யோகம்
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது கிடைத்த அமுதத்தை மும்மூர்த்திகளில் ஒருவரான விஸ்ணு மோகினி வடிவெடுத்து, தேவர்களிற்கு மட்டும் அமுதம் கிடைக்கும் விதமாக அமுதத்தை பகிர்ந்தளித்துக் கொண்டிருந்தார். இந்த சூழ்ச்சியினை யூகித்துக் கொண்ட சுவர்பானு என்ற அசுர குமாரன் தானும் தேவர்கள் போல் உருமாறி மோகினியிடம் அமுதம் பெற்று உண்டான். இதைக் கண்ட சூரியனும், சந்திரனும் மோகினிக்கு அசுரகுமாரனை அடையாளம் காட்டினர். மோகினியும் தன் கையிலிருந்த அகப்பையினால் சுவர்பானுவின் தலையில் அடிக்க தலை வேறு உடல் வேறு ஆகிப் போனது. அமுதம் உண்ட காரணத்தினால் சுவர்பானுவிற்கு மரணம் சம்பவிக்கவில்லை. மாறாக தலையுள்ள பகுதியின் கீழ் பாம்பு உடல் வந்தது. அசுர உடலின் மேல் ஐந்து தலை பாம்பின் தலை வந்தது. இவர்கள் பிரம்ம தேவரை வேண்டித் தவமிருந்து நவக்கிரக அந்தஸ்து பெற்று முறையே ராகு, கேது ஆனார்கள்.
பிரம்ம தேவரினால் ராகு கேதுக்களிற்கு அளிக்கப்பட்ட வரங்கள்:-1.) அறுபட்ட இரண்டு உடற்கூறுகளையும் சமஇடையில் வைத்து என்றென்றும், எக்காலத்திலும், எக்காரணத்தினாலும் பிரிந்தோ அல்லது இடம் விட்டு இடம் விலகிப் போகாமலும் இருக்கவும்,2.) சூரிய சந்திரர்களிற்கு நிகராக நவக்கிரக அந்தஸ்து பெற்று அவர்கள் வலம் வரும் திசைக்கு எதிர்திசையில் அதாவது அப்பிரத்சணமாக அவர்கள் கண்ணெதிரிலேயே சஞ்சாரம் செய்யவும்,3.) சிரசு உள்ள பகுதி ராகு என்றும் உடல் உள்ள பகுதி கேது என்றும் பெயர் பெறவும்,4.) சொந்த வீடு மற்றும் ஆட்சி பலம் இல்லாவிட்டாலும் எந்த ராசி வீட்டிலிருந்தாலும் அந்த வீட்டிற்கேற்ப உங்கள் செயலிருக்கவும்,5.) அனைத்து கிரகங்களின் இயல்புகளையும் கவர்ந்து, உங்கள் இயல்பிற்கேற்ப பலன் தரக்கூடிய வல்லமையையும்,6.) நிழல் போல் தொடர்ந்து சென்று அவரவர் பாவ புண்ணியங்களிற்கு ஏற்ப பலன் தரும் தன்மையையும ம் கிரகணங்கள் மூலம் பிடித்து பழிவாங்குகின்றனர். அதாவது ஆண்டிற்கு இரண்டு முறை சூரிய சந்திரர்கள் சுமார் ஒன்றரை மணிநேரம் சர்ப்ப தோசத்தினால் தங்கள் ஒளியை இழந்து மங்கிப்போகின்றனர். சூரிய சந்திரர்களிற்கே இந்த நிலையென்றால் சாதாரண மனிதர்கள் ஆகிய எமக்கு சர்ப்ப தோசத்தின் பாதிப்பு எப்படியிருக்கம் என்று யோசித்துப் பாருங்கள். நவக்கிரகங்களில் ராகு கேதுக்கள் மட்டுமே அசுரர்கள். மற்றய ஏழுபேரும் தேவர்கள். எனவே இவர்கள் குணம் மிகக் கொடியதாக இருப்பது இயல்பே. ஜோதிடத்தில் வக்கிர கதி அல்லது வக்கிரம் எனச் சொல்லப்படும் அனேகமாக தீய பலனைத் தரக்கூடிய அமைப்பு இவர்களிற்கும் சூரிய சந்திரர்களிற்கும் மட்டுமே கிடையாது. சூரியனினால் ஏற்படும் அஸ்தங்க தோசம் இவர்களிற்கு கிடையாது. அஸ்தங்க தோசம் அடையும் கிரகம் தனது செயலை செய்ய முடியாத நிலையாகும். இவற்றிலிருந்து ராகு கேதுக்களின் வலிமை என்ன என்பது புரிந்திருக்கும்.
ராகு கேதுவினால் உண்டாகும் சுப அசுப யோகங்கள்:-
1). காலசர்ப்ப யோகம்:- ராகு, கேதுக்களினால் ஏற்படும் தீய யோகங்களில் முதன்மையானதாக கருதப்படுவது இந்த யோகமாகும். ராகு, கேதுகளிற்கிடையில் லக்னமும் மற்றய ஏழு கிரகங்களும் அமையும் போது இந்த யோகம் ஏற்படுகிறது. ராகுவிற்கு இடஞ்சுழியாக அமையும் போது இது மிகவும் கொடிய தோசமாகிறது. 32 வயதிற்கு மேல் இந்த யோகம் எந்த பாதிப்பையும் தராது என ஜோதிட விதிகள் கூறுகின்றன. ஆனாலும் அனுபவத்தில் அது வாழ்நாள் பூராவும் பாதிப்பைத் தருகிறது எனக் கூறலாம். இந்த தோசமானது ஒருவரிற்கு எந்த விதமான முன்னேற்றமும் வாழ்க்கையில் கிடைக்கவிடாது. மற்றவர்களின் உதவி கிடைப்பது மிகவும் கடினம். எதிர்பார்த்தது எதிர்பார்த்தபடி நடக்காது. வாழ்க்கையின் பெரும் பகுதி ஏமாற்றமாகவே இருக்கும்.
2). பந்தன யோகம்:-
லக்னாதிபதியும் ஆறாமிடத்ததிபதியும் ராகு அல்லது கேதுவுடன் கூடி கேந்திரத்தில் அல்லது திரிகோணத்தில் உள்ள ஜாதகர் இந்த யோகத்திற்கு ஆளாகுகிறார்.இந்த அமைப்புள்ள ஜாதகர் சிறைப்பட்டு சித்திரவதை அனுபவிப்பார் அல்லது வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்.
3). அகால மரண யோகம்:-
ராகு சந்திரனோடு கூடி கிரகண தோசத்தை ஏற்படுத்தி 6, 8, 12 ஆம் வீடுகளில் அமைந்து லக்னாதிபதியின் பார்வை பெற்றால் இந்த யோகம் அமையும்.இந்த அமைப்புள்ள ஜாதகர் தற்கொலை செய்தோ, விபத்தினாலோ, துஸ்ட மிருகங்களின் தாக்குதலினாலோ, ஆயுதங்களினாலோ துர்மரணம் அடைவார்.ஏழாம் இடத்தில் ராகு சூரியனுடன் கூடி கிரகண தோசத்தை ஏற்படுத்தி அங்கு சனியும் கூடியிருப்பின் ஜாதகர் வி~த்தினாலோ, விஷ ஜந்துக்களினாலோ மரணம் அடைவார்.
4). சர்ப கண்ட யோகம்:-
லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் ராகு மாந்தியுடன் கூடி இருத்தல் ஆகும்.இந்த அமைப்புள்ள ஜாதகர் சர்ப்பம் தீண்டி மரணம் அடைவார். அல்லது விசத்தினாலோ, விசம் கலந்த உணவுப் பொருட்களினாலோ பாதிக்கப்படுவார். 5). சர்ப சாப யோகம்:-
லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டில் ராகு அமைந்து செவ்வாயின் பார்வை பெறுவது சர்ப சாப யோகமாகும். ஐந்தாம் வீடு மேடம் அல்லது விருட்சிகம் ஆகி அங்கு ராகு இருப்பதும் சர்ப சாப யோகமாகும்.இந்த அமைப்புடைய ஜாதகரிற்கு பிறக்கும் பிள்ளைகள் அகால மரணம் அடைவர்.
6). சய ரோக யோகம்:-
ஆறாம் வீட்டில் ராகு இருக்க லக்னாதிபதி எட்டாம் வீட்டில் அமைதல் சய ரோக யோகமாகும்.இந்த அமைப்புடைய ஜாதகர் சய ரோகத்தினால் அவதிப்படுவர். 7). பர்வத யோகம்:-
எந்த லக்னம், எந்த ராசி;யானாலும் மேடம், இடபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் ராகு இருக்க அமையப்பெற்ற ஜாதகம்.இது ராஜயோகத்தைத் தரும் அமைப்பாகும். ராகு நின்ற ஸ்தானத்திற்கு 1-4-7-10 ஆகிய வீடுகளில் ஒரு கிரகமாவது அல்லது பல கிரகங்களாவது அமைந்தால் இது சிறப்பான ராஜயோகத்தைத் தரும்.
8). கோடீஸ்வர யோகம்:-
ஜென்ம லக்கினத்திற்கு 1-4-7-10 ராகு தனித்து நிற்க அதற்கு ஏழாம் வீட்டில் கேதுவுடன் குரு கூடியிருக்கும் அமைப்புள்ள ஜாதகம் கோடீஸ்வர யோகத்தைப் பெறுகிறது.இப்படிப்பட்ட அமைப்புள்ள ஜாதகர் எல்லையில்லா நிதிக்கு அதிபதியாவார். இந்த ராகுவிற்கு ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன், புதன் கூடியிருப்பின் அப்படிப்பட்ட ஜாதகர் ஒரு அரசாங்கத்திற்கே கடன் கொடுக்கக் கூடிய அளவிற்கு மிகப் பெரிய கோடீஸ்வரராக இருப்பார்.
9). முத்தி யோகம்:-
ஜென்ம லக்னம் எதுவாயிருந்தாலும் பன்னிரண்டாம் வீட்டில் கேது இருந்தால் அது முத்தி யோகமாகும்.இந்த அமைப்புள்ள ஜாதகரிற்கு இதுவே கடைசிப் பிறப்பாகும்.
10). ஆறாமிடத்து ராகு:-
ஜென்ம லக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் ராகு அமையப்பெற்ற ஜாதகம்.இந்த அமைப்புள்ள ஜாதகரிற்கு கடன், நோய், பகை, வழக்கு போன்ற பிரச்சனைகள் அறவே இருக்காது. வுpஷ பயமும் இருக்காது. ஆனால் ராகு திசை, ராகு புத்திகளில் இவரின் சகோதரரிற்கு ஆயுட் கண்டம் இருக்கும். 11). மாதுர் தோசம்:-
ஜென்ம லக்னம் எதுவானாலும் நாலாம் இடத்தில் ராகு அல்லது கேது அமையப்பெற்ற ஜாதகம்.இந்த அமைப்புள்ள ஜாதகரின் தாயிற்கு ஆயுட் கண்டம், அங்கவீனம், தீராத நோய் இருக்கும். 12). புத்திர தோசம்:-
ஜென்ம லக்னத்திற்கு 1-5-9 அகிய வீடுகளில் ஒன்றில் ராகு இருப்பது புத்திர தோசமாகும்.

No comments:
Post a Comment