For Read Your Language click Translate

09 May 2014

பொன் வண்டு

Photo: Thanks: Subash Krishnasamy Sir,
பொன்வண்டு
============
I MISS U பொன்வண்டு :(

இதுதான் பொன் வண்டு. கொங்கு நாட்டில் இதைப் பொன்னாம்பூச்சி என்று சொல்வார்கள். பசுமைநிறத்துடன் பலாக்கொட்டை அளவில் இருக்கும். மற்றொரு இனம் உடல் சிவப்பாகவும் தலைமட்டும் பசுமையாகவும் உருவத்தில் பெரியதாகவும் இருக்கும். இதை மலைப் பொன்னாம் பூச்சி என்பார்கள்.

பூச்சி இனங்களிலேயே அருவருப்பு இல்லாமல் சர்வசாதாரணமாகப் பிடித்து விளையாடக்கூடியது இந்தப் பொன்வண்டு.

அதைத் திருப்பி மல்லாக்கப் போட்டுவிட்டால் இறக்கைகளை அடித்து ரீங்காரமிட்டபடி குட்டிக்கரணம்போட்டு சமநிலைக்கு வருவது பார்க்க அழகாக இருக்கும்.

நான் சிறுவயதில் மழைக்காலங்களில் இவற்றைப்பிடித்துத் தீப்பெட்டிகளில் அடைத்துவைத்து விளையாடுவேன். முட்டைகள்கூட வைக்கும்.

இவை பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் வெள்வேல் மரங்களில் அதன் இலைகளைத் தின்று வாழும்.

ஆனால் சமீப காலங்களில் இது கண்ணில் காண்பதே அரிதாகிவிட்டது. எனது பேரனுக்கு விளையாடக் கொடுப்பதற்காக வெள்வேல மரங்களில் தேடிப் பார்த்துக் கிடைக்காமல் இப்போது அந்த முயற்சியைக்கூடக் கைவிட்டுவிட்டேன். 

வெள்வேல் மரங்களும் மிக அரிதாகிவிட்டன! அவை சுத்தமாகக் காணாமல் போய்விட்டால் அதன் பின் பொன்வண்டுகளின் அழிவு நிச்சயமாகிவிடும்.

ரசாயன உரங்ளையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தத் துவங்கியபின்பு நாம் இழந்துவரும் உயிரினங்களில் இந்தப் பொன்வண்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்! யாரேனும் பார்த்திருந்தால் சொல்லுங்கள் காதிலாவது கேட்டுக்கொள்கிறேன்!..... —

//Subash Krishnasamy இளமையில் நான் புஞ்சை நிலத்தில் மழைக்காலத்தில் உழவு செய்யும்போது வெள்வேல் மரத்தின் அருகில் வரும்போது மேழியை ஒரு கையால் பிடித்துக்கொண்டே சாட்டையால் ஒரு வீச்சு வீசினால் அந்த அதிர்வில் அங்கு ஒட்டிக் கொண்டிருக்கும் பொன்வண்டு கீழே விழும் . அதை எடுத்துப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்கள் மகிழ்வதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கும்!....ஒ!... அந்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை! எனது பேரனும் ஏன் மகனும்கூட அதை இழந்துவிட்டார்களே!...
4 hours ago · Unlike · 4//

இதுதான் பொன் வண்டு. கொங்கு நாட்டில் இதைப் பொன்னாம்பூச்சி என்று சொல்வார்கள். பசுமைநிறத்துடன் பலாக்கொட்டை அளவில் இருக்கும். மற்றொரு இனம் உடல் சிவப்பாகவும் தலைமட்டும் ...பசுமையாகவும் உருவத்தில் பெரியதாகவும் இருக்கும். இதை மலைப் பொன்னாம் பூச்சி என்பார்கள்.

பூச்சி இனங்களிலேயே அருவருப்பு இல்லாமல் சர்வசாதாரணமாகப் பிடித்து விளையாடக்கூடியது இந்தப் பொன்வண்டு.

அதைத் திருப்பி மல்லாக்கப் போட்டுவிட்டால் இறக்கைகளை அடித்து ரீங்காரமிட்டபடி குட்டிக்கரணம்போட்டு சமநிலைக்கு வருவது பார்க்க அழகாக இருக்கும்.

நான் சிறுவயதில் மழைக்காலங்களில் இவற்றைப்பிடித்துத் தீப்பெட்டிகளில் அடைத்துவைத்து விளையாடுவேன். முட்டைகள்கூட வைக்கும்.

இவை பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் வெள்வேல் மரங்களில் அதன் இலைகளைத் தின்று வாழும்.

ஆனால் சமீப காலங்களில் இது கண்ணில் காண்பதே அரிதாகிவிட்டது. எனது பேரனுக்கு விளையாடக் கொடுப்பதற்காக வெள்வேல மரங்களில் தேடிப் பார்த்துக் கிடைக்காமல் இப்போது அந்த முயற்சியைக்கூடக் கைவிட்டுவிட்டேன்.

வெள்வேல் மரங்களும் மிக அரிதாகிவிட்டன! அவை சுத்தமாகக் காணாமல் போய்விட்டால் அதன் பின் பொன்வண்டுகளின் அழிவு நிச்சயமாகிவிடும்.

ரசாயன உரங்ளையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தத் துவங்கியபின்பு நாம் இழந்துவரும் உயிரினங்களில் இந்தப் பொன்வண்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்! யாரேனும் பார்த்திருந்தால் சொல்லுங்கள் காதிலாவது கேட்டுக்கொள்கிறேன்!..... —

//Subash Krishnasamy இளமையில் நான் புஞ்சை நிலத்தில் மழைக்காலத்தில் உழவு செய்யும்போது வெள்வேல் மரத்தின் அருகில் வரும்போது மேழியை ஒரு கையால் பிடித்துக்கொண்டே சாட்டையால் ஒரு வீச்சு வீசினால் அந்த அதிர்வில் அங்கு ஒட்டிக் கொண்டிருக்கும் பொன்வண்டு கீழே விழும் . அதை எடுத்துப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்கள் மகிழ்வதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கும்!....ஒ!... அந்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை! எனது பேரனும் ஏன் மகனும்கூட அதை இழந்துவிட்டார்களே!...

No comments:

Post a Comment