மிளகின் மதிப்பு
சில பழைய தமிழ் வரலாற்றுப் புத்தகங்களில் அவற்றின் ஆசிரியர்கள் சில வெளிநாட்டு ஆட்களின் பெயர்களைத் தமிழில் எழுதியிருப்பார்கள்.
ஒரு நூலில் பார்த்தேன்.... கொசுமசு என்று இருந்தது. Cosmas என்பதுதான் இப்படியாகியிருக்கிறது. Hippocrates என்னும் பெயர் கிப்போக்கிரிட்டசு என்று காணப்படுகிறது.
இன்னொரு நூலில் - Herodotus என்பதை கெரத்தோத்தசு என்று ஆசிரியர் எழுதியுள்ளார். Tiberius தைபேரியசு ஆகியிருக்கிறது.
கிப்போக்கிரிட்டசு என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது. அவர் இருந்த காலத்தில் சேரநாட்டிலிருந்து ரோம் பேரரசுக்கு ஏராளமாக மிளகு கொண்டுசெல்லப்பட்டது.
ஒரு கீலோ மிளகு அங்கு முப்பத்தாறு வெள்ளி டெனாரியஸ்-Denarius நாணயத்துக்கு விற்கப்பட்டது. இது பிளினி - Pliny சொன்னது.
தமிழகத்தில் குறைந்த விலைக்கு வாங்கி, ரோமாவில் அவ்வளவு விலைக்கு விற்றார்கள்.
ஒரு டெனாரியஸ் நான்கு கிராம் எடையுள்ளது.
இன்றைய மதிப்பு மூன்றுஞ்சில்லறை யூஎஸ் டாலர்.
அப்படியானால் ஒரு கீலோ மிளகின் விலை இன்றைய மதிப்புக்கு நூற்றுப் பத்து யூஎஸ் டாலர் ஆகிறது.
இந்த வெள்ளி டெனாரியஸ் நாணயத்துக்கு ஒரு தரநிர்ணயம் இருந்தது. அதாவது Standard என்பார்கள்.
சந்தையில் ஒரு டெனாரியஸ் என்பது பத்து கழுதைகளுக்கு சமம். அதாவது ஒரு டெனாரியஸால் பத்து கழுதைகளை வாங்கமுடியும்.
அதனால்தான் அதற்கு டெனாரியஸ் என்று பெயர் ஏற்பட்டது. டெனா - பத்து.
தமிழகத்துடன் மிக மிக விறுவிறுப்பாக வர்த்தகம் செய்துகொண்டிருந்த காலத்தில் ஒரு டெனாரியஸ் பதினாறு கழுதைகளை வாங்கக்கூடியதாக இருந்தது.
ஆரம்பத்தில் நாணய மதிப்பை நிர்ணயிப்பதற்குப் பசுக்களைத்தான் வைத்திருந்தார்கள்.
Pecunia என்பது இலத்தீனில் பணத்தைக் குறிக்கும்.
Pecuniary matters என்ற ஆங்கில சொற்றொடர் இதிலிருந்து வந்ததுதான்.
Pecu என்பது இலத்தீனில் பசுவைக் குறிக்கும்.
ராஜஸ்தானிலிருந்து ஸ்வீடனுக்கு ஆரியர்கள் சென்றபோது இந்த சொற்களையெல்லாம் எடுத்துச் சென்றார்கள் என்று தற்கால இண்டிக் ஹிந்துத்வா ஆட்கள் சொல்லக்கூடும்.
இது இப்பிடியா, அது அப்பிடியா என்பது நம்ம ஆட்கள் எந்தப் பக்கம் சார்ந்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்தது.
கலி·போர்னியா பாடப்புத்தகம் மாதிரி.
No comments:
Post a Comment