For Read Your Language click Translate

05 May 2014

திருப்பதி கோவில்லே ஏன் கூட்டம் எப்போவும், அலைமோதுது

        


திருப்பதியின்மகோன்னதம் !
சாளக்கிராமம் என்னும் கல் கிடைப்பது மிக அரிதானது, இந்தக்கல்லில் சக்கரம் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட கற்களை  கோவில்களில் பூஜையில் வைத்து வணங்குவார்கள்.
இந்த சாளக் கிராமம் நேபாளம்முக்திநாத்கோவில்அருகில்கண்டகிநதியில்மட்டுமேஉருவாகுகிறது. இதில்தான்சுவாமிகுடியிருப்பதாகஐதீகம். பெருமாள் கோவில்களில் இதை சாளக் கிராமம் என்றும், சிவன் கோவில்களில் பானலிங்கம் என்றும், விநாயகர் கோவிலில் சோனபத்ரம் என்றும் அழைக்கிறார்கள்.
இந்த சாளக் கிராமத்தில் பெருமாளின் அத்தனை அவதாரங்களும் அடங்கி உள்ளதாம். பக்தர்கள் இறைவனை வேண்டி துளசி செடியை கண்டகி ஆற்றில் போட்டு கைகளை விரித்து தண்ணீரில் மூழ்கியபடி நின்றால் தங்களுக்கு இறைவனின் அருள்படி சாளக் கிராமம் கிடைக்கும் என்கிறார்கள்.
நம் வீட்டிலும் இந்த சாள கிராமத்தை வைத்து வழிபடலாம். 12 சாளக் கிராமங்கள் இருந்தால் அந்த வீட்டில் பெருமாளே குடியேறி இருப்பதாக ஐதீகம். திருப்பதியின்ஏழுமலைகளும்ராட்சதசாளக்கிராமக்கற்களே. இம்மலையில்எந்தஇடத்தைவெட்டிப்பார்த்தாலும்வெட்டப்பட்டஇடங்களில்சக்கரஅமைப்புஇருப்பதைக்காணமுடியும்.சிலாதோரணம்பற்றி, நமதுபழையகட்டுரை , ஞாபத்திற்குவருகிறதா?
சாளக்கிராமம் கல்லை வெட்டிப் பார்த்தால், அதன் உள்ளும் சக்கர அமைப்பு இருப்பதைக் காணலாம். திருப்பதி மலையேறும் போது, சாலை போடுவதற்கு ஆங்காங்கே மலை வெட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இந்த வெட்டுகளில் எல்லாம் சக்கரம் அமைப்பு அமைந்திருப்பதையும் காணலாம்.
ஆக, திருமலையே ஒரு சாளகிராமக்கல் வடிவமாக அமைந்து இருப்பதால் மிகவும் சக்தி படைத்தாக அது  கருதப்படுகிறது.அதன் காரணமாகவே அது  உலக  மக்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. இப்படிப்பட்ட ஒரு  புண்ணிய ஸ்தலமாக அது இருப்பதால், மக்கள்  மீண்டும், மீண்டும் இந்த மலையை நாடி வந்து ஆனந்தம் அடைக்கிறார்கள்.
திருமலையானதுஒருசாளகிராமக்கல்என்பதால்தான்இதன்புனிதம்கருதிஸ்ரீராமானுஜர்மலைமேல்தன்பாதம்பதித்துச்செல்லவிரும்பவில்லை. அதனாலேயேஅவர்மலையேறிவெங்கடாசலபதியைத்தரிசிக்காமலேயேஇருந்தார். பின்இறுதியில்தன்முழங்கால்களைப்பதித்துஊர்ந்துஊர்ந்தேதிருமலைஏறிவெங்கடாசலதியைத்தரிசித்தார்

No comments:

Post a Comment