிகள்

இலவச மின் நூல் தளம் - பயனுள்ள முகவரிகள்

 

சில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகாரத்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமும் பயனும் வேறு எதிலும் இல்லை. காசு கொடுத்தாலும் கிடைக்காத நல்ல புத்தங்கள் பல இணைய தள புத்தக அலமாரிகளில் பதுங்கி கிடக்கிறது. இவற்றை தேடிஎடுத்து இலவசமாக படித்து பயன் பெற சில தளங்களின் சுட்டிகளை தந்திருக்கிறேன். உங்ளுக்கு தெரிந்ததையும் எல்லோருக்கும் பயன்படுமானால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இலவச இணைய மின் நூலகங்கள்:
------------------------------------------
worldpubliclibrary.org/
archive.org/details/texts
bartleby.com/
onlinebooks.library.upenn.edu/lists.html
bibliomania.com/

planetebook.com/
e-book.com.au/freebookswww.netlibrary.net/
infomotions.com/
ipl.org/reading/

gutenberg.org/
forgottenbooks.org/
readprint.com/
en.wikibooks.org
e-booksdirectory.com/

free-ebooks-canada.com/
book-bot.com/witguides.com/
2020ok.com/
manybooks.net/

globusz.com/Library/new_ebooks.php
readeasily.com/
eserver.org/
starry.com/free-online-novels/ For free on line novels
memoware.com/ Free Ebook Titles for your PDA!

http://www.freebookspot.com/
http://obooko.com/
http://www.bookyards.com/
http://www.onlinefreeebooks.net/ - general books,computer,technical,user manuals and service manuals available.
http://digital.library.upenn.edu/books/
http://e-library.net/


cdl.library.cornell.edu/ selected digital collections of historical significance.bookboon.com/in you can download free books for students and travelers
arxiv.org/-Open access to e-prints in Physics, Mathematics, Computer Science, Quantitative Biology, Quantitative Finance and Statistics
bookmooch.com/ -புத்தகங்களை இங்கே பரிமாறிக்கொள்ளலாம்

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்
நூலகம் -இலங்கைத் தமிழ் இலக்கிய மின் பதிவுகள்.
TAMIL E-BOOKS DOWNLOADS
தமிழ் முஸ்லிம் நூலகம்
knowledge at fingertips
tamilvu.org- தமிழ் இணைய பல்கலை கழக நூலகம்

www.4shared.com தளத்திலிருந்து இலவச புத்தகங்கள் இங்கே பெறலாம்.
தமிழ் புத்தகங்கள் இங்கே பெறலாம்.

தமிழ் புத்தகங்கள் புதினங்கள் இங்கே வாசிக்கலாம்.
மின்னணுவியல் பொருட்களின் பயனர் கையேடுகளை (User Manual) இங்கே பெறலாம்.
Electronics Service manual,data-sheets,Schematic diagram 

கணினியியல் நூல்கள் இங்கே இலவசமாக கிடைக்கிறது.
http://ebooks-library.blogspot.com/ 
http://www.zillr.org/
http://freecomputerbooks.com/

மருத்துவ நூல்கள் இலவசமாக இங்கே பெறலாம்.

EncyclopaediaBritannica 29 Volumes in djvu format. Use djvu viewer program to view the files

Maran Collects & Shares -Software related EBooks, Personality Development Books, Audiobooks, IT Certification Materials with Test Engines, Software Video Tutorials, Encyclopedia of All Kinds, Rare Collection of Tamil Songs, Tamil Devotional Songs, Indian Instrumentals & Many More.

http://www.magazinesdownload.com/   -Download Popular magazines from this site.

http://www.booksshouldbefree.com/  Download Audio books as mp3 files

இனி படிச்சு கிழிக்க வேண்டாம்."கிளிக்"கி படிங்க.

Resume (சுயகுறிப்பு) தயார்! ஒரே கிளிக்கில்

Resume (சுயகுறிப்பு) தயார்! ஒரே கிளிக்கில்

 
எந்தத்துறையாயினும் அதில் சிறந்த வேலைவாய்ப்புக்களை பெற்றுகொள்ள உதவும் லிங்க்ட்-இன் என்ற தளத்தை பற்றி பலர் அறிந்திருப்பீர்கள்.



லிங்க்ட்-இன் தளத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் உங்கள் ப்ரோபைலை அப்படியே அழகான ஒரு சுயகுறிப்பாக (resume)  மாற்றிக்கொள்ள உதவுகிறது resume builder.

இனிமேல் ஒரே கிளிக்கில் சுய குறிப்பு தயாராகிவிடும் அத்துடன் அதை பிடிஎவ் கோப்பாக சேமிக்கவும் பிரின்ட் செய்து கொள்ளவும் முடியும். மாற்றங்கள் செய்ய வசதிகளும் உண்டு.

இணைப்பு இங்கே http://resume.linkedinlabs.com/home/index

ஆன்லைனில் வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க! சரிபார்க்க!

ஆன்லைனில் வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க! சரிபார்க்க!
வெளி நாடுகளில் வாழும் அன்பு சகோதர சகோதரிகளே! வணக்கம். ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்ட நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் வாக்கு சீட்டு மட்டுமே! நாம் வெளி நாட்டில் வாழ்ந்தாலும், அந்நிய செலாவணி மூலம் நம் நாட்டின் பொருளாதாரம் சிறந்து விளங்க நம்மால் ஆன பங்களிப்பை ஆற்றி வருகிறோம்! வாக்களிப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை.

கடந்த மாதம் ஏதோ நம் மத்திய அரசு வரும் தேர்ல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் முறை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. எனவே ஒவ்வொரு தமிழரும் நம் ஊரில் நம்முடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? இல்லையெனில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளுங்கள்!

கீழே காணும் இந்த URL -ஐ காப்பிசெய்து ADDRESS BAR -இல் பேஸ்ட்  செய்து உங்கள் மாவட்டம், தொகுதி முதலியவற்றை தேர்ந்தெடுத்து, உங்கள் ஊர், தெரு, குடும்ப உறுப்பினர்களின் வாக்காளர் பெயர், உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என சரிபார்த்து சேர்க்கலாம்.
 
http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp

சப்போர்ட் செய்யவில்லையெனில் தமிழ் எழுத்துருக்களை தரவிறக்கம் செய்து பின் சரி பார்க்கவும். புதிதாய் விடுபட்ட பெயர்களை சேர்க்க படிவம் 6 , ஏதேனும் எழுத்து பிழை பெயரிலோ, முகவரியிலோ இருப்பின் அவற்றை சரிசெய்ய படிவம் 8 , திருமணமாகி வேறு ஊருக்கு சென்றாலோ, வேறு ஊருக்கு மாறுதலாகி சென்றாலோ, முகவரி, தொகுதி மாற்றம் செய்ய படிவம் 8 A பயன் படுத்தி விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்ப படிவங்களை பெற இங்கே சொடுக்கவும்! அல்லது இந்த URL -ஐ காப்பிசெய்து ADDRESS BAR -இல் பேஸ்ட் செய்து விண்ணப்பிக்கலாம்!
 
http://www.elections.tn.gov.in/forms.htm
 
அறிய இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்!

தமிழராய், இந்தியராய் பிறந்ததில் பெருமை கொள்வோம்! வாழ்க தமிழகம்! வளர்க பாரதம்!

நன்றி! குண சேகரன்!

PAID SOFTWARE SERIAL NO இலவசமாக டவுன்லோட் செய்ய............ ............

கட்டண மென்பொருட்களின் சீரியல் எண்களை..........(1 மில்லியன்) இலவசமாக டவுன்லோட் செய்ய............

கணினி உபயோகிக்கும் நாம் அனைத்து வேலைகளுக்கும் ஏதாவது ஒரு மென்பொருளின் துணையை கொண்டே செய்து முடிக்கிறோம். இணையத்தில் நிறைய இலவச மென்பொருட்கள் இருந்தாலும் பணம் கட்டி வாங்கும் மென்பொருட்களின் சேவை நன்றாகவும் பல வசதிகள் அடங்கியதாகவும் இருக்கும். ஆனால் கணினியையே கஷ்ட்டப்பட்டு வாங்கும் நாம் ஒவ்வொரு மென்பொருளையும் காசுகொடுத்து வாங்கினால் அவ்வளவு தான் நாம் சம்பாதிப்பது அனைத்தையும் இந்த கணினிக்கே செலவு செய்ய வேண்டி வரும்.  இதனால் நாம் மென்பொருளை கிராக் செய்து பயன்படுத்துகிறோம்.

கிராக் மென்பொருட்களை பயன்படுத்தினாலும் சில தீமைகள் நமக்கு உள்ளன அவையாவன 
  •  கிராக் செய்யும் மென்பொருட்களை டவுன்லோட் செய்வதிலும் சரியானதை தேர்வு செய்து டவுன்லோட் செய்ய வேண்டும் அப்படி இல்லை என்றால் நம் கணினியில் வைரஸ் புகும் அபாயம்.
  • ஒரிஜினல் மென்பொருட்களில் உள்ள சில வசதிகள் இதில் இருக்காது குறிப்பாக மென்பொருளில் எடிட் செய்ய முடியாது.

இது போன்ற கிராக்கிங் மென்பொருட்களை பயன்படுத்தாமல் இந்த வசதிகளை இலவசமாக பெற
  • முதலில் நீங்கள் விரும்பம் மென்பொருளின் ட்ரையல் பதிவுகளை டவுன்லோட் செய்து கொள்ளவும். இவைகள் சட்டப்படி இலவசமே 
  • அந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யும் பொது கேட்கப்படும் ட்ரையல் என்பதற்கு பதிலாக Register என்பதை கொடுத்து கீழே கொடுத்துள்ள லிஸ்டில் உள்ள அந்த மென்பொருளுக்கான சீரியல் எண்ணை கொடுத்தால் அந்த மென்பொருள் நமக்கு சொந்தமாகிவிடும்.
  • அந்த மென்பொருளை பயன்படுத்தி நாம் அனைத்து வசதிகளையும் பெற்று கொள்ளலாம்.
மென்பொருட்களின் சீரியல் எண்களை டவுன்லோட் செய்ய


எங்கிருந்து வேண்டுமானாலும் புரோகிராம் எழுதிப்பழகலாம் ஆன்லைன் மூலம்

எங்கிருந்து வேண்டுமானாலும் புரோகிராம் எழுதிப்பழகலாம் ஆன்லைன் மூலம்
கணினியில் புரோகிராம் எழுதிப்படிக்கும் ஆர்வம் உங்களிடம் இருக்கிறது ஆனால் அதற்கான மென்பொருள் எங்கே கிடைக்கும், நாம் பயன்படுத்தும் அத்தனை கணினிகளில் இருக்குமா ? இப்படி நமக்கு எழும் பல கேள்விகளுக்கு பதிலாக ஒரு தளம் வந்துள்ளது, ஆன்லைன் மூலம் நாம் எங்கு இருந்து வேண்டுமானாலும் புரோகிராம் எழுதிப்பழகலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கணினி புரோகிராம் துறையில் இப்ப தான் நுழைகிறேன், எனக்கு புரோகிராம் எப்படி Run செய்து பார்க்க வேண்டும் என்று கூட தெரியாது, சொந்தமாக என்னிடம் கணினி கிடையாது இப்படி பல கேள்விகளுக்கு தீர்வாக வந்துள்ள இத்தளம் மூலம் C புரோகிராம் முதல் Php புரோகிராம் வரை அனைத்தையும் ஆன்லைன் மூலம் இயக்கிப்பார்க்கலாம்.

இணையதள முகவரி : http://ideone.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் எந்த மொழியில் புரோகிராம் எழுத வேண்டுமோ அந்த மொழியை வலதுபக்கம் இருக்கும் Choose Language என்பதில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். அடுத்து   இருக்கும் கட்டத்திற்குள் நம் புரோகிராமை எழுதிவிட்டு Run code என்ற ஆப்சனையும் தேர்ந்தெடுத்துவிட்டு Submit என்ற பொத்தானை அழுத்தினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் எழுதிய புரோகிராம்-க்கான Output கிடைக்கும்.கணினித்துறையில் புரோகிராம் எழுத நினைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும். கணினியில் ஆன்லைன் மூலம் புரோகிராம் எழுதுவது பற்றிய நம் முந்தைய பதிவைப் பார்க்க இங்கு சொடுக்கவும்.

C , C++ , PHP புரோகிராம் – களை இனி ஆன்லைன் மூலம் இயக்கலாம்.

வேலை வாய்ப்புக்கான தேடிய்ந்திரம்



வேலை வாய்ப்புக்கான தேடிய்ந்திரம்


மற்ற வேலை வாய்ப்பு தளங்களை போல இதில் பயோடேட்டவை எல்லாம் சமர்பிக்க வேண்டியதில்லை.கூகுல் எப்படி இணையத்தில் உள்ள எண்ணற்ற தளங்களில் தேடி தேவையான தகவல்களை தருகிறதோ அதோ போல இந்த தளம் வேலை வாய்ப்பு தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள வேலைகளில் இருந்து தேடி தருகிறது.

எந்த துறையில் வேலை தேவையோ அந்த துறையை கூறிப்பிட்டு தேடிப்பார்த்தால் வேலைகள் பட்டியலிடப்படுகினறன.கூகுலில் வரும் முடிவுகளை போலவே வரிசையாக வேலை வாய்ப்புகள் இடம்பெறுகின்றன.

அதன் பிறகு முடிவுகளை பல்வேறு வகைகளில் மாற்றியமைத்து பொருத்தமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்புகள் ,ஒரு வாரம் முன வெளியானவை என்றும் சுருக்கி கொள்ளலாம்.

வேலைக்கான பதவியின் தன்மை குறித்தும் தேடலை அமைத்து கொள்ளலாம்.அதே போல எந்த நகரில் வேலை தேவை என்றும் குறிப்பிட்டு தேடலாம். வீட்டிலிருந்து எவ்வலவு அருகாமையில் இருக்க வேண்டும் என்று கூட் அகுறிப்பிடும் வசதி இருக்கிறது.

முழு நேரமா,பகுதி நேரமா என்றும் குறிப்பிட்டு தேடலாம்.கல்வித்த்குதியின் அடிப்படையிலும் தேடலை பட்டை தீட்டிக்கொள்ளலாம்.

மேலும் மேம்பட்ட தேடல் வசதியை பயன்படுத்தி எந்த வகையான வேலை எந்த கம்பெனியில் எந்த அம்சங்களோடு வேண்டும் என்றும் தேட முடியும்.

எந்த வேலை தேவை என்பதில் குழப்பம் இருந்தால் இந்த தளத்தில் பிரபலாமாக உள்ள தேடல் பதங்களை கிளிக் செய்து இப்போது வேலை வாய்ப்பு சந்தையில் என்ன டிரென்ட் என்றும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

சரியான வேலை வாய்ப்புக்காக பல்வேறு தளங்களுக்கு சென்று அல்லாடாமல் ஒரே தளத்தில் அழகாக வேலை வாய்ப்பை தேடலாம் என்பதோடு உறுப்பினராக பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

இந்தியர்களுக்கு மட்டும் அல்ல இந்தியாவில் குடிபெயர இருப்பவர்களும் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில்  பணியாற்றி விட்டு தாயகம் திரும்பும் எண்ணம் கொண்டவர்களும் இதனை பயன்படுத்தலாம்.

இணையதள முகவரி;    http://www.jobsearch.in

SKYPE உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை

கவனிக்க வேண்டியவை - ஸ்கைப் உபயோகிக்கும் போது

இணையத்தில் அரட்டையில் தெளிவான வாய்ஸ் ஐ பெறுவதற்காகவும் இன்னும் சில காரணங்களுக்காகவும் மிகவும் பிரபலமான ஸ்கைப் எனும் மென்பொருளை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.

மேம்படுத்தப்பட்ட ஸ்கைப் மென்பொருளின் வடிவம் அதில் இருக்கின்ற ஏராளாமான வசதிகள் பலருக்கு எரிச்சலைத்தரும்.

அத்துடன் ஸ்கைப்பை கையாள்வதற்கும் இலகுவாக இருப்பதில்லை.

என்றாலும் நிறுவப்படும்போது டிவோல்ட்டாக இருக்கும் ஆப்ஸன்கள் சிலவற்றை மாற்றி அமைப்பதன் மூலம் ஸ்கைப் மென்பொருளை பயன்படுத்துவதற்கு இலகுவாகவும் தேவையல்லாத ஆப்ஸன்கள் அற்றதாகவும் மாற்றமுடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.



அவற்றில் சில இங்கே

1. View வில் எப்போதும் Contatcts என்பதை மட்டும் தேர்வு செய்யுங்கள்.

2. Tools - options  சென்று general settings இல் Start Skype when I start Windows  என்பதை Unchek  செய்யுங்கள்

3. Tools - options  சென்று general settings இல் visual style of the window  இல் Classic  Windows என்பதை தேர்வு செய்யுங்கள்

4. Tools - options  சென்று Sounds  இல் Mute all Sounds என்பதை கிளிக் செய்யுங்கள் இதன் மூலம் ஸ்கைப்பினால் எழுப்பப்படும் சத்தங்கள் அனைத்தும் நிறுத்தப்படும்.

5. Tools - options  சென்று Alerts & messages இல் இருக்கும் இரண்டையும் தேர்வில் இருந்து நீக்கிவிடுங்கள் (unchek)

6. Tools - options  சென்று Advanced settings இல் keep skype in the taskbar while I m signed in என்பதை unchek செய்து விடலாம்.

இந்த 6 ஆப்ஸன்களில் மாற்றம் செய்வதன் மூலம் இடையூறில்லாத ஸ்கைப் அனுபவத்தை நிச்சயம் பெற முடியும்.

இதைவிடவும் வேறு வழிகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அவற்றை இங்கே தெரிவிக்கலாம்.

முத்தான மூன்று தளங்கள் புகைப்பட வடிவமைப்புக்கு

முத்தான மூன்று தளங்கள் புகைப்பட வடிவமைப்புக்கு
எல்லோருக்கும் தங்கள் புகைப்படங்கள் அழகாக தோன்ற வேண்டும் என்றும் மற்றவர்களை அது கவர கூடியதாய் அமைய வேண்டும் என்று எண்ணம் உள்ளது.

புகைப்படங்களை மற்றவர்களை கவரும் வகையில்  வடிவமைப்பிற்கு ஏராளமான தளங்கள் உள்ளன அவற்றில் இருந்து சிறந்த 3 இணைய தளங்கள் இங்கே பதிவு செய்துள்ளேன். 

1. LOONA PIX.COM

http://www.loonapix.com/

இதில் புகைப்படங்களை பல வழிகளில் வடிவமைக்கலாம். போட்டோ பிரேம் , அனிமேஷன் ,காலன்டர் பின்னணியிலும் வடிவமைக்கலாம். 

இத்தளத்தில் வடிவமைக்க்கப்படும் புகைப்படங்களை உங்கள்
நண்பர்களுக்கு இமெயில் மூலம் இததலத்தில் இருந்தே செய்யலாம். 


2.LUNA PIC 
http://www.lunapic.com/

 இந்த தளமானது ஒரு ஆன்லைன் போட்டோ எடிடர் ஆக காணப்படுகிறது. இத்தளத்தில் பின்வரும் வசதிகள் காணப்படுகின்றன.
edit your profile picture for face book
animation
rotating cube
add text , இவற்றுடன் பெய்ண்டிங் வசதியும் உண்டு.


3. FLAUNT  R 
http://www.flauntr.com/

 இந்த தளத்தில் 1000 க்கு மேற்ப்பட்ட போட்டோ எவேக்ட்ஸ்
 பின்வரும் தலைப்புக்களில் தரப்பட்டுள்ளன ;
 styl R , edit R , picas R , text R , profile R இந்த தளத்தில் இருந்து 30 க்கு   மேற்ப்பட்ட சமூக வலைத்தளங்களுக்கான profile போட்டோ வடிவமைக்க முடியும்.
   

இணையத்தில் தொல்லை தரும் விளம்பரங்களை தடுக்க ...

அட் ஓன்ஸ் - இணையத்தில் தொல்லை தரும் விளம்பரங்களை தடுக்க ...

இணையத்தில் உலாவருகையில் தினமும்
ஏராளாமான விளம்பரங்களை காணலாம்.

சில இணையத்தளங்களில் இருக்கும் விளம்பரங்கள் பாப் அப் அட்ஸ் போன்றவற்றின் மூலம் தோன்றி மறைந்து இணையத்தை சரியாக பார்வையிட விடாமல் தொல்லை தருவதாக இருக்கும். இவற்றை தடுப்பது மிக எளிது.

இதற்காக நீங்கள் பயன்படுத்தும் உலாவியை தேர்ந்தெடுத்து அதற்கான ad blocker ஐ நிறுவி விட்டால் சரி.

உலாவிகளும் அதற்குரிய ad blocker ஆட் ஓன்களும் இங்கே.

Chrome - https://chrome.google.com/webstore/detail/gighmmpiobklfepjocnamgkkbiglidom

Firefox - https://addons.mozilla.org/en-US/firefox/addon/adblock-plus/

Safari  - http://safariadblock.com/

Internet Explorer. - http://simple-adblock.com/

இணையத்தில் உலாவும் போது நம் தகவல்கள் திருடப்படலாம் அதனை தடுக்கும் முறைகள்

இணையத்தில் உலாவும் போது நம் தகவல்கள் திருடப்படலாம் அதனை தடுக்கும் முறைகள்

இணையத்தில் நாம் உலாவும் போது நம்முடைய தகவல்கள் நமக்கு தெரியாமல் சேகரிக்கப்படுகின்றன .நாம் எந்தெந்த தளங்களுக்கு செல்கிறோம் நாம் தேடும் தகவல்கள் என்னென்ன ? போன்றவை கண்டறியப்படுகிறது .இதனால் நம்முடைய privacy பாதிக்கப்படுகிறது .


இது எப்படி நடக்கிறது எப்படி தடுக்கலாம் என்று பார்க்கலாம்


 நம்முடைய தகவல்கள் சேகரிக்கப்படும் முறைகள் பற்றி :
 
நமக்கு பிடித்த தகவல் இருந்தால் அந்த  தளத்தில் உள்ள facebook like button அல்லது ட்விட்டர் அல்லது buzz போன்றவற்றின் மூலம் share அல்லது like button மூலம் நண்பர்களுடன் பகிர்கின்றோம் .

இவாறு பகிரும் போது நாம் பயன்படுத்தும் browser இல் உள்ள cookies  வழியே  social media tool (face book button) உதவியுடன்  facebook,google போன்றவை நம்முடைய இணையதள பயன்பாட்டை trace செய்கின்றன .

இவ்வாறு trace செய்தவத்தால் அவர்களுக்கு என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு இதோ பதில் ...

நாம் google இல் நமக்கு தேவையான தகவல்களை தேடும் போது நம்முடைய தேடலுக்கு ஏற்றவாறு google விளம்பரங்களை கொடுத்து அதன் வருவாயை அதிகரித்துக்கொள்ளும் 

மேலும் உதாரணத்திற்குjeiguna.blogspot என்பதனை google இல் முதலில் தேடும் பொது jei ,jeitha jeicode, jeikkalam  என காட்டும் பிறகு நான்கைந்து முறைjeiguna.blogspot என தேடி browser இல் உள்ள cookies களை அழித்துவிட்டாலும் நமது தேடல் தகவல்களை வைத்து முதலிலேயே jeiguna.blogspot  என நாளடைவில் நம்முடைய IP வைத்து நமக்கேற்ப காட்டத்தொடங்கும் .
மேற்க்கண்டவற்றால் பெரிய பாதிப்புகள் இல்லை ஆனால் சில தளங்கள்  ( 3rd party websites ) தங்கள் தளம் மற்றும் பொருட்களை விளம்பரப்படுத்த pop-up விளம்பரங்கள் மூலம் browser cookies வழியே தகவல்களை track script வழியே சேகரித்துவிடுகின்றனர்.

இவ்வாறு track script போன்றவற்றை   உங்கள் browser தடை செய்யும் வகையில் பயன்படுத்தவேண்டும் முக்கியமாக facebook தளத்தில் இருந்து பிற தளங்களுக்கு சென்று மீண்டும் facebook தளத்திற்கு செல்லும்போது இந்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன .இதனை தடுக்க உங்கள் browser இல் உள்ள facebook cookies களை delete செய்தபின் பிற தளங்களுக்கு செல்லவேண்டும் .
         
இதனால் பிற தளங்களில் உள்ள track script மீண்டும் facebook செல்லும் போது அந்த தள like button உங்களுக்கு தெரியாமலே like என்று நீங்கள் கொடுத்ததை போல மாற்றிவிடும் வகையில் தயார் செய்திருப்பார்கள் . இன்னும் வைரஸ் ,fishing என பல பிரச்சினைகள் வந்துசேரும் .
 

 எனவே மறக்காமல் facebook cookies களை delete செய்து பிற தளங்களுக்கு செல்லுங்கள். இன்னும் அதிகமாக பாதுகாப்பாக இருக்க உங்கள் IP யை மாற்றிக்கொள்ளுங்கள் அடிக்கடி . இதற்கென பல வழிகள் உள்ளன . பல இலவச software கள் உள்ளன . அவற்றை அடுத்தடுத்து பார்க்கலாம் .முக்கியமாக facebook, twitter போன்றவற்றில் உங்கள் கைப்பேசி ஏன் இருந்தால் அதனை முதலில் நீக்கிவிடுங்கள் .mail id போதுமானது. browser கள் இணையதள பயன்பாட்டிற்கு உதவினாலும் இது போன்ற சில வேலைகளுக்கும் தவறாக  பயன்படுத்தப்படுகின்றன.எனவே நாம் தான் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தவேண்டும். 

இணையதளம் எந்த அளவிற்கு நம் வேலைகளை எளிதாக்கிவிட்டதோ அந்த அளவுக்கு பாதுகாப்பையும் கேள்விக்குறி ஆக்கிவிடும் நாம் பாதுகாப்பாக செயல்படாவிட்டால் .

"சைரஸ் (Scirus)'. . . அறிவியல் தகவல்களுக்கு ஒரு தேடுதளம்

"சைரஸ் (Scirus)'. . . அறிவியல் தகவல்களுக்கு ஒரு தேடுதளம்




தேடலுக்கான தளம் என்றால், நம் நினைவில் முதலில் நிற்பது கூகுள் தேடுதளம் மட்டுமே. ஆனால் அறிவியல் தகவல்கள் தேடுவதற்கு மட்டும் என ஓர் தளம், கூகுள் தேடல் தளத்தைக் காட்டிலும் முன்னணி இடம் பெற்று இயங்குகிறது. 

இதன் பெயர் "சைரஸ் (Scirus)'. இயங்கும் முகவரி http://www.scirus.com

கூகுள் தளத்திற்கும் மேலாக இதனை நீங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களை, இந்த தளம் கொண்டுள்ள http://www.scirus.com/srsapp/aboutus/ என்ற இணையப் பக்கத்தில் காணவும்.

இந்த தேடுதல் தளம் கொண்டுள்ள முகப்புப் பக்கத்தில், ஏறத்தாழ 41 கோடி தளங்கள் உள்ளன. தேடும்போது, முக்கிய சொல், தலைப்பு அல்லது அறிவியல் கலைச் சொல் என ஏதேனும் ஒன்றைத் தரலாம். அந்த தலைப்பு அல்லது சொல் குறித்த தளங்கள் மட்டுமின்றி, பல முக்கிய கட்டுரைகளையும் இந்த தளம் சுட்டிக் காட்டுகிறது.

இதனுடைய ஒரு சிறப்பம்சம் என்னவெனில், அறிவியல் அல்லாத மற்ற தளங்களை இந்த தேடல் தளமே ஒதுக்கிவிடுகிறது. எனவே தொடர்பு இல்லாத மற்ற தளங்களின் லிங்க் மீது கிளிக் செய்து, அவற்றைத் தேவையின்றி இறக்கி நேரத்தை வீணடிக்கும் வேலை இங்கு எழாது.

இந்த தளம் சுட்டிக் காட்டும் தளங்கள் அனைத்தும், 

1) அறிவியல் சார்ந்த, தொழில் நுட்பம் அல்லது மருத்துவம் சார்ந்த தகவல்கள் உள்ள தளங்களாக இருக்கும்.

2)அண்மைக் காலத்தில் அந்த அறிவியல் பிரிவில் வெளியான அறிக்கைகள், வல்லுநர்களின் கட்டுரைகள், காப்புரிமை பெற்ற தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள், ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வரும் ஆய்வு இதழ்கள் ஆகியவற்றைக் காட்டும் இணைய தளங்களுக்கான தொடர்புகளாக இருக்கும்.

3)ஆய்வு மேற்கொள்பவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கான தனிப்பட்ட தகவல்களைக் காட்டும் தளங்களாக இருக்கும்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக, அறிவியல் தேடல்களுக்கான இணைய தளத்திற்கான விருதை இந்த தளம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தளத்தின் மூலம் குறிப்பிட்ட பொருள் குறித்த தேடல் மட்டுமின்றி, கட்டுரை எழுதியோர், கட்டுரைத் தலைப்பு, அதனை வெளியிட்ட ஆய்வு இதழ் ஆகியவற்றின் அடிப்படையிலும் தேடலாம். நாட்கள் அடிப்படை யிலும் தேடலை மேற்கொள்ளலாம்.

தளங்கள் மட்டுமின்றி, பல்வேறு ஆய்வு இதழ்களில் வெளியான கோடிக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் தாங்கியுள்ள தளங்களையும், இந்த தேடல் தளம் நமக்குக் காட்டுகிறது.

அறிவியல் அடிப்படையில் இயங்கும் இன்றைய உலகில் நாம் அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய தளம் இது.