பண்டைய தமிழர்களின் கைவிரல் கணிதம்! – அதிசய ஆச்சரியத் தகவல்
Posted on May 15, 2014 by vidhai2virutcham
பண்டைய தமிழர்களின் கைவிரல் கணிதம்
தமி ழர்கள் கொண்டிருந்தனர்.
அவர்கள் பயன்படுத்திய அலகுகளுள் விரற்கடை, சாண் மற்றும்
முழம் ஆகியவை பரவலானவை. ஒவ் வொரு மனிதருக்கும் உடல் அளவுகள் மா றுபடும் என்பதால் விரற்கடை, சாண் மற் றும் முழம் ஆகிய அலகுகள் குறிக்கும் தூரம் அளக்கும் ஆட்களைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது என்றாலும் சாதாரண மக்களும் எளிதாக பயன்படுத் தக்கூடிய ஒரு அளவை முறையாக உள் ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு மனிதரின் கையில் அமைந்துள்ள ஒரு விரலின் அகலம், ஒரு விரல் அல்லது விரற்கடை அளாகும். நமது வலது கையில் கட் டை விரலை ம டித்துக் கொண்டு மற்ற நான்கு விரல்களையும் ஒட்டினாற்போல
வைத்த நிலையில் ஆட்காட்டி விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடைப்படும் அகலப்போக்கான அளவு நான்கு விரற் கடை என ப்படும்.
இருபத்து நான்கு விரல் கொண்ட து ஒரு முழம் ஆகும். விரல் பன்னி ரண்டு கொண்டது ஒரு சாண். சாண் இரண்டு கொண்டது ஒரு முழும்.
1 விரல் = 1/24 முழம் = 1/24* 18 அங்குலம் = 3/4 அங்குலம்
1 விரல் = 1/12 சாண் = 1/12* 9 அங்குலம் = 3/4 அங்குலம்
No comments:
Post a Comment