1. அகத்திக்கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும். இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.
2. கொத்தமல்லியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்கு மென்று தின்றால் உடல் சூடு குறையும். நன்கு பசி எடுக்கும்.
3. வெங்காயத் தாளை அரைத்து, அதில் வெந்தயத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
4. வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல...் சூடு குறையும்.
5.கல்யாண முருங்கை இலையுடன் ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், உடல் சூடு, வெள்ளைப்படுதல், வெட்டைச்சூடு போன்ற குறைபாடுகள் தீரும்.
6. கொடிப்பசலைக் கீரையை உளுந்து ஊற வைத்த தண்ணீர் சேர்த்து அரைத்துக் குடித்தால், உடல் சூடு, வெட்டைச் சூடு வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.
7. கொடிப்பசலைக் கீரைக் கீரையை அரைத்து தலையில் கட்டிக்கொண்டால், வெட்டைச்சூடு, கண் எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் தீரும்.
8. குப்பைக் கீரையுடன் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
9. கானாம் வாழைக் கீரையைக் கைப்பிடி அளவு அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். அடிக்கடி சாப்பிட்டால் வெட்டைச் சூடு குறையும்.
10. பொடுதலைக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு, குடல் புண் ஆகியவை தீரும்.
11. புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தீரும்.
12. பிண்ணாக்குக் கீரைச் சாறில் நெல்லிக்காய், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, பிறகு கால வைத்துப் பொடியாக்கி தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
13. முக்குளிக் கீரையுடன் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
14. முருங்கைக்கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும்.பொடுகுப் பிரச்னையும் இருக்காது.
15. பாற்சொரிக்கீரை, முளைக்கீரை இரண்டையும் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். See More
No comments:
Post a Comment